காதல் 23
அத்தியாயம் : 23
காதலது கண்ணில் கண்டேன்
ஒரு அரை மணி நேரத்தில் என்ன நடந்தது என்று இருவரும் அறியர்...இதோ இப்போது அவன் கையால் தாலி வாங்கி அவனின் மனைவியாக நிற்கிறாள்...தன் மகளை அவனிடம் விட மனமின்றி , "வா மா நாம போகலாம் "..என வெங்கி அழைக்க அதுவரை அவளை முறைத்து கொண்டு நின்றவன் இப்போது தன் பார்வையை வெங்கியின் புறம் திருப்பினான்...
அவரை பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது...அவர் சொன்னால் தாலி கட்ட வேண்டும் ...தாலி கட்டியதும் இவளை அழைத்து கொண்டு சென்று விடுவாரா யாரை யார் அழைத்து செல்வது என வீம்பு அவன் மனதில் எழுந்தது...அதுமட்டுமின்றி தீர விசாரிக்காமல் பிரச்சனையை இதுவரை இழுத்து வந்து விட்டார் என்றே அவனுக்கு அவர் மீது வருத்தமும் எல்லோர் முன்னிலையில் தன்னை அடித்ததும் இல்லாமல் தன் தந்தையை வேறு அடித்த மனிதனை என்னால் மன்னிக்க முடியாது என்று நினைத்து வேண்டும் என்றே அவரை சொடக்கு இட்டு அழைத்தான் விக்ரம்...
வெங்கி திரும்பி பார்க்க, அவரின் மீது ஒரு நக்கலான பார்வையை வீசி ,"உங்க பொண்ணை அழைச்சிட்டு போறீங்களா இல்லை என்னோட மனைவியை அழைச்சிட்டு போறீங்களா "...என்று கேட்க வெங்கியின் பிடி தளர்ந்து போனது...அதுவரை தன் மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அவளை அவன் வதைத்து விட்டான்...சிதைத்து விட்டான் என்று எல்லாம் குதித்த வெங்கி அடுத்த பத்து நிமிடத்தில் தன் மகள் அவனின் உடைமை என்பதை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை... ஆனாலும் ஏற்று கொள்ள தான் வேண்டும்...
ஆம் இப்போது அவனின் சொத்து ஆகி விட்டாளே அவரின் மகள்... மதுவுக்கு தன் தந்தையுடன் செல்லவே விருப்பம் ஏனெனில் அவனின் முகத்தை பார்க்கவே பயமாக இருந்தது மதுவுக்கு...அவனின் ரௌத்திரத்தை நேற்று இரவில் இருந்து கண்டு வருகிறாளே...அவன் மீது தவறு ஒன்றும் இல்லையே அதை தெளிவாக தான் கூறி இருந்தால் இந்த நிலை இப்போது வந்து இருக்காதே...என்ன என்னை அந்த நிமிடம் தடுத்தது நானும் பயத்தின் உச்சத்தில் அல்லவா இருந்தேன் என்று நினைத்து கொண்டு இருந்தவளை வெங்கியின் கண் முன்னே கையை பிடித்து இழுத்தான்...இதை எதிர் பார்க்காத மது அவன் இழுத்த இழுவையில் அவன் அருகில் போய் நின்று கொண்டாள்...
அதன் பின் தன் தந்தையிடம் , "அப்பா ஒரு டாக்சி புக் பண்ணுங்க இவளை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க ..நான் பின்னாடி வரேன்"... என்று கூற ஒரு ஐந்து நிமிடத்தில் வெங்கியை மூன்றாவது மனிதன் ஆக்கி விட்டான் விக்ரம் அதும் அவனுக்கு திருமணம் செய்து வைத்த கமிஷனர் மற்றும் கல்லூரி தாளாளர் என அனைவரும் இரண்டு அடி தள்ளி நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்...
செய்யாத தவறுக்கு அனைவரிடத்திலும் கெட்ட பெயர் கிடைக்க அதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை... மதுவோ தன் தந்தையை திரும்பி பார்த்து கொண்டே செல்ல வெங்கி க்கு மேற்கொண்டு ஒன்றும் சொல்ல முடியவில்லை... அவள் போவதை காணுவதை தவிர...
