காதல் 38
அத்தியாயம் : 38
யுவராஜோ எழுந்து நின்றவன் , "அது வந்து சார்...நான் சும்மா "
.என்று தொடங்க.. "என்ன என் பொண்டாட்டியை கல்யாணம் செஞ்சுக்கிறியா" ...என்று பதில் கேள்வி கேட்டான்....
"இல்லை சும்மா "..என்று மழுப்ப இன்னொரு அறையும் அவன் கன்னத்தையும் பதம் பார்த்தது..
அதற்குள் மாணவர்கள் ஆசிரியர்கள் என ஒரு கூட்டம் கூட அங்கே நடந்த பிரச்சனை பெரிதாக விஷயம் கல்லூரி முதல்வர் வரை சென்றது...
தாளாளர் ஓடி வந்து விக்ரமை தடுத்து நிறுத்தி ,"என்ன விக்ரம் இப்படி பண்றீங்க..அவன் இந்த காலேஜ் ஸ்டுடெண்ட் அதை மறந்துடீங்களா இப்படி அடிக்குறீங்க...அவனுக்கு ஏதாவது ஆகிட போகுது ...எதுக்கு அவனை இப்படி போட்டு அடிக்குறீங்க...நீங்க இந்த காலேஜ் ல ப்ரொபஸ்ஸோர் ஆஹ் வேலை செஞ்சுட்டு இருந்தீங்க ..அந்த வேலையை நீங்க மறந்துடாதீங்க "...என்று சூடாக அவர் கூற
அவரை பார்த்து தான் சட்டையை முட்டி வரை மடித்து விட்டு இடுப்பில் இரண்டு கைகளை கொடுத்து தலையை இருபுறமும் ஆட்டி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் முடியாமல் ஒரு கையை தூக்கி மீண்டும் யுவராஜை அடிக்க தாளாளர் ஒரு அடி நீங்கி நின்று விட்டார்..
அவருக்கு அவரையே விக்ரம் அடித்தது போல இருந்தது...ஆம் அவருக்கு விழ வேண்டிய அடி தான் இப்போது மீண்டும் யுவராஜ் க்கு விழுந்தது..
அதன் பின்னும் நேரே விக்ரம் யுவராஜிடம், "நானும் இவளும் அன்னிக்கு எப்படி ரூம் ல அடைப்பட்டோம் சொல்லு"... என்று கூற
கிடைத்த அடியில் நடந்த விஷயத்தை எல்லாம் கக்கினான் யுவராஜ்...நான் தான் அன்று இவர்கள் இருவரையும் உள்ளே வைத்து அடைத்ததாகவும் மதுவின் மேல் உள்ள வெறுப்பால் தான் நான் இதை செய்தேன் என்று கூற அனைவரும் சம்பித்து போனர்...
முதலில் அதை கேட்ட தாளாளர் எங்கே இவன் விக்ரம் அடித்ததால் பொய் உரைக்கிறானோ என்று அவனிடம், 'உண்மையை சொல்லு..நீ தான் இதை செஞ்சியா "...என்று கேக்கும் போது ,இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த மாணவர்கள் கூட்டத்தில் இருந்த ரம்யா வெளியே வந்தாள் , "ஆமா சார் அவன் தான் செஞ்சான் நான் கேட்டேன்".. என்று கூற அப்போதும் தெளிவாகாமல் பாதி சிந்தையில் இருந்த அவரிடம் யுவராஜின் நண்பர்களும் விக்ரமின் தீப்பொறி பார்வையை கண்டு பயந்து கொண்டே வந்து , "ஆமா சார் எங்க கிட்ட தான் சொன்னான் அது உண்மை தான்".. என்று கூற
வாட்ச்மேன் வந்து தன் பங்கிற்கு அன்று நடந்ததை கூற அப்போது தான் அவர் கண்கள் தெளிவை அடைந்தது ..
இதை கண்ட விக்ரம் அப்போ உங்களுக்கு நல்லா விசாரிக்க தெரியும் என்பது போல நக்கல் பார்வையை வீசினான்...அன்றைய தினம் இவர் தப்பிக்க வேண்டி வேகமாக மது மற்றும் விக்ரமுக்கு திருமணம் நடத்தி வைத்து விட்டார் அதை எண்ணி தான் இந்த நக்கல் பார்வை அதை கண்ட தாளாளர் அவன் முகத்தை பார்க்க கூட சங்கடப்பட்டார்...மதுவிற்கு சொல்லவே வேணாம்... உண்மையை அறிந்த அவள் கண்கள் மட்டும் கண்ணீரை சொறிந்தது..அதிர்ச்சியில் வாய் அடைத்து போய் இருந்தாள்... அதில் இருந்து மீள முடியாமல் இன்றும் மௌனி ஆனாள்..விக்ரம் அவளை கண்டு கொண்டு தான் இருந்தான்...
