காதல் 35

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

அத்தியாயம் : 35

காதலது கண்ணில் கண்டேன்

    வீட்டிற்கு வரும் வரை அவனுக்கு அதே யோசனையாக இருக்க வீட்டுக்குள் நுழைந்ததும் அவளை தர தரவென இழுத்து கொண்டு அறைக்குள் சென்றான்... எதிரே வந்த வாசுதேவனை கூட கண்டு கொள்ளலாமல் அவளை இழுத்து கொண்டு போக உள்ளே சென்ற ,"மது விடுங்க சார் வலிக்குது எதுக்கு இப்படி இழுத்துட்டு போறீங்க"... என்று கத்தி கொண்டே அவன் பின்னால் போக உள்ளே அவளை இழுத்து கொண்டு வந்தவன் கதவை அடைந்தான்...

"சொல்லு டி இது என்ன"... என்று திரும்பி நின்று அவன் முதுகில் இருக்கும் அவளின் உதட்டு சாயத்தை காட்டி கேக்க

அவளோ வாயை மூடி கொண்டு இருந்தாள்...தவறு செய்தவள் அவள் ஆகிற்றே...என்ன வாதாட முடியும் அவனோ," நீ அவ்ளோ மேக்கப் போடும் போதே எனக்கு தெரியும் டி ஏதாவது இது மாதிரி செஞ்சு வைப்ப னு".. என்று எரிச்சலோடு கூற

"சார் நான் ஒன்னும் பண்ணல வண்டி ஏறி இறங்கியதில் தான் இப்படி ஆகிடுச்சு".. என்று நிலைமையை விளக்கி கூற முயல  அவனோ அதை எல்லாம் நம்ப தயாராக இல்லை... அப்போது அவன் பட்ட அவஸ்தைகள் நினைவு வந்து போக அவளை கொள்ளும் ஆத்திரம் வந்தது... "உன்னை யாரு டி என் கூட வர சொன்னது...எத்தனை பேர் பார்த்து இருப்பாங்க பிளான் பண்ணி தானே என்கூட வந்த என்னை அசிங்கப்படுத்தனுமே இப்படி எல்லாம் செய்யுறீயா "...என்று கேட்க

மேலும் அவன் நிறுத்தாமல் , "எப்போ உன்னை நான் பார்தேனோ அப்போ தொடங்கிச்சு என்னோட கஷ்ட காலம் இதோ இது வரை என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கு "...என்று அவன் பேசி கொண்டே போனான்...அவன் மனதில் யுவராஜ் என்ற கரும்புள்ளி இருக்க அதை அவளிடம் தெளிவாக ஒரு விடயம் கிடைக்காமல் அவளிடம் கேக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்...

அவனுக்கு தெரிய வேண்டியது இது தான் இவளும் அவனும் சேர்ந்து இந்த வேலையை செய்தார்களா இல்லை அவன் மட்டும் செய்தானா... அப்படி அவன் செய்தால் என்ன காரணத்திற்காக அவன் செய்தான் என்பது மட்டுமே அவன் அறிய வேண்டியது...அதை இப்போது நேரே கேக்காமல் எல்லா தெளிவுகளுடன் கேட்கலாம் என்ற முடிவோடு அந்த விஷயத்தை மனதில் பத்திரப்படுத்தி கொண்டான்...அதனால் இப்போது அவளிடம் கேக்க போவது இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டான்...தீர விசாரித்த பிறகே அவளிடம் கேக்க போவதாக முடிவு எடுத்து விட்டான்...

இது ஏதும் அறியாத மதுவோ தன்னால் தான் அவன் கோபமாக இருக்கிறான் என்பதை அறிந்த அவள்  அவன் பேசுவதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், " சார் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க சார் "...என்று கூறி கொண்டு இருக்கும் போதே வெளியே வாசுதேவன் வந்து கதவை தட்டினார்...

ஆம் அவனின் கோபமும் அவளை எதுக்காக இப்படி இழுத்து செல்கிறான் என விளங்காமல் வெளியே அவளின் குரல் மட்டும் கணீர் என கேட்க பதட்டம் அடைந்த வாசுதேவன் தன் மருமகளை மகனிடம் இருந்து காப்பாற்ற கதவை தட்ட அங்கே அவனோ அந்த சத்தம் வேறு அவனுக்கு எரிச்சலை கிளப்ப கதவை திறந்தான் விக்ரம்..

