காதல் 25

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 25

காதலது கண்ணில் கண்டேன்

  தன் அறையில் அவள் இருப்பாள் என சற்றும் எதிர் பார்க்காத விக்ரம் அவளை கண்டதும் கோபம் தலைக்கேற , "வெளியே போடி "...என கத்தினான்...அவளோ அவனின் கர்ஜனை உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் அசையாமல் அமர்ந்து இருந்தாள்..

"உன்னை தான் டி வெளியே போக சொன்னேன் "...என்று கத்திக்கொண்டே அவன் அருகில் வர அப்போதும் அவள் அசையாமல் அமர்ந்து இருந்தாள்...

தான் சொல்லியும் கேக்காமல் அமர்ந்து இருப்பவளை கண்டு கோபம் தலைக்கேற , "ஓ முதல் இரவு கொண்டாடலாம் னு இருக்கியோ "..என நக்கல் கேள்வி கேட்க

அதுவரை அமைதியாக அமர்ந்து இருந்தவள் அவன் பேச்சை கேட்டு கொதித்து எழுந்து , "ஆமா "...என்று கூற அவளை புரியாமல் பார்த்தான் விக்ரம்...

"ஆமா முதல் இரவுக்கு வேண்டி தான் உக்கார்ந்து இருக்கேன் "..என்று மீண்டும் ஒருமுறை கூற அதிர்வது விக்ரமின் முறை ஆனது..."என்ன டி திமிரா "...என்று அவள் அருகில் வர அவளோ எதற்கும் தயார் என்ற நிலைக்கு வந்து விட்டாள்... இவனை விட்டால் பேசி கொண்டே போவான் அது என்ன இவனுக்கு மட்டும் தான் வருத்தமா நமக்கு எல்லாம் இல்லையா என்று எண்ணி , "இதோ பாருங்க உங்க நிலைமையில் தான் நானும் இருக்கேன் செய்யாத தப்புக்கு நீங்க மாட்டுனீங்க னா நானும் அதே மாதிரி செய்யாத தப்புக்கு தான் பழி சொல் ஏத்து உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கேன்...எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நின்னுட்டு இருக்கேன்..அதுனால சும்மா என்கிட்ட வந்து குதிக்கிற வேலை எல்லாம் வேணாம்...

அது எப்படி எங்க அப்பா முன்னாடி வீட்டுக்குள்ள போ னு சொல்றது ...இப்போ ரூமை விட்டு வெளில போ னு சொல்றது என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க".....என்று காலை நடந்த சம்பவத்தை வைத்து அவனை எதிர் கேள்வி கேட்க விக்ரம் வாயை மூடி கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை..

"நீ தான் டி பிளான் பண்ணி இதை எல்லாம் செஞ்ச நீ எப்படி அந்த ரூம் ல மாட்டின ..எல்லாம் உன்னால தான்.
நீ மட்டும் உன் அப்பா கிட்ட தெளிவாக சொல்லி இருந்தா அப்போ எங்கே டி போச்சு இந்த வாய் உங்க அப்பாவை பார்த்ததும் வாயை மூடிக்கிற "...என்று அவன் மீண்டும் தொடங்க

அவன் கூறும் உண்மையை அறிந்தாலும் பதில் கூறாமல் அவளோ எப்படி இருந்தாலும் நான் என்ன சொன்னாலும் இவன் நம்ப போவது இல்லை என்பதை உணர்ந்து, "நீங்க நான் என்ன சொன்னாலும் நம்ப போறது இல்லை நான் தூங்க போறேன்".. என்று கூறி அவன் படுக்கையில் படுக்க போக

"ஹே இங்கே ஏன் நீ படுக்கிற வெளில போ "...என்று மீண்டும் கூற

அவளோ வீங்கிய அந்த முகத்தை வைத்து கொண்டே , "நான் இங்கே படுத்தா உங்களை ஏதாவது செஞ்சுடுவேன் னு பயமா "...என்று நக்கல் கேள்வி கேட்க

அவனோ அவள் கூறியதை கேட்டு அதிர்ந்து வார்த்தைகள் தட்டுப்பட இருமி கொண்டு," எனக்கு என்ன பயம் "...என்று ஒரோ வாக்கியமாக கூற , "அப்போ லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்குங்க"... என்று கூறி அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்..

