காதல் 11
அத்தியாயம் : 11
காதலது கண்ணில் கண்டேன்
காதல் என்ற வார்த்தை பொல்லாதது என தோன்றியது மதுவுக்கு...ஆம் பல காதல் திரைப்படங்கள் பார்த்தும் அவளுக்கு காதல் எப்படி செய்வது என்றோ காதல் என்றால் எப்படி இருக்கும் என்றோ தெரியவில்லை என்றாலும் அவனை எப்படியாவது அவள் பின்னால் சுற்ற வைக்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு உண்டு...
பல காதல் காட்சிகள் சேகரித்து வைத்து உள்ளாள்.. அதை எல்லாம் அவன் மீது தான் அவளுக்கு பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் அதும் அவன் அறியாவண்ணம்...
ஒரு நாள் அவன் பைக்கை கல்லூரியில் நிறுத்தி வைத்து விட்டு கல்லூரிக்குள் சென்றான்...காதல் படங்களில் வருவது போல அவள் ஒரு காதல் கடிதம் எழுதி அவனின் வண்டியின் பைக்குள் வைத்து விட்டாள்... அதாவது அந்த கடிதத்தில் ஐ லவ் யூ சார் என்று எழுதி சந்தேகம் வராத வண்ணம் y என்று ஒரு ஆங்கில வார்த்தை எழுதி அதை பேனா கொண்டு தீட்டி அலங்கரித்து அவனின் வண்டி பையில் வைத்து விட்டாள்...
அவனும் மாலை வந்து தான் தினமும் கொண்டு வரும் பையை அதன் உள்ளே வைக்க போக அங்கே கலர் பேப்பரில் ஏதோ பேப்பர் தட்டு பட அதை எடுத்து பார்த்தான்....அந்த பேப்பரை பிரித்து படித்தான் அதை பார்த்ததும் தீ பிளம்புகள் அவன் கண்ணில் தெறிக்க அதை படித்து பார்த்ததும்," என்ன தைரியம் இதை எழுதிய ஆளுக்கு".. என்றே அவனுக்கு தோன்ற அதை கிழித்து தூரே எரிந்து விட்டு அந்த பேப்பர் மேல் இருக்கும் கோபத்தை அவன் வண்டியில் காட்டி ஒட்டி சென்றான்...அவன் ஹாண்டில் பாரை முறுக்கியத்திலே தெரிந்தது அவனுக்கு கோபம் வந்துவிட்டது என்று....
அவன் செய்கைகளை எதிரே உள்ள ப்ளாக்கில் இருந்து கண்காணித்து வந்த மது மனதுக்குள் இவருக்கு போய் கலர் பேப்பர்ல எழுதினேன் பாரு என்னை சொல்லனும் என நினைத்தாள்... இருந்தாலும் அவளுக்கு அவன் கோபம் பிடித்து இருந்தது...அவனை கோபப்படுத்தி பார்த்துவிட்டோமே என்ற சந்தோஷமும் அதே சமயம் கோபத்தில் கூட அவன் முக அழகு அவள் மனதுக்குள் சென்று தாக்கியது என்றே கூற வேண்டும்...
அன்றும் நெருக்கத்தில் கண்ட அவன் முகம் அவள் மனதுக்குள் இருக்க அதே போன்றதொரு வேறு ஒரு அவனின் பாவம் அவளின் நினைவு பெட்டகத்தில் ஒளித்து வைத்து கொண்டாள் அவள் அறியாமலே...
ஆனால் அவளின் இந்த செய்கை அவள் சொந்த செலவில் அவள் சூனியம் வைப்பது போல என்று அவள் உணரவில்லை... ஆம் அவனை பின்னால் சுற்ற வைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவள் தான் ,பின்னால் சுற்ற போகிறாள் என்று தெரியவில்லை...அவள் பின்னால் அவன் ஒரு நாளும் சுற்ற போவது இல்லை என அவளுக்கு தெரியவில்லை..
