காதல் 31

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 31

அங்கே நிற்கும் மகள் மதுவை பார்க்காமல் , "அம்மா எதுக்கு இங்கே நின்னு கத்திட்டு இருக்கீங்க.. உள்ளே போங்க "...என தன் தாயை விரட்ட பார்க்க

அந்நேரம் வரை சூடு குறையாத கோல்ட், "டேய் தம்பி இந்த சிறுக்கி என்ன சொன்னா னு கேட்டியா... எனக்கு இருக்க நாதி இல்லை னு சொல்றா ஒரு போக்கு இடம் கூட இல்லாமலா நான் இருக்கே".. என்று மூக்கை சிந்த

வெளியே இவர்களின் சம்பாசனையை காண அக்கம் பக்கத்தில் உள்ள ஆள்கள் தங்கள் தலையை வெளியே நீட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தனர்...

வெங்கியோ மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு கோல்டுடிடம், " யாருக்கு போக்கு இடம் இல்லை னு கொஞ்ச நாள் ல தெரிஞ்சுடும் ...அப்போ தெரியும் "...என்று நக்கல் குரலில் கூறி தன் தாயிடம் , "உள்ளே போங்க".. என்று கூறி கொண்டு இருக்கும் போது இவளை தேடி வெளியே வந்தான் விக்ரம்..

அவன் மனதில் அவள் மட்டும் இருக்க மது மது என ஏலம் இட்டு கொண்டே வெளியே வந்தவன் அங்கே நின்று கொண்டு இருந்த யாரையும் கவனிக்காமல்," இங்கே என்ன டி பண்ற "...என்று அவளை அழைக்க..

மதுவோ தன் தந்தை தன்னை தான் கூறினார் என்று உணர்ந்து அதையும் பார்ப்போம் என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு அவனுடன் உள்ளே சென்றாள்..

உள்ளே சென்றவள் முகத்தில் அவன் கையில் வைத்து இருந்த சட்டையை தூக்கி எறிந்தான் விக்ரம்...

"இங்கே பாரு என்ன கலர் சட்டை".. இது என்று கேட்க

அவளோ கூலாக, "இதுக்கு தான் எறிஞ்சிங்களா சார் இது பிங்க் கலர் சட்டை "....என்று சிரித்து கொண்டு இது கூட தெரியலையா என்பது போல கூற

அவனோ "மது....."என்று கத்தினான்...வாசு தேவன் வெளியே வந்து , "எதுக்கு பா காலையிலே இப்படி கத்துற "...என்று மென்மையாக கேக்க

அவனோ தன் தந்தையை பார்த்ததும், "இங்கே பாருங்க வெள்ளை சட்டை இது பிங்க் கலர் ஆகிடுச்சு... என்னோட ட்ரஸ் நானே வாஷ் பண்ணிப்பேன் ல ..இப்போ பாருங்க "...என்று சட்டையை காட்டி குறைப்பட

அன்று மது தான் வாசுதேவன் சொல்ல சொல்ல கேக்காமல் அடம் பிடித்து அவனுடைய சட்டையை வாஷிங் மெஷினில் இட்டு அவளுடைய உடையின் நிறத்தை அவனின் ஆடைக்குள் புகுத்தி இருக்க எல்லா தெரிந்த மதுவோ ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு வாசுதேவனிடம் கண்களாலேயே, " ஹெல்ப் பண்ணுங்க அங்கிள்"... என்று கூற

அவரும் , "இது உன்னோட பிங்க் கலர் சட்டை தான் பா"...என்று கூற அவனோ, "அப்பா இது வெள்ளை சட்டை இவ தான் துவைச்சு பிங்க் கலர் ஆகிட்டா "...என்று கூற மது மற்றும் வாசுதேவன் இருவரும் ஒரு சேர மறுத்தனர் உன்னிடம் வெள்ளை சட்டையே இல்லை என இருவரும் வாதிட்டனர்...அவன் எவ்வளவு கூறியும் இருவரும் அவர்கள் பிடித்த பிடியிலே நிற்க அங்கேயும் நொந்து போனான்...

இறுதியில் வாசுதேவனோ, " வேற சட்டை போட்டுட்டு போ பா எதுக்கு இந்த சின்ன விஷயத்தை பெருசு பண்ணிட்டு இருக்க"... என்று கூறி பேச்சை முடித்தார்..