இவர்கள் கூறுவதை எல்லாம் கேட்ட தாளாளர் அவனை திட்டி , "இப்போவே உன்னை இந்த காலேஜ் யை விட்டு விலக்கறேன் டிஸ்மிஸ் பன்றேன் "..என்று கொந்தளித்தவரை பார்த்த விக்ரம் தீப்பொறி பறக்க , "அவனை டிஸ்மிஸ் செஞ்சா எல்லாம் இல்லை னு ஆகிடுமா...இப்போ இந்த நிமிஷம் அன்னிக்கு யார் எல்லாம் நின்னுட்டு இருந்தாங்கலோ யார் எல்லாம் புரிஞ்சுக்காமல் பேசினாங்களோ அவங்க எல்லாம் இங்கே வரனும்... வந்து ஆகணும்"... என்று அதிகாரத்தோடு கம்பீரம் குறையாமல் கூற அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்...அதற்குள் அங்கே நின்று கொண்டு இருந்த மாணவர்களை அப்புற படுத்தினர்....வேறு யாரும் இல்லை....
ஆம் அங்கே விக்ரமின் அப்பா, மதுவின் பெற்றோர், யுவராஜின் பெற்றோர் , கல்லூரியின் வாட்ச்மேன் மற்றும் கமிஷனர் ஆபீசர் ஜார்ஜ் அனைவரும் நிற்க
எல்லோரையும் பார்த்து விக்ரம் கேள்வி கேட்டான்..."இப்போ என்ன சொல்ல போறீங்க...நாங்க இரண்டு பேரும் தப்பு பண்ணல இவன் தான் பூட்டிட்டான்...அதுனால மாட்டிட்டோம்... இதை நீங்க நம்பல... நாங்க வெளியே வர போராடினோம் ..அதை நீங்க நம்பல...அதுனால அந்த இடம் அலங்கோலமாக இருந்தது ..அதை நீங்க நம்பல வெளியேற போராடினது ல நான் அவள் மேல் விழுந்தேன் அதை மட்டும் நம்புறீங்க...ஏன்னா நீங்க கண்ணால பார்த்தீங்க அப்படித்தானே"...என்று கூற அனைவரும் அமைதியாக இருந்தனர்...அவர்கள் கேட்டு தான் ஆக வேண்டும்... அன்றைய தினம் விக்ரம் மற்றும் மது அடைந்த மனவேதனைக்கு இன்று அவர்கள் பேசித்தான் ஆக வேண்டும் அதற்கு தான் வாயே பேசாத விக்ரம் இன்று மூச்சு முட்ட கத்தி தன் மனதின் குமுறலை பேசி தீர்த்து கொண்டு இருக்கிறான்..
நேரே வெங்கியிடம் வந்தவன் மதுவை கை பிடித்து இழுத்து அவர் முன்னால் நிற்க வைத்து ,"இவ உங்க பொண்ணு தானே உங்க வளர்ப்பு தப்பா போகும் னு உங்களுக்கு தோணவே இல்லை.. இவ தான் தப்பு பண்ணினா னு உங்களுக்கு தோணுதா நீங்க தான் பெரிய டாக்டர் ஆச்சே உங்க பொண்ணு என் கையில உங்க எல்லோரோட காட்டாயத்தின் பேரில் என் கையில பிடிச்சு கொடுத்தீங்களே... அப்படியே தான் இவ இன்னும் இருக்கா "...என்று கூற ஒரு நிமிடம் வெங்கி வியர்த்தே விட்டார்...
