காதல் 22
அத்தியாயம் : 22
சத்தம் வரும் திசை நோக்கி கிட்டத்தட்ட அனைவரும் ஓடினர்...அவர்கள் ஓடி வந்து கொண்டு இருக்கும் நேரத்தில் அங்கே "விக்ரம் எதுக்கு டி இப்போ கத்துற... இங்கேயே இருக்கலாம் னு ஐடியா வா...வாயை கொஞ்சம் மூடிட்டு இந்த பெஞ்சை பிடி "..என்று அவன் கத்த...
அவளும் சரி என்பது போல தலையை ஆட்ட இன்னும் பயத்தில் தான் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் வெளிச்சத்தில் தான் அவள் முகத்தை சரியாக கவனித்தான் முகம் எல்லாம் வீங்கி உதடு கிழிந்து இருந்தாள்... இதை எல்லாம் கவனித்தாலும் அவனின் கல் மனது கரைய வில்லை போலும்...மெல்ல பெஞ்சின் மீது நாற்காலியை வைத்து அதன் மீது ஏறி வெளியே எட்டி பார்த்து கொண்டு இருக்க..கீழே கிடந்த கண்ணாடி துகள்கள் அவளின் கால்லை பதம் பார்க்க அவன் நின்று கொண்டு இருந்த நாற்காலியின் பிடித்து இருந்த பிடியை அவள் தளர்த்த நாற்காலி மேல் நின்று கொண்டு இருந்தவன் அவள் கையை விட்டதும் தடுமாறி அவள் மீதே விழுந்தான்...
அவள் மீது விழுந்தவன் பதறி எழ அவளும் இதை எதிர் பார்க்கவில்லை என அவள் முகமே கூறியது... ஆணின் மணம் இதுவரை காணாத பெண்ணவள் தன் மனதிற்கு பிடித்தவனின் சுகந்ததை ஆழ்ந்து சுவாசிக்க அவனும் தான் இப்படி அவள் மீது விழுந்து கிடக்கிறோம் அது மட்டுமின்றி அவள் கண்ணோடு கண்களை இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறோம் என்பது அவனுக்கு புரிப்பட ஒரு நிமிடம் தேவைப்பட்டது...
வேகமாக எழும் நேரத்தில் எழ அவனின் கையை பதம் பார்க்க மீண்டும் அவள் மீதே விழுந்தான்...இந்த முறை மீண்டும் அவளின் தீண்டப்படாத பாகத்தை மீண்டும் அவனின் உடல் தீண்டி செல்ல அதற்குள் அவர்கள் இருந்த அறை திறக்கப்பட்டது...
அறை திறக்கவும், அங்கே இவர்கள் கிடைக்கும் காட்சியும், தன் பெற்றவர்களை கண்டதும் ஒரு கண்ணில் நிம்மதியும், மறுகண்ணில் அவர்கள் முன்னால் இப்படி கிடக்கிறோமே என்ற தங்கள் நிலையை அறவே வெறுத்து இருவரும் தட்டு தடுமாறி எழுந்தனர்..
ஒரு பெண்ணை பெற்றவர் காணாத காட்சியும் அவளின் முகத்தில் அவனின் கை ரேகையும், உதட்டின் ஓரத்தில் காய்ந்த ரத்த கசிவும், அவளின் உடையும், அந்த அறையின் கோலமும் ஏதேதோ அவரின் மனதை வதைக்க அதிலும் இவன் தன் பெண்ணுடன் தான் இரவு முதல் இருந்து இருக்கிறான் என்பதே அவரால் நம்ப முடியவில்லை...
ஆனால் இவனை நல்லவன் என்று அல்லவா என்று நினைத்து கொண்டு இருந்தேன் என் பெண்ணின் மானத்தை என் கண்ணின் முன்னே வாங்குகிறானே வாங்கியும் விட்டானே என அவரால் அந்த காட்சியை அதற்கு மேல் காண முடியவில்லை...மகளை இந்த கோலத்தில் கண்ட வெங்கி நொறுங்கி விட்டார்...
வேகமாக வந்தவர் அங்கே நிற்கும் விக்ரமை ஓங்கி அறைந்தார்...தடுக்க வந்த வாசுதேவனையும் அடித்து விட தன் கண்ணின் முன்னே தன் தந்தையை அடித்த வெங்கியை சட்டையை பிடித்து "உங்களுக்கு ஏதாவது செய்யணும் னா என்கிட்ட மட்டும் என்னோட அப்பா கிட்ட இல்லை... புரியதா "...என்று கர்ஜித்தான் விக்ரம்...
"செய்யிறது எல்லாம் செஞ்சுட்டு என்னையே மிரட்டுறியா "...என அவரின் மகளை பார்த்தபடி பதறி கொண்டே அவனை எதிர்க்க...அவரின் பார்வையை வைத்தே அவர் தவறாக தான் புரிந்து கொண்டு உள்ளார் என்பதை நொடி பொழுதில் புரிந்து கொண்டவன் , "இதோ பாருங்க".. என்று தொடங்கும் முன் அப்பா என அழைத்து அழுது கொண்டே மது வெங்கியின் தோள் சாய வெங்கி தன் மகளை ஆறுதல் படுத்தினார்...
