காதல் 28
அத்தியாயம் : 28
பீமனை போல முழு படுக்கை முழுவதும் அவன் ஆக்கிரமிக்க அவளோ அவன் அருகாமை தந்த சுகந்தத்தின் இதத்தை அனுபவித்து கொண்டு இருந்தாள் சிலை போல ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருக்க அந்த அறையின் நிசப்தத்தில் அவனது சீரான மூச்சு காற்று வரும் சத்தம் கேட்க அப்போது தான் உரைத்தது அவன் உறங்கி விட்டான் என அந்த படுக்கையில் அவளுக்கு படுக்க இடம் இல்லாததால் கடுப்பான மது, " சார் தள்ளி படுங்க ...எனக்கு தூங்கனும்"... என்க அவனிடம் அசைவே இல்லை...
மீண்டும் மது ,"சார்"...என்க அவனிடம் அசைவு இல்லை...இப்படியே விட்டால் தான் அழைத்து கொண்டு நிற்க வேண்டியது தான் என்பதை உணர்ந்து, "சார் நீங்க எனக்கு கொஞ்சம் படுக்க இடம் தரல நான் வந்து பக்கத்துல அப்படியே வந்து படுத்துடுவேன் அப்புறம் கை பட்டுச்சு, கால் பட்டுச்சு, அங்கே பட்டுச்சு னு சொல்லாதீங்க "...என்றதும் அடுத்த நொடி தன் கண்களை திறந்தான்..
"ஏன் டி நீ கீழ எல்லாம் படுக்க மாட்டியா"..என கேட்டான் ...ஒரு இரண்டு வார காலமாக சரியாக உறங்க முடியாத சோகம் அவன் வார்த்தையில் வெளிப்பட ...அவளோ அசால்ட்டாக "என்னால படுக்க முடியாது "..என்று அவன் அருகில் வர அவன் விலகி இடம் அளிக்க வேண்டியதாகி போனது...
கடைசியில் விக்ரம் தன் கையும் கால்களை யும் குறுக்கி படுத்து கொண்டான் அந்த பெரிய கட்டிலில்...அவளும் மறு கோடியில் படுத்து உறங்க முயற்சி செய்தாள்... ஆனால் முடியவில்லை... கண்களை மூடினாலே இரண்டு வார தாடியும் வெட்டாத கேசத்துடனும் கண்கள் சிவந்து அவளிடம் நெருங்கி நின்று முதல் முறையாக மென் குரலில் பேசிய விக்ரம் தான் வந்தான்...முதல் முறையாக இருவரும் ஒரே படுக்கையில் படுக்க அவளுக்கு கண்களை திறந்து கொண்டு உறங்க வேண்டும் என தோன்றியது...ஆனால் கண்களை திறக்க ஏதோ ஒன்று அவளை தடை செய்தது...அதன் பெயர் நாணம் என்றால் மதுவுக்கு அவள் கணவனிடத்தில் நாணமே...
நாணம் இல்லாத பெண் இந்த பூமி தனில் உண்டோ... மது மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன...அவனிடம் போய் உன்னை அருகாமையில் பார்க்கும் போது மூச்சு அடைக்கிறது என்று இந்த சமயம் கூறினால் அந்த மூச்சையே நிறுத்தினாலும் நிறுத்தி விடுவான்...அதனால் அவளுக்கு கண்களை மூடி கொண்டு கனவில் கணவனை காணுவதே சால சிறந்தது என எண்ணி அவனின் முகத்தை எண்ணி கொண்டு துயில் கொண்டாள்... அவனும் முதலில் புரண்டு புரண்டு படுத்தவன், யாருடனும் படுக்கையை பகிர்ந்து கொண்டது இல்லை என புரிப்பட்டது மதுவுக்கு.. அதன் பின் உறங்கி போனாள்..
ஆனால் விக்ரம் ஆழ்ந்த உறக்கத்தில் அவன் அறியாமல் அவனது நீண்ட கையையும் கால்லையும் அவள் மேல் இட,அவளின் கால்களின் வழுவழுப்பில் அவனின் கால்களை வைத்து விக்ரம் உறங்க அவளும் உறக்கத்தின் பிடியில் அதை உணரவில்லை... விக்ரம் ஒற்றைக்கு அந்த படுக்கையில் படுத்து பழகியவன் அருகில் ஒரு ஐம்பது கிலோ தலையணை படுத்து இருக்கும் என போதம் இல்லை போலும் சுகமாக அவனுக்கு மட்டுமே சொந்தமான மது என்னும் பெயர் கொண்ட அவனது தலையணையில் கால்களை இட்டு உறங்கி போனான்...விக்ரம் இன்னும் அவளை மனைவியாக ஏற்று கொள்ளவில்லை.... ஏற்றும் கொள்ளும் வேளையில் அவர்களுக்கு விடியா இரவாக மாறுமா...அவளை வேணாம் என கூறும் விக்ரம் உறக்கத்தில் அவன் செய்யும் வேலை அவன் அறிந்தால் விக்ரமுக்கு எப்படி இருக்கும்?????..
காலை விக்ரம் எழும் நேரம் அங்கே மது இல்லை...அடுக்களையில் இருந்து சத்தம் வந்து கொண்டு இருந்தது அவளும் வாசுதேவனும் உரையாடி கொண்டு இருந்தனர்...
