காதல் 9
அத்தியாயம் : 9
காதலது கண்ணில் கண்டேன்
தன் முன்னால் குட்டை பாவாடை அணிந்து தலை விரி கோலமாக காட்சி அளிப்பது மது தானா என்று உற்று பார்த்தான்...ஆம் அது அவள் தான் இப்படி ஒரு கோலத்தில் அவளை பார்ப்போம் என்று நம்ப முடியாமல் அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்து பார்த்தான்....
அவளின் வெண்ணையில் குழைத்து பூசிய நிறம் போல கால்கள் மின்ன கையை மேலே தூக்கி நகத்தை கடித்து கொண்டு இருந்ததால் அவளின் வெண்ணிற இடையும் காட்சியை தான் முதலில் அவன் கண்கள் படம் பிடித்தது...ஆனால் என்ன செய்கிறோம்...எதார்த்தமாக தான் அவன் பார்த்தது அதுவே அவனுக்கு மிக பெரிய தவறாக பட மீண்டும் இறுகி நான் இவளின் ஆசிரியர்...நான் இப்படி தவறாக பார்க்க கூடாது என்று நினைத்து தன் பார்வையை திருப்பி கொண்டான்..
இவள் எதிர் வீட்டில் தான் இருக்கிறாளா ...இது என்ன மாயம் என நினைத்தவன் சடுதியில் அவள் இருந்தால் எனக்கு என்ன நான் ஏன் ஆச்சர்ய பட வேண்டும் என் காரை உடைத்தவள் தானே இவள் ...இவள் தனியாக கிடைக்க வேண்டும் என்று தானே நான் நினைத்து கொண்டு இருக்கிறேன் என்று சடுதியில் தன் முக பாவனையை மாற்ற
அவளோ தான் இன்னும் சிலையாக தான் இருக்கிறேன் என்று அவனை இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க,இந்த சிலையை அப்படியே தூக்கி கொண்டு போய் எதிர் வீட்டில் விட்டுட்டு வந்து விடலாமா என நினைத்த அவன் நான் ஏன் இவளிடம் மட்டும் இப்படி எல்லாம் நினைத்து தொலைக்கிறேன் என்று நினைத்து அவளை நிஜ உலகிற்கு கொண்டு வரும் பொருட்டு அவள் கண் முன்னே சொடக்கு இட கோவிலில் பூஜாரி தீர்த்தம் தெளித்தால் சிலிர்ப்பது போல சிலிர்த்து கொண்டு அவள் மீண்டு வந்தாள்..
வந்தவளோ இது சார் தானா என்று தன் அழுக்கு படிந்த கையை கிள்ளி கூட பார்த்து கொண்டாள் அது அவனே தான்...இவரு இங்கே என்ன பண்றாரு என நினைத்து , "நீங்க என்ன சார் காலேஜ் ல இல்லாமல் இங்கே இருக்கீங்க "...என்று கேட்க,
அவனோ கடுப்பு ஆனான்...ஏன் நான் காலேஜில் மட்டும் தான் இருக்க வேண்டுமா ...எனக்கும் வீடு வாசல் என்று இல்லையா என்று நினைத்து ஏன் "நான் இங்கே இருக்கறதுல உனக்கு ஏதாவது பிரச்சனையா "...என்று எதிர் கேள்வி கேட்க
அவளோ இவரு கிட்ட என்ன பேசினாலும் இப்படி தான் பதில் சொல்லுவாரு என்று நினைத்து "அங்கிள் ..அங்கிள் "....
என்று அவனை கண்டுகொள்ளாமல் வாசுதேவனை அழைக்க
இவன் கடுப்பின் உச்சிக்கு சென்றான்...நான் இங்கே பேசி கொண்டு இருக்கிறேன் ...இவள் என்ன அங்கிள் அங்கிள் என ஏலம் போட்டு கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து "எதுக்கு வந்த "...என்று வார்த்தையில் கடுமையை கூட்ட
அவனின் கடுமையில் இலேசாக மதுவுக்கு பயமும் கோபமும் துளிர் விட ,"பந்து இங்கே விழுந்துடுச்சு சார் "....என கூற
"பந்து எல்லாம் இங்கே இல்லை போ "..
என அவளை விரட்ட , இவளுக்கு கோபம் வந்து விட்டது ...."அதை நீங்க சொல்லாதீங்க இந்த வீட்டு அங்கிள் சொல்லட்டும் நான் போறேன் "...என்று வீம்பு பேச
இந்த நேரம் பார்த்து வாசுதேவன் இல்லாதது தான் துர்தஷ்டம் ஆகி விட இருவரும் அங்கே சிலிர்த்து கொண்டு நின்றனர்...
அங்கே எதிர் வீட்டில் மிதுன் மற்றும் மதி தங்கள் வீட்டு சுவற்றில் ஏறி இந்த காட்சியை ரசித்து கொண்டு இருந்தனர்...யாம் பெற்ற இன்பம் வையகமும் என்பது போல இருந்தது அவர்களின் வேலை... அக்கா தானே காப்பாற்றலாம் என்று எல்லாம் இல்லை...அவளும் மாட்டடும் என்று மட்டுமே அதில் நிறைந்து இருந்தது...