அவனால் சத்தியமாக இவள் எப்படி பட்டவள் என புரிந்து கொள்ள முடியவில்லை... இவளால் எப்படி மாற முடிகிறது மறக்க முடிகிறது என்னால் இதில் ஒன்றை கூட செய்ய  முடியவில்லை யே... இதில் இருந்து வெளியே கூட வர முடியவில்லையே...என்னால் என் கோபத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லையே என்று நினைத்து மெல்ல அறையை விட்டு வெளியேற போக

அவளோ கண்களை மூடிய படி, " நான் கூட நீங்க ரொம்ப தைரியமான ஆளு நினைச்சேன் சார் "...என்று கூற

முன்னே வைத்த கால்லை பின்னே வைத்து திரும்பி பார்த்தான் விக்ரம்...இவளை என்ன செய்தால் தகும் என்று இருந்தது விக்ரமுக்கு..

"என்ன டி உன் மனசுல நெனைச்சுட்டு இருக்க ஒன்னு நீ வெளில போ இல்லை நான் வெளில போவேன் "..என்று கூற

"நானும் போக மாட்டேன் நீங்களும் போக கூடாது "...என்று கூற

"என்னை வெளில போக கூடாது னு சொல்ல நீ யாரு டி"... என்று இரத்தம் சூடு ஏறி முகம் சிவந்து கேக்க

"உங்க மனைவி "...என்று அவன் கட்டிய தாலியை காட்டி கூற அதும் காலையில் அவளது தந்தையிடம் அவன் கூறிய வார்த்தை தான் அதை அவள் அவனுக்கே திருப்பி படித்தாள்..

அவனால் ஒன்றும் பேச முடியவில்லை... அவள் அருகில் ஒரே படுக்கையில் படுக்கவும் முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் திணறி நடை பழகி கொண்டு இருந்தான்...அவளோ நிம்மிதியாக உறங்க முயற்சி செய்தாள்... ஆம் இருவருக்கும் காயங்கள் ஒன்று தான் அதில் தான் அந்த இடத்தில் பேசி இருந்தால் இவனை குற்றவாளி ஆக்கி இருக்க மாட்டார்கள் என அந்த சிறு பெண்ணுக்கு வாசுதேவன் எடுத்து சொன்ன போது புரிந்தது...

தான் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறோம் என்று...ஆனால் வாசுதேவன் விக்ரம் வெளியே சென்றதும் சில விஷயங்களை எடுத்து கூறவும் அவளுக்கு புரிந்து போனது...அதுமட்டுமின்றி அவனை பற்றி சில விஷயங்களை எடுத்து கூறவும் மது முடிவே செய்து விட்டாள்... இனி இவனை விட்டு போவதும் இல்லை என்று...இவன் தான் என் உயிர்....இவனை என் மரணம் வரை பிரிய போவதும் இல்லை என இவன் மனதளவில் பட்ட துன்பங்கள் போதும் இனி எல்லாமுமாக நான் இருக்கிறேன் ...இவனின் ஆழ்மனது காயத்திற்கு நான் தான் மருந்து அவனுக்கு என்று நினைத்து கொண்டாள் மது அவனின் வருகைக்கு வேண்டி காத்து இருந்தாள்..

அதனால் தான் அவன் வெளியே போக சொன்னதும் போகாமல் பிடிவாதமாக அங்கேயே அமர்ந்து இருந்தாள்... இதோ அவன் இப்போது அவன் அங்கேயும் இங்கேயும் நடப்பதை ஒரு கண் திறந்து பார்த்து கொண்டும் இருக்கிறாள்...

ஆனால் அவனை மாற்றுவது அத்தனை எளிதான விஷயம் அல்ல...கடந்த கால வாழ்க்கை அவனை பெண்கள் இடத்தில் இருந்து அவனை ஒதுக்கி நிறுத்தி இருக்க அதை எல்லாம் தெளிவாக அவர் அவளிடத்தில் கூறவும் அவளுக்கு அவனுடைய நிலைமை புரிவது போல இருந்தது...

ஆனால் இப்படியே விட்டால் சரி வராது என்று தான் அவனிடம் அவ்வாறு நடந்து கொண்டது...இதை எல்லாம் யோசித்து கொண்டே அவள் உறங்கி போனாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top