காதல் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

 

அத்தியாயம் : 16

    ஆசிரியர் இவனே வந்து விட அவளுக்கு இன்னும் வரவில்லையே என....வெங்கி வேறு அழைத்து மக்கள் அனைவரும் வந்து விட்டனரா வெளியே எங்கும் செல்ல வேண்டாம் நான் வர லேட் ஆகும் என கூறி இருக்க அதற்குள் விக்ரம் தன் தந்தையின் அருகில் வந்து பைக்கை நிறுத்தி என்ன விஷயம் என்பது போல பார்த்தான்...

அதற்குள் கோல்ட், " தம்பி ராசா ஒரு உதவி வேணும் இன்னும் மது வீட்டுக்கு வரல ...எங்கே போச்சு னு தெரில.. எப்போவும் இந்த நேரத்துக்கு வந்துடுவா...இன்னும் காணோம் ...என் மகன் வேற வெளியூர் போய் இருக்கான்...அதான் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா "...என தயங்கி கொண்டே விக்ரம் முகத்தை பார்த்து அந்த வயதானவர் கேக்க , அவனோ செய்வேன் என்றோ செய்ய மாட்டேன் என்றோ ஒன்றும் கூறாமல் இருந்தான்..

கோல்ட் மற்றும் அழகுக்கு வேறு யாரிடமும் கேக்க தோன்றவில்லை ...இவன் அவளின் ஆசிரியர் வேறு...வெங்கிக்கும் இவன் மீது ஒரு நல்ல அபிப்பாராயம் இருக்க அதான் ஒன்றும் யோசிக்காமல் உதவி கேட்டனர்...

வாசுதேவன் தான் நிலைமையை கையில் எடுத்து, " அது எல்லாம் அவன் போய் பார்த்துட்டு வருவான் மா நீங்க கவலை படாதீங்க"... என்று கோல்டுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் மகனிடம் நீ சென்று தான் ஆக வேண்டும் என்று மறைமுகமாக கூற அதை புரிந்து கொண்ட விக்ரம் ஒன்றும் கூறாமல் அழுத்தத்துடன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை திருப்பினான்...

அவன் மனம் முழுவதும் அவள் அந்த பேருந்தில் ஏறினாலே எங்கே போய் தொலைந்தாள்..அந்த வண்டி வேறு, வேறு பாதையில் சென்றதே அங்கே தான் அடிதடி நடப்பதாக அப்பா கூறினாரே..என்று மனம் முழுவதும் அவளை பற்றி அவளை தேடுவதை பற்றி நினைத்து கொண்டு இருக்க அதில் அவனுக்கு அவள் மேல் உள்ள கோபத்தை சிறிது நேரத்திற்கு ஒதுக்கி வைத்து அவளை தேட தொடங்கினான்..

ஒரு வழியாக அந்த கோஷ்டி பூசல் நடக்கும் இடத்திற்கு வந்து விட தூரத்தில் அவன் கண்ணிற்கு அவள் ஏறிய பஸ் தென்பட விரைவாக வண்டியை செலுத்தினான்..

அங்கே யாரும் தென்படவில்லை..
அந்த பஸ் மட்டும் அங்கே நிற்க ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டதோ என யோசித்து கொண்டே வண்டியை செலுத்தினான்..

கோஷ்யினர் மட்டும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக நிற்க இன்னும் கலவரம் ஓய்ந்த பாடு இல்லை...போலீஸ் வந்து சம்பவ இடத்தில் கோஷ்டியினரை கலைத்து விட்டதற்கான விடயங்கள் தெளிவுபட இவளை எங்கே போய் தேடுவது என்று நினைத்து ஒரோ சந்து ரோட்டுக்குள்ளும் சென்றான்...

எங்கேயும் இவள் இருப்பதற்கான அறிகுறி இல்லை...அவன் மனதில் டென்ஷன் இல்லை என சொல்லி விடமுடியாது...ஏனோ ஒரு படபடப்பு மதுவுக்கு ஒன்றும் ஆகி விட கூடாதே என்று...அவன் கைகள் மட்டுமே வண்டியை செலுத்த அவன் கண்களோ நாலா பக்கமும் பறந்து விரிந்து தேடியது...அவள் எங்கேனும் தென்படுகிறாளா என்று தேடினான்..

எங்கேயும் கிடைக்காமல் இருக்க அங்கே ரோட்டில் ஒரு புத்தகம் கீழே விழுந்து கிடக்க அதை எடுத்து பார்த்தவன் அதில் மதுரயாழினி என்று எழுதி இருக்க இங்கே எங்காவது தான் அவள் இருப்பாள் என அவனின் உள்மனம் அறிவிக்க அங்கே ஒரு புதருக்குள் ஒளிந்து இருந்தாள்...