விக்ரம் அவளிடம் வாயாட விரும்பாமல் , "இதோ பாரு மரியாதையா வெளியே போயிடு "...என்று கூற
அவள் கீழே தள்ளி விட்டது வேறு அவளுக்கு நியாபகம் வர அந்த வலியை இப்போது உணர்ந்த அவள் உடனே இடுப்பை தேய்த்து கொண்டே , "இது ஒன்னும் காலேஜ் இல்லை...நீங்க எனக்கு பாடம் சொல்லி கொடுக்கிற சாரும் இல்லை...நான் அங்கிள் வராம போக மாட்டேன் "...என்று அங்கே போட பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்...
அதுவே வெள்ளை நாற்காலி இவள் வியர்வையில் குளித்து அந்த அழுக்கு நாற்காலியில் படிந்து கொண்டு இருக்க இவளை வெளியேற்றியே ஆக வேண்டும் என்று எண்ணி , "இப்போ உனக்கு என்ன தான் வேணும் "என்று அவன் எரிச்சல் மிகுந்த குரலில் கேட்க
"என்னோட பந்து "..என்று முகத்தை திருப்பி கொண்டே கூற அவனோ மனதுக்குள் நீ வாடி கிளாஸ் க்கு அப்போ இருக்கு உனக்கு என்று மனதில் கருவி கொண்டான்...
அதில் வேறு இவள் வீட்டின் வெளியே போடப்பட்டு இருக்கும் இருக்கையில் அமர்ந்து இருக்க வெளியே செல்பவர்கள் எல்லாம் பார்வையை சுழட்டி இவள் கால் அழகை பார்த்து கொண்டு செல்ல அவர்களின் பார்வை வேறு விக்ரமுக்கு கடுப்பை கிளப்ப பந்தை எடுத்து வேகமாக அவள் கையில் எறிந்தான்...
பந்து கிடைத்த சந்தோசத்தில் அவள் எழ அதில் வேறு அவன் பனியன் ஏறி இறங்க இவளுக்கு விவஸ்தை இல்லையா என்று நினைத்து கொண்டு அவளிடம் , "இனி இதை போட்டுட்டு சுத்தின தொலைஞ்ச போ "....என்றான்....ஆளும் அவளையும் பாரு என்று நினைத்து விரட்டினான்...
அவளோ இதுக்கு என்ன குறைச்சல் என்று நினைத்து ஐய ரொம்பத்தான் பண்றாரு என்று நினைத்து கொண்டு , "இந்த ட்ரெஸ் க்கு என்ன சார் "...என்று கேட்க
"அதை உன் கண்ணாடியில் போய் பாரு..முதலில் இங்கிருந்து இங்கே போ "..என்க...
"நீங்களும் தான் பனியனும் ஷார்ட்ஸ் போட்டு இருக்கீங்க நான் ஏதாவது சொன்னேன் னா ...
ஏன் சார் என்னை விரட்டுறீங்க"....ரொம்ப பேசுறா என்று கோபம் வர அவளோ நிறுத்தாமல் மேலும் மேலும் பேசி கொண்டே நிற்க கடுப்பு ஆனவன் "உங்க அப்பா எப்போ வருவாரு "...என்று கேட்க
"அப்பாவா எதுக்கு கேக்குறீங்க "...அவளின் குரலின் குழைவு அவனுக்கு புரிப்பட இது தான் உன் பலவீனம்மா என நினைத்து தொண்டையை சரி செய்து கொண்டு , "இந்த காரை அவர் கிட்ட காட்டனும் "....என்று கூற அதாவது எனக்கு காரை உடைத்தது நீ தான் என தெரியும் என் பொறுமையை சோதிக்காதே என்பது போல பார்வையை அவள் மீது பதிக்க அந்த பார்வையிலே பாதி செத்தவள் மீதி அப்பா என்ற வார்த்தையில் முழுவதும் அடங்கி விட்டாள்...
அயோ மாட்டிட்டோமா என்று ஓடி விட்டாள்... ஓடும் அவளை பார்த்து கொண்டு தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான்..
அவள் வீட்டுக்குள் நுழைந்தவள் அவன் வந்து தன் தந்தையிடம் அவன் கூறி விடுவானோ இன்று பெல்ட்டால் அர்ச்சனை கிடைக்குமா என்று எல்லாம் மேலும் மேலும் வியர்க்க எதுக்கும் போய் குளிக்கலாம் என்று குளிக்க சென்றாள்... ஆனால் அவன் அவளை மிரட்ட தான் கூறினானே தவிர சொல்லவெல்லாம் இல்லை...அன்று முழுவதும் தன் தந்தையை காணும் போது எல்லாம் அடி விழுமோ என்று பயந்து நடுங்கியது வேறு கதை...அதன் பிறகு தான் அவளுக்கு தெரிய வந்தது வாசுதேவனின் மகன் தான் விக்ரம் என்று...ஆனால் அவள் காலேஜில் பகிர வில்லை...அதே போல அவனும் எந்த சலுகையும் காட்ட வில்லை...இதை விட மோசமாக தான் நடத்தினான்...கடுமை தான் எதிலும்...
