காதல் 36

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

அத்தியாயம் : 36

அவன் கோபம் கொள்ளுவதற்கும் காரணம் உண்டு ...இன்று ஒரு பொருள் வாங்க கடைக்கு செல்லும் போது அங்கே வெங்கியும் இருந்தார்...இருவரும் அன்றிலிருந்து இன்றுவரை சந்தித்து கொள்ளவில்லை... இன்று தான் சந்தித்து கொள்ள கடைக்காரர், " மகள் என்னே செய்கிறாள்"... என வெங்கியை பார்த்து கேக்க அவரோ ,"அவ கல்யாணம் பண்ணிட்டு சும்மா இருக்கா "...என விக்ரமை ஒரு பார்வை பார்த்து ஏளனமாக கூற அவன் கடுப்புடன் அவரை பார்த்து முறைத்து கொண்டே இருக்க அந்த கடைக்காரர்," என்ன தம்பி இந்த பேனா போதுமா "...என்று கேட்க அவனோ அது வேண்டாம் வேறு ஒரு பிராண்டை சொல்லி அது எடுக்க சொன்னான்... "இது தான் எக்ஸாம்ஸ் சமயத்துல நல்லா உழைக்கும் "...என்று வெங்கியை ஒரு பார்வை பார்த்து கொண்டே பணத்தை கொடுத்து அதை வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வந்தான்...வெங்கியோ அவன் செல்வதை பார்த்து கொண்டே தனக்கு வேண்டிய பொருளை வாங்கினார்...ஆனால் விக்ரமுக்கு தான் ஆறவில்லை...

இவருக்கு என்ன அவர் மகளை என்னமோ நான் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடியது போல அல்லவா அவரின் புராணம்...இவருக்கு வேண்டியே அவ பரிட்சை எழுதனும் அவளை எழுத வைக்கணும் என்று கொலை வெறியில் வீட்டுக்கு வரும் போது தான் மேடம் டிவி பார்த்து கொண்டு கடலை கொறித்து கொண்டு இருக்கிறாள் அதும் படிக்கும் புத்தகத்தை தலைக்கு அடியில் வைத்து கொண்டு படுத்து இருக்க எல்லாம் சேர்ந்து பொங்கி விட்டான் விக்ரம்...

அவனின் கோபம் நேரானது என்பதால் வாசுதேவன் பேப்பரில் இருந்து தலையை வெளியே எடுக்கவே இல்லை...

"இனி நீ ஒன்னும் தனியா படிச்சு கிழிக்க வேணாம் ...நான் கொடுக்குற டாபிக்கை நீ படிச்சு முடிச்சு இருக்க"... என்று கண்டிப்புடன் கூற அவளோ பூம்பூம் மாடு போல தலையை ஆட்டினாள்...

அவளோ வேகமாக தலையை ஆட்டி "எனக்கு புரியல அதான் "...என்று மெல்ல கூற

அவள் முகத்தை பார்த்து, " படிக்க மட்டும் தெரியாது மத்தது எல்லாம் தெரியும்"... என்று அவளின் உதட்டை பார்த்து கொண்டே முணுமுணுத்து விட்டு அவளுக்கு புரியாத பகுதியை அவன் கற்று கொடுத்தான்...அவளோ தப்பித்தோம் என்று அவன் கற்று தருவதை கவனித்தாள்...

அவளும் அவனிடம் விளையாடாமல் படிப்பில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறாள்...சில சமயம் அவன் லேட்டாக தான் வீட்டுக்கு வர நேரிடும் அந்த சமயங்களில் அவளோ உறங்கி உறங்கி வழிவதை பார்த்தும் அவன் பாடம் சொல்லி கொடுப்பது அவளுக்கு விளங்காமல் அவள் முழிக்கும் சமயங்களில் விக்ரமோ சத்தமே இல்லாமல், " உன் அப்பா ஏன் உன்னை அடிக்குறாரு னு இப்போ புரியுது'... என்று நக்கல் குரலில் கூறினால் போதும் ரோஷம் வந்து விடும் மதுவுக்கு ...அதன் பின்பு படித்து விடுவாள்...

