காதல் 37
அத்தியாயம் : 37
காதலது கண்ணில் கண்டேன்
விக்ரம் தனது வேலை பளுவின் காரணமாக மதுவை பஸ்சில் வா என்று கூறி இருந்தான்...ஆனால் அவன் எதிர் பார்த்த வேலை முடிய கூடிய சுழலில் இருக்க அவள் இந்த வெயிலில் பஸ்சில் மது வீட்டுக்கு செல்ல வேணாம் தானும் அந்த வழியாக தானே செல்கிறோம் அவளையும் அழைத்து செல்லலாம் என கருதி அவளை கல்லூரியில் நிற்க சொன்னான்...
அது மட்டும் இன்றி ஒரு நாள் மதுவின் தோழி ரம்யா விக்ரமை தொலைபேசியில் அழைத்து இருந்தாள்.... யுவராஜ் தான் உங்கள் இருவரையும் அறையில் அடைத்து வைத்து இருந்ததாகவும் , மது தன் காதலை நிகாரித்த காரணமாக அவளுக்கு இந்த தண்டனை அளித்ததாக அவன் நண்பர்களிடம் பெருமையாக கூறி கொண்டு இருந்தான் என அவள் விக்ரமிடம் கூறினாள்... ரம்யா மறைந்து இருந்து கேட்ட விஷயத்தை விக்ரமிடம் கூறினாள்..அன்று யுவராஜ் பெருமையாக கூறுவதை அவன் நண்பர்களோ நம்பவில்லை...
அவனோ மேலும் தான் மட்டுமே அதை செய்தேன் என்று எல்லாம் கூற அவர்களோ ," என்ன நடந்தது விக்ரம் சார் அவளை கல்யாணம் செஞ்சுகிட்டாங்க இப்போ அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்காங்க..நீ செஞ்ச னு சொல்ற ஆனால் நடந்தது இது தானே"... என்று அவனின் நண்பர்கள் கேலி செய்ய
யுவராஜோ," அந்த சார்க்கு எல்லாம் அவ மேட்ச் இல்லை மச்சான்...அவ எனக்கு தான் மேட்ச்...கல்யாணம் ஆனாலும் அவ எனக்கு தான் பார்த்தீல அவ என்கிட்ட எப்படி பேசி சிரிச்சிட்டு இருக்கா னு....எனக்கு அவ வேணும் மச்சி வேணும் அதுக்கு நான் எந்த எல்லைக்கும் போவேன்...இப்போவே போறேன் அவகிட்ட பேசி பார்ப்பேன் ...இல்லாட்டி அவளை தூக்கிடுவேன் "..என்று கூற
"டேய் இவன் ரொம்ப சினிமா பார்த்து கெட்டு போய்ட்டான் டா...சும்மா டயலோக் ஆஹ் பேசிட்டு இருக்கான்...கல்யாணம் ஆன பொண்ணு இவன் கூட வர போகுதா இல்லை அந்த சார் தான் விட்டுடுவாரா"... என்று அவன் நண்பர்கள் கேக்க
"அவளே வருவா பாரு..இல்லாட்டி வர வைப்பேன்....யார் இடையில வந்தாலும் அவளுக்கு கல்யாணமே ஆனாலும் நான் அவளை விட போறது இல்லை "...என்று அவர்களுக்கு கூறி கொள்வது போல தன் மனதிற்கும் சொல்லி கொண்டான்...
இதை எல்லாம் மறைவில் இருந்து கேட்ட ரம்யா விக்ரமை அழைத்து நடந்ததை கூறினாள்... அவனின் உள்மனமும் யுவராஜ் மட்டும் தான் குற்றவாளி என்று கூற அதனால் தான் மதுவிடம் கூட கேக்காமல் வைத்து இருந்தான்...இப்போது ரம்யா கூறுவதை கேட்டதும் ஊர்ஜிதம் ஆக அவன் மேல் கொலை வெறியில் இருந்தான்...
இது தான் பெரும்பாலானோர் செய்வதும் செய்து கொண்டு இருப்பதும்...அவனுக்கு பிடித்து இருந்தால் அது போல எதிராளிக்கும் அதே போன்றதொரு விருப்பம் இருக்க வேண்டும்...காதல் நாம் கட்டாய படித்தி வர வைக்க முடியாது...இவன் மதுவுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர் பார்க்கவில்லை.. அவள் எந்த நிலையில் இருந்தாலும் தான் அவளை என்னுடன் கொண்டு செல்வேன் என பைத்தியக்காரனை போல நினைத்தவன் மேலும் சொல்லி பார்ப்பேன் இல்லையேல் அவளை கடத்தி கொண்டு போய் விடுவேன் என்று எல்லாம் நினைத்து தான் அவன் இதோ அவள் அருகில் அந்த மரத்தடியில் அவளுடன் அமர்ந்து இருக்கிறான்...
"என்ன மது கிளம்பலையா".. என்று கேட்க
"இன்னும் சார் வரல வரேன் னு சொல்லி இருக்கார்".. என்று பசி வேறு அவளின் குடலை வாட்ட அதனால் அவளின் முகமும் வாடி இருந்தது...அதனால் சோர்ந்த முகத்தில் பதில் அளித்தாள்..
