காதல் 30

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 30

கண்களை மூடிய விக்ரமுக்கு அவளின் மென் இடையும் அதை வருடிய அவனது விரல்கள் தீண்டிய தீண்டலும் இன்னும் அவனது கைக்குள் இருப்பது போல தோன்ற அவனின் முதல் முத்திரை வேறு அவனை இம்சிக்க நொந்து போய் விட்டான் என்றே கூறலாம்...ஆனால் அடுத்த நொடி அவளும் பெண் தானே உன்னை ஏமாற்றி விட்டு உன்னை தனித்து விட போகிறாள் என்ற உண்மை அவனை சுட அவளிடம் இருந்து நீங்கி இருக்க வேண்டும் தான் அவளிடம் இது போல நடந்து இருக்க கூடாது அவள் தான் சிறு பெண் எனக்கு அப்படி இல்லையே என்று எல்லாம் தோன்றி பழைய நியாபகங்களும் அவனை வதைக்க கண்களை அடைத்தாலும் அவனுக்கு தூங்கா இறைவானது....

மதுவோ அவன் என்ன சட்டென்று என் இடையை தொட்டு விட்டான்....இவன் அது போல எல்லாம் செய்ய மாட்டான் என்று அவள் நினைத்து இருக்க அவள் நினைப்பை பொய்ப்பித்தது போல இருந்தது அவனின் செய்கை...ஆனாலும் தான் என்ன செய்தோம் ...என்ன தைரியத்தில் அவருக்கு நான் முத்தம் கொடுத்தேன் என்று மனசாட்சி கேள்வி கேட்க...என்னோட அவர் நான் கொடுக்காமல் நீயா கொடுப்ப என்று அவளின் மனசாட்சியை புறம் தள்ளி வெட்க புன்னகையை சிந்தி எதுக்கும் ஒதுங்கி இருப்போம் என மூளை கூறினாலும் அவளின் ஆழ் மனது தன்னை ஏன் அவன் நாடாமல் சென்று விட்டான் என ஏங்க ஆரம்பித்து விட்டது...

ஒரு நாள் காலை விக்ரம் புதிதாக தொடங்க இருக்கும் கம்பெனிக்கு பேங்கில் லோன் கேட்கலாம் என எல்லா பேப்பர்களை எல்லாம் நேற்று இரவே எடுத்து வைத்து இன்று குளித்து ரெடி ஆகி அவனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் அவன் எங்கே புதிதாக அல்லது ஒரு காரிய தேவைக்காக செல்கிறானோ தன் உடையில் கவனம் செலுத்துவான் அதிலும் அவன் வெள்ளை நிற சட்டை அவன் மனதளவில் அவனுக்கு விருப்பம் அது அணிந்து சென்றால் காரியம் நடக்கும் என அவனின் கொள்கை அது அப்படி இருக்க அது போல இன்றும் வெள்ளை சட்டை எடுத்து அணிய போனான்...

ஆனால் அந்த சட்டையோ அவனின் விருப்பத்திற்கு உண்டான வெள்ளை சட்டையில் ஒரு பகுதி முழுவதும் அவளின் சுடிதாரின் சாயம் பிடித்து அந்த வெள்ளை சட்டையின் நிறம் மாறி பிங்க் நிறம் ஆகி இருக்க விக்ரமுக்கு காலையிலே கோவத்தை கிளறி விட்டவள் வெளியே கோல்ட்டிடம் வம்பு வளர்த்து கொண்டு இருந்தாள்...

வெளியே வாசல் பெருக்குவதில் தான் இருவருக்கும் பஞ்சாயத்து இவள் வேண்டும் என்றே  வாசலை பெருக்கி குப்பைகளை எல்லாம் எதிர் வீட்டு வாசலில் கொண்டு போய் தள்ள இருவாரமாக எப்படி இத்தனை குப்பை வருகிறது என்று புரியாமல் விழித்து இருந்த கோல்ட் இன்று கையோடு பிடித்து விட்டார்...

