Share:
Notifications
Clear all

இதயம் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 9

   எப்போதும் தேவராஜ் இவளை பார்த்து உரையாடுபவன் இல்லை என்றாலும் அந்த நாய் கடிக்கு பிறகு இவளை முற்றிலும் தவிர்க்க இவள் தான் செய்வது அறியாது திணறி கொண்டு இருந்தாள்..

   அதிலும் உணவு என்ற ஒன்றையே மறந்தவன் போல பசிக்கு சிகரெட், தாகத்துக்கு சரக்கு என போதையிலே கிடக்க அன்பரசிக்கு சுத்தமாக விளங்கவில்லை இவனுக்கு என்ன தான் ஆகிற்று..இப்போ என்ன நடந்தது என்று இவன் அந்த அறையிலே முடங்கி கிடக்கிறான் என்று யோசித்தவள் இவனுக்கு உடல்நிலை சரி இல்லை பார்த்து கொள்ள வேண்டும் என்று தான் பிரபு இங்கே அவளை அனுப்பி வைத்து இருக்க அதற்கு அவளது தேவைக்கு மேலேயே அவன் பணத்தை அவளுக்கு கொடுத்து கொண்டு இருக்கின்றான்..

அப்படி இருக்க இங்கே இவனோ உண்ணாமல் கொள்ளாமல் இருக்க தான் மட்டும் உண்டு கொழுத்து கொண்டு இருக்கிறோம் என நினைக்கும் போதே அன்பரசிக்கு வேதனையாக இருந்தது...அதிலும் இந்த விஷயத்தை பிரபுவிடம் தெரிவிக்க முடியாத படி தொலை தொடர்பு சேவைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு இருக்க அவளோ செய்வது அறியாது இரண்டு நாட்களாக தவித்தவள் இன்று ஒரு வழியாக களத்தில் இறங்கி விட்டாள்..

இன்றைக்கு என்ன ஆனாலும் சரி நான் அவனை சாப்பிட வைக்காமல் விட போவதில்லை என்று நெனைத்தவள் ஒரு தட்டில் உணவை எடுத்து கொண்டு அவனது அறையின் கதவை திறந்தாள்..

அந்த வீட்டில் எல்லா கதவுகளுக்கும் தாழ்ப்பாள் வேறு இல்லாததும் இன்றைக்கு நல்ல விஷயமாகவே அன்பரசிக்கு பட்டது..இன்னும் சற்றும் நேரத்தில் அதுவே வேதனையாக மாற போவதை அவள் அறியவில்லை...

புகை மூட்டம் என்பார்களே அது போல அவனது அறை முழுவதும் சிகரெட்டின் புகை மண்டலம் ..விளக்கு கூட இடாமல் இருட்டு அறையாக இருக்க தட்டு தடுமாறி விளக்கை இட்டாள் அன்பரசி..

அங்கே அவள் கண்ட காட்சி அவளது நெஞ்சை கூர் இட்டது என்றே கூற வேண்டும்...அவள் அவனை காண தொடங்கியது முதல் எப்போதும் சிங்கம் போல இருப்பவன் இப்போது என்னவோ அடிபட்ட புலி போல தரையில் ஒரு மூலையில் படுத்து கிடந்தான் தேவராஜ்...முதலிலே காடு போல முடியை வளர்த்தி வைத்திருப்பவன் இப்போது பரட்டை தலையோடு முகமெல்லாம் காடு போல வளர்த்தி வைத்திருந்த தாடியோடும் அவனுக்கு முதுகு காட்டி கையில் அவன் பற்ற வைத்த சிகரெட் அவனது கையை சுட்டு கொண்டு இருக்கிறது என்ற உணர்வு கூட இல்லாமல் படுத்து கிடந்தான்..

அவளோ பதறியபடி அவன் அருகே செல்ல அப்போது தான் அவனது முகம் தெளிவாக அவளுக்கு தெரிய எந்த உணர்வுகளும் இல்லாத ஜடம் போல கிடந்தவன் கண்களில் ஒரு பெரிய கருவளையம் வந்து இருந்தது அதே போல அவனது உதடுகள் கருத்து தடித்து வறண்டு போய் இருந்தது...அவனை பார்க்கவே யாருமில்லா நிற்கதியாக நிற்கும் குழந்தை போல தெரிய அவள் வந்த உணர்வு கூட இல்லாமல் படுத்து கிடந்தான்..அவளுக்கு ஏனோ அந்நேரம் அவனை காணும் போது தொண்டை அடைத்தது ஏன் இந்த சார் இப்படி இந்த ரூம்லேயே அடைஞ்சு கிடக்கிறார் என கரிசனையோடு நொந்தவள்,

மெல்ல அவன் அருகே அமர்ந்த அன்பரசி , "சார்".. என்க

அவனிடம் எந்த உணர்வும் இல்லை மெல்ல அவனை தொட அப்போதும் உணர்வு இல்லை..அன்பரசிக்கோ பயமாகி விட மெல்ல அவனது மூக்கின் அருகே கையை வைத்து பார்த்து மூச்சு இருக்கிறதா என அவள் கையை வைத்த நொடி அவன் கண்களை டக்கென்று திறக்க ஒரு நொடி பயந்தவள் பின் சமதானம் ஆனாள்..

