காதல் 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

அத்தியாயம் : 14

மதுவை அடுத்து ஒரு கிராமத்து மாணவன் ஆங்கிலம் தெரியாமல் தட்டுத்தடுமாறி வகுப்பை எடுக்க முடியாமல் திணறி கொண்டு இருந்ததை கண்ட விக்ரம் பார்க்க அனைத்து மாணவர்களும் சிரிக்க தொடங்க அந்த மாணவரோ கூனி குறுகி போனார்...

இதை எல்லாம் கவனித்த விக்ரம் அந்த மாணவரிடம் , "ஆங்கிலம் என்பது மொழி அது ஒரு அறிவு கிடையாது.. ஆங்கிலம் படித்தவனுக்கு மட்டுமே எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்பது இல்லை...உனக்கு தெரிந்ததை நீ கூற வந்ததை தன்னம்பிக்கை யோடு கூறு..தெளிவாக உனக்கு தெரிந்த மொழியில் கூறு "...என்று அந்த மாணவனுக்கு அறிவுரை கூறி மற்ற மாணவர்களிடம் , "இதில் சிரிக்க ஒன்றும் இல்லை....உங்களால் முடிந்தால் உங்கள் சக மாணவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள்.. இல்லையேல் அமைதியாக இருங்கள்...மற்றவரின் தன்னம்பிக்கை யை கெடுக்க வேண்டாம் "..என்று கூற அவன் கூறிய பொருள் உணர்ந்து சிரித்த மாணவர்கள் அமைதியாக இருந்தனர்...

அந்த மாணவரோ விக்ரமின் ஊக்கத்தில் தெளிவாக தான் கூற வந்ததை அனைவருக்கும் புரியும்படி எளிமையாக கூற அனைவரும் அந்த மாணவரை பாராட்டினர்..

நாட்கள் நீங்க மது பல வண்ணங்களில் அவனை கவர திட்டங்கள் தீட்டியும் அவன் அதை உணர்ந்த மாதிரி இல்லை..ஆம் பல வண்ண பேப்பர்களில் வாழ்த்து கடிதம் தினமும் எழுதி அவன் வண்டியில் வைத்தாள்...அதை தன் வழமை ஆக்கி கொண்டாள்... அது எப்போதும் போல குப்பையில் வாசம் அடைந்தது...அவளும் சலிக்காமல் தன் முயற்சியில் ஈடுபட அவனும் நானும் பிடிவாதக்காரன் தான் என்பதை அவளுக்கு உணர்த்தி கொண்டு இருந்தான்...

ஆனால் ஒரு தடவை அவன் வண்டியின் பெட்ரோல் டாங்கின் மேல் சேப்டி பின் இன் உபயோகத்தில் y என வரைத்து வைக்க விக்ரமோ யார் இந்த வேலையை செய்தது கையில் மட்டும் கிடைத்தால் நீ முடிஞ்ச என்ற அளவுக்கு அந்த y இன் மீது கடுப்பை வளர்த்தி வைத்திருந்தான்...

இது வரை அது யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்தான் இப்போது அவனின் பைக்கில் y என எழுதி வைக்க கடுப்பின் உச்சிக்கே சென்று இது யார் என கண்டு பிடிக்கும் முனைப்பில் இறங்கி விட்டான்...கண்டு பிடித்தால் ரெண்டு காட்டு காட்டி விட வேண்டியது தான் என நினைத்து கொண்டு இருந்தான் விக்ரம்..

அன்றும் அது போல ஒரு அழகான வாழ்த்து அட்டையில் ,"உங்களுக்கு என் மனம் புரியவில்லையா".. என எழுதி "இப்படிக்கு உங்கள் y "..என எழுதி அவன் வண்டியில் யாரும் காணாவண்ணம் வைத்து விட்டாள்....அவள் விக்ரமின் வண்டியில் எதையோ வைத்து விட்டு வருவதை கண்ட ரம்யா கையோடு மதுவை பிடித்து விட்டாள்...

"என்ன டி இது அவரு பைக்ல என்ன வெச்ச நீ "...என்று கேட்க மதுவோ சிரித்து கொண்ட, " அவரை கவுக்க தான் டி இப்படி எல்லாம் பன்றேன்...பாரு எப்படியாச்சும் அவரை விழ வைக்க போறேன் பாரு"... என்று கூறி அவன் காலை முதல் மாலை வரை என்ன வெல்லாம் விக்ரம் செய்வான் என்றும் அவள் அவன் பின்னாடி சென்று மது நோட் செய்ததை எல்லாம் கூறி சிரிக்க அதை கண்ட ரம்யா, "பார்த்தா அப்படி தெரியலையே நீ தான் அவருக்கிட்ட விழ போறது மாதிரி இல்ல இருக்கு"....என்று கூற

"என்ன டி உளறிட்டு இருக்க நானா அதுக்கு வாய்ப்பே இல்லை "...என்று கூறி சிரித்தாள்...இவர்களின் சம்பாசனையை ஒரு ஜோடி செவியும் , இவர்களை செய்கைகளை ஒரு ஜோடி விழிகளும் கண்டன...

