காதல் 40
அத்தியாயம் : 40
இரவு விக்ரமின் அறையில் தனது லேப்டாப் யில் மூழ்கி இருக்க இடை இடையே சமயத்தை காணவும் அவன் தவறவில்லை.. சமயம் வேறு 11 ஆகி இருக்க இன்னும் என்ன செய்கிறாள் என்று அடுக்களைக்குள் சென்று அவள் வீட்டை நோட்டம் விட லைட் மட்டும் எரிந்து கொண்டு இருந்தது...யாரையும் காணவில்லை... இவள் என்ன செய்கிறாள் இவ்வளவு நேரம் என்று தண்ணீரை விழுங்கி தன் ஆத்திரத்தை அடக்கி விட்டு வெளியே வரும் நேரம் அவன் வீட்டு காலிங் பெல் அடித்தது...என்ன நேரம் ஆகிற்று இப்போது வருகிறாள் பார் என்று முகத்தை கடுமையான வைத்து கொண்டு கதவை திறந்தான்...
அவனோ சென்று பார்க்க அங்கே அவள் மதுரயாழினி விக்ரம்... அவளை கண்டதும் அவனின் முகத்தின் கடுமை மறந்து மென்மை வந்தது...ஆம் அவள் அப்படி இருந்தாள்...ஆகாய வண்ண பட்டுடுத்தி தலை நிறைய பூ வைத்து பொன் நகைகள் பூண்டு மிதமான ஒப்பனையில் தேவதை போல ஒளிர்ந்து அவளின் கன்னங்கள் சிவக்கிறதோ என்ற சந்தேகம் கொள்ள தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டு இருந்தான்...இது என்ன இப்படி ஜொலிக்கிறாள் என்பது போல இருந்தது அவன் பார்வை...
அவளோ வெட்கம் கொண்டு, "என்ன சார் இப்படி பார்க்குறீங்க"..என்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கொண்டே கேக்க அவனோ பதில் அளிக்காமல் அவளையே பார்த்து கொண்டு நின்றான்...
எப்போதும் அவன் கண்ணை பார்த்து அவனிடம் காதல் மொழி பேசுபவள் இன்று அமைதி ஆனாள்... அவளுக்கு வார்த்தை தடைப்பட்டன..அவளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது...பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து விட்டு தன்னை சமன் செய்தாள்....அவளின் வதனங்கள் ஏறி இறங்கியது...அவளின் தடுமாற்றத்தை அவன் கண்கள் ரசித்து கொண்டு தான் இருந்தது...
அவனின் பார்வை வேறு அவளை குத்துவது போல இருந்தது...அவனின் பார்வை அவளின் உடல் முழுவதும் கண்களாலேயே மேய அவனின் பார்வையை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை... எங்கே நிமிர்ந்து பார்த்தால் கூட அவன் பார்வையில் தான் கரைந்து போய் விடுமோ என்று கருதி அவள் அவனின் பார்வையை எதிர் கொள்ளாமல் அவளின் கால் பெரு விரலையே பார்த்து கொண்டு இருந்தாள்...
அவனோ எப்போதும் அவளை சுடிதார், குட்டை பாவாடை, இரவு உடை என கண்டு இருந்தவன் முதன் முதலாக சாரியில் காண்கிறான்...அதிலும் எப்போதும் மற்ற உடைகளில் எல்லாம் சிறு பெண் போல இருந்தவள் இன்று அவன் கண்ணுக்கு அவனுக்கு இணையாக காட்சி அளிக்கிறாள்....
கதவை அடைத்து கொண்டு மார்பில் இரு கையை கட்டி கொண்டு விக்ரம் நிற்க மதுவுக்கோ அவனின் பார்வை தாளாமல், "எனக்கு உள்ளே போனும்".. என்று அவளுக்கே கேக்காத குரலில் கூற அவனோ நீண்ட பெருமூச்சை விட்டு அவளுக்கு வழி மாறி கொடுத்தான்...
அவளோ விட்டால் போதும் என்று அறைக்குள் ஓட அவள் பின்னால் வந்தவனோ, " இவ எதுக்கு இப்போ இப்படி மேக்கப் பண்ணிட்டு வந்து இருக்கா "..என்று நினைத்து கொண்டே அவன் உள்ளே சென்று கதவை அடைக்க போக மதுவோ ஜன்னலின் பிடியை பிடித்து கொண்டு அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருந்தவள் , "கதவை அடைக்காதீங்க "...என்றாள்...
அவனோ," ஏன்".. என்று கேள்வி கேட்க , "இப்போ வரேன்"... என்று கூறி அவனை இடித்து கொண்டு வெளியே வேகமாக அவனுக்கு பதில் அளிக்காமல் ஓடி விட்டாள்... விக்ரமோ , "இவ என்ன இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்கா".. என்பது போல பார்த்து மீண்டும் தன் லேப்டாப் இல் மூழ்கினான்...
