காதல் 39
அத்தியாயம் : 39
காதலது கண்ணில் கண்டேன்
விக்ரமுடன் பைக்கில் எங்கே என்னை விட்டுட்டு சென்று விடுவானோ என தாவி குதித்து ஏறியவள் , "என்ன சார் நீங்க பாட்டுக்கு போறேன் னு சொல்றீங்க என்னை விட்டிட்டு போலாம் னு எண்ணமா"... என்று கேட்க
தன் பின்னால் தன் தோளில் கையை வைத்து அழுத்தி கொண்டே அதில் முகம் வைத்து தன்னை இறுக்கி அமர்ந்து இருக்கும் அவளிடம் சிறிது விளையாடி பார்க்க அவனின் மனம் கூற , "அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சே ...உண்மை எல்லோருக்கும் தெரிஞ்சுடுச்சு அப்புறம் என்ன நீ உன்னோட வீட்டுக்கு போக வேண்டியது தானே "...என்க உன்னோட வீடு என்பதை அழுத்தி கூற
மதுவோ அவனிடம்," அதான் என்னோட வீட்டுக்கு என்னை விட்டுட்டு போறீங்களே னு தான் நானும் கேட்டுட்டு இருக்கேன்"... என்று அவனை போலவே என்னோட வீடு என்பதை அழுத்தி கூற அவனின் இதழ்கள் மேலும் விரிந்தன...ஆனால் பாவம் மதுவால் அவனின் சிரிப்பை காண இயலவில்லை...கண்டு இருந்தால் அங்கேயே குத்தாட்டம் இட்டு இருப்பாள்...
ஒரு வழியாக வீடு வந்து சேர அதற்குள் வாசுதேவனும் வந்து இருந்தார்...நல்ல மனநிலையில் எல்லோரும் இருந்தனர்...அனைவரின் மனதில் இருந்த பாரமும் மறைந்து மனம் இலேசானது....மதியம் உணவு வெகு நேரம் கழித்து உண்டதால் அனைவரும் சிறிது உண்ட மயக்கம் ஆட்கொள்ள சிறிது நேரம் உறங்கலாம் என நினைத்து விக்ரம் அவன் அறைக்கு செல்லும் நேரம் மதுவும் அட்டை போல அவன் பின்னாடியே போனாள்...
அதற்குள் ,"ஹே புள்ள மது..து...து"... என்று கூவலிட்டு கோல்ட் அவர்கள் இருவரை காண வீடு தேடி ஓடி வந்து விட்டார்...ஆம் பத்து நிமிடத்திற்கு முன் வீட்டுக்கு வந்த அழகு மயில் ஒன்று விடாமல் கோல்டுயிடம் கூற அவரோ அப்படியே அந்தர் பல்டி அடித்தார்..."எனக்கு அப்பவே தெரியும் டி.. என் பேத்தி தப்பு பண்ண மாட்டா னு...அதிலும் அந்த தம்பி முகத்தை பார்த்தா தப்பு பண்றது மாதிரியா இருக்கு...நீங்க எல்லோரும் சேர்ந்து தான் டி இப்படி பேசிட்டிங்க ..என்னையும் அவ கூட சண்டை போட வெச்சுடீங்களே "....என்று தினமும் அவளிடம் வம்பு செய்யும் கோல்ட் என்னமோ இவர்கள் தான் வம்பு செய்ய சொன்னது போல பேச அழகு மயில் தாடையில் கை கொடுத்து அமர்ந்து இருந்தார்...பாரு இந்த கூத்தை என்பது போல இருந்தது அவரின் லுக்...
இவர்கள் இருவரின் சம்பாசனையை மதி மற்றும் மிதுன் சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்க மேலும் கோல்ட் , "நான் இப்போவே என் பேத்தி வீட்டுக்கு போறேன் "...என்று கூற மதியும், மிதுனும் "நானும் வரேன்".. என்று கூற , "வேண்டாம் இரண்டு பேரும் இங்கேயே இருங்க நான் முதலில் போய் என் பேத்தியை பார்த்துட்டு இங்கே கூட்டிட்டு வரேன் "...என்று கூற அனைவரும் சிரித்து கொண்டே சரி என்றனர்...
