காதல் 24

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 24

இதில் இரு குடும்பங்களும் நல்லவர்களே... சந்தர்ப்பமும், சூழ்நிலையும் மனிதர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் மற்றவர்களின் முன் காட்சி படுத்தும் அது போல நல்லவனான விக்ரம் ஒரு தவறும் செய்யாமல் மற்றவர்களின் முன் தவறானவன் போல உருவகப்படுத்த படுவது விக்ரம் போன்ற மனிதர்களால் தாங்கி கொள்ள முடியாது... விக்ரம் மட்டும் அல்ல யாராலும் அதை தாங்கி கொள்ள முடியாது....தவறு இழைக்காதவன் தவறு செய்தவன் போல சித்தரிக்கப்படுவதும் கொடுமையை அதை அனுபவித்து கொண்டு இருந்தான் விக்ரம்..

முதலிலே கோபக்காரன் அதில் இந்த அவமானம் கூட சேர்ந்து கொள்ள ஒரு வெறி பிடித்தவன் போல ஆகி விட்டான்...தான் என்ன செய்கிறோம் என்றே அவன் உணரும் மனநிலையில் இல்லை...அதனால் மட்டுமே எல்லோர் முன்னிலையிலும் மதுவை அவன் அடித்தது...அதும் எல்லோரும் அவனை ஒரு குற்றவாளி போல கேள்வி கேட்க அதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை...

மதுவை, கோல்ட் , அவளின் அம்மா தம்பி தங்கை என எல்லோரும் நிர்ப்பந்திக்க யார் சொல்லும் அவள் கேட்கவில்லை அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்...இதை எல்லாம் கண்ட விக்ரம் பொறுமை இழந்தான்...விக்ரமோ , "நான் உள்ளே போறதுக்கு முன்னாடி நீ உள்ளே போய் இருக்கணும் "...என்று கர்ஜிக்க

மதுவோ அவன் அடித்ததும் , அவனின் கர்ஜனையும் சேர்த்து பயத்திலே அவள் கால்கள் அறியாமல் அவன் வீட்டு படி ஏறியது....கோல்ட் மற்றும் அழகுமயில் அங்கேயே ஒப்பாரி வைக்க வெங்கியோ அரைமணி நேரத்திற்கு முன் அவனிடம் வார்த்தையால் சூடு வாங்கியதின் பலன் வாயை மூடி கொண்டு எல்லோரையும் சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்தார்...

அங்கே உள்ளே நுழைந்த மதுவோ அழுது கரைந்தாள்... அவளிடம் ஒரு பழக்கம் உள்ளது நடந்ததை எண்ணியே அழுது கரைபவள் அல்ல ...தான் மட்டுமே தவறு செய்தோம் தாம் தெளிவாக தன் தந்தையிடம் கூறி தெளிவு படுத்தி இருந்தால் இப்படி ஒரு சூழ்நிலையை தவிர்த்து இருக்கலாம்..இரு வீட்டு மனகசப்பை நாம் தான் தீர்க்க வேண்டும் என அழுது கரைந்தவள் இனியும் அழுதால் சரி வராது என்று எண்ணி எழ போக அங்கே வாசுதேவன் ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்..அவளின் கண்ணீர் தடத்தை காட்டிலும் மகனின் தடம் அவள் முகத்தில் பெரிதாக தென்பட," எல்லாம் சரி ஆகும் அம்மா "....என்று ஆறுதல் படுத்த

"அங்கிள் நாங்க தப்பு ஒன்னும் பண்ணல அங்கிள் தெரியாமல் உள்ளே மாட்டிக்கிட்டோம் "..என்று கூற

அவரோ , "உங்க ரெண்டு பேரையும் நம்பனும் னு தான் மா எனக்கு ஆசை ஆனால் நாங்க பார்த்த காட்சியை இல்லை னு சொல்ல முடியாதே"...என்று அவர் கூற

யாரிடமும் தெளிவு படுத்த முடியாத தங்கள் நிலையை எண்ணி மது வருந்த  வாசுதேவனோ , "வருத்தப்படாத மா...காலத்துக்கும் மட்டுமே இது எல்லாம் மாற்ற கூடிய சக்தி இருக்கு...இப்போ நீ அவனோட மனைவி என்னதான் ஆனாலும் அவன் உன் கழுத்தில் தாலி கட்டிட்டான்...இப்போவே அவனோட வாழனும் னு நான் சொல்ல மாட்டேன் நடந்த விஷயங்களை மறக்க முயற்சி செய் னு மட்டும் என்னால சொல்ல முடியும்...

