Share:
Notifications
Clear all

இதயம் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

இதயம் : 8

அவன் மனமும் அதிர்ந்தது...அவளது சில்லிட்ட கரங்கள் அவனது முதுகை வளைத்து பிடித்து இருக்க அவளது பயந்து வெளிறிய முகம் அவனது மார்போடு ஒன்றி இருந்தது... அவனது கைகளை பின்னால் கட்டிக் கொண்டு எவ்வளவு தூரம் விரைப்பாக அவனால் நிற்க முடியுமோ அவ்வளவு தூரம் அவன் நிற்க அவளது கண்ணில் வழிந்து கொண்டு இருந்த  கண்ணீர் அவனது மார்பில் வழிய ஒரு நொடி இளகினான்...

அதன் பிறகு அவனது கைகள் அவளை ஆதூரமாக அரவணைத்து அவளுக்கு ஆறுதல் கூறின..அவளோ நடந்ததிலே பயந்து கொண்டு விசும்பி கொண்டே இருந்தாள்.. அவன் எவ்வளவு சொல்லியும் அவள் விசும்பலை நிறுத்தாமல் இருக்க இரண்டு வேலைக்காரர்கள் வேறு அவளையும் அவளது ஆடையையும் அவர்களது நெருக்கத்தையும் பார்த்து கொண்டு நிற்க அது அவனது கருத்திலும் வந்தது..

பின் அவன் என்ன நினைத்தானோ என்னவோ அவளை அப்படியே தூக்கி கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள்... அவளும் பயத்தில் அவனது கழுத்தை கட்டி இருந்தாள்..கண்களை திறந்தாலே அவளுக்கு அந்த நாயின் முகமே நியாபகத்துக்கு வர அவள் உடல் நடுங்கி அவனது கழுத்தை கட்டி கொண்டு இருந்தாள்..

அறைக்குள் செல்லும் போதே , "எப்படி நாய் கூண்டை விட்டு வெளியே வந்துச்சு"... என்று கேட்க 

அவனது கோபமான குரல் கேட்டு மேலும் பயந்தவள், " நான் தான் அது கூட பழகலாம்னு போனேன் ஆனா ஆனா" ...

என்று அவள் மேலும் விசும்ப அவனுக்கு தெளிவாக புரிந்தது இது அவளுடைய வேலை தான் என்று அதனாலே தான் கூண்டை விட்டு வெளியே வந்த நாய் அவளை துரத்தி இருக்கிறது என புரிய அவளை முறைத்தான் அவள் எங்கே அவனை பார்த்தால் இல்லை...

அவளை தூக்கி கொண்டு வந்தவன் அவனது அறைக்குள் சென்று அவளை கட்டிலில் கிடத்தினான்... அவளோ பயத்தில் விசும்ப அவள் அருகில் அமர்ந்து அவள் உடலில் எங்கே காயம் ஏற்பட்டு இருக்கிறது என பார்வையிட தொடங்கினான்...

அவள் அன்றைய தினம் அணிந்து இருந்தது வேறு பாவாடை , தாவணி  மேலே ஸ்வெட்டரும் அணிந்து இருக்க அவளது பாவாடை நாலா பக்கமும் கிழிந்து அவளது உள்ளாடை தெரியுமளவுக்கு காட்சி அளித்து கொண்டு இருக்க அவளது வெண்ணிற காலில் வரி வரியாக நாயின் நக கீரல்கள் நல்ல வேலையாக நாய் கடிக்கவில்லை கையும் காலும் வயிற்றில் சிறிய காயம் முகத்தில் கன்னத்தில் சில வடுக்கள் மட்டுமே இருக்க வேகமாக மருந்தை எடுத்தவன் அவளது பாவாடையை தூக்கினான்..

அவளோ அதிர்ந்து , "என்ன செய்யறீங்க விடுங்க சார் "...என பதறி எழ அவனோ பண்றதையும் பண்ணிட்டு என நினைத்து முறைத்து , "மருந்து போடணும் கையை எடு"...

"நானே போட்டுக்கறேன் இங்கே கொடுங்க "...என்றாள் தயக்கமாக ...

அவளது காலை அந்த கிழிந்த பாவாடையால் மூட அவனுக்கு பொங்கும் ஆத்திரம் வந்தது ..ஏன் நான் இதுக்கு முன்னாடி இவளை இப்படி பார்த்ததே இல்லையா என்னமோ ரேப் பண்ண போற மாதிரி துடிக்கிறா?? என அவனது ஈகோ கிளர்த்து எழ அதனால் தானே அவளுக்கு பூசி விட வேண்டும் என்ற நிலைக்கு அவனை அவள் தள்ள வைக்க அவன் வெறி கொண்ட வேங்கை ஆனான்..

