காதல் 21
அத்தியாயம் : 21
காதலது கண்ணில் கண்டேன்
விக்ரமிற்கு தான் மாட்டி விட்டோமே என்ற பதட்டம் ஒரு புறம் இருக்க அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அவன் இருக்கும் வேளையில் இவள் வர இவளும் எப்படி மாட்டினாள் இவள் தான் ஏதாவது கிறுக்கு தனமாக செய்து வைத்து இருப்பாள் என்றே கோபத்தில் கேட்டு கொண்டே இருக்க அவளும் ஆமா நான் தான் செய்தேன் என்றதும் அவன் தன் பதட்டத்தை மறைக்க ஆத்திரம் கண்ணை மறைக்க எது உண்மை பொய் என பிரித்து அறிய முடியாத நிலையில் விக்ரம் நிற்க அவன் நினைப்பு முழுவதும் இவளும் அவனும் ஒரே அறையில் மாட்டி கொண்டோமே என்று மட்டும் இருக்க இதனால் என்ன விளைவுகள் வர போகிறதோ என்று எல்லாம் அவன் நினைத்து இருக்க அந்த ஆத்திரத்தை அவனின் முதல் முத்திரையாய் அவள் கன்னத்தில் சூடாக இறக்கி விட்டான்...அவன் அடித்த அடியில் அவளின் மென் இதழ் கிழிந்து ரத்தமும் வெளியே வந்தது...
அடி வாங்கிய மதுவோ இருட்டில் சுருண்டு படுத்து இருக்க அவனின் கட்டுகடங்கா கோபம் அங்கே இருந்த டேபிளை பதம் பார்க்க அந்த சத்தம் வேறு அவளை மேலும் பயத்தில் ஆழ்த்த அழ தொடங்கி விட்டாள்... அவளின் அழுகை சத்தம் வந்ததும் தான் அவனின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டு மெல்ல அவளின் நியாபகம் வந்தது..
அவளை வேறு அடித்து விட்டோமே என்ற பதைப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அவளின் இந்த வேலைக்கு இந்த அடி கூட அடிக்க வில்லை என்றால் தன் கோபத்தை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று அவன் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருந்தான்..
வெளியே வேறு காற்றும் மழையும் நான் பெரியதா நீ பெரியதா என பூமியை பதம் பார்த்து கொண்டு இருக்க மகள் வருவாள் என காத்து இருந்த வெங்கி இன்னும் வரவில்லை என்றதும் காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார்...
ஒரு குறிப்பிட்ட சமயம் காத்து கொண்டு இருந்தவர் மெல்ல தானே அழைத்து வரலாம் என நினைத்து கொண்டு அவர் அந்த காற்றும் மழையில் வண்டியை செலுத்த கல்லூரியை அடைந்த அவருக்கு பூட்டு தொங்குவதை கவனித்த அவர் யாரும் இல்லையா என நினைத்து வீட்டிக்கு சென்று இருப்பாளோ என நினைத்து எதற்கும் மெதுவாக செல்லலாம் என நினைத்து செல்லும் போது அவர்கள் வீடு வரும் திசையில் எதிர்புறமாக வந்த யுவராஜ் வேண்டும் என்றே நிற்க அவரும் எதார்த்தமாக விழா முடிந்து விட்டதா என வினவி எதற்கு மழையில் நனைந்து செல்கிறாய் என கேள்வி கேட்டு அவனை வண்டியில் ஏற்றி செல்ல அவனோ காலேஜ் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சே என்ற பதிலை அளித்தான்...அவர் மனமே இல்லாமல் வீட்டிற்கு வந்து பார்க்க அங்கே இன்னும் வர வில்லை என்ற பதிலே வர அவர் மனம் ஏதோ சரி இல்லை என பதறி துடிக்க ஆரம்பித்தது...
அந்த சமயம் பார்த்து வாசுதேவன் தன் மொபைலில் யாரையோ அழைப்பதும் தவிப்பதுமாக நின்று கொண்டு இருந்தார்...குடை வைத்து கொண்டு அங்கே இங்கே நடந்து கொண்டு இருக்க வெங்கிக்கோ அப்போது தான் விக்ரமின் நியாபகம் வர வாசுதேவனிடம் சென்று விசாரித்தார்... அவரோ , "விக்ரம் இன்னும் வரவில்லை".. என பதட்டத்தோடு கூற வெங்கியோ ,"வாங்க சார் தேடுவோம்"... என இருவரும் ஒரே காரில் கிளம்பி விட்டனர்...
எல்லாம் முடிந்தது மறுநாள் காலை வரை இவர்கள் இருவரை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.... வெங்கி க்கு உலகமே இருண்டது போல இருக்க என்ன ஆகிற்று வாசுதேவனும் அதே நிலைமையில் தான் இருந்தார்...