அதே மாதிரி என்னோட மகனும் நல்லவன் தான் கோபம் உள்ளவன் தான் அது அவன் வளர்ந்த சூழல் இப்படி ஆகிட்டான்... முதலிலே இறுகி இருப்பவன் அவன் இப்போ நடந்த விஷயங்களை வைச்சு அவன் மேலும் இறுக தான் செய்வானே தவிர மாற மாட்டான்...பார்த்து நடந்துக்கோ மா "..என்று மட்டும் கூறினார்..

பின்ன அவளிடம் போய் நீ தான் என் மகனை மாற்ற வேண்டும் என்று அவர் எப்படி கூறுவார்...இத்தனை நாள் வளர்த்த அவராலே விக்ரமை மாற்ற முடியாத போது அவர் மட்டும் எப்படி அவளிடம் கூறுவார்...

இரு வீடும் துக்கம் நடந்த வீடு போல காட்சி அளித்தது..அதில் வாசுதேவன் மட்டும் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்..இப்படியாவது தன் மகனுக்கு திருமணம் நடந்ததே என நினைத்தார்...இல்லையேல் எங்கே தன் மகன் இப்படியே இருந்து விடுவானோ என்ற பயமும் அவர் மனதில் தோன்றாமல் இல்லை...அதனால் எப்படியோ என் மகன் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி விட்டான் இனி அவன் அவளை விட்டு செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை டாக்சி பிடித்து அவளை அழைத்து செல்லுங்கள் என்று கூறிய உடனே அவருக்கு வந்து விட்டது...இனி இவளை கொஞ்சம் சரி செய்தால் எல்லா பிணக்கங்களும் சரி ஆகி விடும் என்று எண்ணி கொண்டார்...ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்லவே...

அவரின் மகனின் முரட்டு சுபாவத்தை அவ்வளவு சீக்கிரம் இந்த சிறு பெண்ணால் மாற்ற முடியுமா...

அவன் அறையில் நுழைந்து கதவை அடைத்தவன் அங்கே கையில் கிடைத்த எல்லா பொருட்களையும் அடித்து நொறுக்கினான்... சப்தம் வேறு வெளியே ஒரோ பொருள் உடையும் போதும் மதுவின் இதயம் நின்று துடித்தது என்றே கூறலாம்.. வாசுதேவனோ அவர் வருத்தப்படுவதா இல்லை அங்கே  நின்று பயந்து அழுது கொண்டு இருப்பவளை சமாதானம் செய்வதா என்று புரியாமல் தடுமாறி கொண்டு இருந்தார்...

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கியவன் இனி ஒன்றும் இல்லை என்பது போல அவன் அறை அலங்கோலமாக இருக்க இருந்தும் அவன் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க பட்டென கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்...அங்கே இருந்த இருவரையும் கண்டும் காணாமல் சென்று விட்டான்...

வாசுதேவன் தான் அவளை மறுபடியும் தேற்ற வேண்டியதாகி போனது...வெங்கிக்கு ஆறவில்லை..தன் மகளை நாசம் செய்தவன் இடத்திலே அவளை விட்டுவிட்டோமே என்று இருந்தும் பயன் இல்லை...இப்போது அவனின் மனைவி ஆகி விட்டாளே... கோல்ட் மற்றும் அழகு மயிலும் ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தனர்...

வெளியே சென்றவன் இரவு தான் வந்தான் ...எங்கே சென்றான் என யாருக்கும் தெரியவில்லை... வாசுதேவன் அவளை சமாதானம் செய்து உணவு உட்கொள்ள வைத்தார் ...அதன் பின் அவளை படுக்க அவனின் அறைக்கு செல்ல சொன்னார்...தயங்கியவளை, " போ மா"... என்று சமாதானம் செய்து அனுப்பினார்....

நாடு இரவில் வீட்டுக்குள் நுழைந்தான் விக்ரம்...டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த வாசுதேவனை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றான்... விக்ரம் என்று அவர் அழைப்பதை கேட்டும் கேக்காத பாவத்தில் சென்றான்...அங்கே அவனின் மனைவி அவளுக்காக காத்து கொண்டு இருக்கிறாள் என்பது அறியாமல்...

வந்தவன் அவன் அறைக்குள் செல்ல அலங்கோலமாக இருந்த அறையில் அலங்கோலமான நிலையில் அவனின் மனைவி...அவளை கண்டதும் என்னோட இந்த நிலைக்கு காரணம் என்ற கோபம் வர, " வெளியே போடி"... என்று கர்ஜித்தான் விக்ரம்....

என் கண்கள் உனை தேடும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top