காதல் 34

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

அத்தியாயம் : 34

கல்லூரி வளாகம்...

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அந்த வளாகத்துக்குள் இருவரும் ஜோடியாக உள்ளே நுழைகின்றனர்...கசப்பான சில சம்பவங்களும் அதை மாற்றும் விதமாக கடந்த ஒரு மாதமாக இருவரும் முயன்று வருவதும் இப்போது தான் அவளிடம் சிறிது சிறிதாக முறைக்காமல் பேசி வரும் சமயத்தில் இருவருக்கும் இறுக்கம் நிறைந்த நிகழ்வுகளை மனக்கண்ணில் கொண்டு வந்தன...

முதலில் யாரிடமும் பேச பிடிக்காமல் நேரே விக்ரம் அவனுக்கு தேவையான பேப்பரை பெற தாளாளர் அலுவலகம் சென்றான்...நல்ல வேலையாக அங்கே அவர் இருக்க அவர் அவனை இழக்க மனம் இன்றி வேலையை தொடரலாமே என்று மீண்டும் அதே பல்லவியை பாட அவனோ முடியாது என மறுத்து விட்டு மேலும் அவர் தன் கல்லூரிக்கு ப்ரொஜெக்ட் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்து விட்டு அவனுக்கு தேவையான பேப்பரை கொடுத்தார்...

அவன் வந்த வேலை உடனே முடிந்து விட அவனோ அவளுக்காக காத்து இருக்க தொடங்கினான்...அவளோ வருவதாக இல்லை...விக்ரமின் பொறுமை இழக்க தொடங்கி இருந்தான்...அப்போது அந்த பக்கமாக வந்த ஒன்று இரண்டு பேராசிரியர்கள் அவனிடம் உரையாடி விட்டு செல்ல  அந்த கல்லூரியின் வாட்ச்மேன் வந்தார்..

"தம்பி நல்லா இருக்கீங்களா "...என்று கேட்க

விக்கிரமோ சும்மா தலையை மட்டும் ஆட்டினான்..அன்றைய தினம் இவரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மனிதர் அல்லவா ...

அவரோ விக்ரம் அவரிடம் உரையாடாமல் இருப்பதை எல்லாம் பொருட்பட்டுத்தாமல், "தம்பி அன்னிக்கு ந்யட் நான் தான் தம்பி எல்லா ரூமையும் சாத்தினேன்...சரியா கவனிக்கலை மன்னிடுச்சுடுங்க தம்பி"... என்று வருத்தப்பட்டு கூற

அவனோ வயதானவர் தன்னிடம் வந்து வருந்துவதை காண பிடிக்காமல், "பரவாயில்லை விடுங்க அண்ணா "...என்று கூற

"இல்லை தம்பி அன்னிக்கு நான் பொறுமையா எல்லா கதைவையும் அறையையும் செக் பண்ணி தான் பூட்டிட்டு இருந்தேன் தீடீர்னு ஒரு பையன் வந்து சீக்கிரம் பூட்டுங்க ...உங்களை எல்லாத்தையும் சீக்கிரம் பூட்ட சொன்னாங்க னு சொன்னான் ...நானும் வேகமா பூட்டிட்டேன் ..என்னை கவனிக்க கூட விடல அந்த பையன் "...என்று கூற

விக்ரமோ இதுவரை இது எப்படி நடந்தது என்று புரியாமல் இருந்த அவனுக்கு எங்கோ தப்பு நடந்து இருப்பது போல மனதுக்குள் தோன்ற அவன் மது தான் இப்படி செய்து இருப்பாளோ என்று அன்றைக்கே அவளிடம் சண்டை இட்டவன் இப்போது தான் அதை மறந்து இருந்தான்...இவர் கூறுவதை பார்த்தால் யாரோ இவரை அழுத்தம் கொடுத்து பூட்ட சொல்லி இருப்பார்கள் போல யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே உங்க கிட்ட பேசினவனை," உங்களுக்கு அடையாளம் தெரியுமா "..என்று கேள்வி கேட்க

அவரோ ,"இருட்டுக்குள்ள சரியா முகத்தை பார்க்கல தம்பி ஆனா ஒல்லியா இருந்தான் அந்த பையன் கழுத்துல கூட சிங்கம் போட்ட செயின் போட்டு இருந்தான்..அது மட்டும் மின்னுச்சு..எங்கே தம்பி அந்த பையன் சொன்ன உடனே போங்க போங்க னு என்னை விரட்ட தானே பார்த்தான் நானும் சரி னு சொல்லி வேகமாக பூட்டிட்டேன் "...என்று கூறி அவர் கிளம்பி விட்டார்...இவனோ அவர் கூறிய அடையாளங்களில் யார் இருப்பார்கள் ...ஒல்லியாக இருப்பது எல்லாம் ஒரு அடையாளமா என்று நினைத்து கொண்டு இருந்தான்...

மரத்து நிழலில் அவன் நிற்க அவன் மீது ஏதோ ஒரு இலை வீழ அதை கண்ட வாட்ச்மேன் உரிமையோடு அவன் தோளில் இருந்த இலையை தட்டி விட்டு அவருக்கு ஏதோ ஒரு சாயம் போல அவரின் கண்களுக்கு மதுவின் உதட்டு சாயம் தெரிய என்ன,' தம்பி சட்டையில் கறை "...என்று கேட்க

அவனோ இவள் ஏதாவது செய்து இருப்பாளோ என்ற கேள்வியோடு பைக் கண்ணாடியில் திரும்பி பார்க்க அவனின் முகம் கடுகடுவென மாறியது...அவளின் உதட்டு சாயம் என்னை வேண்டும் என்றே அவமானப்படுத்தவே இதை செய்து விட்டாள் என கருதி அவள் வருகைக்காக காத்து இருக்க தொடங்கினார்...வாட்ச்மேன் னும் மெல்ல நடையை கட்டினார்...