விடியற்காலை ஆகிவிட்டது...இன்னும் கிடைத்தபாடில்லை....வெங்கிக்கு தன் மகளுக்கு ஏதேனும் நடந்து இருக்குமோ என்று தளர்ந்து இருக்க போலீசில் தகவல் தெரிவிக்கலாமா என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே வாசுதேவன், "பெண் விஷயம் போலீசை இப்பொழுது அழைத்தால் நம் வீட்டு பெண்ணின் மானம் போகும் காலை பத்து மணி வரை தேடுவோம் இல்லையேல் நாம் போலீசாரை அணுகலாம் "..என்று கூற வெங்கியும் அப்போது இருந்த மனநிலையில் சரி என்று ஒத்து கொண்டார்...
வாசுதேவனுக்கும் தன் மகன் இதுவரை தன்னை அணுகவில்லை என்பதும் எங்கே இருக்கிறான் என்பதும் அறியாமல் அவரும் கவலை அடைந்தாலும் அதை விட ஒரு வயதுக்கு வந்த பெண் காணவில்லை என்பதே அவருக்கு பெரிதாக பட அவர் வெங்கியுடன் சுற்றி கொண்டு இருக்கிறார்...வெங்கிக்கும் வாசுதேவனின் ஆறுதல் அந்நேரம் தேவைப்பட்டது...கல்லூரி தாளாளர் வீட்டுக்கு சென்றனர்...அங்கேயும் கைவிரிக்க எதற்கும் கல்லூரியில் சென்று பார்க்கலாம் என தாளாளரரும் அவர்களுடன் கிளம்பி விட்டார்..ஏனென்றால் அவரின் கல்லூரியின் ஆசிரியரும், மாணவியும் காணவில்லை என்றதும் அவருக்கும் சிறு பயம் தொற்றி கொண்டது... அன்று கல்லூரிக்கு விடுமுறை தினமாக இருக்க மெதுவாக வாட்ச்மேன் வந்து கல்லூரியை அப்போது தான் திறந்து கொண்டு இருந்தார்...
இரவு எல்லாம் அவன் அடித்த அடி வலி கொடுக்க அவன் அடித்த அடியில் உதட்டின் ஓரத்தில் கிழிந்து இரத்தம் வேறு கசிந்து இருக்க அழுது அழுது முகம் வீங்கி இரவு பெய்த மழையின் தாக்கத்தில் ஒரு மூலையில் சுருண்டு படுத்து உறங்கி கொண்டு இருந்தாள்...
அவனோ கூண்டில் அடைத்த புலி போல அங்கும் இங்கும் நடை பழகியவன் என்ன செய்வது என்று யோசிக்க அவனுக்கு ஒரு யோசனையும் சிக்க வில்லை...யாராவது வந்து பூட்டை திறந்தால் தான் உண்டு..
அவனும் உறங்காமல் கண்கள் சிவந்து தலை களைந்து இருக்க அப்போது தான் விக்ரமுக்கு அங்கே இருக்கும் சிறிய ஜன்னல் போல ஒன்று அறையின் மேல் சுவரில் சிறிய பொந்து போன்ற ஒரு ஓட்டை அதை கண்ணாடி வைத்து அடைத்து இருந்தார்கள் போல அது காலை வெளிச்சத்தில் தென்பட அவன் அமர்ந்து இருந்த நாற்காலியை கண்டு ஏதோ தோன்ற அந்த சிறிய ஜன்னலை வைத்து அவனால் தப்பிக்க எல்லாம் முடியாது ஆனால் அவனால் அதை உடைத்தால் அங்கே இருக்கும் பெஞ்ச் மற்றும் நாற்காலியின் உபயோகத்தில் ஏறி வெளியே கத்தியாவது யாரையாவது அழைத்து விடலாம் என எண்ணி அவன் அந்த நாற்காலியை தூக்கி அந்த வெளிச்சம் வரும் சிறு ஜன்னலை உடைத்தான்...
அவன் அடித்த அடியில் அந்த ஜன்னல் உடைந்து அதன் துகள்கள் எல்லாம் தெறிக்க மேலே எறிந்த நாற்காலி அதன் வேலையை மிக சரியாக செய்து விட்டோம் என்ற சந்தோசத்தில் வேகமாக கீழே இறங்கி பொத்தென்று விழ கீழே சுருண்டு கிடந்தவள் நாற்காலியின் சத்தத்தில் எழுந்து விட்டாள்...
அது விழுந்த அதிர்ச்சியிலும் சத்தத்திலும் விருட்டென பயந்து எழுந்தவள் கத்த தொடங்கிவிட்டாள்... அந்த சமயத்தில் தான் வாட்ச்மேன் கல்லூரியை திறப்பதும், கல்லூரியின் தாளாளர் , வாசுதேவன் மற்றும் வெங்கி என அனைவரும் கல்லூரி வாயிலை எட்டுவதற்கும் இவளின் சத்தம் வெளியே கேட்கவும் ஒரே சமயத்தில் இருக்க தன் மகளின் பயந்த விழி வெங்கியின் அடி வயிற்றில் புளியை கரைக்க என்ன தான் தைரியமான ஆள் என்றாலும் மகளை இரவு முதல் தேடியும் காணாத மகளின் கூக்குரல் கேட்கவும் பதறி விட்டார் வெங்கி...வெங்கிக்கு தன் மகளை பார்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்...