அந்த ஒரு ஜோடி செவிக்கு சொந்த காரன் யுவராஜ் மதுவை கண்டது முதல் காதல் வலையில் வீழ்ந்து இருக்கும் இதயம் முரளி ...அவளின் சீனியர்....ஒரு தலை காதல் இன்னும் அவள் எங்கு சென்றாலும் அவள் பின்னால் அவள் அறியாமல் சுற்றி கொண்டு இருக்கிறான்...அவள் ஏறும் பஸ் இல் தான்  ஏறுகிறான்... அவள் வீட்டில் இருந்து இரு கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளான்... அவனின் குடும்ப டாக்டர் வெங்கி தான் அந்த தைரியம் எல்லாம் கை கூடும் என்று.. வெங்கிக்கு தொழில் வேறு தன் குடும்பம் வேறு என்பதை அறியாத அந்த சாக்லேட் பாய் அவள் பின்னால் சுற்றி கொண்டு இருக்கிறான்..மதுவுக்கு அவன் தன் பின்னால் சுற்றுவதை அறிந்தாலும் அவனாக அவளிடம் வந்து தொல்லை செய்யாததை அறிந்து மதுவும் அமைதியாக இருந்து வருகிறாள்...

ஆனால் நம் இதயம் முரளியோ என்றாவது அவளிடம் தன் காதலை கூறி விடும் முனைப்பில் இருக்க எப்போதும் போல மதுவின் பின்னால் சுற்றி கொண்டு இருக்கும் போது தான் ரம்யா மற்றும் மது உரையாடுவதை வழமை போல ஒட்டு கேட்டான்...

அதில் விக்ரமின் பெயர் அடி பட அவனுக்கும் எதுக்கு இவளுக்கு இந்த தேவை இல்லாத வேலை என்றே தோன்றியது...விக்ரமை கண்டாலே நாலு அடி நீங்கி நிற்கும் யுவராஜ் இவளின் குறும்பு தனத்திற்கு அளவு இல்லையா என நினைத்து எப்படியாவது அந்த வாழ்த்து அட்டையை விக்ரமின் வண்டியில் இருந்து எடுத்து விட வேண்டும் என நினைத்து கொண்டான்..

ஆம் தேவை இல்லாமல் மது விக்ரமிடம் மாட்டுவதை விரும்பாத யுவராஜ் மெல்ல விக்ரமின் வண்டியின் அருகில் சென்று பைக் பையை தொட போக , "வாட் யூ வான்ட் "..என்று பின்னால் இருந்து ஒரு கம்பீர குரல் கேக்க சட்டென்று திரும்பிய யுவராஜின் முகம் வியர்க்க தொடங்க விக்ரம் என்ன வேணும் என்பது போல அவனின் அக்மார்க் பார்வையை பதிக்க பார்வையின் வீரியம் தாங்காமல் தலை குனிந்து கொண்டே, " சார் வண்டி நல்ல இருந்துச்சு சார் அதான் பார்த்தேன் "..என்று கூறி மெல்ல நழுவி கொண்டான்...

விக்ரம் அவன் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தவன் அவனின் வண்டி பையில் இருந்து அந்த வாழ்த்து அட்டையை படித்தவன் மீண்டும் வண்டியிலே வைத்து விட்டு அவன் கிளம்பினான்..

ஆம் அந்த ஒரு ஜோடி விழிக்கு சொந்தக்காரன் விக்ரம்...வெகு நாட்களாக கடிதம் வருவதும் கிழிப்பதுமாக இருக்க இன்று பிடித்தே ஆக வேண்டும் என்று கருதி அவன் நிற்க அவன் எதிர்பார்த்த படி  மது வந்து அவன் பைக்கில் ஏதோ ஒன்றை வைத்து விட்டு ரம்யாவிடம் ஏதோ சொல்லி சிரிப்பதை கண்டவன்," நீ தானா அது இரு டி உனக்கு இருக்கு".. என்று நினைத்து வண்டியை எடுத்தான் அவள் நிற்கும் பஸ் நிறுத்தத்திற்கு...

அங்கே அவள் முட்டி மோதி கொண்டு ஒரு அலங்கரித்த பேருந்தில் ஏறி அந்த ஜன நெரிசலில் அந்த பஸ்க்குள் கலந்து விட்டாள்... விக்ரமோ விடுவதாக இல்லை...அவளை பின் தொடர்வது என முடிவு எடுத்து விட்டான் ..கண்களில் தீ பொறி பறக்க அவளை இழுத்து வைத்து நாலு அறை அறைய வேண்டும் என துடிக்கும் கையை ஹாண்டில்பாரில் காட்டி பைக்கை  முறுக்கி கொண்டு ஒட்டி கொண்டு இருக்கிறான்...இதோ அவள் செல்லும் பேருந்தை பின் தொடர்ந்து கொண்டும் இருக்கிறான்...

இதை அறியாத மது அந்த பேருந்து நடத்துனரிடம் வம்பு வளத்து கொண்டு இருந்தாள்...

என் கண்கள் உனை தேடும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top