அடுத்த பத்து நிமிடத்தில் வந்தாள்... கையில் ஒரு டம்ளருடன்...வாயிலில்லேயே நின்று கொண்டு இருந்தாள் மது ஏனோ அவளுக்கு தயக்கம் உள்ளே வர...அவனோ அவளின் செயல்களையும் அவளின் கையில் தம்பளரையும், அவளின் வெட்கத்தையும் பார்த்து ஒரு வழியாக ஊகித்து விட்டான்...எதற்காக அவள் தயங்கி கொண்டு இருக்கிறாள் என்று...."உள்ளே வா "..என்று கூற மதுவோ , "ஹூம் ஹூம்"... என்று தலையை ஆட்டி கொண்டே அவனை எதிர்நோக்காமல் இருக்க அவனின் பொறுமை எல்லை கடக்க தொடங்கி இருந்தது...
அவனும் அவள் வந்தது முதல் பார்க்கிறான்...மது அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை... இவளை இப்படியே விட்டால் சரி ஆகாது என்று நினைத்த விக்ரம் லேப்டாப் ஐ அணைத்து வைத்தான் எழுந்து நின்று சோம்பல் முறித்தான்... பின் மெதுவாக அவள் அருகே அழுத்தமான காலடி ஓசையுடன் அவள் அருகில் வந்தான்...
மதுவின் மனமோ தடக் தடக் என துடிக்க தொடங்கியது....அவள் அருகே வந்தவன் அவளை தோள் தொட்டு உள்ளே அவளை அழைத்து கொண்டு வந்தவன் மெல்ல கதவை அடைத்தான்...அவளோ நெளிந்து கொண்டே இருந்தாள்... இதுவே அவள் நார்மல் ஆக இருந்தால் அவனோடு முதல் ஆளாக ஒன்றி இருப்பாள்..ஆனால் இன்று முடியவில்லை...
அவளோ நிமிர்ந்து பார்க்காமல் அவனிடம் பால் கொடுக்க ஒன்றும் கூறாமல் அந்த பாலை வாங்கி அருகே உள்ள டேபிளில் வைத்த விக்ரம் அவளை பார்க்க அவள் அதே வேலையை தான் செய்து கொண்டு இருந்தாள் அவள் காலின் நைல் போலிஷை கூர்ந்து கவனித்து கொண்டே நிற்க விக்ரமோ, " எல்லா தான் நல்லா இருக்கு நாளைக்கு என்ன எக்ஸாம்"... என்று கேட்டான்...
அவளோ என்ன என்பது போல திரு திருவென விழித்து அப்போது தான் அவனை நிமிர்ந்து அவன் கண்ணை பார்த்தாள்...
நல்ல பீமனை போல கையை கட்டி நின்று,
" என்ன புரியலையா நாளைக்கு என்ன எக்ஸாம் "..என்று அழுத்தத்துடன் கேக்க
அவளோ , "சிஸ்டம் சோப்ட்வேர் "...என்றாள்... "படிச்சிட்டியா".. என்று கேட்க
அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் கைகள் இரண்டையும் பிணைந்து கொண்டே நிற்க
ஒன்றும் தெரியாதவன் போல , "எதுக்கு இந்த ந்யட் ல இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்க "...என்று அவள் அலங்காரத்தை காட்டி கேக்க மதுவோ மென் குரலில், "இல்லை சார் நீங்க தான் ஒன்னும் நடக்கல னு அப்பா கிட்ட சொன்னீங்களாம் அதான் இன்னிக்கு நாள் நல்லா இருக்கு னு பாட்டியும் அம்மாவும் சேர்ந்து இது எல்லாம் பண்ணி விட்டாங்க "...என்று தயங்கி தயங்கி கூற விக்ரமுக்கு தெளிவாக புரிந்தது எதனால் இந்த தீடீர் ஏற்பாடு என அவனுக்கு புரிந்து போனது...
அவர்களை குறை சொல்லி ஒன்றும் ஆக போவது இல்லை ..இவளையும் ஒன்றும் சொல்லி ஆக போவது இல்லை என்பதை உணர்ந்தவன், " ஏன் டி காலையில எக்ஸாம் வெச்சிட்டு பிரஸ்ட் ந்யட் கொண்டாட வந்துட்டா போடி ...ஐஞ்சு நிமிஷம் டயம் தருவேன்... அதுக்குள்ள இதை எல்லாம் அவளின் மேக்கப் மற்றும் உடையை சுட்டி காட்டி எல்லாத்தையும் கலைச்சுட்டு படிக்க உக்கார்ந்து இருக்க போடி".. என்று விரட்ட
அவளோ தலையில் அடித்து கொண்டு "இவருக்கு போய் இதை எல்லாம் பண்ணிட்டு வந்தேன் பாரு "..என புலம்பி கொண்டே தலையில் வைத்து இருந்த பூவை அவிழ்த்து அவன் கையில் திணித்து , "இந்தாங்க அங்கே வைங்க"... என்று சலித்து கொண்டே உடை மாற்ற சென்றாள்...