இருவரின் சிக்னல்களை கண்ட  விக்ரம் இனி இவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து,  "இனி என்னோட ஒரு பொருளையும் இவ தொட கூடாது சொல்லி வைங்க "...என்று கூறி திரும்பி அவன் நடக்க

அப்பாடி தப்பிச்சேன் என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள் முன் மீண்டும் அவள் கணவன்," வெளில எதுக்கு டி அவங்க கூட சண்டை போட்டுட்டு இருக்க இனி இனி அங்கே நின்னு ஏதாவது கத்திட்டு இரு அப்புறம் இருக்கு உனக்கு"... என்று விக்ரம் அவளிடம் எச்சரித்து விட்டு சென்றான்...

அவன் வரும் நேரத்தில் சரியாக வெங்கி கூறுவதை கேட்டவனுக்கு, " நான் என்ன கைலாகதவன் னு நெனைச்சுடீங்களா மிஸ்டர் வெங்கடாசலம் ...உங்க கண்ணு முன்னாடி வாழ்ந்து காட்டுறேன் பாருங்க "...என்று கருவி அவர் மீது தனக்குள் இருக்கும் கோபத்திற்கு மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொண்டான் விக்ரம்...

உள்ளே சென்ற விக்ரமின் பின்னாலே வந்த மது அலமாரியை திறந்து ஒரு நீல நிற சட்டையை எடுத்து கொடுத்து இதை போட்டுட்டு போங்க என்று கூற அவனோ அவளை முறைத்த மறுத்தான்..

இவளோ சலித்து கொண்டு அவனை வழிக்கு கொண்டு வரும் பொருட்டு "சொன்னதை செய்யவே மாட்டீங்க சார் நீங்க...அன்னிக்கு கொடுத்த மாதரி பதிலுக்கு கொடுத்தா தான் சொன்னதை செய்விங்க போல "...என்று அன்றைய முத்தத்தை நினைவு படுத்தி கூற அவனுக்கும் அது புரிந்ததோ என்னவோ அவளிடம் இருந்து சட்டையை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு சட்டையை மாற்ற போனான்...அவளோ அவனின் செய்கையை பார்த்து ரசித்து கொண்டே நிற்க , "இங்கே என்ன டி பாக்குற ...நான் ட்ரஸ் மாத்துறேன் னு தெரியுதுல வெளியே போ "...என்று அவன் கூற...அதற்குள் அவனின் கோபம் சற்று மட்டு பட்டு இருந்தது...

அதை கண்டு பிடித்த அவளோ , "அன்னிக்கு நீங்க மட்டும் "...என சிரித்தபடி தொடங்க அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை அறிந்து , "போடி முதல... எனக்கு டயம் ஆச்சு "..என்று மென்மையாக கூறி அவளை துரத்தினான்...

அவளோ அவனை திரும்பி பார்த்து," டி னு வெளியே இருக்கும் போது சொல்லாதீங்க சார் "...என்று கூற

அவனோ என்ன சொல்ல வருகிறான் என விழித்தவன் என்ன என்று கேட்க," டி னு சொல்லாதீங்க னு சொன்னேன்".. என்றாள்.. "ஏன் டி சொல்ல வேணாம் னு சொல்றீயா இல்லை சொல்லவே கூடாது னு சொல்றீயா".. என்று அவன் குதர்க்கமாக கேக்க..

மதுவோ, "நீங்களும் நானும் மட்டும் தனியா இந்த மாதிரி இருக்கும் போது நீங்க டி னோ டா னோ.. என்ன வேணும்னா கூப்பிடுங்க மத்தவங்க முன்னாடி வேண்டாம் "...என்று கூற

அவனோ அவளின் கண்களை பார்க்க, "நீங்க சொல்ற ஒவ்வொரு டி யும் எனக்கு ஸ்பெஷல்... நீங்க சொல்றதை நான் மட்டும் தான் கேட்கணும் வேற யாரும் கேக்க கூடாது "...என்று கூறி விட்டு சென்றாள்...விக்ரமோ அப்படியே சிலை போல நின்று விட்டான்...

என் கண்கள் உனை தேடும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top