காதல் 29
அத்தியாயம் : 29
காதலது கண்ணில் கண்டேன்
மதுவால் வேறு சில பிரச்சனைகளும் அந்த வீட்டில் இருந்தன...தந்தையும் மகனும் மட்டுமே வாழ்ந்து வந்ததால் அவர் உலகம் வேறு ரீதியில் இருக்க ஒரு பெண் நடுவில் வர பல சமயங்களில் சங்கடமான நிலைக்கு விக்ரம் தள்ளப்படுவான்...
ஒரு நாள் இரவு தன் அறையை வேறு ஒரு பெண் உபயோக்கிறாள் என்ற அறிவு இல்லாமல் எப்போதும் போல இவன் நுழைந்து விடுவான்...வசமாக சிக்கியும் கொள்வான்...
ஒரு நாள் இரவு அவள் படுக்க போகும் முன் ந்யட் ட்ரெஸ் அணிந்து கொண்டு இருந்தாள் மது ..கதவை அவள் அடைத்து இருக்க இவன் குளியலறை யில் இருப்பது தெரியாமல் உடை மாற்ற இதை எதிர்பார்க்காத விக்ரம் வெளியே வரும் போது அவன் பனியனை அணிந்து கொண்டு இருக்க அவளின் மென் இடை அவனுக்கு விருந்து ஆனது..அதிலும் அவளின் மென் இடையும் அதில் அவள் மறைத்து வைத்து இருந்த மச்சமும் அவன் கண்ணுக்கு விருந்தாக ஒரு நொடி அவன் கண்கள் அதில் நிலைத்து நின்றன...
அவன் காணாத பெண் இல்லை ஆனால் அவனுடைய உடைமை என்று வரும் போது கள்ளத்தனம் எல்லா ஆண்களுக்கும் வருமோ என்னவோ அதற்கு இந்த துர்வாச முனிவரும் விதி விலக்கு இல்லை என்னவோ அவளின் இடையை பார்த்து விட்டான்... அவன் பார்வை இரு நொடிகள் அதில் நிலைத்து நின்றது என்னவோ உண்மை தான்...ஆனாலும் அதை ஒத்து கொள்ளாமல் இவள் வேண்டும் என்று தான் என் முன்னால் இப்படி நிற்கிறாள் என நினைத்து அவளை பார்த்து முறைத்தான்...அவன் தவறை மறைக்க இப்படி ஒரு நாடகம் அங்கே அரங்கேற அதில் மது மாட்டி கொண்டாள்...
அவன் கதவு திறக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பியவள் அவனை எதிர்பார்க்கவில்லை என அவள் முகமே அப்பட்டமாக வெளிப்படுத்த அவளை மேல் இருந்து கீழாக அளவிட்டு கொண்டு இருந்தான் விக்ரம்....
அதிலும் ஒரு நொடி என்றாலும் அவன் கண்ணை விட்டு மறையாத அவளுடைய மென் இடையும் அதில் இருந்த மச்சமும் அவனை இம்சிக்க அன்று மாணவியாக இருந்த பெண் இன்று மனைவியாக மாறிய பின்னும் அவள் அருகே செல்லாமல் கண்ணியம் காத்தவன் இன்றும் பார்வையாலேயே அவளை வருடி அதன் பின் எரித்தவன் அவளிடம் தன் பதட்டத்தை மறைக்க என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் , "கதவை சாத்திட்டு ட்ரெஸ் மாத்த மாட்டியா ..யாரு வந்து பார்ப்பாங்க னு இப்படி பண்ணிட்டு இருக்க "...என்று கத்த அதுவரை அவன் பார்த்து விட்டானே என்ற படப்படப்பில் இருந்தவள் அவன் கூறியதை கேட்டு கடுப்பு ஆனாள்...
"நான் கதவை சாத்திட்டு தான் நான் ட்ரெஸ் பண்ணினேன் நீங்க இதுக்குள்ள இருந்து வருவீங்க னு நான் கனவா கண்டேன்...அப்புறம் என்ன சொன்னீங்க"... என்று கூறிக்கொண்டே உடையை சரி செய்தபடி அவன் அருகில் வர அந்த ஆறடி ஆண்மகன் ஒரு அடி பின்னால் தன் கால்களை வைக்க வேண்டியதாகி போனது...அவ்வளவு நெருக்கமாக அவள் வந்து நின்றாள் மது...
ஆம் அவள் வருவதை பார்த்து முதலிலே அவன் கண்ணை விட்டு அவளின் இடை மறையாமல் இருக்க இதில் வேறு இவள் சண்டைக்கு என்றாலும் அவன் அருகில் வர அந்த பீமனுக்கும் வியர்த்தது எங்கே தன்னுடைய தவம் கலைந்து விடுமோ என்று...
அவளும் அவன் கேட்டதற்கு மறு பதில் அளிக்க மட்டுமே அவன் அருகில் வந்து "யாரு பார்க்க நான் ட்ரெஸ் பண்றேன் னா?... கதவை திறந்தது நீங்க ..இப்போ குறை என்னை சொல்றீங்களா ...இப்போ சொல்றேன் நீங்க நான் ட்ரெஸ் மாத்தறேன் னு தெரிஞ்சு தானே கதவை திறந்தீங்க "...என்று எதிர் கேள்வி கேட்க
விக்ரமே ஆடி போய் விட்டான்...என்ன கூறுகிறாள் இவள் என்று அவன் ஆடி போய் விட்டான்...அவள் அவனிடம் வாயாடும் வேளையில் என்ன கேக்கிறோம் என்ற அறிவு இல்லாமல் இப்படி ஒரு கேள்வி கேட்டாள்...முதலில் திடுக்கிட்டவன் அதன் பின் அவள் எப்படி என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கலாம் என்று கோபம் வந்து தன் அருகில் வந்து நின்றவளின் பனியனை பிடித்து இழுத்து அவளை தன் அருகில் இழுத்தான்..
