காதல் 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 17

காதலது கண்ணில் கண்டேன்

தன் முன்னால் வீசிய அட்டையை பார்த்து கொண்டு இருந்தவள் கீழே குனிந்து அதை எடுத்தாள்..

அவனோ கோபத்தில் இருந்தாலும் நிதானத்தை இழக்காமல் எடுத்து கூறினால் அவள் கேப்பாள்... வயதின் கோளாறு வேறு ஒன்றும் இல்லை..தாமாக இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று எண்ணினான்...தாமும் இந்த வயதை கடந்து வந்தவன் தானே என நினைத்து அவளிடம் பொறுமையாக கூறலாம் என்று நினைத்து தன் கோபத்தை கட்டு படுத்தி மென்மையாக, " உன் வயசில எல்லோருக்கும் வரது தான்..அந்த எண்ணங்களை தூர போட்டுட்டு படிக்கிற வழியை பாரு...இது உன் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் னு தெரியும் ல...இதுக்கு தான் உன்னை படிக்க அனுப்பி வெச்சாங்கலா....நல்ல திறமையான பொண்ணு நீ...உன்னால முடியாதது எதுவும் இல்லை...அவன் இன்று காலை அவள் செமினார் எடுத்ததை எண்ணி கூற.. மனசை கண்டதை எண்ணி அலைப்பாயாமல் உன் எண்ணம் படிப்புல மட்டும் இருக்கட்டும்..இனி இது மாதிரி செய்யாதே "...என்று பொறுமையாக அவளுக்கு எடுத்து கூறினான்..

அவளோ எப்போதும் அவளை கண்டால் காய்பவன் இன்று பொறுமையாக ஒரு குழந்தைக்கு கூறுவது போல மென்மையாக அறிவுரை கூறுவதையும் அந்நேரம் அவன் முகம் இளகி இருப்பதை கண்டவளுக்கு அந்நொடி இந்த முகத்தை வாழ் நாள் முழுவதும் காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது...அவள் மனம் முழுவதும் அவனின் முகம் இது என்ன மாற்றம் என்று எல்லாம் தெரியாது...அதுவரை அவனிடம் விளையாடி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவள் இப்போது உண்மையாக நேசித்தால் என்ன என்ற முடிவுக்கு வந்தாள்... ஏன் இந்த மாற்றம் என்று விளங்கவில்லை...அவனின் அறிவுரை யா இல்லை...அவனின் மென்மையான முகமா ....அவனின் அந்த மென்மையான முகமே தான் அவளின் மாற்றத்துக்கு காரணம்..

ஆம் அன்றும் அவனின் முகம் அருகாமையில் தன்னை தொலைத்தவள் இன்றும் அவனின் மென்மையான முகத்தில் தன்னை இழக்கிறாள்... ஏதோ அவனின் அருகாமை அவளுக்கு ஒரு வித பாதுகாப்பை அளிப்பது போல உணர்கிறாள்...இந்த முகத்தை வாழ் நாள் முழுவதும் காணவேண்டும் என்று தோன்றுகிறது... இது எல்லாம் ஏன் என்றும் அவளுக்கு தெரியாது... ஆனால் அந்த இதம் அவளுக்கு போதுமானது...

அவனோ மேலும் அறிவுரை வகுப்பு எடுத்து கொண்டு இருக்க அவளோ அவனை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்...அவளின் மீன் விழி பார்வையை கண்டவன் அவள் கண் முன் சொடக்கு இட்டு , "என்ன புரிந்ததா".. என்று கேட்க அவளோ மாயா லோகத்தில் இருந்து வெளியே வந்தவள் பட்டென அவன் முகத்தை பார்த்து , "ஐ லவ் யூ சார்"... என்க

அதுவரை இருந்த மென்மை மாறி கோபக்கனல் வீச அது ஒன்றும் அவளுக்கு பாதகம் இல்லை போலும்...அவள் அப்படியே நின்றாள்..இவளுக்கு என்ன பைத்தியமா நான் இத்தனை நேரமாக கூறியது அவளுக்கு விளங்கவில்லை யா...என நினைத்து

"உன் வயசு உன்னை அப்படி பேச வைக்குது"....என்றான்
..

"ஏன் உங்க வயசு இப்படி எல்லாம் பேசாதா"...என்று கேட்க

அவனோ கோபத்துடன் , "நான் சொன்னது உனக்கு புரியலையா" என்று கத்த

"உங்களுக்கு தான் நான் என்ன சொல்ல வரேன் னு புரியல"....என்றாள் அவன் கண்களை பார்த்து கொண்டே...

"உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை
நான் உன் அப்பா கிட்ட பேசிக்கறேன்"... இப்போதாவது நிறுத்த மாட்டாளா என்று நினைத்து அவன் மிரட்ட

அவளும் பதிலுக்கு, "நான் பேசினது உங்ககிட்ட... அதுக்கு பதில் சொல்ல வேண்டியது நீங்க ...அதை விட்டுட்டு எதுக்கு நீங்க என் அப்பா கிட்ட பேசனும்...உங்களுக்கு பயம் எங்கே என்னை காதலிச்சுடுவீங்களோ னு பயம் அதான் என் அப்பா பேரை சொல்லி என்னை மிரட்டுறீங்க"....என்று கூறினாள்..

"யாருக்கு பயம் "...என்று கண்களில் கனல் தெறிக்க அவன் அவளை முறைத்து கொண்டு கேக்க

"உங்களுக்கு தான் "...என்றாள் கூலாக..

ஒரு அடி அவளை நோக்கி நெருங்கி நின்றவன் ," பயமா எனக்கா போடி "...என்க

அவளோ அதுக்கு சிரித்தாள்.."உங்களுக்கு என் மேல லவ் இருக்கு சார் ..அதை ஒத்துக்க மாட்டேங்குறீங்க"..என்றாள்.

"என்ன உளறிட்டு இருக்க "...என்று கேட்க

"ஆமா இப்போ உரிமையோட போடி னு சொன்னிங்களே "...என்று கூற

அவனோ தலையில் அடித்து கொண்டு எப்படியோ வா என்பது போல தன் வண்டியை எடுக்க போனான்..

அவளோ அவனின் வண்டியை பிடித்து அவனை போக விடாமல் தடுத்து ,"இதோ பாருங்க நீங்க எனக்கு னு நான் முடிவு பண்ணிட்டேன் ...இனி மாற வேண்டியது நீங்க நான் இல்லை...அதுனால இந்த அட்வைஸ் எல்லாம் சொல்லாதீங்க ..நான் கேட்க மாட்டேன் "..என்று கூற

அவனுக்கு எங்கேயாவது போயி முட்டி கொள்ளலாம் என்று இருந்தது..நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கூட கேக்காமல் இருப்பவளை என்னவென்று சொல்ல ஒன்றும் சொல்லாமல் வண்டியில் பறந்து விட்டான்..

அவளும் அவன் செல்லும் திசையை யே பார்த்து கொண்டு சிரித்தவள் வீட்டுக்கு சென்றாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top