ஆம் அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை...தனக்கும் விக்ரமுக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதை ஆனால் நம்பி தானே ஆக வேண்டும் இதோ அந்த வீதியில் உள்ள அனைவரும் கூடி இருக்க தலை விரி கோலமாக வாசுதேவனுடன் இறங்கிய அவளை கண்ட கோல்ட் மற்றும் அழகு மயில் ஓடி வர அங்கே ஒரு பாச போராட்டம் நடந்து கொண்டு இருந்தது...
கோல்ட் அழுவதை கண்ட மதுவுக்கு யாரை தேர்த்துவது என தெரியாமல் நிற்க அழகு மயில் மதுவை நாலு சாத்தும் சாத்தினார்...அவரும் அவளை தவறாக நினைத்து விட்டார்...அதற்குள் வெங்கி வந்து கோல்ட் மற்றும் அழகு மயிலை உள்ளே செல்ல சொன்னார்..ஆனாலும் மனம் ஆறாத அழகு மயில் மேலும் மதுவின் மீது தன் கைரேகையை பதிக்க போக அதற்குள் விக்ரம் வந்து விட்டான்...
வந்தவன் தெருவில் வேறு நான் அசிங்க பட வேண்டுமா என்று நினைத்து, " அப்பா".. என்று கத்தினான்...அவரோ அவர் வீட்டு வாயிலில் நின்று கொண்டு இருக்க மகன் அழைத்ததும் ஓடி வந்தார்...
"அப்பா அவளை வீட்டுக்குள்ள போக சொல்லுங்க கண்டவங்க கிட்ட நின்னு எதுக்கு இவ பேசிட்டு நிக்குறா "...என்று கேட்க
கோல்ட், " தம்பி நாங்க கண்டவங்களா உங்களுக்கு நீங்க செய்து இருக்கிற காரியம் உங்களுக்கு நல்லா இருக்கா"... என்று எல்லாம் வார்த்தைகளை விட அழகு மயிலும் கூட்டு சேர்ந்து கொண்டார்...ஊரே வேடிக்கை பார்க்க விக்ரமுக்கு உடை உடுத்தியும் அனைவரின் முன்பும் நிர்வாணமாக நிற்பது போல தோள் உரிந்து நிற்பது போல இருக்க எல்லாத்துக்கும் காரணம் இவள் தானே என நினைத்து ஆத்திரம் தலைக்கேற அவர்கள் மேல் உள்ள கோபத்தில் மதுவின் மறு கன்னத்திலும் அவனின் கைரேகை பதிந்தது...
அவளை அடித்த அடியை கண்ட அனைவரும் ஒரு நிமிடம் சிலை போல இருந்தனர்...தான் அடிக்கும் போது எல்லாம் வெங்கிக்கு வேதனை அளிக்கவில்லை.. தன் கண் முன்னால் தன் மகள் அடி வாங்குவதை கண்டு பொறுத்து கொள்ள முடியாத வெங்கி மற்றும் அவர் குடும்பத்தார் கோபத்துடன் விக்ரமை தாக்க வர விக்ரமின் ஒரு பார்வையில் அங்கேயே நிற்க வேண்டியதாகி போனது...
வெங்கியோ இனியும் என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியாது என் கண் முன்னே என் மகளை அடிக்கிறான் என நினைத்து ,"மது நீ வா மா அவன் கூட போகாத".. என்று கூற
மதுவோ அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை...ஒரு கையால் அவன் அடித்த கன்னத்தை பிடித்தப்படி தலை குனிந்து நின்று கொண்டு இருந்தாள்...
மறுபடியும் கோல்ட், அவளின் அம்மா எல்லோரும் கூறவும் கேட்கவில்லை ..வெங்கி பொறுமையாக கூறியும் திட்டியும் அவள் ஒரு அடி நகரவில்லை.. இறுதியில் அவர் என் மகளாக இருந்தால் என்னோடு வா இல்லை என்றால் என்னை மறந்து விடு என்று கூறியும் அவள் கேட்கவில்லை..
