காதல் 32

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் - 32

காதலது கண்ணில் கண்டேன்

    அவள் கூறுவதை எல்லாம் கேட்ட விக்ரமுக்கு அவன் மாதிரியாக உணருகிறான் என்றே தெரியவில்லை...ஆனாலும் அடிபட்ட பாம்பு விக்ரம் என்பதால் பெண்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறான்...இருந்தும் வருகிறான்...ஆனால் அவள் அவனிடம் மாற்றத்தை எதிர் பார்க்கிறாள்..அப்படி இருக்கும் போது தான் அவன் வாழ்வில் நுழைகிறாள் மது...சிறு பெண்ணின் குணத்தோடு அவள் இருக்க சில சமயம் எனக்கு ஒன்றும் தெரியாது நான் இன்னும் சிறு பெண் என்ற பாவத்துடன் இருக்கும் மது பல சமயங்களில் அவனிடம் அவள் இருக்கும் சமயங்களில் மட்டும் காதல் மொழி இயற்ற அவனுக்கு புரியாத புதிர் தான் அவள்...

ஆனால் அவளை தவிர்க்கவும் முடியாமல் அவளை வெறுக்கவும் முடியாமல் அவளை விட்டு விலகி விட துடிக்கிறது அவனின் மூளை ஏதோ அவனை தடை செய்ய அந்த மூளையின் மேலே ஏறி சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கிறாள் மது...

அவள் எடுத்து கொடுத்த நீல நிற சட்டையை அணிந்து கொண்டு இதோ பேங்க் மானேஜர் முன்பு அமர்ந்து இருக்கிறான் விக்ரம்..

அவரோ, "ஏன் இந்த லோன் இப்போ எடுக்குறீங்க...முன்னாடி செய்த வேலை என்ன ஆகிற்று "...என்று எல்லாம் அவர் கேள்வி எழுப்பி கொண்டே அவர் அவனின் பைலை பார்வையிட அதை கண்ட மானேஜர் அசந்து தான் போய் விட்டார்...

அப்படி இருந்தது அவனுடைய பைல் பம்பாய் இல் மென் பொறியியல் படித்து அங்கிருந்து லண்டனில் வேலை செய்து கொண்டே MS படிப்பை முடித்து அங்கிருந்து மாற்றல் ஆகி அமெரிக்காவில் பணி புரிந்து இருக்கிறான்... அமெரிக்காவில் விரல் விட்டு என்னும் மென் பொறியாளர்கள் பெயர்களில் இவன் பெயரும் இருக்க கடந்த ஆறு மாதமாக இங்கே கல்லூரியில்  பேராசியர் ஆக பணி செய்து வருகிறான்..இப்போது அந்த வேலையையும் விட்டு விட்டான்....தொழில் தொடங்க போகிறேன் என அவன் கூற அவனின் தொழிலை பற்றி விசாரித்தார்...

அவனோ மென் பொருள் சப்ளை செய்ய போவதாகவும், அது மட்டும் இன்றி சிறிய அளவில் மென் பொருள் ப்ரொஜெக்ட் செய்ய இருப்பதாகவும் கூறி அவனுடைய ப்ரொஜெக்ட்டின் சில வரைபடங்கள் அடங்கிய கோப்பை அவரிடத்தில் காட்டி கொண்டே கூற , அதற்கான முயற்சி க்கு வேண்டி தான் வேலையை விட்டதாகவும் கூற அவரோ எல்லாத்தையும் பார்வையிட்ட அவர் மேலும் ஒரு சில பேப்பர்கள் வேண்டும் என்று கூறினார்..."எல்லாம் சரி செய்து விடலாம் உங்களுடைய ப்ரொஜெக்ட் நன்றாக உள்ளது...வெற்றி அடைய வாழ்த்துக்கள்"... என பாசிட்டிவ் கருத்து கொடுக்க அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது... ஒரு மாதம் காலமாக மன உளைச்சலில் இருந்தவன் இப்போது தான் கொஞ்சம் அதில் இருந்து வெளியே வந்து இருக்கிறான்...அதே போல இன்று நல்ல வார்த்தையும் கேக்க அவனுடைய லோன் தர சம்மதித்தார் அந்த வங்கி மேலாளர்...ஆனால் அதற்கு அவனுடைய சான்றிதழ்கள் எல்லாம்  வேண்டும் என கூற அவனோ காலேஜில் உள்ளது இப்போது தர மாட்டார்கள் என கூற பேங்க் மானேஜர் அப்போ அதனுடைய நகல்கள் வேண்டும் அதையாவது கொண்டு வந்து தரும் படி கூற அதனுடன் அங்கே தான் வேலை செய்து கொண்டு இருந்தேன் என்பதற்கான சான்றிதழ்கள் வேண்டும் என கூற விக்ரமும் சரி என்று கூறி வந்து விட்டான்...எப்படியோ அவன் சென்ற காரியம் சிறப்பாக முடிந்து விட்டது...