"ஏ..சிரிச்சுட்டு இருக்காம ஏதாவது பலகாரம் செஞ்சு வை டி இழிச்சிட்டு நிக்குறா "...என்று மாமியாராய் மருமகளை கடிந்து விட்டு எதிர்வீட்டுக்குள் வந்து விட்டார்...மாமியாரின் குணம் அறிந்த அழகு மயிலும் வேகமாக அடுக்களைக்குள் புகுந்து கொண்டார்..
அதன் படி தான் கோல்ட் அங்கே வந்தது..."மது "...என்று அழைக்க மது திரும்பி பார்க்க அங்கே அவளின் பாட்டி கோல்ட்...இரண்டு மாதத்திற்கு பிறகு அவரின் கோல்ட் என்ற அழைப்பு அவளுக்கு ஏனோ அழுகை முட்டியது...
அவரின் முகத்தை பார்த்தே எல்லாம் அறிந்து விட்டார் என புரிந்து கொண்ட விக்ரம் மற்றும் மது, மது ஓடி வந்து தன் பாட்டியை கட்டி கொண்டாள்... அதன் பின் அங்கே பாட்டி மற்றும் மதுவிற்கு பாச போராட்டமே நடந்தது...அதில் செல்ல செல்ல சண்டைகளும் சிணுங்கலும், கண்ணீரும் , இத்தனை நாள் பிரிவின் ஏக்கமும் எல்லாம் அங்கே ஒரு சேர்ந்தன..
ஆம் மதுவின் வீட்டில் மூன்று பிள்ளைகள் ஆனதால் மதுவை முழுவதுமாக கவனித்து கொண்டது கோல்ட் தான்...அதனால் இருவருமிடையில் ஒரு பாச பிணைப்பு எப்போதும் உண்டு ...அதனால் தான் இந்த உரிமையும் கோபமும்...
அதனால் தான் இருவரும் சண்டையே என்றாலும் இந்த இரண்டு மாதத்தில் தினமும் சண்டை இட்டாவது இருவரும் உரையாடி கொள்கின்றனர்..இருவராலும் ஒருவரை ஒருவர் பிரிந்தோ பேசமாலோ, பார்க்காமலோ இருக்க முடியாது ...
ஆனால் சூழல் அப்படி இருக்க எதிர் வீடே என்றாலும் இருவரும் பிரிந்து இருந்து வந்தனர்...இப்போது தான் எல்லாம் சரி ஆகிவிட்டதே...ஒரு வழியாக இருவரும் அழுது கரைந்து மூக்கை உறிஞ்சி கொண்டு இருக்கும் போதே இவர்களை பார்த்து சிறு புன்னகை சிந்தி கொண்டு நின்ற விக்ரம் மற்றும் வாசுதேவன் அருகில் வந்தார் கோல்ட்...
"ஐயா ராசா இந்த வயசான பாட்டியை மன்னிடுச்சு ஐயா ...நாங்க விசாரிச்சு இருக்கனும்... இவ மேல என் மகனுக்கு ரொம்ப பாசம் யா ...அதான் கண்டிப்பு அதிகம்...ஆனா இந்த சிறுக்கி அவனையே நெறய தடவ ஏச்சு புடுவா... அது என் மகனுக்கும் தெரியும்...அவனும் உன்னை மாதிரி தான் பா...அதான் பாசம் கண்ணை மறைச்சுடுச்சு ...அதான் இப்படி எல்லாம் நடந்து போச்சு...எங்களை மன்னிடுச்சு பா'... என்று தன் பங்கிற்கும் அவரது மன்னிப்பை கேக்க முதுமையில் இருக்கும் அவர் மன்னிப்பு கேக்கும் போது அவனால் இறங்கி வர முடியாமல் இருக்க முடியவில்லை... "பரவாயில்லை பாட்டி விடுங்க நடந்தது நடந்து போச்சு ...மறக்க முயற்சி பண்ணுவோம் "...என்று அவருக்கு ஆறுதல் கூறினார்..
