காதல் 18
அத்தியாயம் : 18
வீட்டிற்கு சென்ற மது என்னவோ சந்தோசமாக தான் இருந்தாள்... ஆனால் விக்ரமின் நிலையோ படுமோசம்.. அவளின் மனதில் இப்படி ஒரு விதை விதைக்க காரணமாகி போனேனே என்றும் இனி என்னால் எந்த பெண்ணையும் காதலிக்க முடியாது என்றும் பெண் என்பவள் என் வாழ்க்கையில் இனி கிடையாது...இவளின் வயதின் கோளாறு கிறுக்கு தனமாக செயல்படுகிறாள்...
இதில் அவனுக்கு ஒன்று விளங்கவில்லை எதை கண்டு என்னை போய் காதலிக்கிறேன் என்கிறாள்...என்று நினைத்து கோபம் தலைக்கேறி இனி என்னிடம் இவள் வந்தால் இவளை நான் என்ன செய்கிறேன் பார் என்று நினைத்து கொண்டான்..
இதற்கிடையில் ஒரு நாள் வெங்கி நேரில் வந்து வாசுதேவன் மற்றும் விக்ரமிடம் நன்றி தெரிவித்து விட்டு சென்றார்... மேலும் அவர் மனதில் இடம் பிடித்தான் விக்ரம்...அது வெகு விரைவில் உடைய போவது தெரியாமல்...
அன்றிலிருந்து விக்ரம் ஒதுங்கியே இருந்தான்...எப்போதும் அவனிடம் ஒரு ஒதுக்கம் இருக்கும் இப்போது மாணவர்கள் அவனிடம் செல்லவே பயப்படும் அளவுக்கு அவனின் கோபம் அவனின் கண்களை பார்த்தாலே மாணவர்களுக்கு இயல்பாக வரும் சந்தேகம் கூட வராது..
அதும் மதுவின் வகுப்புக்கு சென்றால் அவன் அவள் இருக்கும் திசையை கூட பார்க்க மாட்டான் எதிர் திசையை நோக்கியோ இல்லை சுவற்றை பார்த்தோ வகுப்பை எடுப்பான்..அவளோ அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவள் அமர்ந்து இருக்க அவனோ அவளை கண்டு கொண்டால் தானே இறுதியில் அவளே களத்தில் குதித்து விட்டாள்.. சந்தேகம் என்ற பெயரில் அவனை குடைய தொடங்கி விட்டாள்...
எப்படியாவது விக்ரம் தன் முகம் பார்த்து விட மாட்டானா என்று அவள் எடுக்கும் முயற்சிகள் மொத்தம் பயன் இல்லாமல் போனது...
அவனோ அவள் முகம் பார்க்கவே இல்லை..இந்நிலையில் இதயம் முரளி யுவராஜ் க்கு இது நாள் வரை இல்லாத தைரியம் எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை இதோ ஒரு மரத்தடி தணலில் மதுவின் முன்பு தன் காதலை கூற நிற்கிறான்..
மதுவும் அவன் முகத்தை பார்த்து கொண்டு நிற்கிறாள்..அவனும் தயங்கி தயங்கி தன் காதலை கூறி விட்டான்...'மது நான் உன்னை காதலிக்கிறேன் "...என கூற மதுவோ, "ராஜ் நான் வேறு ஒருத்தரை காதலிக்கிறேன்...உன்னை நான் எந்த விதத்திலாவது டிஸ்டர்ப் செஞ்சு இருந்தா என்னை மன்னித்து விடு"....என்று கூற அவன் மீண்டும் அவளிடம் கெஞ்ச மது மறுத்துவிட்டாள்...
தன் காதலை நிகாரித்ததை விட அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை ஏற்று கொள்ள முடியாத யுவராஜ் ,"யார் அது விக்ரம் சாரா "..என்று கேட்டான்...
அவளோ விக்ரம் என்ற பெயரை கேட்டதும் ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு, "உனக்கு எப்படி தெரியும் "...என அவளின் மான் விழியை உயர்த்தி வினவ யுவராஜ் ஒன்றும் கூறவில்லை...பதிலுக்கு ஒரு அழுத்தமான பார்வையை அவள் மீது வீசினான்...அவன் கண்களில் பழி வெறி தாண்டவம் ஆடியது...காதலின் போதையில் மது யுவராஜை கவனிக்க வில்லை..
தான் காதலித்த காதலியின் நிகாரிப்பு கூட ஒரு வித அழுத்தம் தான் இன்றைய இளைஞர்களுக்கு...அவர்களை சொல்லி குறை இல்லை...பக்குவமின்மையே காரணம் எதிலும் பயம் இல்லை என்று எல்லாம் விஷயத்திலும் எடுத்து சாடுவது... கண்டதும் காதல் ...ஒரு சிறு தோல்வியை கூட சகித்து கொள்ள முடியாதவர்கள்...அதே போன்றதொரு மனநிலையில் தான் இருந்தான் யுவராஜ்...
அழுத்தம் அவனை மாற்றி அவள் மேல் கோபம் கொண்டு தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைத்து நல்லவன் போல மதுவுக்கு வாழ்த்து கூறி விட்டு வந்தான்...
தனிமையில் வந்த யுவராஜ்..இரண்டு நாட்கள் யாருடனும் பேசவில்லை...யுவராஜின் தாத்தாவை வெங்கி வீக்லி செக்கப் செய்ய யுவராஜ் வீட்டுக்கு செல்ல அங்கே யுவராஜ் விக்ரம் சரி இல்லை என்பது போல பேச வெங்கியோ இல்லையே தம்பி பார்த்தா அப்படி தெரியலேயே என கையை விரிக்க அவனின் ஒரே எதிர்பார்ப்பை பொய்த்து போனதும் யுவராஜ் நானே மது மற்றும் விக்ரமை பார்த்து கொள்கிறேன் என்று தன் மனதில் பழி உணர்வை வளர்த்து கொண்டான்...