இதை எதிர்பார்க்காத அவள் அவன் இழுத்ததும் அவன் மீதே மோதினாள்...உடலோடு உடல் உரசி நிற்கும் வேளையில் அவளின் கண்ணோடு கண் பார்த்து அவளின் பனியனை தூக்கி கடுப்பில் , அவளின் மென் இடையை வருடி ,"என்ன டி சொன்ன நீ ட்ரெஸ் மாத்துறேன் னு உன்னை பார்க்க நான் வந்தேன்னா இல்லை இதோ உன்னை தொட தான் வந்தேன் போதுமா".. என்று அவளின் மென் இடையை வருட, மதுவோ அவனின் வருடலில் தன்னை இழந்த அவள் சுகமான போதை ஒன்று அவள் உடல் எங்கும் பாய்ந்த்து...
அப்போது தான் அவளுக்கு தான் என்ன சொன்னோம் என்ற அறிவே வர சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்து விட்டோமே என்று மனதுக்குள் எழ அவனோ விடாமல் அவள் இடையை வருடி இடையோடு இடை கோர்க்க அவளோ அவனின் வருடலில் கூசி சிலிர்த்தவள் இனியும் நின்றால் காடு கரை ஏறி விடும் என்பதை உணர்ந்து கூசி சிலிர்த்த மயிர்கால்களை அடக்கி , "ப்ளீஸ் விடுங்க நான் தெரியாமல் சொல்லிட்டேன்"... என்று வெட்கத்தோடு நெளிந்து கொண்டே கூற அவனோ அவளை வெறுப்பேத்தவே செய்தவன் அவனின் ஆழ் மனதின் ஆசையை நிறைவேற்றி விட்டான் போலும் ..
அவள் சாரி கூறவும் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்ற அறிவு வர அவளை பிடித்து இருந்த பிடியை விட்டு "போடி"... என்று சென்றவனை பின்னால் இருந்து இழுத்து அவன் திரும்பியவுடன் அவனை நெருங்கி நின்று அவன் கால்களில் ஏறி அவன் உயரத்துக்கு எம்பி அவன் கன்னத்தில் தன் முதல் முத்திரையை பதிக்க போனவள் விக்ரமோ இவள் என்ன செய்ய வருகிறாள் என முகத்தை திருப்ப கண்களை மூடி இருந்த மதுவுக்கு கிடைத்தது என்னமோ அவனின் உதடு தான் அங்கே தனது முதல் முத்திரையை பதித்தாள் அவனது உதட்டில்....
உதட்டோடு உதடு உரச ஆரம்பத்தில் என்ன செய்கிறாள் என விளங்காமல் இருந்த அவன் அது முத்தமாக மாற அதை உணர்ந்த விக்ரம் பதறி விலக போக அது செல்ல கடியாக மாறியது.. ஆம்...அவனின் உதட்டை கடித்து ருசித்து விட்டாள் மது உதட்டோடு உதடு பொறுத்த முத்தம் மட்டும் கொடுக்க வேண்டும் என்று இல்லையே கடியும் கொடுக்கலாம் என அவனின் தடித்த உதடை அவளின் மென் உதடு தீண்டி அவளின் பற்கள் பதம் பார்த்து விட்டது..மதுவை பொறுத்தவரை எப்படி முத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரியாமலே அங்கே ஒரு அழகான காதல் அரங்கேற்றம் நடந்தது..முத்தம் என்பது அதீத அன்பின் வெளிப்பாடு எனவும் எடுத்து கொள்ளலாம் காதலின் மொழி எனவும் எடுத்து கொள்ளலாம் ...அவன் மீது அவள் கொண்ட காதலின் மொழியை அவனுக்கு அழகாக உணர்த்தி விட்டாள் மதுர யாழினி விக்ரம்...
முதல் முத்திரை இருவர் வாழ்க்கையை தொடங்கிய பின்னர் நடக்கும் முத்திரை...எது அவளை இப்படி செய்ய தூண்டியது என அவளுக்கு தெரியாது...என்னமோ அவளின் அன்பை அவனுக்கு உணர்த்த வேண்டும் என அந்த நொடி அவளுக்கு தோன்ற அதை வெளிப்படுத்தி விட்டாள்..அவளின் அன்பின் அடையாளமா இல்லை அவளின் குறும்புத்தனத்தின் எல்லையா...
இதை எதிர்பார்க்காத அவனின் செவியில்," நீங்க என்னை தொட்டிங்க...நானும் உங்களை தொட்டேன் சரியா போச்சு "...என்று கூறி கதவை திறந்து ஓடி விட்டாள்... இல்லையேல் அங்கே அவன் பாட்டே இல்லாமல் டான்ஸ் ஆடி விடுவான் என்று பாய்ந்து ஓடி விட்டாள்... அவளின் முத்தத்தை ரசித்தானோ என்னவோ அவள் கூறியதை கேட்டு , "ஹே நில்லு டி "..என கூறி அவனின் உதட்டை துடைத்து" ச்சி "..என அழுந்த அழுந்த துடைத்தான்...
துடைத்து துடைத்து அவனின் உதடு சிவந்தது மட்டும் தான் மிச்சம் கடுப்பு ஆனவன் "ஹே நில்லு டி "..என்று கடுப்போடு அவளிடம் கத்த கேக்க அவள் அங்கு இல்லை இவன் தான் மந்திரித்து விட்ட கோழி போல தன் கன்னத்தையும் அவனின் சிவந்த உதடையும் தடவிய படி படுக்கையில் சரிந்தான்...
