காதல் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 19

காதலது கண்ணில் கண்டேன்

  
    ஒரு பக்கம் மதுவின் தொல்லையும் மறுபக்கம் கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சியும் என விக்ரமின் வாழ்க்கை போய் கொண்டு இருந்தது...

மதுவுக்கு அவனது கோபம் தன்னை பிடிக்கவில்லை என எல்லாம் தெரிந்து இருந்தாலும் அவன் பின்னால் சுற்றி கொண்டு தான் இருக்கிறாள்...ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டே ஓவர் கான்பிடெண்ட் என்று அது மதுவுக்கு பொருத்தமாக இருக்கும் என்றாவது ஒரு நாள் இவர் என்னை புரிந்து கொள்வார் என்று அவள் நினைத்து இருந்தாள்.... ஆனால் அவனோ இவள் இருக்கும் திசைதனில் கூட நான் பார்வையை சுழல விடமாட்டேன் என இருக்கிறான்..

சிறுப்பிள்ளைத்தனம் என்று கருதினாலும் சரி.. ஏதோ ஒன்று அவன் பால் ஈர்க்கப்பட்டு அவனையே சுற்றி கொண்டு இருக்கிறாள்...கல்லூரியில் தொல்லை செய்வது இல்லை...ஆனால் அவள் வீட்டில் இருந்து எதிர் வீட்டுக்கு ராக்கெட் அனுப்புவதும் வேண்டும் என்றே பந்தை அவன் வீட்டுக்குள் இட்டு ஒன்றும் தெரியாதது போல தேடுவது...வேண்டும் என்றே வாசுதேவனிடம் வம்பு செய்து அவருடன் பேசுவது போல அவனை விடாமல் பார்த்து கொண்டு இருப்பது சுருக்க சொன்னால் அவன் கண் பார்வையில் அவள் இருப்பது போல நடந்து கொண்டாள்...

இது போல பல்வேறு தொல்லைகள் கொடுத்து கொண்டு தான் இருந்தாள்... அவனோ இதை எல்லாம் கண்டாலும் காணாதது போல இருப்பான்...சில சமயம் அவளின் குறும்புத்தனம் எல்லை கடக்கும் போது அவள் அப்பாவின் பெயரை கேட்டால் ஓடி விடுவாள்...ஒரு நாள் வெங்கி வீட்டில் இருந்து ஒரே சத்தம் வாசுதேவன் மெல்ல வெங்கி வீட்டுக்கு சென்று பார்த்தார்..

அங்கே பிள்ளைகள் மூவருக்கும் அடி வெளுத்து கொண்டு இருந்தார்...அதில் மதுவுக்கு தான் அடி அதிகம்...படிக்காமல் விளையாடி கொண்டு இருக்க வெங்கி மாலை வந்து அனைவரின் புத்தகத்தை வாங்கி கேள்வி கேட்க சுட்டி குழந்தை மதி தப்பித்து விட்டாள்... மிதுனும் இரண்டு அடியில் மறுபடியும் படித்து வந்து கூறி விட்டான்...ஆனால் மதுவின் நிலைமை படுமோசமாகி போனது...

அவளுக்கு இந்த செமெஸ்டரில் கணக்கு ஒரு பேப்பர் இருக்க அது வேறு வெங்கிக்கு பிடித்த பாடமாக அமைந்து விட இந்த வயசு ஆகி எனக்கு வருகிறது கணக்கு உனக்கு ஏன் வரவில்லை என காட்டு காட்டென காட்டி விட்டார் மதுவிடம்...

வாசுதேவன் வெங்கியை காண வந்தது போல அவளை காப்பாற்றி விட்டார்...மகன் அங்கே அடித்து பேரமகளை அடித்து கொண்டு இருக்க இங்கே கோல்ட் வேறு, " இவன் எப்போ அடிச்சு இவ படிச்சு முடிச்சு நான் டிவி பார்க்கிறது..இவங்க இந்த கூடத்துல தான் உக்கார்ந்து படிக்கணுமா "...என சலித்து கொண்டு அமர்ந்து இருந்தார்...அதை கேட்ட வெங்கியோ தனது தாயை பார்த்து முறைக்க கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்து விட்டார்....அழகுமயிலோ அடுக்களையே சரணம் என அங்கேயே குடி அமர்ந்து விட்டார்..வெளியே வந்தால் இவள் படிக்காததுக்கு எல்லாம் அவருக்கு திட்டு விழும்...

அதுமட்டுமின்றி மதுவுக்கு அடி விழ கூடுதலாக ஒரு காரணமும் உண்டு அதாவது கணக்கு பேப்பர் சிறப்பு வகுப்பு இருக்கிறது என்று கூறி அவளின் நண்பர்கள் வட்டத்துடன் சேர்ந்து வெளியே இவள் படத்துக்கும் , மால்லிற்கும் செல்ல ஷாப்பிங் மாலின் வாசலில் இருந்து கையும் களவுமாக வெங்கியிடம் பிடிக்கப்பட்டாள்... அதற்கு தான் இந்த அடி எந்த பாடத்திற்கு சிறப்பு வகுப்பு உண்டு என்று பொய் சொன்னாயோ அதே பாடத்தை தன் கையில் எடுத்து அவளை வெளுத்து கட்டி கொண்டு இருக்கும் போது தான் ஒன்றும் தெரியாதது போல வாசுதேவன் வந்து அவளை காப்பாற்றியது...