இவனின் பைக் அந்த புதரின் அருகில் வந்து நிற்க அவனின் பைக்கின் உறுமலை வைத்தே அவன் தான் என்பதை உணர்ந்த அவள் மெல்ல புதரில் இருந்து வெளியே வந்தாள்...அவள் முகம் சிறிது பீதியில் இருந்தது அவனை கண்டதும் அவள் ஆசுவாசம் அடைந்தாள்...

அவளும் அவன் முகத்தை பார்த்து முதலில் ஒன்றும் கூறவில்லை... வண்டியை மட்டும் முறுக்கி கொண்டே இருந்தான்...அவளை கண்டு விட்டோம் என்று அவனின் கண்கள் மட்டும் ஒரு நொடி மின்னியது...

அவளோ மனதுக்குள் இனி நான் தான் போயி நிக்கனும் இல்லாட்டி அப்படியே சிலை மாதிரி நிற்பாரு என்று மனதுக்குள் நினைத்து கொண்டே  என்று அவன் அருகில் சென்றாள்..

"சார் நல்ல வேலை நீங்க வந்திங்க இல்லாட்டி இந்த கொசு கடியில இந்த புதருக்குளே தூங்கி இருப்பேன் "..என்று கூற அவனோ அவளை பார்த்து முறைத்தான்..

அங்கே அவள் வீட்டில் பதறி கொண்டு இருக்க அவளை தேடி நான் பதறி இங்கே வந்து அரைமணி நேரமாக தேடி அவள் கிடைக்கமாட்டாளா என டென்ஷனில் நான் இருந்தால் இவளுக்கு கொசு கடிச்சது தான் பெரிசா போயிடுச்சா...என நினைத்து அவன் முறைக்க

"என்ன சார் எப்போ பாரு முறைச்சுட்டே இருக்கீங்க"... என்று அவளோ இருக்கும் இடம் மறந்து அவனோடு வம்பு வளக்க நிற்க கடுப்பாகி போனான் விக்ரம்..

அதற்குள் அங்கே இங்கே என நின்று கொண்டு இருந்த கோஷ்டி ஆள்கள் இவர்களை நோக்கி வர ,"ஏறு"... என்றான் எதை பற்றியும் யோசிக்காமல்...

அவளோ அவன் சொல்வதற்கு முன்னே அவன் வண்டியில் ஏறி இருந்தாள்... முதல் முறை தந்தை மற்றும் தமையன் அல்லாது ஒரு ஆணின் பின்புறம் அமர அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லையா இயந்திர கதியில் வண்டியை செலுத்தினான்...

அவள் வேறு அவனை ஒட்டி அமர்ந்து இருக்க அவளின் தோள் அவனின் தோளில் உரச அவளின் வாசம் அவனை ஏதோ மயக்க இது எல்லாம் எல்லா சாதாரண மனிதனுக்கும் தோன்றும்...ஆனால் இவனுக்கோ எந்த வித சலனமும் இல்லாமல் அவளிடம், "கொஞ்சம் தள்ளி உக்காரு "..என்று கடுமையோடு அவன் கூற மதுவோ ஓ ரொம்பத்தான் என நினைத்து சற்று நீங்கி அமர்ந்தாள்...

அவனை விட்டு நீங்கி அமர்ந்தும் சடன் பிரேக் இடும் போது எல்லாம் அவனை இடிக்க அவனோ வண்டியை ஒட்டி கொண்டே முன் கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து," எதுக்கு இப்போ இடிச்சுட்டே வர தள்ளி உக்காரு "..என்று கத்த,

அவளோ , "இனி தள்ளி உக்கார்ந்தா கீழே தான் உக்காரனும் "..என்று கூற அவனோ மனதுக்குள் இந்த இம்சையை பேசாம விட்டுட்டே வந்து இருக்கலாம் என நினைத்தான்...இவளிடம் பேசி பயன் இல்லை என்பதை உணர்ந்த விக்ரம் வேகத்தை குறைத்தான்..

அதற்குள் இவர்கள் இருவரும் சிறிது தூரம் வந்து இருக்க அவளோ ஒன்றும் யோசிக்காமல் ,"என்ன சார் வண்டி இது ...பேசாமல் நடந்தே போயி இருக்கலாம்"...என்று கூற அதை கேட்ட விக்ரம் கண்களில் y சிம்பிள் தெரிய அப்போது வண்டியை நிறுத்தினான்...

வண்டியை நிறுத்தியவன் வண்டி பையில் இருந்து அவள் எழுதிய அட்டையை எடுத்து அவளிடம் காட்ட கிட்டத்தட்ட அவள் முகத்தில் எறிந்தான் என்றே கூற வேண்டும்..இது என்ன என்பது போல மார்பில் கையை கட்டி அவளை அழுத்தத்துடன் பார்த்தான்...

அவளுக்கு இவருக்கு இவ்வளவு சீக்கிரம் தெரிஞ்சுடுச்சா என உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் வெளியே அதை காட்டாமல் சாதாரணமாக இருப்பது போல அந்த அட்டையை பார்த்து கொண்டு நின்றாள்...

என் கண்கள் உனை தேடும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top