அவனது மார்பில் கையை கோர்த்து நிற்க அவளோ அவனை பார்த்தவள், வேகமாக கண்களை மூடினாள்... ஏனெனில் அவனது உடையை இப்போது தான் அவள் சரி வர கண்டாள்...

ஏதோ துண்டு விளம்பரத்துக்கு நிற்பவன் போல அவன் வேற்று மார்பில் கையை கட்டி  தனது முறுக்கேறிய உடலை அவளுக்கு காட்டி கொண்டு அவளை முறைத்து பார்த்து நிற்க அவளோ அவனை அந்த கோலத்தில் கண்டு விட்டோமே என நினைக்க இவ்வளவு நேரமும் நீ அந்த இடத்தில் தான் படுத்து கிடந்தாய் என அவளது மூளை அவளுக்கு அறிவுரை கூற அவள் மூலம் அதை நினைக்க நினைக்க சிவந்து கொண்டே போனது...

தேவராஜோ அவளது வெட்கத்தை பார்த்தவனுக்கு தக்க தருணத்தை அவள் ஏற்படுத்தி கொடுக்க அவன் அவள் கால்களில் மருந்தை பூச அவளோ திடுக்கிட்டு விலக , அவளது விலகல் அவனது அகங்காரத்திற்கு வடிகால் இட்டது...

அவள் முகத்திலே தன் கையில் இருந்த மருந்து டப்பாவை தூக்கி எறிந்தவன்," வெளியே போ டி..உன்னை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்..என் பெட்ல படுக்க வெச்சு இருக்கேன் பார் என்னை சொல்லணும்... என்னை பார்த்தா எப்படி இருக்கு உன்னை ரேப் பண்ற மாதிரி இருக்கா ஒரு வாரம் நினைவு இல்லாமல் படுத்து கிடந்தியே அப்போ எனக்கு நீ நினைக்கிற மாதிரி செய்ய தெரியாதா?? இல்லை இதோ என் வீட்டில் தானே தினமும் இருக்க உன்னை தொட எனக்கு தெரியாதா ந??.. நான் தேவ ராஜ் டி எனக்கு உன்னை பார்த்தா எந்த உணர்வும் வரல ..நீ அந்த அளவுக்கு என்னை ஈர்க்கவும் இல்லை..உதவி செய்யலாம்னு வந்தா என்னை கேவலமா நெனைச்சுட்டீல இனி நீ இங்கே ஒரு நிமிஷம் இருக்க கூடாது..உன்னை வேலைக்கு சேர்த்தின அந்த பரதேசியை வர சொல்லி உன்னை கூட்டிட்டு போக சொல்லு கிளம்பு டி இங்கிருந்து...எந்த நாயும் என்னை பார்த்துக்க வேணாம் ..எனக்கு தனியா இருக்க தெரியும் "...என்று அவளை விரட்ட

அவளோ என்ன இவன் வாய்க்கு வந்தபடி உளறுகிறான் என நினைத்து, " சார் நீங்க என்னை தப்பா.."..என தொடங்க

பேசாதே என்பது போல கையை உயர்த்தியவன், "வெளியே போறியா இல்லை நாயை அவிழ்த்து விடவா".. என்க அவனது கோபம் கண்டு மேற்கொண்டு வாயாடாமல் மெல்ல எழுந்து வெளியே சென்றாள் இவன் தன்னை புரிந்து கொள்ளவே மாட்டானா என்ற வலி அவள் மனதில் உருவானது...

இது தான் நடந்த விஷயம் அவன் மனதில் என்ன இருக்கு என்று அவளாலும் புரிந்து கொள்ள முடியவில்லை அவனாலும் அவளை புரிந்து கொள்ள முடியவில்லை..இவர்கள் இருவரும் இன்னும் அறியாத விடயம் இருவர் அருகாமையும் ஒருவருக்கொருவர் விரும்பியே இருந்தனர்..அந்த விருப்பம் இவர்கள் இருவரும் அறியும் நேரம் ஒரு பிரளயம் இவர்களுக்கு இடையே உருவாவதை இவர்கள் இருவராலும் தடுக்க இயலாது...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top