ஆம் அவள் மெனக்கெட்டு ரெடி ஆகி இருக்க , அதிலும் பாட்டியும், அவளின் அன்னையும் சேர்ந்து அவளை ஏதேதோ கூறி அவளை குழப்பி வைத்து இருக்க ஏதோ மாயா லோகத்தில் இருந்தவள் இடத்தில் அவன் இப்படி கூறினாலோ அதிலும் பரீட்சைக்கு படிக்காமல் இது என்ன டி வேஷம் என்பது போல கூறினால் அவளுக்கு எப்படி இருக்கும்...இத்தனை நேரம் அவள் அடைந்த தடுமாற்றமும், அவளின் வெட்கமும் ஒரு நிமிடத்தில் ஒரே கேள்வியை கரைத்து விட்டான்...தன் முட்டை கண்ணை வைத்து அவனை முறைத்து கொண்டே சென்றாள்...
விக்ரமின் இதழ்கள் மீண்டும் அவளின் செய்கைகளை கண்டு விரிந்தன...
அவனுக்கு அவளை பிடித்து இருக்கிறது ...அவளிடம் காதல் கொண்டு உள்ளாயா என்ற கேள்விக்கு ஆம் என்றே இப்போது கூறுவான்...அவளிடம் மனதை பறி கொடுத்தானா என்று கேட்டால் ஆம் என்றே கூறுவான்...அவளின் குறும்பை ரசிக்கிறான்... அவள் இல்லை என்றால் அவன் கண்கள் தேடுகின்றன...எப்போதும் அவன் கால்களுக்குள் ஒரு நாய் குட்டி போல வளைய வருபவளை அவனுக்கு பிடித்து இருக்கிறது...எல்லாத்தையும் விட எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அவனை அவனாகவே ஏற்று கொண்டு அவனுக்காக எல்லோரையும் எதிர்த்து அவனை , அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே நேசிக்கிறாள்... அவளை விட அவனுக்கு மனம் இல்லை...ஆனால் நான் அவளிடம் என் கோபத்தை தான் காட்டினேன்..அதையும் அவள் நேசித்தாள்... சிறு பெண் என்றாலும் அவனை நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறாள்...
ஒரு ஆண் அவமானம் கொண்டால் அது அவனை மட்டுமே சாறும்..அதே ஒரு பெண் தவறு செய்தால் என்றால் அவள் குடும்பத்தையே ஊரார் தூற்றும்...அது போல ஒரு தவறும் செய்யாத அவளும் அவனுடன் சேர்ந்து இழி சொல் ஏற்று அவள் அடைந்த அவமானத்தை எல்லாம் மறந்து நான் அடித்ததை எல்லாம் சகித்து எனக்காக அவள் விரைவில் வெளி வந்து என்னையும் வெளியே கொண்டு வந்தாள்... அவள் என் வாழ்வில் நுழைந்த இந்த இரண்டு மாதத்தில் அவள் என்னை மாற்றி இருக்கிறாள்...ஆனால் நான் அவளுக்கு என்ன செய்தேன் என தன்னையே கேள்வி கேட்டு அவளுக்கு படிப்பில் உதவினான்...
அவளிடம் என்னை பற்றி எல்லாம் கூறிய பின்னரே அவள் என்னுடையவள் ஆக மாறுவாள் என அவன் காத்து இருக்கிறான்...ஆம் மது அந்த வீட்டில் மட்டும் அல்ல விக்ரமின் இதயத்திலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டாள்...
அவள் இது நாள் வரை காத்து கொண்டு இருந்தது போல அவனும் அவளின் நிலை அறிந்து காத்து இருக்க தொடங்கி இருக்கிறான்...அவன் வாயில் இருந்து இது போல ஏதாவது அவன் கூறினால் அவள் எங்கே படிப்பை கோட்டை விட்டு விடுவாலோ என பயந்து வாயை திறக்காமலே இருக்கிறான்...என் மனதை முதலில் புரிய வைக்க வேண்டும்...என் வாழ்க்கையை அந்த சிறு பெண்ணிடம் விளக்க வேண்டும் என காத்து இருக்கிறான்...அவளின் தேர்வு முடியட்டும் அதன் பின்னர் எல்லாம் கூறலாம் என நினைத்து இருக்க அவன் நினைத்த நாளும் வந்தது...
இன்றோடு அவளின் தேர்வு நிறைவு ஆகிறது...அவளை அழைக்க தான் அவன் சென்று கொண்டு இருக்கிறான்...முகம் எல்லாம் சந்தோசத்துடன் சென்று கொண்டு இருக்கிறான்..அப்போது சிக்னலில் அவன் காத்து இருக்கும் போது ஒரு கார் வந்து நின்றது...எதேக்ஷியாக அவன் திரும்ப அந்த காரில் பயணம் செய்த ஒருவரை காணவும் அவன் கண்கள் இருட்டியது... கைகள் முருக்கேறியது... ஆம் அவன் கண்டது அவனின் அம்மா ...யாரை தன் வாழ்க்கையில் காண கூடாது என்று நினைத்து இருந்தானோ அவர்...அவனை பெற்ற அவனின் தாய் கிரிஜா....
என் கண்கள் உனை தேடும்....