அதே நேரம் hod முன்பு நின்று கொண்டு இருந்த மது ஹால் டிக்கெட்டை வாங்கி வெளியே வரும் போது அவள் நட்பு வட்டாரம் பிடி பிடியென பிடித்து கொண்டது..எல்லார் கேள்விகளுக்கும் மது பதில் அளித்துக் கொண்டே வந்தாள்.. தவறு இருந்தால் தானே பயப்பட வேண்டும் அவளிடம் தான் எந்த தவறும் இல்லையே என கருதி அவள் நடந்த விஷயத்தை எல்லாம் கூறி சாருக்கும் எனக்கும் திருமணம் ஆகி விட்டது என்றும் இப்போது நாங்கள் நன்றாக இருப்பதாகவும் கூறினாள்...

உண்மையில் ரம்யா தவிர அனைவருக்கும் சிறு பொறாமை தான் அவள் மீது வந்தது...இத்தனை அவமானங்கள் ஏற்பட்டும் கல்லூரியின் ஹார்ட்தோர்ப் சாரை மணம் முடித்து விட்டாலே என்று...

அதன் பிறகு அங்கிருந்து நடந்து வந்து கொண்டு இருந்தவளை பிடித்து கொண்டான் யுவராஜ்...

அன்று அவர்கள் இருவரையும் மாட்டி விட வேண்டும் என்று மட்டும் தான் அவன் நினைத்தான் அதும் அவனுடைய குறி மதுவாக இருக்க அவள் எப்படி இவனை போய் காதலிக்கலாம் என்று விக்ரம் மீதும் கோபத்தை அவன் வளர்த்து வைத்து இருந்தான்...

மிக சரியாக அவனுக்கு காரியங்கள் கை கூடி வர கதவை அடைத்து விட்டு வெளியே வந்து விட்டான்...அடைத்த அவனுக்கு நினைவு இல்லை அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு கதவு இருக்கிறது என்று...அவனுடைய எண்ண படி வெங்கி இரவு முழுவதும் தேட காலை அவளும் பயத்தில் இருப்பாள் இனி அவள் அவன் பின்னாடி சுற்ற மாட்டாள்... மொத்தத்தில் அவளுக்கு ஒரு அவமானம் ஏற்படுத்த வேண்டும் அதை சிறப்பாக அவன் செய்து விட்டான்...அதே போல விக்கிரமுக்கும் தான் அளிக்கும் தண்டனை தான் இது என்று அவனையும் அடைத்து விட்டான்...

பக்குவம் இன்மையும் தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற நல்ல எண்ணம் ஒரு சேர்ந்து அவன் இப்படி ஒரு ஈன செயலை செய்து விட அவனுக்கே அதிர்ச்சி தான் இருவரும் திருமணம் செய்து கொண்டது இருந்தும் அவள் முன்னால் நல்லவன் போல பேசி கொண்டு வர அந்நேரம் அவர்கள் இருவரையும் விக்ரமோ தன் கூரான கண்களால் பார்த்து கொண்டு இருந்தான்...

மதுவோ இயல்பாக அவனிடம் பேசி கொண்டு வர ஆனால் யுவ்ராஜ்க்கு தான் முடியவில்லை..ஏனோ தூரத்தில் இருந்தே விக்ரமை கண்ட யுவ்ராஜ்க்கு கை, கால்கள் நடுங்க தொடங்கியது...விக்ரமோ அவனின் உடல் மொழியை படித்து கொண்டு மார்பில் தன் கைகளை கட்டி கொண்டு நிற்க அவன் ஏன் என்னை பார்த்து தடுமாறுகிறான் என்று மீண்டும் அவனையே அளவிட்டு கொண்டு இருந்தான்...

அதற்குள் மது அவன் அருகில் வர விக்ரம் அவனை பார்த்து," யுவராஜ் கிளாஸ் இல்லையா".. என்று சாதாரண குரலில் கேக்க

அவனோ விக்ரமின் கண்களை காணாமலே கீழே குனிந்து கொண்டே பதில் அளிக்க இவன் ஏன் என்னிடம் இப்படி நடந்துக்குறான் என்று பார்த்து கொண்டு அவனை ஆராயும் போதே வாட்ச்மேன் கூறியது போல அவன் கழுத்தில் சிங்கம் டாலர் போட்ட செயின்...அவனின் செயினும் அவனின் உடல் மொழியும் ஏதோ சரி இல்லை என்பதை அவனுக்கு உணர்த்த," வா போகலாம் "என்று மதுவை அழைத்து விக்ரம் பைக்கில் ஏறினான்...

அவளும் அவனின் தோள் மீது கை வைத்து ஒரு புறமாக அமர அவர்கள் இருவரும் கிளம்பி விட்டனர்...யுவராஜோ அப்பாடா தப்பித்தோம் என்று மனதுக்குள் தோன்றினாலும் அவள் விக்ரமின் தோளில் கை இட்டு வண்டியில் சென்றதும் அவனின் கண்களுக்கு மிக சரியாக விக்ரமின் சட்டையில் உள்ள உதட்டு குறி வேறு அவனுக்கு நெருப்பை வாரி இறைத்தது போல இருந்தது...ஆனால் விக்கிரமும் அதே நேரம் யுவராஜை தான் நினைத்து கொண்டு இருந்தான்...மது வரும் போது போல வளவளத்து கொண்டே வர அது ஒன்றும் அவன் செவியில் ஏறவில்லை...

என் கண்கள் உனை தேடும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top