அவனோ அவன் காதருகில் குனிந்து , "இன்னும் புரியலையா உங்க பொண்ணு உங்க மகளவே தான் இருக்கா இன்னும் அவ மேல நம்பிக்கை இல்லன்னா கொண்டு போய் செக் பண்ணுங்க..உங்க சந்தேகமும் அது தானே "...என்று கூறி அவரை நிலை கொள்ள செய்து விட்டான்...வெங்கிக்கு விக்ரம் அவ்வாறு கூறியதும் இதயம் ஒன்று நின்று துடித்தது...அவன் அருகில் நின்று கொண்டு இருந்த மது தன் தந்தையிடம் இவன் என்ன கூறுகிறான் இது போல பேசலாமா என்று நினைத்து, " சார் "..என்று தீன சுரத்தில் கூற அவனோ அவளை ஒரு பார்வை பார்த்து வாயை மூட போறியா இல்லையா என்பதை போல பார்க்க அவள் வாயை மூடி கொண்டாள்...
அவன் அறிந்தே தான் அவ்வாறு கூறினான்...வருத்தப்பட்டாலும் பரவாயில்லை...தான் அன்று உடைந்ததை விடவும் இவர்கள் உடைய போவது இல்லை என்பதை அறிந்து தான் அப்படி கூறியது...என்ன தவறு அங்கே நடந்து இருந்தாலும் நிதானத்துடன் அவர் செயல் பட்டு விசாரித்து இருக்க வேண்டும் என்பது இப்போதும் அவனின் நியாயம்...அதிலும் அவரின் மகள் அல்லவா ..யாராக இருந்தாலும் விசாரிக்காமல் ஒரு பெண்ணும் ஆணும் ஒரு அறையில் இருந்தால் இப்படி தான் கல்யாணம் செய்து கொடுப்பார்களா...தன் மகள் அவ்வாறு செய்யமாட்டாள் என்ற நம்பிக்கை வேண்டாமா என்பது தான் இவனது விவாதம்..
வெங்கிக்கு தன் மகள் தவறானவள் அல்ல என்று அவரின் மனம் கூறினாலும் அவர் கண்ட காட்சியை மனதில் வைத்து அவர் கூற அதிலும் விக்ரம் மீது தான் அவர் கோபம் கொப்பளிக்க இது போல நடந்தது..அவரும் அவமானப்பட்டு மகளை இரண்டு மாதமாக காணாமல் இருந்து வருகிறார்...அவரும் விக்ரம் எண்ணுவதை போல தான் என் மகள் எப்படி தவறு செய்வாள் இவன் தான் அனைத்து தவறுகளுக்கும் காரணம் என கணக்கிட்டு இருக்க அந்நேரம் தான் இது போல நடந்தது...இப்போது உண்மையும் எல்லோர் முன்னிலையில் தெரிய வந்தது...
அடுத்து விக்ரம் கமிஷனர் ஜார்ஜ்யிடம் "சார் எல்லாமே இப்போ சரியா போச்சு...நடந்தது நடந்து போச்சு... இப்போ என்ன பண்ணலாம் னு இருக்கீங்க "...என்று கேட்க
அவனின் கோபம் நியாயம் ஆனதால் அவரும் அமைதியாக இருந்தார்....அதன் பின் நேரே அவன் தந்தை மற்றும் வெங்கியிடம் இப்போ என்ன செய்ய போறீங்க என்பது போல பார்வையிட்டு, "திருமணம் அனைத்துக்கும் விடை ஆகாது...கண்ணால் காண்பதும் பொய்...காதால் கேப்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்...இதை நான் சொல்லி கொடுத்து உங்களுக்கு புரிய வைக்க வேண்டியது இல்லை னு நெனைக்குறேன்"...என்று கூறி நேரே தாளாளர் யிடம் ,"அது எப்படி உங்க காலேஜ் ல படிக்குற ஸ்டுடெண்ட் னா இப்படி பதறுறீங்க...அந்த அன்னிக்கு இந்த பதட்டத்தை காணோமே "...என்று கூறினான்..இது போல மாறி மாறி தன் கேள்விகளை கேட்க எல்லோரும் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றனர்...
அதன் பின் அனைவர் முன்னிலையில், "நான் ஒரு ஆசிரியன் தான்...எனக்கு எப்படி ஒரு மாணவ மாணவியிடம் நடந்து கொள்ள வேண்டும் என தெரியும்...இதோ இப்போ இவ என்னோட மனைவி ஆனால் நான் இவளை என் திருமணத்திற்கு முன் வரை தவறாக பார்க்க வில்லை...அது மட்டுமின்றி எனக்கு என்னோட மாணவியை திருமணம் செய்து கொள்ளனும் எண்ணமும் இல்லை...
