காதல் 27

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 27

காதலது கண்ணில் கண்டேன்

    "என்ன அங்கிள் இவரு வேலையை விட்டுட்டேன் னு சொல்லுறாரு "...என்று மது தன் மனதில் எழுந்த கேள்வியை அவரிடம் கேக்க அவரும் விடை தெரியாமல் தான் மகன் செல்லும் திசையை நோக்கி கொண்டு நிற்க , "நீ அவனை நான் கூப்பிட்டேன் னு சொல்லு மா "..என்று அவர் கூற அவள் உள்ளே சென்றாள்..

அங்கே விக்ரம் ஜன்னல் திரைகளை விலகி அந்த வெண்ணிலவின் அழகை ரசிக்காமல் வெறித்து கொண்டு இருந்தான்..."உங்களை அங்கிள் கூப்பிடறாங்க சார்"...என்று கூற

மெல்ல வெளியே வந்தவனிடம் எதற்காக வேலையை விட்ட என காரணம் கேக்க விக்ரமோ, " நான் இந்த வேலையை செய்ய தகுதி இல்லாதவன் ஆகிட்டேன் அப்பா ...என்னோட மாணவியை நான் திருமணம் செஞ்சு இருக்கேன் அதும் இப்படி ஒரு நிலையில் நாளை நான் எப்படி அந்த காலேஜ் உள்ள போவேன் எல்லோர் மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிட்டேனே"... என்று வருத்தப்பட அவன் கூறிய காரணமும் விளக்கங்களும் வாசுதேவனுக்கு புரிப்பட அவருக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை... இருந்தும் இப்படியே சென்றால்  அவன் மனா அழுத்தத்தால் பாதிக்க படுவான் என்பதை உணர்ந்து,

" விக்ரம் இதுக்கும் நீ செய்யுற வேலைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை...இது ஒரு விபத்து ...நாங்க கண்ணால் பார்த்து இருந்தாலும் என்ன நடந்தது னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியும்..என் மகனை பத்தி எனக்கு தெரியும்... அவன் தவறு செய்ய மாட்டான் னு...அந்த இடத்தில் நான் ஏன் பேசல னா நான் என்ன சொன்னாலும் பார்த்தது பொய்யா னு கேப்பாங்க அவரையும் தவறு சொல்ல முடியாது பொண்ணை பெத்தவர் அவரோட ஆதங்கமும் நியாயம் தானே".... என்று கூற விக்ரமுக்கு அது விளங்கியாலும் நானும் எந்த தவறும் செய்யவில்லையே...என நினைக்கும் போது அவர் மீது அவனுக்கு வருத்தமே..அவர் மீது கோபம் இன்னும் மறையவில்லை என அவன் முகமே அவருக்கு எடுத்து கூறியது...

"தம்பி ஒரு விபத்தை காரணம் காட்டி நீ இப்படி இருக்கிறது சரி இல்லை பா..நடந்தது நடந்து போச்சு இதை இனி யாராலும் மாத்த முடியாது...அதுனால மறுபடியும் வேலையை விடறதை விட்டுட்டு வேலைக்கு போகிற வேலையை பாரு "..என்று கூற

அவனின் மனதில் ஏதாவது இது போல காயம் ஏற்பட்டால் முதலில் அவன் செய்வது அந்த இடத்தை விட்டு விலகுவது தான் இந்த முறையும் அதே வேலையை செய்ததால் தான் வாசுதேவன் அதை மறுத்தார்...

அவர் இன்னும் அவனுக்கு சில அறிவுரைகள் கூற எப்போதும் ஏதாவது சொல்லி மறுப்பவன் இன்று பொறுமையாக கேட்டான்..."தம்பி நீ இப்போ அந்த வேலைக்கு போக வேணாம் ஆனால் வேற காலேஜில் முயற்சி செய்".... என்று கூற

விக்ரமோ , "இல்லை அப்பா நான் இனி ஆசிரியர் பணிக்கு தகுந்த ஆள் கிடையாது...என்னால மறுபடியும் இன்னொரு காலேஜ்ல போய் வேலை செய்ய முடியாது"... என்று கூற

அவனின் மனநிலையும் அவன் கூற வருவதும் அவருக்கு தெளிவாக புரிந்து போக , "முன்னாடி செஞ்ச இடத்துல முயற்சி பண்ணி பாரு பா...உன்னோட திறமைக்கு உன்னை இரு கை நீட்டி வரவேற்பாங்க "...என்று கூற

அவனோ ,"இல்லை பா நான் இன்னும் எங்கேயும் போற மாதிரி இல்லை...வேற ஏதாவது யோசிக்கலாம்"... என்று கூறி உள்ளே செல்லும் முன் , "அவளை நாளைக்கு காலேஜ் க்கு போக சொல்லுங்க "...என்று மறுபடியும் கூற

அவளோ அவன் கூறும் முன் அவள் "மாட்டேன்".. என்றாள்... அவள் மனதிலும் அது எழாமல் இல்லை...என்னையும் தானே கேலி செய்வார்கள் நானும் எப்படி மீண்டும் அந்த கல்லூரி வாயிலில் நுழைவேன் என்று எல்லாம் நினைத்து, "இல்லை நானும் இனி காலேஜ் போகல".. என்று கூற