விக்ரம் ஒரு நாள் இதுபோல காலை எழுந்து உணவு சமைத்து கொண்டு இருக்கும் போது மது மாடியில் உருண்டு படித்து கொண்டு இருந்தாள்...நடந்து கொண்டு படித்தாள்... சுவரில் முட்டாத குறையாக படித்து கொண்டு இருந்தாள்...இவள் என்ன செய்கிறாள் என்று எதிர் வீட்டு ஜன்னல் வழியே விக்ரம் பார்க்க அங்கே அவள் தூங்கி வழிந்து கொண்டு புக்கில் தலை கவிழ்ந்து படித்து கொண்டு இருந்தாள்...அதை பார்க்கும் போதே விக்ரமுக்கு தண்ணிரை எடுத்து முகத்தில் ஊற்ற வேண்டும் என கை பரபரக்க இங்கே நின்றால் செய்தாலும் செய்து விடுவோம் என கருதி அங்கிருந்து அவன் நகர்ந்து விட்டான்..
அவளோ அவளின் பொன்னான உறக்கத்தை இவனுக்கு வேண்டி என்பதை விட இவன் கொடுத்த செமினார்
டாபிக்கை ஒரு வழியாக படித்து முடித்து விட்டாள்... அவனிடம் மறுபடியும் அவமானப்பட அவளுக்கு விருப்பம் இல்லை...
கோல்ட் கூட இவள் புக்கை திறந்து படித்து கொண்டு இருப்பதை எட்டாவது அதிசயமாக இவளது நடவடிக்கைகளை கண்டு வாயை பிளந்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்...
அவரை பார்த்து மது , "கோல்ட் இப்படி நக்கலா பார்த்துட்டு இருந்த இந்த புக் க இருக்கிறத எல்லாம் உன்னை படிக்க வெச்சிடுவேன் பார்த்துக்கோ "..என்று கண்களை உருட்டி கொண்டே கூற அவள் கையில் இருக்கும் புக்கை பார்த்து கோல்ட் ஓடி விட்டார்....
அவனும் அவன் வீட்டு ஜன்னல் வழியே எதிர் வீட்டு மாடியை பார்வை இட்டாலும் அவள் என்ன செய்தால் எனக்கு என்ன என்பது போல இருந்து விட்டான்...
அவன் கிளம்பி வண்டியில் சென்று கொண்டு இருக்கும் போது நிறைமாத கர்ப்பிணி போல மனிதர்களை தள்ளி கொண்டு வரும் அந்த பேருந்தின் மீது விக்ரம் பார்வையை பதிக்க அதில் கடைசி படிக்கட்டில் ஒரு வீராங்கனை அசால்ட்டாக ஒரு கையில் புத்தகமும் மறு கையில் பேருந்தின் கம்பியையும் பிடித்து தொங்கி கொண்டு அவள் பயணம் செய்து கொண்டு இருந்தாள் மது...
சிக்னலில் இந்த காட்சியை கண்டவன் தூரத்திலேயே இவள் தான் என்பதை கண்டு கொண்ட விக்ரம் இவளுக்கு அறிவு என்பதே கிடையாதா..திமிரு அதிகம் ..கூட்டம் இல்லாத பஸ்சில் வந்தா தான் என்ன என்று நினைத்தான்...ஒரு நொடி அவள் பயணம் செய்யும் காட்சி அவன் மனதில் நுழைய அவள் அந்த பேருந்தில் நின்று கொண்டு இருப்பதையே இமைக்காமல் பார்த்தவன் சிக்னல் விழுந்ததும் ஒரு நொடி தயங்கி பின் வண்டியை எடுத்தான்...
இது ஏதும் அறியாத மது அவன் வகுப்பில் அவள் எடுக்க இருக்கும் செமினாரின் நினைவில் பயணம் செய்து அவன் முன்னால் நல்ல படியாக வகுப்பு எடுக்க வேண்டும் என்று மட்டுமே அவள் மனதில் இருந்தது...
அவள் நினைத்தது போலவே மது நல்ல படியாக வகுப்பை எடுக்க யாரும் உணரா வண்ணம் அவன் புருவம் உயர்ந்தது..அதை மது கண்டு கொண்டாள்... அவள் தான் அவனின் ஒரோ நொடி அசைவையும் கண்டு கொண்டு இருக்கிறாளே...ஆனால் தான் ஏன் அவனின் ஒரோ அசைவையும் கவனித்து வருகிறோம் என்று மட்டும் அவளுக்கு புரியவில்லை...