வீட்டிற்கு செல்லும் போதும் நல்ல மனநிலையில் இருந்தான் விக்ரம்...அங்கே சென்று பார்க்கும் போது இவளும் வாசுதேவனும் உரையாடி கொண்டு இருக்க லோனை பற்றிய விஷயங்களை வாசுதேவனிடம் கூற இருவருக்கும் சந்தோசம்... அதில் வாசுதேவனோ, " ஏன் பா இந்த வீட்டை காட்டி லோன் வாங்கி இருக்கலாமே"..என்று கேட்க

விக்ரமோ , "இல்லை பா இந்த வீடு நான் உங்களுக்காக கட்டினது அது உங்க பேர் ல இருக்கட்டும் அதை நாம இதுக்கு யூஸ் பண்ண வேணாம்...நம்ம பிளாட்ஸ் சென்னை ல சும்மா தானே இருக்கு அதை வைத்து கொள்ளலாம் என்று கூற அவரும் சம்மதித்தார்... " இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த மது எதுவும் கூறாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்..

அவனும் அவளை பார்க்க அவன் மனதுக்குள் இவ என்ன நம்மல ஒரு மார்க்கமா பாக்கிறா என அவளை பார்த்து கொண்டே உள்ளே சென்றான்...

அவன்  உள்ளே சென்றதும் பின்னாலே பல்லி போல சென்றவள் , "ஏன் சார் நீங்க சேவ் பண்ணல".. என அவன் ஒரு மாதமாக வளர்த்தி வரும் தாடியை பார்த்து கேக்க

அவனோ ரொம்ப முக்கியம் என்பது போல அவளை நக்கலாக  பார்த்து , "ஆஹ் வேண்டுதல்" ...என்றான்...

இவளோ அவனை விடாமல், "என்ன வேண்டுதல் "...என்று கேட்க , "உன்னை எப்போ துரத்தி விடுவேனோ அப்போ இந்த தாடியை எடுக்கலாம் னு தான்"... என்று கூற

"ஓ ரொம்பத்தான் உங்களுக்கு என்னை விட்ட இந்த மூஞ்சிக்கு யார் கிடைப்பா"... என்று கேட்க

"எனக்கு என்ன டி குறைச்சல் "...என்று அவன் தாடியை நீவிய படியே எதிர் கேள்வி கேட்க

"உங்களுக்கு எல்லாமே குறைச்சல் தான்".. என்று கூறினாள்...

"அதான் பிளான் பண்ணி கல்யாணம் பண்ணிட்டில அப்புறம் என்ன "...என்று அவன் கூற

"ஆமா உங்களை பிளான் வேற பண்ணி கல்யாணம் வேற செய்துக்கணுமா போங்க சார்...கல்யாணம் பண்ணி என்ன பிராயோஜனம் ...ஒன்னும் இல்லை...ஆமா உங்க மனசில நீங்க என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க ரொம்ப அழகுனா"... என்று வம்பை வளர்க்க தொடங்க

"நீ ரொம்ப பேசிட்டே இரு...ஒரு என்கிட்ட வாங்க போற"...

"என்னது வாங்க போறேன் சார் "....என்று அவனின் உதட்டை பார்த்தபடி பட்டென கேக்க அவனோ அவளிடம் இனியும் நின்றால் ஏதாவது குதர்க்கமாக பேசுவாள் என்று எண்ணி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்...அந்த விஷயத்தில் அவனுக்கு தான் அவளிடத்தில் பயம் அதை உணர்ந்த அவள் சமயம் கிடைக்கும் போது எல்லாம் அவனை சீண்டி பார்க்கிறாள்....

அதன் பின் அவன் பணி புரிந்த காலேஜில்  ஒரு முறை அவர்களிடம்  அவன் அங்கே தான் பணி புரிந்தான் என்பதற்கான சான்றிதழ்களை கேக்க அவர்களும் தருவதாக ஒப்பு கொண்டனர்...நேரில் வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூற அவனும் அங்கு செல்ல தயாரானான்...இவன் எங்கோ வெளியில் செல்கிறான் என்பதை மட்டும் அறிந்தவள் அவனுடன் தன்னையும் அழைத்து செல்ல சொல்லலாம் என ரெடி ஆக தொடங்கினான்...அவள் தயராவதை விக்ரம் கண்டாலும் கண்டு கொள்ளாமல் அவன் ரெடி ஆகி கொண்டு இருந்தான்...இவளோ தன்னை அழகாக தயார் படுத்தி உதட்டில் உதட்டு சாயம் எல்லாம் பூசி பூ சூடி எங்கோ திருமணம் ஆன தம்பதியினர் விருந்துக்கு செல்வது போல தயாராகி கொண்டு இருந்தாள்...

அதற்குள் இவள் அவனுக்கு மேட்ச் ஆக ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு , "சார் எங்கே போறீங்க"... என்று அவன் எங்கே சென்றாலும் அவன் பின்னாலே சுற்றி கொண்டும் அவனை வேண்டும் என்றே இடித்து கொண்டும் கேக்க,

அவனோ அந்த பக்கம் இந்த பக்கம் என்று திரும்ப கூட விடாமல் இவளும் நடக்க பொறுமை இழந்த விக்ரம் அவளின் தோள் தொட்டு நிறுத்தி , "ஒண்ணு நின்னு கேளு எதுக்கு கைக்குள்ள கால்க்குள்ள நடந்துட்டு இருக்க"... என்று கேட்க

"நீங்க பதில் சொன்னா நான் ஏன் சார் இப்படி உங்களை சுத்தி வர போறேன்".. என்று கேட்க

"அவனோ நான் காலேஜ்க்கு போறேன் எனக்கு ஒரு பேப்பர்  வாங்கனும்"... என்று கூறினான்...

அவளோ , "சார் நானும் வரேன் "...என்று அவனிடம் கேட்டாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top