"ஏன் டி உனக்கு குப்பையை கொட்ட என் வீட்டு வாசல் தான் உனக்கு கிடைச்சுதா "...என்று கத்த

அவளோ, " ஆமாம் என்னோட வீட்டு வாசல் தான் கிடைச்சுது ...இதோ பாரு கோல்டு நான் இல்லை னு சொல்லிட்டு ரொம்ப ஆடாத ...அதும் என் வீடு தான் ..விக்ரமின் வீட்டை காட்டி இதும் என்னோட வீடு தான்...உனக்கு தான் ஒரு வீடும் இல்லை"... என்று ரைமிங்கில் கோல்டை கேலி பேச

அவரோ பொங்கி விட்டார் , "யாரு டி சொன்னா எனக்கு வீடு இல்லை னு இது என் புருஷன் கட்டின வீடு டி "...என்று கத்த தொடங்க

அழகு மயில் உள்ளே எட்டி பார்த்து கொண்டே வெளியே வந்தார்...மிதுன் மற்றும் மதி , "அப்படி போடு ...இன்னிக்கு ரெண்டு பேரும் காலையிலே தொடங்கிட்டாங்களா ...இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும்"....என்று புத்தகத்துக்குள் முகத்தை புதைத்து சிரித்து கொண்டு இருக்க...

மதுவோ நிறுத்தாமல், " இதோ பாரு உன் புருஷன் போய் 20 வருஷம் ஆச்சு தாத்தா சொத்து பேத்திக்கு தான் தெரியும் ல...உன்னை எல்லா அப்போவே தூரத்தி விட்டு இருக்கனும்... இல்லாட்டி நீ இந்த பேச்சு பேச மாட்ட".. என்று அவரை மேலும் சூடு ஏற்றி பார்க்க பொறுமை இழந்த கோல்ட் அழகு மயில் "வேணாம் அத்தை ...இவ கிட்ட என்ன நமக்கு பேச்சு அவரு வந்திட போறாரு...இவளுக்கு வாய் நீளமா போச்சு...மட்டும் மரியாதையும் இல்லாமல் பேசுறா" என்று அழகு மயில் அங்காலாய்த்து கொண்டே அழகு மயில் கூற அவர் சொல்வதை கூட கேக்காமல் , "இரு டி நீ பெத்த இந்த சிறுக்கியை என் பையன் கிட்ட சொன்னா தான் இவ அடங்குவா"...என்று கூறிய

அவரோ , "டேய் மவனே இங்கே வா டா இந்த சிறுக்கியை என்னனு கேளு"... என்று உரக்க வெங்கியை அழைக்க

இவர்களின் கலவரம் எல்லாம் கேட்டு கொண்டு இருந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்த வெங்கி தன் மகள் சென்ற துக்கமும் அவள் அனைவரிடமும் இழிச்சொல் ஏற்படுத்தி விட்டாளே என்ற சங்கடமும் தான் அழைத்தும் அவள் வரவில்லையே என்ற ஆதங்கமும் சேர்ந்து அன்றிலிருந்து இன்றுவரை அவள் முகம் காணாமல் இருந்தார்...

அதிலும் விக்ரம் வேலையை விட்டது வேறு அவருக்கு ஒரு நெருடலை தந்தது...தன் மகளும் கல்லூரி செல்வது இல்லை என்ற விஷயம் வேறு விக்ரமின் மீது வெங்கிக்கு கோபத்தை தூண்டி விட்டு இருந்தது...என் மகளின் படிப்பை கூட நிறுத்திட்டாங்க என்ற பொருமல் அவர் மனதில் இருந்தது...அதனாலே வம்பை விலை கொடுத்து வாங்காமல் அவர் ஒதுங்கி இருக்க ஆனால் தன் அம்மா அங்கே ரேடியோவை திறந்தது போல அவரை அழைத்து கொண்டு இருக்க அவரோ வெளியே வந்தார்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top