காதல் 20
அத்தியாயம் : 20
கல்லூரியும் மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் வந்தது...இதோ ஆண்டு விழாவும் தொடங்கியது...மாணவர்கள் ஆர்ப்பரித்து கொண்டு இருந்தனர்...அவர்கள் எதிர்பார்த்த நடன நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது...விக்ரம் அந்த விழா ஒருங்கிணைப்பாளர் என்பதால் அங்கேயும் இங்கேயும் ஓடி கொண்டு இருந்தான்....அனைத்து மாணவர்களின் நடனம், நாடகம், பாட்டு என அனைத்தும் நிறைவடைந்து இருக்க மீதம் மதுவின் நடனம் மட்டுமே பாக்கி...
மதுவும் மேடையேறி நடனம் புரிந்தாள்... அதை இரு விழிகள் அவளின் நடனத்தை கூர்ந்து கவனித்தது...அவளின் நடனம் முடிந்ததும் அவள் வேகமாக உடை மாற்றும் அறைக்கு சென்றாள் உள்ளே சென்று கதவை அடைந்ததும் வெளியே இருந்து கதவை அடைத்து விட்டான் யுவராஜ்... இன்று முழுவதும் இந்த அறையில் தனியாக கிட நாளையும் விடுமுறை உன்னால் வெளியே வர முடியாது...அதற்குள் உன் வீட்டிலும் வெளியேயும் நீ ஓடி போனவள் என்ற பெயர் உனக்கு கிடைத்து விடும்...அதன் பிறகு உன்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்... அதையும் பார்க்கிறேன்...என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு உனக்கான தண்டனை இது என்று கூறி அவன் நண்பர்களுடன் சென்று விட்டான்...
மதுவோ அன்றைய அடிக்கு பிறகு அவளது தந்தை அவள் குறிப்பிட்டு சொன்ன சமயத்தில் சிறிது மாறினாலும் அவளை குடைந்து எடுத்து விட அதற்கு பயந்தே அவள் இப்போது நண்பர்களுடன் வெளியே செல்வதில்லை...இவள் வேறு வேகமாக செல்ல வேண்டும் என உடை மாற்றி கொண்டு இருக்க அங்கே வெளியே ஒலி பெருக்கியின் சத்தத்தில் யுவராஜின் இந்த வேலை அவளுக்கு கேட்கவில்லை...
அவள் உடை மாற்றி கொண்டு இருந்த அறை ஆசிரியர் அறைக்கு அருகில் உள்ள அறை ஆனால் இரு அறைகளுக்கும் இடையே ஒரு கதவு இருந்தது அது மது இருக்கும் அறையில் தான் அதன் தாழ்ப்பாள் இருக்க அவள் உடை மாற்றி கொண்டு இருந்தாள்....
அவளை தாழிட்டு வெளியே யுவராஜ் கண்களுக்கு விக்ரமும் பட விழா முடியும் ஓரத்தில் இருக்க தன் பேக் ஐ எடுக்க உள்ளே செல்வதை கண்ட யுவராஜ் விக்ரம் சென்ற அறையையும் யாரும் காணா வண்ணம் அடைத்தான்...விக்ரம் வேறு பேக் எடுக்க போக அவன் கை தவறி அவனின் எல்லா பொருட்களும் கீழே விழுந்தும் விட்டது...அதை எல்லாம் குனிந்து எடுத்து கொண்டு இருந்தான்...
அந்த சமயத்தில் லைட் எல்லாம் அணைக்கப்பட்டு விட யுவராஜ் வேறு வாட்ச்மேனிடம்," மழை வர மாதிரி இருக்கு மெயின் பில்டிங் எல்லாம் சீக்கிரம் பூட்ட சொன்னாங்க "...என்று இருட்டுக்குள் அவரிடம் கூற அவரும் முகத்தை கவனிக்காமல் வயதானவர் மெல்ல ஒரோ அறையாக அடைத்து வந்தவரை துரித படுத்த அவரும் வேகமாக வாட்ச்மேனும் சரியாக கவனிக்காமல் எல்லா அறைகளையும் பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்... அவர் சென்று ஐந்து நிமிடம் கழிந்ததும் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியே சென்றனர்...
விக்ரம் தன் பொருட்களை எடுத்து கதவை தட்டும் போது யாரும் திறக்கவில்லை... போன் வேறு ஜாம்மர் வசதியால் அவர்கள் நிற்கும் ப்ளாக்கில் வேலை செய்ய படாமல் இருக்க அந்த இரும்பு கதவு அவனின் முறுக்கு உடல் எவ்வளவு அடித்தும் இடித்தும் உன்னை விட நான் இரும்பு உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்கு உணர்த்தி விட என்ன செய்யலாம் என அமர்ந்து இருந்தான்....அந்த அறையில் வேறு ஜன்னல்கள் இல்லை அவனால் ஒன்றும் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டான் விக்ரம்..