அதை வேறு இவன் தவறாக எண்ணி விக்ரமுடன் இருக்க பிடிக்காமல் தான் அவள் முகம் வாடி இருக்கிறதோ என நினைத்து கொண்டு
"மது...நீ சந்தோசமா இருக்கியா ...உன்னால எப்படி இருக்க முடியும்...இந்த மாதிரி தருணத்துல நடந்த கல்யாணம் ..அவமானம் அதுனால வீட்டுல இருந்து உன்னை ஒதுக்கி வெச்சுட்டாங்க ...உன் அப்பா கூட பாவம் மது அன்னிக்கு என் வீட்டுக்கு வந்த அப்போ ரொம்ப வருத்தப்பட்டாரு தெரியுமா...தப்பான முடிவை எடுத்துட்டா என் பொண்ணு னு வருத்தப்பட்டாரு..யுவராஜ் நீ ரொம்ப நல்ல பையன் னும் சொன்னாரு"... என்று எல்லாம் அவன் கூற
முதலிலே பசியில் இருந்தவள் அவளின் தந்தை வருத்தப்பட்டார் என கேட்டதும் ஏனோ அவள் அறியாமல் கண்களில் நீர் வந்தது...
"நான் அந்த முடிவை எடுக்கலை யுவராஜ் எல்லோரும் சேர்ந்து தான் எனக்கும் அவருக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சாங்க "...என்று கூற
இவன் மனமோ குதுக்கலிக்க தொடங்கியது அவன் எதிர்பார்த்த வார்த்தை வேறு அவள் வாயால் வர யுவ்ராஜ்க்கு இது தான் சமயம் என அவளின் தோளை தொட்டு ஆறுதல் அளித்து கொண்டு இருந்தான்...
அந்த நேரம் பார்த்து விக்ரமின் பைக் கல்லூரியில் நுழைய அவன் ஆறுதல் அளித்து கொண்டு இருப்பது மிக சரியாக தெளிவாக அவன் கண்களுக்கு விருந்தானது...அதிலும் விக்ரமின் பார்வையில் தன் மனைவியின் மீது வேறு ஒருவன் அவன் மாணவனே என்றாலும் ஒரு ஆடவன் கை இட்டு இருப்பது அவனின் கோபத்திற்கு தூபம் போட்டது...இவன் தூரத்தில் இருந்து வந்து கொண்டு இருப்பதால் இவனை யாரும் காணவில்லை... அவளும் அவள் தந்தையை பற்றி நினைத்து வருந்தி கொண்டு இருப்பதால் விக்ரமை கவனிக்கவில்லை...யுவராஜூம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை வீண் ஆக்காமல் அவளின் தோளை தடவியபடி அவளுக்கு ஆறுதல் அளிக்கிறேன் பேர்வழி என்று அவளை தடவி கொண்டு இருந்தான்...
மெல்ல எழுந்து நின்ற மது அவனிடம்," நான் எந்த தப்பும் பண்ணல யுவி இதை அப்பா யாருமே புரிஞ்சுக்கல "...என்று வருத்தத்தோடு கூற
அவனோ ,"அதனால் என்ன மது...இதில் இருந்து வெளியே வா ..எதுக்கு பிடிக்காத இடத்தில இருக்க... உனக்காக நான் இருக்கேன் இப்போவும் எப்போவும்...".. என்று அவன் ஆறுதல் கூற
அவளோ அமைதியாக இருந்தாள் அந்நேரம்," மது உனக்கு இந்த வாழ்க்கை கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை...அவரும் தான் ...உனக்கே தெரியும் நீயும் நானும் பேமிலி பிரின்ட்ஸ் ...நீ என்னை கல்யாணம் பண்ணி இருந்தா கூட உன்னோட அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு"...
என்னவோ மதுவே போய் விக்ரமுடன் திருமணம் செய்தது போல அவன் பேச அவளோ என்ன உளறிட்டு இருக்க என்பது போல லூசை பார்ப்பது போல அவனை ஒரு பார்வை பார்த்தாள்...
அவனோ அவளின் அமைதியை கையில் எடுத்து கொண்டு ,"நீ அவரை டைவர்ஸ் பண்ணிடு..உனக்கு அவரு வேணாம்...
மது உனக்கு நான் இருக்கேன் ..நான் இப்போவும் உன்னை நெனைச்சுட்டு தான் இருக்கேன் மது ஸ்டில் ஐ லவ் யூ "...என்று அவன் முடிக்கவில்லை... அதற்குள் வாயில் ரத்தம் ஒழுக கீழே விழுந்து கிடந்தான் யுவராஜ்..
விக்ரமின் கையின் சூட்டை மதுவிற்கு பிறகு அவனும் கண்டு விட்டான்...மெல்ல எழ போனவனை சட்டையை பிடித்து
"என்னமோ சொல்லிட்டு இருந்தியே.. என் கண்ணு முன்னாடி இப்போ அவ கிட்ட நீ சொல்ற "..என்று கண்களில் கோபம் கொப்பளிக்க ஒரு வித வெறியுடன் யுவராஜை பார்த்தான் விக்ரம்...ஆம் உன்னோட காதலை என் கண் முன்னாடி என் மனைவியிடம் சொல் என்றான்...
அவன் கீழே விழுந்ததும் தான் அங்கே நின்று கொண்டு இருந்த விக்ரமை கண்ட மது ஆடி போய் விட்டாள்.. அவன் கண்களில் அவள் கண்ட ரௌத்திரம் அவளுக்கு ஏனோ வயிற்றில் கிலியை ஏற்படுத்தியது...யுவராஜ் கூறியதை கேட்ட மதுவிற்கே கோபம் வந்தது விக்ரமிற்கு அவன் மேல் வராதா....யுவராஜோ சத்தியமாக அவனை அங்கு எதிர் பார்க்கவில்லை... அவன் வருவதற்குள் அவள் மனதை கரைத்து விடலாம் என்று நினைத்து இருக்க அதற்கு வழியே இல்லை என்பது போல இருந்தது விக்ரமின் அடி...