"தம்பி வீட்டுக்கு வாங்க பா எல்லோரும்"... என்று அழைக்க விக்ரம் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான்..மதுவும் வாசுதேவனும் அவனுடைய இஷ்டம் அவன் என்ன சொல்கிறானோ அது போல என அவர்கள் நின்று கொண்டு இருந்தனர்..
அவனின் தயக்கத்தை பார்த்த கோல்ட், "என்ன ஐயா எங்களை இன்னும் மன்னிக்கலையா...நாங்க அவ்ளோ கொடுமைக்காரங்க எல்லாம் இல்லை ஐயா "...என்று மீண்டும்அழுத அவரை , அவரின் அழுகையை காண சகிக்க முடியாமல் விக்ரம் மது மற்றும் வாசுதேவனை சமாதானம் செய்யும் படி கண்ணை காட்ட அவர்கள் இருவரும் ஒரே போல அவனின் பார்வையை தவிர்த்தனர்...மதுவுக்கும் வருத்தமே ஆனால் அவனின் மனம் மாறும் பொருட்டு அமைதியாக இருந்தாள்... பின் விக்ரமே அவரை சமாதானம் செய்தான்...
கோல்டிடம் அவர் அருகில் சென்று அவரின் தோள் தொட்டு , "நீங்க இப்படி அழுதுட்டே இருந்தா நான் வரல".... என்று விக்ரம் கூற அவர் வேகமாக கண்ணை துடைத்தார்...
அதன் பின் எதிர்வீட்டுகாரர்கள் இருவரும் ஒரு வீட்டில் ஒரே வீட்டுக்காரர்களாக மாறி உறவுகாரர்கள் ஆக மாறி விட்டனர்..விக்ரமுக்கு தான் எல்லாம் புதிதாக இருந்தது... ஆம் அவனுக்கு உறவு என்றால் அவன் தந்தை மட்டுமே வேறு யாரும் இல்லை இதுபோல ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தது இல்லை..உடன் பிறப்புகள் இல்லை...இது போல உறவுகளை அவன் சந்தித்தது இல்லை...இது போல அவன் எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகியது இல்லை ...ஆனால் அந்த வீட்டு சுட்டிகள் இருவரும் அவனிடம் முதலில் பயம் கலந்து பேச அதன் பின்னே மது இடையில் புகுந்து அங்கே மூவருக்கும் சண்டை வந்து அதில் மூவரும் கட்டி பிடித்து உருண்டு கொண்டு இருக்க அதன் பின் சுட்டிகள் இருவரும் அவனுடன் இயல்பாக பேசினர்...
வெங்கியும் செய்த தவறை உணர்ந்து மருமகனை விழுந்து விழுந்து கவனிக்க தன் மகனுக்கு அருமையான குடும்பம் கிடைத்து இருக்கிறது என்று வாசுதேவன் பூரித்து போனார்...
மாலையில் மதுவின் வீட்டுக்கு சென்ற விக்ரம் குடும்பம் இரவு உணவு அருந்தி விட்டு தான் அவர்கள் வீட்டுக்கு வந்தனர்...மது மட்டும் பின்னால் வருவதாக கூறி விட்டாள்... ஆம் அவளின் தம்பி மற்றும் தங்கை இன்னும் சிறிது நேரம் கழிந்து செல்லலாம் என கூற அவளும் சரி என்று கூறி அங்கேயே இருந்து விட்டாள்...விக்ரம் அவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே சென்றான்...
வாசுதேவனோ வீட்டுக்கு வந்து தன் மகனை பார்த்து, "இத்தனை நாள் பிரிஞ்சு இருந்தாங்க ல ஏதாவது பேசிட்டு இருப்பாங்க பா விடு எதிர் வீடு தானே மெல்ல வரட்டும் ..இல்லாட்டி காலையில கூட வரட்டும் பா "...என்று கூற விக்ரமுக்கு ஏனோ தனது தந்தை கூறிய கடைசி வரி பிடிக்க வில்லை...எல்லாம் கூறிய வாசுதேவனோ மகனின் மனசு அறியாமல் கூறி, " நான் போய் தூங்கறேன் பா நீயும் தூங்கு "...என்று கூறி விட்டு அவர் அறைக்குள் சென்றாள்...