அவளை கண்ட தேவராஜ் வேகமாக எழுந்து கட்டிலில் தலை வைத்தபடி கீழே அமர்ந்து மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைக்க அவளோ  வேகமாக அதை பிடுங்கி தூர எறிந்தாள்..

அவனோ மீண்டும் ஒன்றை பற்ற வைக்க போக அவனது கையை பிடித்து தடுத்தவள் , "சார் உங்களுக்கு என்ன ஆச்சு?? ஏன் இதை பிடிச்சு உங்களை நீங்களே அழிச்சிட்டு இருக்கீங்க??"...என்று கூற

அவனோ பதிலே சொல்லாமல் அவனுக்கு எதிரே இருந்த ஜன்னலையே வெறித்து கொண்டு இருந்தான்..அவனது முகம் மட்டும் கடுகடுவென செங்கொழுந்தாக இருந்தது..

"சார் நீங்க சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சுன்னு தெரியுமா உங்களுக்கு?? அதெப்படி உங்களுக்கு தெரியும் சதா எல்லா நேரமும் போதையிலே இருந்தா எப்படி தெரியும்?? படிச்ச நீங்களே உங்களை கெடுத்துட்டீங்கனா எப்படி?? அப்படி என்ன இருக்கு இந்த போதையில உங்களுக்கு அப்படி என்ன உணர்வை இது கொடுக்குது"...என்று அவள் கேள்வி கேட்க

அவளது வருகையே அவனுக்கு எரிச்சலை கொடுத்து இருக்க அதிலும் அவளது கரிசனம் மேலும் எரிச்சலை கொடுக்க ," வெளியே போ "...என்றான் எங்கோ பார்த்தபடி

"நான் ஏன் போகணும் நான் போக மாட்டேன்.. உங்களை பார்த்துக்க தான் நான் வந்து இருக்கேன் அது என்ன எப்போ பார் என்னை வெளியே போ வெளியே போ ன்னு சொல்லிட்டே இருக்கீங்க இன்னிக்கு நீங்க சாப்பிடாமல் நான் வெளியே போக மாட்டேன்"...என்றாள் பிடிவாதமாக,

"எனக்கு பசிக்கலை வெளியே போ"...

"அதெப்படி பசிக்கும் இந்த கருமத்தை குடிச்சிட்டு இருந்தா பசிக்குமா"....

அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க , "உன்னை வெளியே போ ன்னு சொன்னேன் "...அவனது குரல் இலேசாக மாறுபட்டு இருந்தது அவள் உணர்ந்தாலும் அவனது கோலம் அவளை உலுக்கி இருக்க, " நான் போக மாட்டேன் சார் ..நீங்க சாப்பிட்டால் தான் போவேன்.."...

"நான் சாப்பிட மாட்டேன் வெளியே போ"...மேலும் அவனது குரல் மாறுபட்டது சற்று கடுமையாகவும் மாறியது அவன் அவளது முகத்தை கூட பார்க்காது தரையை பார்த்து கொண்டே பதில் அளித்தான்...அவனது உடல் இறுகி இருந்தது...அவன் ஏதோ ஒரு மாறுபட்ட நிலையில் இருந்தான்...

"ஏன் சாப்பிட மாட்டிங்க?? எனக்காக வேணாம் உங்க பிரெண்ட் பிரபு சார் உங்க மேல எவ்ளோ அக்கறை வெச்சு இருக்கார் அவருக்காக கொஞ்சம் சாப்பிடுங்க சார்..அவரை மாதிரி நண்பன் கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்கனும்"...

"என் மேல அக்கறை பட யாரும் எனக்கு வேணாம்..எனக்கு யாரும் வேணாம்..முதல்ல வெளியே போ".. என்று கையை முறுக்கி கொண்டே அமர்ந்து இருந்தான்..அவனிடம் ஏதோ மாறுதல் இருப்பதாக அவள் உணர்ந்தாள்...  அவள் பேச பேச அவனது முகம் ரத்தமென கோபத்தில் சிவந்து கொண்டே இருந்தது..அப்போதே அவள் சென்று இருந்தால் நடக்க இருக்கும் விளைவுகள் நடக்காமல் இருந்து இருக்கும் ஆனால் விதி யாரை விட்டது...

அவளோ விடாமல், "உங்களை இப்படியே விட்டு விட்டு தான் நீங்க இப்படி செய்யறீங்க ..நானே தரேன் சாப்பிடுங்க..நீங்க சாப்பிட்டு தான் ஆகனும்..என் கை மணம் எப்படி இருக்குன்னு ஒரு வாய் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க "...என்று இலகுவாக பேசியவள் ஒரு வாய் உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விட போக அவனுக்கு எங்கிருந்து தான் ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை,



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌👌💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top