அவளோ ஒரு அடி விழும் போதே கத்த தொடங்க மேலும் மேலும் தலையில் கொட்டியதில் வலி எடுக்க அந்த கணக்கு புக்கை பார்க்கும் போது எல்லாம் அழுகை வர துடைத்து கொண்டே வெளியே சிட்வுட்டில் இருந்து எழுதி கொண்டு இருந்தாள்...இன்று வெங்கி கொடுத்த பாடத்தை முடிக்கவில்லை எனில் அவளுக்கு வீட்டில் ராகி களி தான் உணவு அதற்கு பயந்தே எழுதி கொண்டு இருந்தாள்...

எதிர் வீட்டில் இருந்து தன் வீட்டுக்குள் நுழைந்த வாசுதேவன் விக்ரமிடம், " பாவம் பா அந்த பொண்ணு".. என்க.. அவனும் எதிர் வீட்டில் அவள் அழுது கொண்டு இருப்பதையும் அவளின் சத்ததையும் கேட்டான் அவன் இருந்த கடுப்பில் அவளுக்கு மேலும் இரண்டு அடி கிடைக்கட்டும் என்ற மனநிலையில் இருந்ததால் விட்டுவிட்டான்...

தன் தந்தை கூறியதும்," எந்த பொண்ணு".. என்றான் ஒன்றும் அறியாத பாவத்தில்

"எதிர் வீட்டு மது பா "என்க .."அவளுக்கு என்ன".. என்று கேட்க,

" கணக்கு பாடம் வரல னு மிஸ்டர் வெங்கடாசலம் அடிச்சுட்டுட்டாரு "...என்று வருத்தத்துடன் கூற

அதற்கு அவனோ ,"கணக்கு அவளுக்கு வராதா " என்று நினைத்து" ஓ "..என்று மட்டும் கூறி நகர்ந்து விட்டான்...வாசுதேவனோ இப்படியும் ஒரு மனுஷனா என்று நினைக்க முடியாமல் இல்லை..ஆனால் அவன் வளர்ந்த விதம் குடும்ப சூழல் இது எல்லாம் சேர்ந்து தான் அவனை இறுக்கி விட்டது என்று மனதில் கொண்டு அதற்கு மேல் அவர் ஒன்றும் கூறவில்லை...

இந்நிலையில் ஒரு நாள் காலையில் டான்ஸ் ரிகர்சல் இருக்க இதோ விக்ரம் மற்றும் தீப்தி அமர்ந்து இருக்க ஒரோ மாணவர்களும் அவர்கள் முன் ஆண்டு விழாவிற்கு அவர்கள் நடனம் புரிய போகிற நடனத்தை ஆடி காட்டி கொண்டு இருந்தனர்...

அறைக்குள் விக்ரம் நுழைந்தது முதல் எப்போதும் அவனை பார்ப்பது போல் விடாமல் பார்த்து கொண்டு இருந்தாள் மது...அவனுக்கு தான் என்னோமோ ஒரு முப்பது பேர் கூடி இருந்த அறையில் மூச்சு அடைப்பது போலவும் அவளின் பார்வையை எதிர் கொள்ள முடியாமலும் இருந்தான்...அதனால் ஒரு வித அழுத்தத்துடன் தன் பதட்டத்தை வெளிப்படுத்தாமல் கால் மேல் கால் இட்டு அமர்ந்து கொண்டு சேரில் கையை ஊன்றி தன் கன்னத்தில் கையை வைத்து அமர்ந்து இருந்தான்...

மதுவின் முறை அவள் கண்கள் விக்ரமையே காண கண்ணலானே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்ற மெலடி பாட்டுக்கு அவள் மட்டும் ஆடினாள்... நல்ல நடனம் சிறு வயதில் இருந்து நடனம் பயின்றதாலும் , நடனம் புரிந்ததாலும் அவளுக்கு பயமோ தயக்கமோ இல்லாமல் ஆடினாள்...ஆனால் அவள் கண்கள் சொன்ன செய்தி அவனுக்கு மட்டும் புரிவது போல இருக்க முதலில் அவளின் நடனத்தை கவனிக்காதது போல இருந்தவன் பின்பு அதில் லயித்தான்...அந்த அளவுக்கு அவனது நடனம் இருக்க ஆனால் அவள் கூற விளைந்தது புரிந்தாலும் புரியாத பாவத்தில் இறுகி போய் அமர்ந்து இருந்தான்...அவளின் நடனம் முடியும் முன்னரே வாராத போனை காதிற்கு வைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top