காதல் 26

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 26

மறுநாள் காலை வாசுதேவன் எழுந்து கதவை திறக்கவும் ஒரு பை அவர் வீட்டு வாசல் முன்னே இருந்தது ...எதிர் வீட்டு வாசலில் கோல்ட் நின்று கொண்டு , "அது எல்லாம் அந்த சிறுக்கி துணி அவ கிட்டயே கொடுங்க "...என்று கூறி கொண்டு இருக்கும் போது எழுந்து வந்தாள் மது...

வந்தவள் அங்கே சங்கடமாக நின்று கொண்டு இருந்த வாசுதேவனை பார்த்து, " அங்கிள் நீங்க உள்ளே போங்க "...என்று கூற அவர் மெல்ல நழுவி கொண்டார்...

வெங்கி வெளியேவே வரவில்லை....கோல்ட்டையும் விக்ரம் வீட்டு வாயிலில் உள்ள பையையும் கண்டவள் , "என்ன இது மட்டும் தான் இருக்கு ...பச்சை கலர் பீரோ ல இருக்கிறது  எல்லாம் யார் எடுத்துட்டு வருவா போயி அதையும் எடுத்துட்டு வா"... என்க

அவளின் பதிலில் கடுப்பாகி போன கோல்ட், "அடியே இரு வாரேன் உன் சங்கத்தாமே வேணாம் ...எங்களை எல்லாம் வேணாம் னு சொல்லி தானே அவன் பின்னாடி போனே ...என் மகன் உன்கிட்ட சொல்லியும் நீ கேட்கலை ல...எங்களுக்கும் நீ வேணாம் டி...உன் பொழப்பை பார்த்துட்டு போ...இரு வாரேன் "..என்று கூறி அவளுடைய பொருட்களை எல்லாம் கொண்டு வந்து அவன் வீட்டு வாயிலில் வைத்தார்..

வெங்கி தன் தாய் மதுவின் பொருட்களை எடுத்து செல்வதும் அங்கே போய் அவளை திட்டியும் கொண்டு போய் வைப்பதை எல்லாம் கண்டாலும் காணாத பாவத்தில் இருந்தார்...அழகு மயிலோ அங்கேயும் இங்கேயும் தன் மாமியார் பின்னாடி ஓடி கொண்டு இருந்தார்...

அப்படி ஒரு வழியாக எல்லா பொருட்களும் அவள் வீடு வந்து சேர சேரில் தூங்கி கொண்டு இருந்த விக்ரம் காலடியில் கடை பரப்பி வைத்து இருந்தாள் மது....அவனது அலமாரியை திறக்க அது திறக்கும் சத்தத்தில் எழுந்தவன்,  " என்ன டி பண்ற "..அவனால் கால்லை கீழே வைக்க முடியவில்லை அந்த அளவுக்கு அவள் சாதனங்கள் சூழ்ந்து இருக்க," எதுக்கு டி இப்போ அது எல்லா திறந்துட்டு இருக்க "...என்று காலையிலே கத்த தொடங்கினான்...

"இதோ பாருங்க இப்போ இந்த ரூம் நானும் யூஸ் பன்றேன் அப்போ என்னோட பொருள் எல்லாம் இங்கே தான இருக்கணும் "...என்று கூறி அவன் பேச்சை கேக்காமல் அவள் வேலையில் குறியாக இருந்தாள்...அவனோ சரியான இம்சை என்று வாய் விட்டு முனகி கொண்டே குளியல் அறைக்குள் புகுந்தான்...

ஒரு வாரம் கழிந்து விட்டது விக்ரம் மற்றும் மதுவின் திருமணம் நடந்து இந்த ஒரு வார காலமும் பெரிதாக ஒரு மாற்றமும் விக்ரமின் பாகத்தில் இருந்து ஒன்றும் மாறவில்லை... அப்படியே ஒரு வார தாடியோடு தான் சுற்றி கொண்டு இருந்தான்...பட்ட அவமானத்தை எண்ணி கொண்டே வீடே கதி என கிடந்தான்....ஆனால் மது இந்த ஒரு வாரத்தில் அவள் பழகி கொண்டாள்... அந்த வீட்டின் நடப்பும் காரியங்களும் அவளுக்கு பழக்க பட்டு போனது...