எப்போதும் போல அன்றொரு நாள் உறங்கி உறங்கி படிக்கும் நேரங்களில் ஒரு நாளான அன்று அவன் மேலேயே விழ எப்போதும் போல அவளை நீக்கி படுக்க அவன் முயல அன்றைய தினம் முடியவில்லை..அவள் உறக்கத்தில் அவனை கட்டி பிடித்து ஏதோ அவளின் டெட்டியை கட்டி பிடித்து உறங்குவது போல அவன் மேலேயே சாய்ந்த அவள் அவனை விடாமல் கட்டி பிடிக்க அவனோ தன் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவனின் இடுப்பை தன் இரு கைகளாலும் கோர்த்து உறங்கி கொண்டு இருப்பவளை எப்படி நீக்குவது என குழம்பி போனான்...அவன் மடியில் லேப்டாப்  இருக்க அதை எடுத்து பக்கத்தில் இருக்கும் டேபிளில் வைக்க வேண்டும் இவளோ இவன் திரும்பினால் அவன் மேலேயே அவளின் முழு உடலையும் சரித்து விடுவாள்..ஏற்கனவே அவளின் கால்கள் அவனின் கால்களோடு பின்னப்பட்டு இருக்க சத்திய சோதனையாக இருந்தது விக்ரமுக்கு...

அதிலும் லேப்டாப் இன் சார்ஜர் வேறு அவளின் உடலின் அடியில் இருக்க அவளை தொடாமல் என்னை நீக்கி படுக்க வைக்க முடியாது உன்னால் முடியாது என்பது போல எல்லா வழிகளையும் அடைத்து இருந்தாள் அவனின் தர்ம பத்தினி....

என்ன செய்வது என்று யோசிக்க ஒரு கையால் அவளை அணைத்து கொண்டே மறு கையால் லேப்டாப் ஐ இழுக்க அது வர வில்லை பின் சார்ஜர் ஐ அவிழ்த்து லேப்டாப் ஐ அருகில் இருக்கும் மேசையில் வைக்க அதற்குள் அவளின் பாதி உடல் அவன் மீது ஆகி இருந்தது...அதில் வேறு மது அவனின் கழுத்தில் மூக்கை வைத்து உரசி கொண்டே இன்னும் அவனை இருக்க அவனோ நிலை குழைந்து அவன் குரல் கூட குழைந்து இருந்ததோ என சந்தேகம் இருந்தது...ஆனால் ஒத்து கொள்ள மாட்டானே... பின் மெதுவாக ,"மது தள்ளி படு டீ "....என்று அழைத்து விட்டான்...அவன் நிலைமை மோசம் ஆகி விட்டது...

அதில் வேறு இந்த மயக்கும் மோகினி வீட்டில் இருக்கும் வேளையில் தன்னை அலங்கரித்து கொள்ளும் விதமாக அவளின் நீண்ட முடிக்கு பூ வைத்து கொள்வாள்...அது வேறு அவர்களின் அறையே மணம் கமிழ்ந்து எல்லா விதத்திலும் அவனின் ஹோர்மோன்களுக்கு தண்ணீர் ஊற்றி  கொண்டு இருந்தது...அந்த மணம் வேறு நாடி நரம்பை எல்லாம் சுண்டி இழுக்க இதுக்கு மேல் முடியாது என்று தான் அவளை அழைத்தான்....

இவளுக்கு கேட்டால் தானே மேலும் மேலும் அவனை ஒண்டி அவனை இறுக்கி கொண்டு படுத்தாள்...அவளை இப்படியே விட்டால் என் நிலைமை மோசம் ஆகி விடும் என்பதை உணர்ந்த விக்ரம் மெல்ல அவளை தன்னிடம் இருந்து பிரித்து படுக்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்...இல்லையேல் உறக்கத்திலே முதல் இரவை கொண்டாட நேரிடும்....