அங்கே அவள் பாவமாக கண்கள் கசிய நின்று கொண்டு இருக்க வேகமாக உள்ளே ஓடி வந்த வாசுதேவன், "என்ன மா ஆச்சு என்னமா ஆச்சு"... என்று வாசுதேவன் பதறி கொண்டு வர அவனோ கடுப்பானான் ...இவரு இருக்கிற தைரியம் அதான் அவ ஆடுறா ...அவளோ மூக்கை உறிஞ்சி கொண்டு நிற்க , விக்ரமோ மனதுக்குள் அவரை பார்த்ததும் ஓவர் ரா தான் பண்றா இனி அவரு வேற தொடங்குவாரு என்று அவன் மனக்கண்ணில் அடுத்து நடக்கும் நிகழ்வுகளை நினைக்கும் போதே அவர் தொடங்கி விட்டார்...

"எதுக்கு பா இப்படி கத்துற மெதுவா உன்னால பேச முடியாதா...எதுக்கு இப்படி அவளை இழுத்துட்டு போன "...என்று கேட்க

அவனோ , "அவளையே சப்போர்ட் பண்ணிட்டு இருக்காதீங்க அவ என்ன பண்ணினாலும் கண்டுக்கறது இல்லை என்னையே சொல்லுங்க பா "..என்று அவரின் மேலும் காய்ந்து கொண்டே கூற

விக்ரமுக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவனின் தந்தை தான்..இப்போது எல்லாம் அவளுக்கே அவர் சப்போர்ட் செய்வதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை... அதும் அவள் தவறே செய்தாலும் அவர் அவளுக்கு தான் சப்போர்ட் செய்வதை காண பிடிக்காமல் அவன் கூற

மகனின் முக வாட்டத்தை கண்ட அவர் , "சரி இப்போ சொல்லு பா அவ என்ன செஞ்சா"... என்று கேட்க

அவனோ வேகமாக அவளை மாட்டி விட வேண்டும் என நினைத்து அவன் வேகமாக திரும்பி அவன் முதுகை காட்ட மதுவோ இறுக்கமாக தன் கண்களை மூடி கொண்டாள்...என்ன தான் இருந்தாலும் அவள் ஒரு பெண் அல்லவா மாமனார் முன்னிலையில் இவன் என்ன காரியம் செய்து கொண்டு இருக்கிறான் என்று அவள் கண்களை திறக்கவே இல்லை...

அவனின் சட்டையை பார்த்த அவரோ இது சிறுசுகளின் விளையாட்டு என்பதை புரிந்து கொண்ட அவர்களின் சண்டையில் மூக்கை நுழைத்த அவரின் மடத்தனத்தை எண்ணி வெட்கிய அவரோ, "நீங்க என்னமோ பண்ணிக்கோங்க"... என்பது போல அவர் வெளியேறி விட்டார்...

அவர் செல்லும் வரை அமைதியாக இருந்த அவள் வாசுதேவன் தலை கண்ணை விட்டு மறைந்ததும் கண்களை திறந்து வேகமாக கதவை அடைத்தவள் அவனை பிடி பிடியென பிடித்து விட்டாள்... "உங்களுக்கு அறிவே இல்லையா சார் பார்க்க தான் இவ்வளவு வளர்ந்து இருக்கீங்க ...இப்படியா போய் உங்க அப்பா கிட்ட சட்டையை காட்டிட்டு நிற்பிங்க "..என்று கேட்டாள்...

அவள் கூறியதும் தான் அவன் செய்த காரியம் அவனுக்கு புரிப்பட அவனோ அதை ஒத்துக்கொள்ளாமல், "இது எப்படி போகும்" ...எல்லாம் உன்னால் தான் என்பது போல கேட்க , அவளோ கோபத்தில், "என்னோட இந்த ப்ளூ ட்ரெஸ் கூட வாஷிங் மெஷின் ல போடுங்க உங்க சட்டையும் ப்ளூ ஆகிடும் "...என்று கூறி தலையில் அடித்து கொண்டு சென்றாள்...

நாட்கள் நீங்க அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன...அடுத்த வாரம் முதல் அவளின் தேர்வு தொடங்க இருக்கிறது...மது அந்த வீட்டோடு ஒன்றி விட்டாள்... விக்ரம் அவனின் புதிதாக தொடங்க இருக்கும் பணிக்கான பணிகளில் இறங்கி வருகிறான்...அவன் சதா எந்த சமயமும் லேப்டாப் இல் தான் அவன் வாசம் ...பகலில் அவன் ஆஃபீஸ் தேடுவதும் அதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறான்...ஒரு ஆபிஸ் கண்டும் விட்டான்...அதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருக்கிறான்...முதற்கட்ட செலவுகள் எல்லாம் அவன் கையில் இருந்து தான் செலவழித்து வருகிறான்...