எதிர் வீட்டில் கோல்ட் மற்றும் மது எதிர் பாரா விதமாக காண நேர்ந்தால் இருவரும் முறைத்து கொண்டும் விரைத்து கொண்டும் திரிந்தனர்...தம்பி , தங்கைகள் மட்டும் யாரும் இல்லாத நேரத்தில் கை அசைப்பர்...இவளும் கை அசைப்பாள்... அழகு மயிலுக்கு தன் மகளை காண வேண்டும் என்று தோன்றினாலும், வெங்கி அமைதி வேறு அவருக்கு பீதியை தர மகளை காணாத பாவத்தில் இருந்து கொள்வார்...வெங்கியை மட்டும் அவளால் காணவே முடியவில்லை... வாசுதேவன் கூறியது போல அவரின் மனகாயமும் வருத்தமும் மெல்ல மாறும் என தன் மனதில் வருத்தம் எழுந்தாலும் அதை உள் அடக்க பழக்கி கொண்டாள் அந்த சிறு பெண்...

எப்போதும் சமையல் செய்யும் விக்ரம் கடந்த ஒரு வார காலமாக   அவனது அறையில் முடங்கி கிடப்பதாலும், மதுவின் திறமையை பற்றி தெரியாத காரணத்தினாலும் வாசுதேவனே சமையல் செய்ய தொடங்கினார்...

ஒரு நாள் இரவு விக்ரம் ஏதோ யோசித்து கொண்டு இருந்தான்...அந்த சமயம் சமையல் அறையில் இருந்து புகை வர அந்த புகை அவன் அறையை நோக்கியும் பாய்ந்து வந்தது...என்னவென்று போய் பார்த்தால் அடுக்களை மொத்தம் புகை சூழ அங்கே வாசுதேவன் வெளியே வந்து இருமி கொண்டு இருக்க மதுவோ ஒரு கையில் தம்ளரோடு நின்று கொண்டு இருந்தாள்...

ஒரு நிமிடத்தில் அடுக்களையை தீ பிளம்பமாகவும், புகை மண்டலாகவும் காட்சிக்கு வைத்து விட்டாள் மது...

நடந்தது இது தான் சற்று நேரத்திற்கு முன் இரவு உணவு வாசுதேவன் செய்து கொண்டு இருக்க இவள் சமையல் அறையின் திட்டில் அமர்ந்து கொண்டு அவருடன் வம்பு செய்து கொண்டு இருந்தாள்..

அவர் கடுகு தாளிக்க போக நான் செய்கிறேன் என்று அவள் செய்ததின் விளைவு இது எல்லாம் ..

விக்ரம் வந்து மீதி உள்ள வேலைகளை அவளையும் வாசுதேவனையும் திட்டி கொண்டே செய்தான்...ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்வது அவனுக்கு கொஞ்சம் பதறியது...அவளிடம் ,"ஏன் டி அவருக்கே வீசிங் இருக்கு இதுல இந்த புகைல நிக்க வெச்சு இருக்க "...என்று காய்ந்தான்

வாசுதேவனிடமோ," அப்பா அவளுக்கே இது எல்லாம் ஒன்னும் தெரியாது னு உங்களுக்கு தெரியும் ல அப்புறம் எதுக்கு அவகிட்ட இது எல்லாம் செய்ய சொல்றிங்க "...என்று கேட்க

வாத்தியாரிடம் திட்டு வாங்கும் மாணவர்கள் போல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்...அவர்கள் இருவரையும் பார்த்து முதலில் முறைத்தவன் அதன் பின்பு அமைதி ஆனான்...

இரவு வாசுதேவனிடம், " அப்பா அவ வந்து ஒரு வாரம் ஆச்சு காலேஜ்க்கு இன்னும் போகல நாளைக்கு இருந்து போக சொல்லுங்க".. என்று கூறினான்..

அவரோ ,"நீயே சொல்ல வேண்டியது தானே விக்ரம் "..என்று கூற,அவனோ அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை...அவன் பதில் கூற மாட்டான் என்பதை அறிந்த வாசுதேவன்,

"நீயும் காலேஜ் போய் ஒரு வாரம் ஆச்சு"... என்று கூற விக்கிரமோ ,"நான் வேலையை விட்டுட்டேன் பா"... என்று அவர்கள் தலையில் இடியை இறக்கி விட்டு அவன் அறைக்கு சென்றான்... மதுவோ என்னது வேலையை விட்டுட்டாரா என்று அதிர்ச்சியோடு அவன் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தாள்...

என் கண்கள் உனை தேடும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top