பின் அவளின் அடியில் இருக்கும் சார்ஜர் மெல்ல கை வைத்து அதை எடுத்தான்...அவன் எடுக்கும் வேளையில் சில பல இடங்கள் அவனின் கை தொட்டு தீண்டியது...அவன் கைகளோ மேலும் முன்னேற துடிக்க அவனின் மூளையோ செல் என அறிவுரை கொடுத்தது அவனுக்கு....அவனோ மனைவியே ஆனாலும் உறங்கும் அவளிடம் என தயங்க அவனும் அப்படியே மெல்ல சரிந்தான்... அவளோ அவனை கட்டி பிடித்து கொண்டு உறங்கினாள்...அவனுக்கு தான் அவளை வைத்து கொண்டு உறக்கம் வரவில்லை..அவளின் உடல் பாதி அவன் மீது இருக்க கால்களை அவன் காலோடு கோர்த்து அவன் மார்பில் துயில் கொண்டாள் மது....

பொறுமையை கடைபிடித்தவன் முடியாமல் அவளின் மூச்சு காற்று வேறு அவனின் இதயத்தை தொட்டு தீண்டி செல்ல அவனால் சுவாசிக்க முடியாமல் அவளின் மூச்சு காற்று தடை செய்ய அங்கே விக்ரமுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது...பெண் அவளின் நாசியை தீண்டி பார்க்க மனம் துடித்தது...அடக்கினான் அவனின் புலன்கள் அனைத்தையும்... அவளை தள்ளி படுக்க வைத்தான் ...அப்போதும் அவனுக்கு இம்சையை தான் கொடுத்தாள்  மது... அவள் சரிந்து படுக்கையில் பெண்ணவளின் அங்கங்கள் பெண்மையின் பொக்கிஷம் அவன் கண்களுக்கு விருந்து ஆனது...தவமே இல்லாமல் தவம் மேற்கொள்ளும் அந்த முனியின் கண்கள் அவனின் அவள் அவனுக்கு மட்டுமே சொந்தம் ஆன இடத்தில் மேய தினமும் ஏதாவது வகையில் அவளின் அழகை காட்டி தொல்லை செய்து கொண்டு இருக்கிறாள் அவனின் மாணவி அல்ல அவனின்  மனைவி ...ஒரு நாள் முனிவன் முற்றும் துறந்து கடை திறந்த வெள்ளம் போல அவளை மையம் கொள்ள போகிறான்...அவளும் கரை சேர மனம் இல்லாமல் அவனோடு ஒன்ற போகிறாள்...அதற்கு காலம் நீளுமோ.... மது அந்த காலத்தையும் துரத்தி விடுவாளோ....

அவளிடம் இருந்து பார்வையை அகற்ற முடியாமல் மெல்ல பார்வையை மாற்றவும் பிடிக்காமல் விளக்கை அணைத்து விட்டான்...கண்ணை விட்டு மறைய மாட்டேன் என அடம்பிடிக்கும் அவளின் அழகோடு உறக்கத்தை தழுவினான்....

அவளின் தேர்வுகள் தொடங்கியது...விக்ரம் தான் கொண்டு போய் விட்டும் கூட்டி கொண்டும் வருகிறான்...இதை எல்லாம் வெங்கி தன் வீட்டு ஜன்னலின் வழியே பார்வை இட்டு கொண்டு இருந்தார்...