இதுவரை பொறுமையாக பதில் அளித்து கொண்டு இருந்தவன் அவளது பதிலில் கோபம் தலைக்கேற அவளை பார்த்து முறைக்க அவளோ அவனை பார்க்காமல் வாசுதேவனிடம் , "அங்கிள் சார் சொன்ன மாதிரி தான் எனக்கும் அங்கே போக கஷ்டமா இருக்கு "..என்று தலையை குனிந்து கொண்டு அவள் கூற அவள் கூற வருவது அவருக்கு புரிவதால் அவளும் அவனை போல பாதிப்பு அடைந்தவள் தானே என நினைத்து, " சரி மா இப்போதைக்கு காலேஜ் போக வேண்டாம் வீட்டில் இருந்து படி பரிட்சை மட்டும் காலேஜ் ல போய் எழுதிக்கோ நாளைக்கு நான் போய் உன் காலேஜ் ல பேசுறேன்"... என்று கூற அப்பாடி என்று மனதுக்குள் அவளுக்கு நிம்மதி வந்தது...அவளது உடல் மொழியை கண்டவன்,

"அப்பா அவளே படிக்காம இருக்க அது இது னு சொல்லிட்டு இருக்கா நீங்க வேற அவ சொல்றதை கேட்டுட்டு இருக்கீங்க".. என்று கூற

"இல்லை அங்கிள் நான் வீட்டில இருந்தாலும் படிப்பேன்...நல்லா படிப்பேன் அங்கிள் "...என்று அவள் தான் படிக்கும் பெண் தான் என்பது போல அவரிடம் கூற

அவருக்கு தான் ஏற்கனவே அவளின் படிப்பின் லட்சணம் தெரியும் என்பதாலும் அவளை வேறு இந்த நேரத்தில் கேலி செய்ய வேண்டுமா என நினைத்து அமைதியாக சென்று விட்டார்...

அவனோ அறைக்குள் செல்ல அவன் பின்னாலே வந்தவள்," நான் வீட்டில இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை ...நீங்க மட்டும் வீட்டில இருக்கீங்க நான் கேள்வி கேட்டேன் னா ...நீங்க மட்டும் கேள்வி கேக்குறீங்க".. என்று அவன் பின்னாலே நடந்து கேள்வி கேட்டு கொண்டே மது வந்தாள்...அவள் கூறுவதை கேட்டவனுக்கு கோபம் வராமல் வேறு என்ன வரும்...ஆனால் மதுவின் பாடு மதுவுக்கு தானே தெரியும்...

அவன் உள்ளே செல்ல இவளும் கதவை அடைத்து கொண்டே மது நிறுத்தாமல், "சும்மா காலேஜ் போ போ னு சொல்லிட்டு இருக்காதீங்க சார்..நான் இப்போ ஒன்னும் உங்க ஸ்டுடெண்ட் இல்லை"...என்று கூற

கதவை அடைத்தவள் அவன் சென்று இருப்பான் என திரும்பும் போது அவன் மிக நெருக்கமாக நின்று கொண்டு இருந்தான்...அவளுக்கும் அவனுக்கும் ஒரு அடி இடைவெளியில் நின்று கொண்டு இருந்தான்...மது ஒரு அடி எடுத்து வைத்தால் அவனுள் புதைந்து விடுவாள்... அப்படி ஒரு நெருக்கத்தில் அவன் நிற்க

இதை எதிர்பார்க்காத அவள் கதவோடு கதவாக பல்லி போல ஒட்டி நிற்க மேலும் நெருங்கியவன் அவளிடம், அவள் கண்ணோடு கண் பார்த்து, " ஸ்டுடெண்ட் இல்லை னா நீ யாரு எனக்கு "...இதுவரை அவள் அறியாத குரலிலும் நெருக்கத்திலும் அவன் கேட்க,

அவன் கத்தி இருந்தால் கூட அதுக்கு பதிலடி கொடுத்து இருப்பாள் நெருக்கத்தில் வார்த்தைகள் வரவில்லை... மேலும் அவனே அவளிடம், "உன்னால பேசாம இருக்கவே முடியாதா"... என்று கண்களை பார்த்து கேட்க

அவளுக்கு அவனின் அருகாமை வேர்க்க தொடங்கியது ...அத்தனை நேரம் அவனோடு வம்பு பேசியபடி வந்தவள் அவனின் அருகாமையில் வார்த்தைகளுக்கு தடுமாறினாள்... அங்கே வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது...அவளது மூச்சு அடைப்பது போல இருந்தது...கதவை திறந்து வெளியே போகலாமா என்று கூட அவளுக்கு தோன்றியது...

அவனோ அதை உணராமல் , "என்கிட்ட இனி நீ இப்படியே பேசிட்டே இரு ஒரு நாள் வாங்க போற "...என்று கூறி படுக்கையில் அவளுக்கு முன்பே படுக்க போனான்..அவள் வந்து படுத்து விட கூடாது என்பதற்காக தான் கடந்த ஒரு வார காலமாக சேரில் படுத்து உறங்கி கழுத்து ஒரு பக்கமாக பிடித்து கொண்டது தான் மிச்சம் அவனால் சரியாக உறங்க முடியவில்லை... இடையில் இவன் எழுந்து பார்க்கும் போது இவள் சுகமாக உறங்குவதை காணும் போது கடுப்பு தான் வரும்...இன்று நான் தான் படுக்கையில் படுக்க போகிறேன் அவள் வேண்டுமானால் சேரில் படுத்து கொள்ளட்டும் என்று நினைத்து அவன் படுத்து விட்டான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top