அப்படியே எனக்கு அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றினால் நேராக அவள் தந்தையிடம் போய் நேராக அனுமதி கேட்பேன்...பேடி போல இந்த வேலையை செய்ய மாட்டேன்"..என்று கம்பீரத்தோடு விக்ரம் கூற அனைவரும் வாயை திறந்து கொண்டு பார்த்தனர்...
வேறு வழி இல்லை அவன் கூறுவது அனைத்துமே உண்மை...அதனால் கம்பீரத்தோடு தெளிவாக இது தான் நான் என்பதை அனைவருக்கும் அவன் தெளிவு படுத்த யாருக்கும் ஒன்றும் பேச தோன்ற வில்லை...தாங்கள் அனைவரும் அவர்களுக்கு அநியாயம் செய்து விட்டோம் என்றே கருதினர்...
விக்ரம் எங்கே தன் மானம், கவுரவம் இதை எல்லாம் இழந்தானோ எங்கே அவன் அனைவர் முன்னிலையில் குற்றவாளி ஆக்க பட்டனோ அங்கே அதே ஆட்கள் முன்னே தன்னை தெளிவு படுத்தி தான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து விட்டான்...
கமிஷனர் யுவராஜின் மீது கேஸ் பைல் செய்ய போவதாக கூற , அவனின் பெற்றோர் பதறி அழுக தொடங்க விக்ரமோ அவனை விட்டு விட சொன்னான்..."என்னால் அவனின் எதிர்காலம் பாழாக வேண்டாம் "...என்று கூறி மறுத்துவிட்டான்..வேண்டாம் என மறுத்த போலீசிடம் ,"சார் இப்போ அவனை கைது பண்ணினா நடந்தது இல்லை னு ஆகிடுமா...வேணாம் சார் விட்டுடுங்க"... என்று கூறினான்..அவரும் அவனை வான் செய்து விட்டு சென்றார்...அவனின் பெற்றோரும் விக்ரமை கை எடுத்து கும்பிட்டு தங்கள் பங்கிற்கு அவனை அடித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்...
அதற்குள் அங்கே ஒரு பாச போராட்டமே நடந்து கொண்டு இருந்தது...ஆம் தந்தையும் மகளும், அழகு மயிலும் கட்டி பிடித்து அழுது தங்கள் பாசபோராட்டத்தை காட்டி கொண்டு இருந்தனர்...விக்ரம் மற்றும் அவனின் தந்தை அதை கண்டு கொண்டு இருந்தனர்...
வெங்கி நேரே வாசுதேவன் மற்றும் விக்ரமிடம் வந்தவர் , "என்னை மன்னிடுச்சுங்க தம்பி... தேவை இல்லாமல் நடந்தது தெரியாமல் உங்களை சந்தேக பட்டுட்டேன்"..... என்று அவர் வயதுக்கு அவர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்க,அதற்கு மேல் கூற அவருக்கும் வாய் வர வில்லை எங்கோ அடைத்தது போல இருந்தது...
இதை எல்லாம் கண்ட விக்ரமுக்கு அவர் மீது உள்ள கோபம் எங்கே சென்றதோ தெரியவில்லை.. பனி போல கரைந்தது..'பரவாயில்லை சார் "..என்று அவரை சமாதானம் செய்தான்...வாசுதேவனிடமும் மன்னிப்பு கேட்டார் வெங்கி அவரும் தோள் மீது கை வைத்து ஆறுதல் கூறினார்...சில சமயம் கசப்பான சம்பவங்களை மறந்து அதை பற்றியே பேசி வெறுப்பை வளர்க்காமல்...ஈகோ மறந்து அவர்கள் கூறும் மன்னிப்பை ஏற்பதும் அனைவருக்கும் நல்ல மருந்து தான்...
அவர்கள் இருவரும் பேசி கொள்வதை தன் தாயின் தோள் வளைவில் உரிமையாக சாய்ந்து நின்று கொண்டு கேட்டு கொண்டு இருந்தாள் மது...
அவளை கண்ட விக்ரம் வெங்கியிடம்," சரி சார் நான் கிளம்புறேன் "..என்று கூறி தன் பைக்கை எடுக்க மதுவோ வேகமாக ஓடி வந்து அவன் அருகில் நின்று , "அம்மா அப்பா நானும் போறேன் என்னோட வீட்டுக்கு "...என்று கூறி அவன் தோளில் உரிமையோடு கை வைத்து ஏறி அமர்ந்தாள்...ஏனோ விக்ரமின் இதழ்கள் விரிந்தன...
என் கண்கள் உனை தேடும்...
