காதல் 10
அத்தியாயம் : 10
அன்றைய தினம் மதியத்துக்கு பிறகு தான் அவனுடைய வகுப்பு என்பதால் வகுப்பே மதியம் அவன் அவர்களுக்காக நடத்த இருக்கும் செமினார் க்கு அவன் மேல் உள்ள பயத்தில் படித்து கொண்டு இருக்க மதுவும் மற்றும் ரம்யா மட்டும் படிக்காமல் இருந்ததும் இல்லாமல் மதிய உணவு இடைவேளையில் கூடுதல் சமயம் சுற்றி திரிய அவன் வகுப்புக்குள் வந்து நுழைந்ததும் அவன் கண்கள் அவளை தேட அவளை காண வில்லை...
வரட்டும் ..எங்கேயாவது சுற்றி திரிந்து வருவாள் அடக்கம் என்பது எந்த கடையில் இருக்கும் என்று கேப்பாள் என்று நினைத்து தான் இன்று கூறி இருந்த செமினார் வகுப்பை ஆரம்பித்தான்...
அதன்படி வரிசையாக ஒரு மாணவன் மாணவி என்று வகுப்பு எடுக்க வேண்டும் என்றும் யாரும் புக்கை உபயோக படுத்த கூடாது...தாங்கள் எடுத்து வைத்து இருக்கும் குறிப்பை வைத்து , அந்த குறிப்பை பார்த்து தான் எடுக்க வேண்டும் நீங்கள் நிதானமாக பதட்ட படாமல் வகுப்பை எடுங்கள் கூறினான்...
அவனால் அவன் எடுக்க வேண்டிய பாடத்தை எடுக்க முடியாமல் அல்ல அவர்களை எடுக்க சொன்னது...இது அவர்களின் மேடை நடுக்கத்தை குறைக்கும் ...நாளை இவர்கள் வேலைக்கு முயலும் போது நேர்முகத்தேர்வு , கலந்தாய்வு என அனைத்து பகுதிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் ...அதற்கான முதல் படி தான் இது என்று தான் அவன் இதை செய்ய சொல்வது...
முதலில் ஒரு மாணவி வந்து நிற்க அப்போது வாசலில் நிழல் ஆடியது ரம்யா மற்றும் மது தான்...இருவரும் "அயோ இவரு கிளாஸ் ஆஹ் போச்சு போ சும்மாவே முறைப்பாரு இப்போ என்ன செய்ய போறாரோ "...என்று ரம்யா புலம்ப , "மதுவோ அமைதியா நில்லு டி "என்று அவளை திட்டினாள்...மதுவுக்கு உள்ளுக்குள் பயம் தான் ஆனால் வெளியே காட்டி கொள்ளாமல் நின்று கொண்டு இருந்தாள்.. ...அவளை கண்டவன் கண்டு கொள்ளாமல் அவள் இருக்கும் கோபத்தில் "கிளாஸ் எடுங்க "...என்று கூற அந்த பெண்ணும் தயங்கி கொண்டே எடுத்தாள்...இவர்கள் இருவரும் உள்ளே வர அனுமதி கேக்க கண்டு கொள்ளாமல் அவன் நின்று கொண்டு மாணவர்கள் எடுக்கும் வகுப்பை கவனித்து அதில் கேள்விகள் கேட்டு கொண்டு இருந்தாள்...மாணவர்கள் அனைவரும் இவர்களை ஒரு பார்வை பாடத்தை ஒரு பார்வை என பார்த்து கொண்டு இருந்தனர்...
இங்கே ரம்யா வெளியே நின்று கொண்டு, " சார் சார் "...என்று அழைக்க அவன் கண்டுகொள்ளாமல் இருந்தான்...
அவளுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த மது, "சும்மா அவர் கிட்ட கேட்டுட்டே இருக்காதா ...அப்புறம் உன்னையும் கிளாஸ் எடுக்க சொல்லிட போறாரு "....என்று கிண்டல் செய்ய
அவள் கூறிய விஷயத்தை கேட்டு அதிர்ந்தாள் ரம்யா அப்போது தான் அவளுக்கு நியாபகம் வந்தது தான் இன்னும் படிக்கவே இல்லையே என்று ...ஆனால் மதுவோ அசால்ட்டாக நின்று கொண்டு இருந்தாள்...அவளின் நின்று கொண்டு இருப்பதை கண்டு விட்ட விக்ரம் அவர்களை உள்ளே வர சொல்லி பாடம் எடுக்க சொன்னான்...
