காதல் 33
அத்தியாயம் : 33
அவள் தானும் வருகிறேன் என்று கூறியதை கேட்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டு அவள் வந்தால் எல்லோரும் அவளை கேள்வியாலும் பார்வையாலும் அவளை குறுக வைத்து விடுவார்கள் என கருதி, "வேண்டாம் நீ எதுக்கு இப்போ வர "...என்று அவன் மறுக்க
அவனின் மறுப்புக்கான காரணம் புரிய, "ஏன் சார் நான் உங்க கூட வர கூடாதா"... என்று கண்கள் மற்றும் மூக்கை சுருக்கி பாவமாக கேக்க விக்ரமோ மனதுக்குள் "இவ சாதாரணமாக இப்படி எல்லாம் கேக்க மாட்டாளே இன்னிக்கு என்ன ரொம்ப பாவமாக கேக்குறா "...என விழித்து கொண்டே , "உனக்கு இப்போ எதுக்கு காலேஜ் போகனும் "...என்று கேட்க , "எக்ஸாம் வர போகுது சார் ஹால் டிக்கெட் வாங்கனும் "...என்று கூற அவனோ ,"நாளைக்கு போய் போய் வாங்கிக்கோ இன்னிக்கு நான் மட்டும் போறேன் "..என்று கூற
அவளோ நேரே போய் வாசுதேவன் முன் நின்றாள்... "எனக்கு ஹால் டிக்கெட் வாங்கணும் கூட்டிட்டு போங்க "..என்று கூற அவரோ, " சரி "...என்று அவர் தலையை ஆட்ட , அவளோ அவர் செவியில் , "அங்கிள் நான் உங்க பையன் கூட போகனும் நீங்க என்ன டா னா சும்மா சும்மா தலையை ஆட்டிட்டு இருக்கீங்க..என்ன கேட்டாலும் தலையை தான் ஆட்டிட்டு இருப்பிங்களா"....என்று அவருக்கு ஒரு குட்டு கொடுத்தாள்...
அவரோ சிரித்து கொண்டே அதற்கும் தலை ஆட்டி கொண்டே சரி என்று கூற மதுவோ தன் தலையில் அடித்து கொண்டாள்...அதன் பின் விக்ரமிடம் ஏதோ பேசி சம்மதிக்க வைத்து விட்டார்...மதுவோ மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்...இதோ பைக்கில் அவன் பின்னால் அமர்ந்து வண்டியை அவன் வெளியே எடுக்க வில்லை கோல்ட் வெளியே நின்று யாரிடமோ பேசி கொண்டு இருந்தார்...இதுக்கு வேற வேலையே இல்ல தெருவுல யார் போனாலும் நிக்க வெச்சு பேசிட்டு இருக்கிறது என்று அவர் மீது கேவலமாக லுக் ஒன்றை விட்டாள்...
அவரும் இவர்கள் கேட்டை திறப்பதை பார்த்து அவர்கள் வீட்டு திசையில் பார்வையை சுழல விட பேத்தியிடம் வசமாக மாட்டி கொண்டார்...
அவரை பார்த்து செய்கையால் , "என்ன பாக்குற கண்ணை நோண்டி புடுவேன்.. தின்னது செரிக்க வேணாம் ...நல்லா பேசு..இனியும் நாலு பேரை நிக்க வெச்சு பேசு"... என்று ஜாடை காட்டி பேசி கொண்டு இருக்கும் போது விக்ரம் வண்டியில் அவளுடன் பறந்தான்...
அவரோ எல்லாம் முடிந்து அவள் சென்ற பின் அங்கே நின்று கத்தி கொண்டு இருந்தார்..., "இந்த சிறுக்கி என் கையில கிடைக்கட்டும் ஆஞ்சு புடுறேன்...கொழுப்பு எடுத்த கழுத எப்போ பாரு என்கிட்ட வம்பு பண்றது..எவ கிட்ட இருந்து கத்து கிட்டாளோ இப்படி வாய் பேச ..எல்லாம் வளர்த்த தோஷம்"... என்று கூறி கொண்டு வீட்டுக்குள் சென்றார்..
