காதல் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 15

காதலது கண்ணில் கண்டேன்

   ஆம் இன்று மது எப்போதும் பயணம் செய்யும் பேருந்தின் பேருந்து தினம் ஆனதால் காலை முதல் அந்த பஸ் முழுவதும் மாணவர்களால் அலங்கரிக்கப்பட்டு பாட்டும் நடனமும் என அவர்கள் ஆர்ப்பரித்து வர காலை வேறு மது பஸ்சில் பயணம் செய்ததால் மாலை தான் அவளால் அவள் பயணம் செய்ய பஸ்சில் ஏற முடிந்தது...

இவனோ அவள் ஏறிய பஸ் இது தானா என்று பார்த்து கொண்டே அந்த பஸ் ஐ பின் தொடர்ந்தான்...எப்படியாவது அவளை பிடித்து அவள் முகத்தில் இந்த வாழ்த்து அட்டையை விட்டு எரிய வேண்டும் என்ன திண்ணக்கம் இருந்தால் காதலிக்கிறேன் என்று இவள் கூறுவாள்..படிக்கும் வயதில் இவளுக்கு என்ன நினைப்பு இதை கொண்டு போய் அவள் தந்தையிடம் காட்டினால் தான் சரி ஆகும்...அவர் கொடுக்கும் மருந்தில் இனி என் பக்கம் வரவே கூடாது என கோபத்தின் உச்சத்தில் அவளை பின் தொடர்ந்து கொண்டு இருந்தான்...

அவனுக்கு அவள் எழுதி இருப்பதை கண்டதும் உண்மை தானோ என நினைத்து கொண்டு இருக்கிறான்...வரும் காலத்தில் அது உண்மை ஆகி விடும் என அறியவில்லை...அதும் அவன் உணரும் முன்பே..

இங்கே பஸ்சில் இதயம் முரளி யுவராஜ் வேறு அவளின் பாதுகாவலன் போல மதுவின் பின்னால் நின்று கொண்டு இருக்க அங்கே மாணவ மாணவியர் பாட்டு பாடி தாங்கள் பயணிக்கும் பஸ் இன் தினத்தை கொண்டாடி வந்து கொண்டு இருந்தனர்...

அதன் பயன் எப்போதும் நேர் வழியில் செல்லும் வாகனம் இன்று ஊரை சுற்றி கொண்டு வளைந்து கொண்டு எல்லாம் செல்ல ஒரோ ஆளாய் இறங்க வேண்டியவர்கள் இறங்கியும் இறங்காமலும் பயணம் செய்து கொண்டு இருந்தனர்..

அவர்கள் பயணம் செய்த பஸ் வழக்கமாக வரும் வழியில் வராததால் அங்கே இரு கட்சியினருக்கு இடையே கோஷ்டி பூசல் நடந்து கொண்டு இருக்க அந்த பகுதியில் இருக்கும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு ஒரு மாயான அமைதி நிலவ அங்கே இரு கட்சி உடன்பிறப்புகளும் அடிதடியில் ஈடுபட்டனர்...இவர்களோ பஸ் டே கொண்டாடும் விதத்தில் வழமை போல வரும் வழியில் வாராமல் அங்கே கோஷ்டி பூசல் நடக்கும் பகுதிக்குள் அவர்களின் பேருந்து சென்றது...

பஸ் வேறு ஸ்பீடில் அங்கும் இங்கும் ஆடி கொண்டு வர இது போல பஸ்சில் பயணம் செய்பவர்களும் ஆர்ப்பரித்து வர பஸ் ஏதோ ஒரு ரோடு இடப்படாத சாலைக்குள் சென்ற வாகனம் ஒரு கண்ணாடி சில் ஏறி அந்த பஸ் பஞ்சர் ஆக நிலை தடுமாறி நின்றது... அது மிக சரியாக கோஷ்டி பூசல் நடக்கும் பகுதிக்கு ஒரு 30 மீட்டர் இடைவெளியில் நின்றது..