அங்கே அடுத்த அறையில் உடை மாற்றி கொண்டு இருந்த மதுவோ வேகமாக தான் இட்டு இருந்த மேக்கப் ஐ கலைத்து கொண்டு இருக்கும் போது கரண்ட் போய் விட அந்த அறையின் நிசப்தமும் வெளியே யாரும் இல்லாத ஒரு அமைதியும் அவளின் மனதுக்குள் பய விதைகளை விதைக்க, அவளோ வாய் திறந்து , "யாராவது இருக்கீங்களா "...என்று அவள் கதவை தட்டி கத்த யாரும் திறக்கவில்லை... அவள் வேகமாக தன் பையில் இருக்கும் தன் மொபைலை எடுத்து பார்க்க யாரையாவது அழைக்க முடியுமா என்று பார்க்க எந்த அழைப்பும் செல்ல வில்லை...
இறுதியில் கதவை தட்டி பார்த்தும் முடியாமல் இருக்கவே அவள் அங்கேயும் ஓடி எதிரே தென்படும் கதவை திறக்க அங்கே எதன் மீதோ மோதினாள்..தான் இருக்கும் அறையின் அடுத்த அறையில் ஏதோ சத்தம் கேட்க சத்தம் கேக்கும் இடத்திற்கு விக்ரம் நகரவும் மது வந்து மோதினாள்...
தன் மீது மோதியவளை தாங்கியவன் தன் கையில் இருக்கும் மொபைலின் வெளிச்சத்தில் பாதி களைத்த மேக்கப் இல் அவள் மது அவளை கண்டதும் சட்டென அவளை விட்டு விலகினான்..
அவளை விலக்கி நிறுத்திவன் அவள் முகத்தை பார்க்க அவனை கண்டதும் அவளின் பயம் போய் நிம்மதி பெருமூச்சு விட அவனோ கோபத்தில் அவளின் கழுத்தை பிடித்து அந்த சுவரோடு சேர்த்தி நிறுத்தி விட்டான்...
"எதுக்காக டி இந்த நாடகம்"...என்று கத்தினான் விக்ரம்....
அவளோ," என்ன சொல்றிங்க "..என்று கேட்க
"எப்படி டி நீயும் நானும் மட்டும் மாட்டிக்கிட்டோம்".. என்று கேட்க
அவளோ , "எனக்கு எப்படி தெரியும்".. என்று கேட்டாள்...அவளும் பதட்டத்துடன் தான் இருந்தாள்... இருட்டில் அது அவனுக்கு புரியவில்லை...
"நீ தான இதை செஞ்ச ...என்னை எப்படியாவது மாட்டிவிடனும் னு தான டி இப்படி செஞ்ச"... என்று அவன் கூற
அவனுக்கு பலத்த சந்தேகம் அதாவது தாங்கள் இருவரும் இணைந்து எப்படி மாட்டினோம் என்று...இவள் தான் ஏதாவது செய்து இருப்பாள்...இவளிடம் தான் காதலை மறுத்த காரணம் இந்த வேலையை செய்து இருக்கிறாள்....என்று நினைத்து அவளை நெருங்கி அவள் தோள் தொட்டு, " எதுக்கு டி இப்படி செஞ்ச".. என்று கத்த
அவனின் உலுக்கல் வேறு தோள் இரண்டும் கழண்டு விடும் வலி எடுக்க , அதை அவள் கண்கள் உணர்த்த நான் ஏதும் செய்ய வில்லை என அவள் கூறியும் அதை அவன் உணரவில்லை... இவ்வளவு ஏன் அவள் கூற வருவதை அவன் கேட்கவே இல்லை...
அவளுக்கும் தான் இப்படி மாட்டி கொண்டு விட்டோமே என்ற பயம் எழுந்தாலும் தன் தந்தையை நினைக்கும் போதும் ஒரு ஆணின் உடன் இருப்பதும் சேர்ந்து நிலை இழந்து இருந்தவள் இவன் வேறு உலுக்கி கொண்டே இருந்தான்...
இறுதியில் வெடித்து எழுந்தாள் மது , "ஆமா நான் தான் பண்ணினேன் உங்களை கல்யாணம் பண்ண தான் பண்ணினேன் போதுமா "...என்று கத்த
அடுத்த நொடி இருட்டில் ஒரு மூலையில் கிடந்தாள் மது ....விக்ரம் அடித்த அடியில் கீழே சுருண்டு விழுந்து கிடந்து இருந்தாள்... விக்ரமோ கையில் கிடைத்த டேபிளை வெறிப்பிடித்தவன் போல தன் கைகளால் அடித்து உடைத்து விட்டான்...அவனின் இந்த வெறியை கண்டு இராத மது பயத்தில் நடுங்கி சுருண்டு கிடந்தாள்..
என் கண்கள் உனை தேடும்...