அங்கே இரு வீட்டாரும் கை கலப்பில் நிற்க விக்ரம் சொல்ல வருவதை வெங்கி கேப்பதாகவே இல்லை...தாளாளர் செய்வது அறியாமல் நின்றவர்...தன் கல்லூரிக்கு கெட்ட பெயர் வந்து விட கூடாது என்று கருதி தன் நண்பர் கமிஷனரை அழைத்தார்...
அவர் வந்து என்னவென்று விசாரிக்க விக்ரம் தெளிவாக நடந்ததை கூறினான்...அதே போல் மதுவை விசாரிக்க அவளுக்கு அவளின் தந்தையை பார்த்ததும் எப்போதும் போல பயத்தில் அழ தொடங்க என்ன கேட்டாலும் அழுகை தான் அவளால் கூற முடியவில்லை.... வெங்கியோ தன் மகளை பார்த்து, " எல்லாத்துக்கும் காரணம் இவன் தான் என் பொண்ணை நாசம் செய்து விட்டான்"...என்று கூறினார்..
அதை விக்ரம் மறுக்க, "அப்போ நான் பார்த்தது உன்னோட அப்பா நாங்க எல்லோரும் பார்த்தது பொய்யா "...என்று கேட்க
வாசுதேவனுக்கு ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார்..தன் மகன் கூற வருவதை நம்ப வேண்டும் என்று தான் அவரின் உள்மனம் கூறுகிறது...ஆனால் அவரும் அந்த காட்சியை கண்டாரே.. இருவரும் அவர்கள் கண் முன்பு தான் இழைந்து கொண்டு இருந்தனரே... அவர் செய்வது அறியாது நின்று விட்டார்...நடப்பது நடக்கட்டும் என்று நின்று விட்டார் வாசுதேவன்...
அவளின் உடலில் பட்ட காயத்தையும் அவனின் முகத்தையும் கண்ட கமிஷனர் ஜார்ஜ் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் படி கூற, வெங்கி மறுத்தார்....மதுவும் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை.... கமிஷனரோ," நானும் பெண் குழந்தையை பெற்றவன் தான் அவனுக்கு இந்த பெண்ணை கல்யாணம் செய்து வைங்க ...காதும் காதும் வைத்த மாதிரி யாருக்கும் தெரியாது...எல்லாம் சரி ஆகும் உங்க மனசும் ஆறும் "..என்று கூற
ஆம் வெங்கியை பொறுத்தவரை தன் மகளை நாசம் செய்தவன் தானே நாளை வேறு யார் வந்து என் மகளை திருமணம் செய்வார்கள்..இவன் திருமணம் செய்து கொள்வதே நல்லது "என்று நினைத்து சம்மதித்தார்...விக்ரம் மறுப்பதை யாரும் அங்கே இருந்த யாரும் சட்டை செய்ய வில்லை...
அடுத்த அரை மணி நேரத்தில் மதுர யாழினி வெங்கடாசலம் என்கிற மது, மதுர யாழினி விக்ரம் ஆகி இருந்தாள்...
மதுவின் மனதுக்குள் ஒரு மூலையில் மகிழ்ச்சி அடைந்தாலும் அவன் கட்டிய தாலியையும் அவனையும் ஏறிட்டு பார்க்க அவனோ இந்த ட்ராமா நடக்க தானே இதை எல்லாம் நீ செஞ்ச என்பது போல அவளை பார்வையால் குத்தி குதறி கொண்டு இருந்தது...
அவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் தலையை தாழ்த்தி கொண்டாள் மது...அதுவும் அவனுக்கு கோபத்தையே வரவழைத்தது...செய்யாத தப்பை முன் வைத்து எல்லோரின் கிடுக்கு பிடியில் அவனின் ஆண்மையை குறி வைத்து எல்லோராலும் அவமானப்பட்டு இருக்க இந்த நிலையில் அவளின் பார்வை கூட அவனுக்கு எரி தனலை ஊற்றியது போல இருந்தது..அதுமட்டுமின்றி அவனின் தந்தை ஒரு வாக்கு போலும் அவனுக்கு வேண்டி பேசாதது வேறு அவனுக்கு கோபத்தை கொடுத்தது... அவனின் கோபம் முழுவதும் மதுவின் மீதும் அவளின் தந்தையின் மீதும் திரும்பியது...என்னவென்று தீர விசாரிக்காமல் இப்படி செய்யலாமா என நினைத்தான்...
இனி வரும் காலம் இருவருக்கும் இடையில் எப்படி இருக்கும்....விக்ரமால் மதுவை ஏற்று கொள்ள முடியுமா இல்லை அவளை விட்டு விலகி விடுவானா...
என் கண்கள் உனை தேடும்....