விக்ரம் வேலை செய்யும் கல்லூரியின் முதல்வர் இடத்தில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க சென்றான் விக்ரம்...அவரோ இவனின் மனநிலையை உணர்ந்தாலும் , "இப்போது என்னால் உங்களுடைய சேர்ட்டிபிகேட்ஸ் கொடுக்க முடியாது மிஸ்டர் விக்ரம் அகாடமிக் இயர் முடியனும் "..என்று கூறி, " வேணும்னா அதுவரை இங்கேயே ஒர்க் பண்ணுங்க".. என்று அவர் கூறி பார்க்க அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்ன ஆனாலும் செல்வது இல்லை என முடிவுக்கு வந்து விட்டான்...
அவனால் இனியும் ஆசிரியர் பணியை மேற்கொள்ள முடியும் என தோன்ற வில்லை...அதனால் அந்த வேலைக்கு முழுக்கு போடலாம் என என்ணி விட்டான்...வேறு வேலைக்கு சென்றாலும் அவர்கள் முதலில் கேப்பது சான்றிதழ்கள் மட்டுமே அதனால் வெளியேயும் செல்ல முடியாது...இதை எல்லாம் வாசுதேவனிடம் கூற அவரோ பொறுமையாக யோசித்து பேசாம," நீ புதுசா ஏதாவது பிசினஸ் செய் பா"... என்று கூற அவனும் அதையே தான் யோசித்து வைத்து இருந்தான்..
"ஏதாவது செய்யலாம் பா நீங்க இனி அதை நினைச்சு கவலை பட்டுட்டு இருக்காதீங்க நான் பார்த்துக்கறேன் "...என ஒரு மகனாக தன் தந்தையை ஆறுதல் படுத்தினான்... இதை எல்லாம் கண்டு கொண்டு இருந்த என்னால் தானே இவர்களுக்கு இந்த கஷ்டம் ஆனால் அங்கிள் ஒரு வார்த்தை கூட என்னிடம் குறை கூறவோ இல்லை திட்டவோ எதுவும் செய்யவில்லையே என நினைத்து கொண்டாள்...
அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன...இந்த இரண்டு வார காலமும் விக்ரமை தொல்லை செய்வதை தவிர வேறு எதுவும் அவள் செய்யவில்லை...அதுமட்டுமின்றி விக்ரம் தன் வெளிநாட்டு நண்பர்கள் மூலம் ராஜினாமா செய்த இரு தினங்களில் ஆன்லைன் வேலை ஒன்றை தற்காலிகமாக தேடி கொண்டான்... வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்...அவன் மனதில் எப்போதும் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நிலையை இதற்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான்...அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறான்...
மதுவின் தொல்லைகள் தான் அவனுக்கு பெரிதாக இருந்தன...ஒற்றை மகனான விக்ரம் யாருடனும் அறையையோ ஏதாவது ஒரு பொருளையோ பகிர்ந்து கொள்ளாத காரணத்தினால் மது அவனது அறையில் இருப்பது விக்ரமுக்கு முள் மேல் நிற்பது போல தான்...
ஆம் வீட்டையும் தன்னையும் தன்னை சார்ந்த பொருட்களையும் சுத்தமாக வைத்து கொள்ளும் விக்ரம் இடத்தில் சுத்தமா அது எங்கே கிடைக்கும் அது எப்படி இருக்கும் என்ற கேள்வியோடு பிறந்த மதுவுக்கு எப்படி சரி ஆகும்...
இந்த இரண்டு வார காலமும் அவன் வாயில் இருந்து வந்ததது என்னவோ மது மது என்று தான் ...ஆம் மது புராணம் பாட வைத்து விட்டாள் மதுர யாழினி விக்ரம்...
சுத்தமாக வைத்து இருக்கும் அவனது அலமாரியில் அவளது பொருளை கலந்தது மட்டும் இல்லாமல் ஒரு பொருளை ஒரு இடத்தில் வைக்க மாட்டாள்..
அவனது ஷாக்ஸ் ஒன்றுக்குள் அவளது கிளிப் இருக்கும் ஒரு ஷாக்ஸ் கிடைத்தால் வேறு ஒன்று கிடைக்காது...அதை அவளிடம் கேட்டால் அவள் அலமாரி முழுவதும் கொட்டி கவிழ்ப்பாள்...
"அடுக்கி வை டி சும்மா தானே இருக்க ...கண்டதை கண்ட இடத்துல வெச்சு இருக்க "..என்று திட்டினால் ,"நான் படிச்சுட்டு இருக்கேன் "...என்று கூசாமல் பொய் உரைப்பாள்.... அதிலும் வேறு அவனிடமே லாஜிக் பேசுவாள்," வீடு னா கலைஞ்சு தான் இருக்கணும் அடுக்கி சுத்தமா இருக்க இது என்ன மியூசியம்மா".. என்று எதிர் கேள்வி கேட்டு அவனின் கடுப்பை ஏத்தி விட்டோம் என்ற நம்பிக்கையோடு ஓடி விடுவாள்...
ஆனால் உண்மையில் மது அவள் அறிந்தோ அறியாமலோ அவனை நடந்த சம்பவங்களில் இருந்து அதையே நினைத்து மனதை வருத்தி கொண்டு இருக்காமல் வேறு காரியங்களில் மனதை திசை திருப்பி விட்டு கொண்டு இருக்கிறாள்....ஆம் அவன் இப்போது அதை நினைத்து கொண்டு இருப்பது இல்லை என்பதை விட அதை மனதில் மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு இவள் ஏதாவது செய்யும் கிறுக்கு தனங்களில் மனதை மாற்றி அவளை திட்டுவதில் மனதை செலுத்தி வருகிறான் என்பதை செலுத்த வைக்கிறாள் என்பதே பொருந்தும்...
என் கண்கள் உனை தேடும்....