பஸ் நின்றதும் அனைவரும் நிலைதடுமாறி நிற்பதற்குள் மளமளவென ஒரு கூட்டம் இவர்களை கண்டு ஓடி வர பஸ் டிரைவர் ஏதோ நிலைமை சரி இல்லை என்பதை உணர்ந்த அவர் பஸ்சில் பயணம் செய்யும் அனைவரையும் இறங்கி ஓட சொன்னார்...வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்த அனைவரும் வேகமாக இறங்க அங்கும் இங்குமாக ஓடினர்...அதில் பயணம் செய்த யுவராஜ் மற்றும் மதுவும் இறங்கி ஓட ஆளுக்கொரு திசையில் ஓடினர்...மதுவும் ஏதோ சந்துக்குள் ஓடி கொண்டு இருக்கிறாள்....தன் கையில் இருந்த புத்தகத்தை எல்லாம் எறிந்து விட்டு ஓடினாள்...அந்த கூட்டமும் எங்கே பிரச்சனை செய்யலாம் என காத்து இருந்தது போல அவர்களும் கண்ணில் பட்டத்தை எல்லாம் அடித்து நொறுக்கி தங்கள் எதிர்ப்பை காட்டி கொண்டு இருந்தனர்...

யுவராஜும் வேறு வழியில் சென்று தப்பித்து விட்டான்...அவனுக்கு மது ஆவது காதல் ஆவது தப்பித்தால் போதும் என்று தப்பித்து விட்டான்...அந்த கூட்டம் மட்டும் தங்கள் அடிதடியை நிறுத்தாமல் இருந்தனர்...மதுவின் நிலைமையோ மிகவும் மோசம் ஆனது.. ஓட முடியாமல் ஓடி கொண்டு இருந்தாள்..அங்கே அவள் சென்ற பகுதியில் சிறிது கோஷ்டியினர் கூட அங்கே போலீசார் நின்று எல்லோரையும் விரட்டி கொண்டு இருந்தனர்...கையில் லத்தி வைத்து கொண்டு கோஷ்டியினர் மட்டும் அல்லாது சில பொது மக்களும் அடி விழ மதுவோ ஒரு வழியாக ஓடி தப்பித்து ஒரு புதருக்குள் ஒளிந்து விட்டாள்...

பின்னால் வந்து கொண்டு இருந்த விக்ரம் எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் செல்வதை பார்த்து குழம்பி கொண்டே செல்ல சிக்னலில் இவன் நின்று வர அதற்குள் அந்த பஸ் பறந்து விட்டது...பின் அவனுக்கு எங்கே சென்றது என்று தெரியவில்லை... எப்படி இருந்தாலும் என்கிட்ட நீ சிக்காம இருக்க முடியாது உன்னால ...இப்போவே போறேன் உன் அப்பன் கிட்ட அவரு கிட்ட காட்டுறேன் பொண்ணை வளர்த்தி வெச்சு இருக்க லச்சனத்தை பாரு கேக்க போறேன் என்று அவள் பின்னால் y என குறியை தொட்டு பார்த்து கொண்டே மனதுக்குள் நினைத்து வண்டியை முறுக்க வீட்டிற்கு செலுத்தினான்..

வீட்டிலோ டிவி யில் கோஷ்டி பூசல் என்பதை அறிந்து மாடு வீட்டில் அழகு மயிலும் , கோல்ட்டும் பதறி கொண்டு இருக்க மதி மற்றும் மிதுன் வீட்டிற்கு வந்து விடவே வெங்கி வேறு ஒரு கருத்தரங்கிற்க்கு சென்று இருக்க வீட்டில் உள்ள பெண்கள் மது இன்னும் வரவில்லையே என பதறி கொண்டு இருந்தனர்...அழகு மயிலும், கோல்ட்டும் மாறி மாறி வந்து வாயிலை பார்ப்பதும் போவதுமாக இருக்க செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு இருந்த வாசுதேவன் என்னவென்று விசாரித்தார்...கோல்ட் மது வரும் சமயம் கழிந்து விட்டது இனியும் அவள் வரவில்லை என கூற வாசுதேவனோ ஒன்று ஆகாது கல்லூரியில் ஏதாவது வேலை இருந்து இருக்கலாம் அவள் பத்திரமாக வந்து விடுவாள் என்று ஆறுதல் கூறி கொண்டு இருக்கும் வேளையில் விக்ரம் தன் பைக்கில் அந்த தெருவில் நுழைய கோல்ட் மற்றும் அழகு மயில் மேலும் பதட்டம் அடைந்தனர்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top