அங்கே தன் மருமகளிடம் , "ஏன் டி உன் மவ ரெடி ஆகி எங்கே அவ புருஷன் கூட இப்படி மினுக்கிட்டு போறா "...என்று உரலில் பாக்கை இடித்து கொண்டே ஒன்றும் தெரியாத அழகு மயிலை கேள்வி கேட்க
அவரோ , "எனக்கு என்ன அத்தை தெரியும் ..அவ எங்கே போறா னு "...என்று பாவமாக கூற
அப்போது தான் வீட்டுக்குள் வந்த மதி குட்டி ,"அது அக்கா மாமா கூட காலேஜ் க்கு போறா ஹால் டிக்கெட் வாங்க "...என்று கூற
அழகு மயில் மற்றும் கோல்ட் வாயை பிளந்தனர்... "ஹே சின்ன குட்டி உனக்கு எப்படி தெரியும் நீ அவ கூட பேசிட்டு இருக்கியா ...உன் அப்பனுக்கு தெரிஞ்சது உன் தோளை உரிச்சு புடுவான்"....என்று கோல்ட் மதியை மிரட்ட
அவளோ எங்கே இவர்கள் மூலம் தனக்கு அடி கிடைத்து விடுமோ என்ற பயத்தில், "உங்களுக்கு போய் சொன்னேன் பாருங்க ...என்னையே மாட்டி விட பாக்குறீங்க பாட்டி".... என்று கூறி ஓடி விட்டாள்...
அழகு மயிலோ மகளின் படிப்பு போய் விட்டதே என்ற வருத்தம் அவருக்கு இருக்க அதை மாற்றும் விதமாக இந்த செய்தி அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது..
கோல்ட்டும் மதியையும் அழகு மயிலையும் கண்ட படி வெற்றிலை பாக்கை இடித்து கொண்டு சீரியல் காண தொடங்கினார்..
விக்ரம் உடன் பைக்கில் பயணம் அதும் அவர்கள் இருவரின் திருமணம் முடிந்த உடன் முதல் பயணம் ...அவள் அதை வெகுவாக ரசித்தாள்...என்னுடைய கணவன் என உரிமையோடு அவன் மேல் கை இட , " ஹே தள்ளி உக்காரு டி அவ்ளோ இடம் இருந்தும் எதுக்கு என்னைய இடிச்சிட்டு உக்கார்ந்து இருக்க "...என்று எகிறினான் விக்ரம்...
மதுவோ தலையில் அடித்து கொண்டு கல்யாணத்துக்கு முன்னாடியும் என்னை இடிக்க விடல இப்பவும் இடிக்க விடல... இந்த மனுஷனுக்கு பீலிங்ஸ்யே இல்லையோ என யோசிக்க வேறு செய்து தன் தலையில் அடித்து அப்படி எல்லாம் யோசிக்க கூடாது என்று வரும் போதே ஸ்பீட் பிரேக் இல் வண்டி ஏறி இறங்க பெண்ணவளின் அங்கங்கள் அனைத்தும் அவனை உரசி கொண்டு ஏறி இறங்கியது...
அதில் அவளின் முகம் அவனின் தோளில் பட அவளின் உதடும் சும்மா இருக்காமல் ஒரு முத்திரையை அழகாக அவன் பின்னால் பதித்தது... அவளின் உதட்டு குறி அவனின் சட்டையில் ...அவளோ அவனை இடித்து எழுந்ததும் ப்ளூ நிற சட்டையில் பிங்க் நிற உதட்டு குறி அவன் அறிந்தால் என்னை இங்கேயே இறக்கி விட்டு விடுவாரே என பயந்த மது அவனிடம் சொல்ல வேண்டாம் என விட்டு விட்டாள்...
அவனுக்கோ என்னதான் அவள் விலகி சென்றாலும் பெண்ணவளின் மேனி முழுவதும் அவன் மேல் பட அதிலும் அவன் தோளில் அவளின் முகம் படவும் அவன் செத்து விட்டான் என்றே கூற வேண்டும்...அவ்வளவு நெருக்கமாக அவள் அவனை இடித்து இருந்தாள்...அவனும் நகமும் சதையும் கொண்ட மனிதன் தானே எல்லா உணர்வுகளும் அவனுள் எழும் தானே.... அவனோ அந்த இன்ப அவஸ்தை அனுபவிக்க கூட முடியாமல், " ஏன் டி இப்படி பண்ற "...என்று கேட்டே விட்டான்...
அவளோ , "ஸ்பீட் பிரேக் சார் நான் என்ன பண்ணட்டும்"... என்று பாவமாக முகத்தை வைத்து கேக்க
அவனோ கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து ஒன்றும் கூறாமல் வண்டியை விரைவாக செலுத்தினான்...பல்வேறு இடிகளும், குண்டு குழியும் தாண்டி ஒரு வழியாக கல்லூரி வாசலை அடைந்தனர்..டிசைன் டிசைனாக அவனை சோதித்தாள் அவனின் மனைவி....நீ வா வீட்டுக்கு உனக்கு இருக்கு என்று கருவி கொண்டே கல்லூரியை அடைந்தனர்...கல்லூரியை கண்டதும் அவன் பின்னால் இருக்கும் குறியை பற்றி இவள் கூற மறந்து விட்டாள்...