ரம்யா ஏதோதோ உளறி கொட்டி தப்பித்து வந்து விட்டாள்... அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது...அவளை விட்டுவிட்டான்...அவனின் இலக்கு தான் மது ஆகிற்றே...அடுத்து மதுவின் முறை மதுவை வைத்து செய்து விட்டான்...அவளுக்கு என்ன டாபிக் என்று நினைவு இல்லாமல் இருக்க அவளை பார்த்து, " இது எல்லாம் கூட தெரியாம ஏன் வரிங்க மதுர யாழினி ...நாளைக்கு உங்க பேரேன்ட்ஸ் யை வந்து என்னை வந்து பார்க்க சொல்லுங்க "...என்று அவளை எங்கே அடித்தால் வீழ்வாள் என்று தெரிந்து அங்கே அடிக்க கெஞ்ச வேண்டியது இவள் முறை ஆனது...
அவள் கெஞ்சுவதை கண்ட விக்ரம், "நாளை வந்து முதல் ஆளாக வகுப்பு எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாளையே உனது பெற்றோர் வரவழைக்க படுவர் "..என்று பிறர் அறியா வகையில் அவளை மிரட்ட அவளோ அப்பா என்ற பெயரில் வீழ்ந்து அவன் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டி கொண்டு இருந்தாள்...அவன் வகுப்பு முடிந்து வெளியே சென்று விட அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது...
இவரை எப்படியாவது அடக்கி வைக்கணும் ரொம்ப என்னோட வாழ்க்கையில் குறுகிடுறார் என்று நினைத்து அதற்கு என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்து விட்டாள்....
நண்பர்கள் எதிரிகள் என அனைவரும் அவளை கேலி செய்ய மது இதற்க்கு எல்லாம் காரணம் நீங்க தான் சார் ...உங்களை நான் சும்மா விட மாட்டேன்...என்று கருவி கொண்டாள்...
அவளது நிலையை மிக சரியாக கணக்கில் வைத்து உள்ள ரம்யா, " விடு டி ரொம்ப தான் பண்றாரு "...என்று அவளுக்கு ஆறுதல் கூற
"இல்லை ரம்ஸ் அவர் என்னை அவமானப் படுத்தியத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்..என்ன நினைச்சுட்டு இருக்காரு அவரு"... என்று அவள் புலம்ப
ரம்யா செய்த சமாதானங்கள் ஒன்றும் இங்கே எடுபடவில்லை.... அப்போது தான் இரு காதலர்கள் நடப்பதை கண்டு," பேசாமல் அவரை நீ லவ் பண்ணிடு டி ..அப்போ தான் திட்ட மாட்டாரு ...அதோ போறாங்களே ...அவங்களை மாதிரி கொஞ்சுவாரு "...என்று ஒரு அறிவுரை கூற தோழி ரம்யா என்னவோ அவளின் மனகுமறலில் இருந்து அவளை வெளியே கொண்டு வந்து அவள் இயல்பாக வேண்டும் என்று தான் அப்படி கூற
மதுவோ ,"லவ்வா அவரையா "...என்று கேள்வி கேட்டு கொண்டே பதிலும் அவளே கூறினாள்... "பண்ணலாமே "...என்று கூறி சிரித்தாள்...
ரம்யா என்ன டி சொல்ற என்று கேக்கும் போது, "கூல் டி...நான் சும்மா அவரை காதலிக்கிற மாதரி நடிக்க போறேன் பாரு...மனுஷன் இனி என் பக்கம் கூட தலை வெச்சு படுக்க கூடாது "...என்று கூறி சிரித்தாள்....
அதன் விபரீதம் அறியாமல் இருவரும் கேலி போல அடித்து சிரித்து கொண்டு இருந்தனர்...ஆனால் மதுவின் மனதிலோ அப்படி செய்தால் அவர் என்னை இப்படி தொல்லை செய்ய மாட்டார் என தோன்ற அவனை காதலிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்...
காதல் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவது இல்லை என்றும் அதற்கு அவள் கஷ்டப்பட வேண்டும் எனவும் இப்போது அவளுக்கு தெரியவில்லை... அதும் விக்ரம் போன்ற ஒரு ஆளை காதல் என்ற வலையில் வீழ்த்த மிகவும் கடினம் என்று இவள் அறியவில்லை...
அதுமட்டுமின்றி இன்று இவள் காதலிப்பது போல நடிக்க போகிறேன் என்று தோழியிடம் கூறி சிரித்து கொண்டு இருக்கிறாள்...ஆனால் பின்னாளில் உண்மையில் அவனை இவள் காதலிக்க போகிறாள் என்றும் அவன் பின்னால் இவள் தான் சுற்ற போகிறாள் என்றும் அவனுக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்ய தாயார் அவன் மட்டும் வேண்டும் எனக்கு என்று அந்த சூழ்நிலைக்கு இவள் தள்ளப்பட போகிறாள் என்று இவள் அறியவில்லை... இதை எல்லாம் விக்ரமும் அறியவில்லை...
என் கண்கள் உனை தேடும்....