இதற்கிடையில் அவர்கள் கல்லூரியின் ஆண்டு விழா வர அதில் நடனம் புரிய மதுவும் பெயர் கொடுத்து இருந்தாள்...அதற்கு இன்சார்ஜ் வேறு விக்ரம் மற்றும் அங்கே பணிபுரியும் தீப்தி என்ற உதவி பேராசியர் என்று இருக்க எப்போது பார்த்தாலும் அந்த தீப்தி மேடம் விக்ரமின் பின்னால் சுற்றி திரிவது போல மதுவுக்கு தோன்ற ஒரு சிறு பொறாமை மதுவின் மனதில் எழ இதுவரை விக்ரமை கண்டு நேரில் தனியாக உரையாட முயற்சிக்காதவள் விக்ரமை சந்திக்க முயன்றாள்...
அதுவும் எப்படி அவன் வீட்டுக்கே சென்று விட்டாள் மது...ஒரு நாள் மதுவின் வீட்டில் வரலக்ஷ்மி நோன்பு இருந்து செய்த பிரசாதத்தை மது மற்றும் மதியிடம் கொடுத்து அனுப்ப அங்கே முன் வாசலில் அமர்ந்து இருந்த வாசுதேவனிடம் கொடுத்தாள் மதி..வாசுதேவனோ காலில் மூலிகை எண்ணெய் தேய்த்து இருக்க அதன் வாசனை வேறு பலகாரத்தில் பட வேண்டாம் என கருதி அவர் முழிக்க ,அதை புரிந்து கொண்ட மதுவோ
"அங்கிள் க்கு சிரமம் மதி இத்தனையும் கையில ஒரே நேரத்தில பிடிக்க வா நாம உள்ளே போயி
வெச்சிடலாம் "...என்று அவளை அழைக்க மதியோ விக்ரமை கண்டு பயந்து நான் வரவில்லை என்றாள்...
மதுவோ ,"அப்போ நீ இங்கே நில்லு நான் போயி வெச்சிட்டு வந்துடறேன் "...என்று கூற அங்கே அவன் வெறும் பனியன் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கேரட் கட் செய்து கொண்டு இருந்தான் விக்ரம்...
ஊரில் உள்ள அனைவரும் விக்ரமை கண்டு பயப்பட்டு ஒதுங்கி நிற்க மதுவிற்கு மட்டும் அவனிடம் பயம் என்பதே இல்லை...
இதோ அவன் கண்ணோடு கண் வைத்த கண் மாறாமல் பாடவை தாவணி அணிந்து கையில் பிரசாதத்துடன் நின்று கொண்டு இருக்கிறாள்..
அவளை தீடிரென எதிர்பார்க்காத விக்ரம் ஒரு நொடி அதிர்ந்து விட்டான்... மறு நொடி கோபம் கொண்டு அவள் உடையும் கையில் வைத்து இருந்த பாத்திரங்களையும் பார்த்தால் ஏதோ விசேஷம் என புரிந்தாலும் தன் அதிர்வை வெளிப்படுத்தாமல் , "இங்கே எதுக்கு வந்து இருக்க "..என்று கேட்டான்..
"நீங்க எதுக்கு அந்த மேடம் பின்னாடி சுத்துறீங்க "...என்றாள் சம்பந்தமே இல்லாமல்
"எந்த மேடம் "..என்க அவனுக்கோ இவள் போனால் போதும் என்று இருக்க
"தீப்தி மேடம் "...என்றாள் தன் சிவந்த முகத்தை சுளித்து கொண்டு... அவளையோ அவளின் முக சுழிவின் அழகையோ ரசிக்கும் மனநிலையில் இல்லை..
"போடி முதல இங்கே இருந்து...நான் யார் பின்னாடியும் சுத்தல "...என்று உன் பின்னடியும் தான் என்பது போல அவளை ஒரு பார்வை பார்த்து அடுகளையை விட்டு வெளியே செல்ல போக..
அவளோ அவன் முன்னே ஒரு அடி எடுத்து வைத்தாள்... வைத்து விட்டு மெல்லிய குரலில் ,"நீங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லை நீங்க எனக்கு மட்டும் தான்...வேற யாரையாவது பார்த்தீங்க "...என்று கூறி அவனின் சிவக்கும் கண்களையும் கோபத்தில் இறுகிய உடலையும் பார்த்து இனி நின்றால் அடி உறுதி என்று அவன் உடல் மொழி கூறுவதை உணர்ந்தவள் ,"143 சார்".. என்றாள்...
அவனோ 143 என்று முழிக்க," ரொம்ப முழிக்காதீங்க ஐ லவ் யூ தான் "..என்று கூறி ஓடி விட்டாள்...
அவனோ இவளை எப்படி வீட்டுல சமாளிக்குறாங்க...சரியான இம்சை என்று நினைத்தான்...ஆனால் அவனுக்கு தெரியவில்லை அந்த இம்சை அவனின் இம்சையாக வெகு சீக்கிரத்தில் மாறி அவனை இதை விட ஆட்டி படைக்க போகிறாள் என்றும் அந்த வீட்டின் மகாராணியாக வலம் வர போகிறாள் என்று தெரியவில்லை.... இடையில் அவளை சாமளிக்கவே முடியாமல் திணறும் அவன் இனி என்ன பாடுபட போகிறான் என்று அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்...
என் கண்கள் உனை தேடும்...