இரவானதும் ப்ரொஜெக்ட் வேலை என்று இருக்க இவளோ படிக்கிறேன் பேர் வழி என்று தூங்கி வழிந்து கொண்டு இருந்தாள்...அவனின் அறை முழுவதும் புத்தகங்களை வாரி இறைத்து வைத்து இருந்தாள்... அதை காணும் விக்ரம் அவள் படிக்கிறாள் போல என அவன் நினைத்து கொண்டு இருக்க இங்கே இவளோ படிக்காமல் சுற்றி கொண்டு இருந்தாள்...

பகல் எல்லாம் வாசுதேவனுக்கு உதவுவது மற்றும் டீவி பார்ப்பது என பொழுதை போக்கும் அவள் இரவு ஆனதும் அவனுக்கு போட்டியாக புக்கை எடுத்து வைத்து அமருவாள்... அதுவும் அவன் கோபப்படுவான் என்பதற்காக மட்டுமே..

சில சமயம் சாமி ஆடி கொண்டே புத்தகத்தில் விழுவதை பார்த்தவன் அவளை நேராக படுக்க வைப்பான்...இல்லையேல் அடுத்த நிமிடம் அவன் மீது விழுந்து இருப்பாள்....படுக்கும் போது அவளுக்கு உடை கட்டுப்பாடு என்பது கிடையாது போல.... மேலேறிய உடைகளும் வாழை தண்டு கால்களும் உதட்டு சாயம் பூசாத அவளின் உதடும், பளிங்கு போன்ற அவள் முகமும் பல சமயங்களில் அவன் ரசிக்காமல் இல்லை...அதும் அவள் தன்னை கவருவதற்கு தான் என எண்ணி கொள்வான்...

ஆனால் அவன் மனதில் அவள் இருக்கிறாளோ என்ற கேள்விக்கு மனைவியாக இருப்பாள் என்ற பதிலையே அளிப்பான்...வேறு எந்த உணர்வுகளும்  அவள் மீது எனக்கு இல்லை என்று சொல்லியே அவளை ரசித்து கொண்டும் இருக்கிறான் அவன் உணராமலே....ஆனால் அவன் மனதையும்  கட்டு படுத்தி வைத்து இருக்கிறான்...வேறு ஏதாவது ஆண்மகன் என்றால் இந்நேரம் எல்லாம் கழிந்து அவர்கள் தாம்பத்தியத்தில் இறங்கி இருப்பர்... ஆனால் அவனோ அதை எல்லாம் விரும்பவில்லை...

இவனின் மனப்போராட்டத்தை எல்லாம் அவள் அறியவில்லை... அவள் உணர்ந்தாலோ...அவள் அறிய நேர்ந்தாலோ மடையா மனைவி என்றால் எல்லாம் அடங்கும்...என்னை காதலிக்கவில்லை , உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் உன் ஒரு நொடி பார்வை கூட என் மீது தவறாக விழுந்து இருக்காது...இது போல என்னை கண்டு கொண்டு இருக்க மாட்டாய்...உன் பார்வை தடம் மாறாது...இது கணவனின் பார்வை...என் மீது உனக்கு இருக்கும் உரிமை...நீ மட்டுமே உனக்கு மட்டுமே ஆன உரிமை என்று அவனை புரிய வைத்து இருப்பாள்...ஆனால் அவள் தான் உறங்கி கொண்டு இருக்கிறாளே அவன் கண்களுக்கு மட்டும் விருந்து வைத்து கொண்டு....

ஒரு நாள் பகலில் விக்ரம் வீட்டுக்கு வர அப்போது இவளின் திருட்டுத்தனமும் புரிந்தது...புத்தகத்தை தலைக்கு அடியில் வைத்து படுத்து கொண்டே கடலை சாப்பிட்டு கொண்டு டிவி சீரியல் பார்த்து கொண்டு இருக்க வாசுதேவன் வீட்டின் முன் அமர்ந்து கொண்டு பேப்பர் படித்து கொண்டு இருந்தார்...அப்போது தான் உள்ளே நுழைந்தான் விக்ரம்....

அவரை தாண்டி வீட்டுக்குள் செல்ல அங்கே அவள் படுத்து இருக்கும் கோலத்தையும் அவள் செய்து கொண்டு இருக்கும் செயலை கண்டவன் பொங்கி விட்டான்...

"இது தான் நீ படிக்கும் லட்சணமா என்று...உன்னோட அப்பா இப்பவே சொல்லிட்டு இருக்காரு என்னமோ உன்னை நாங்க கொடுமை படுத்தி உன்னோட படிப்பை நிறுத்தி உட்கார வெச்சு இருக்கிற மாதிரி அது உண்மை தான் நீ நிரூபிப்ப போல "...என்று
காய்ந்தான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top