அவள் ஜோடியாக வருவதையும் போவதையும் கண்ட யுவராஜ்க்கு அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி வந்தது...இந்த கேவலமான எண்ணம் கொண்ட சிலர் இது போல நாம் வாழும் உலகில் உள்ளனர்...அதாவது என்ன தான் தனக்கு பிடித்த பெண்ணிற்கு திருமணம் நடந்தாலும் அது எல்லாம் அவர்கள் கண்ணில் தெரிவது இல்லை..அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒன்று தான் தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது ...அவள் யார் உடனும் நல்ல விதமாக வாழ கூடாது என்ற நல்ல எண்ணமும் அவர்களுக்கு உண்டு...

அதன் படி யுவராஜ் விக்ரம் மதுவிற்கு செய்தது எல்லாம் அவனுக்கு போதவில்லை... மீண்டும் தொல்லை தர தயாராகி விட்டான்...அவள் மேல் அவனுக்கு இருக்கும் இன கவர்ச்சியை காதல் என்ற பெயர் கற்பித்து அதையே தன்னுள் வெறியாக மாற்றி விட்டான்...விக்ரம் முகத்தை அன்று கண்ட போது விக்ரமின் முகத்தை காணுவதை தவிர்த்த யுவராஜ் ஏதாவது விக்ரமுக்கு தெரிந்து விடுமோ என்ற பயமும் அவனுக்கு இருந்தது...

ஆனால் அவன் எதிர் பார்த்தது போல எதுவும் நடக்காத காரணத்தினால் நம் மீது விக்ரமுக்கு சந்தேகம் இல்லை என கருதிய யுவராஜ் மீண்டும் தன் வேலையை மதுவிடம் காட்டலாம் என முடிவு செய்து விட்டான்...

அதன்படி தேர்விற்கு வரும் மதுவிடம் மெல்ல நல்லவன் போல பேசி கொண்டும் இருக்கிறான்...அவளும் அவனிடம் உரையாடி கொண்டு இருக்கிறாள் எந்த விதமான கலங்கமும் அவள் மனதில் இல்லாமல்...ஆனால் மது தன்னிடம் உரையாடுவதையும் அவன் தவறாக புரிந்து வைத்து கொண்டான்..அவளுக்கு தன் மீது விருப்பமோ என்று...அது எப்படி விருப்பம் உன்னிடம் வரும் என்ற கேள்விக்கு எல்லாம் அவனிடம் பதில் இல்லை அவன் தான் மது மது என புலம்பி கொண்டே அவள் சாதாரணமாக பேசினாலும் தன் மீது விருப்பம் உள்ளது அதனால் தான் என்னிடம் உரையாடுகிறாள் என தவறாக கணித்து வைத்து இருக்கிறான்...

இது ஏதும் அறியாத விக்ரம் எப்போதும் போல அன்றைய தேர்விற்கு அவளை காலை இறக்கி விட்டவன் மதியம் தன்னால் வர இயலாது என்று கூறி பஸ்சில் வர சொன்னான்...அவளும் சரி என்று கூறி செல்ல மதியம் சொன்னது போல தேர்வும் முடிந்தது..அந்நேரம் பார்த்து அவள் போனிற்கு அழைத்தான் விக்ரம் அங்கேயே நிற்கும் படியும் தான் ஒரு மணி நேரத்தில் வந்து அவளை கூட்டி செல்வதாகவும் கூற மது காலேஜில் மரத்தடியில் அமர்ந்து இருந்தாள்...விக்ரமுக்கு வேண்டி காத்து கொண்டு இருந்தாள்...

எப்போதும் அவளை கூட்டி செல்ல வரும் விக்ரம் இன்று வராததையும் அவள் தனியே அமர்ந்து இருப்பதை கண்ட யுவராஜ் அவளிடம் மறுபடியும் வால் ஆட்ட மது இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறான்...

அவனின் வாலை ஒடித்து விட விக்ரம் வருவானா இல்லை ...மது மட்டுமே போதுமா ...இதில் இரண்டில் எது நடக்கிறதோ இல்லையோ யுவராஜ்ஜின் வால் முறிய போகிறது அது மட்டும் நிதர்சனம்....

என் கண்கள் உனை தேடும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top