Share:
Notifications
Clear all

இதயம் 7

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 7

   ஒரு வழியாக தேவா எஸ்டேட்டின் வாழ்க்கை அன்பரசிக்கு பழக்கமாகி போனது...அவள் அங்கே வந்து சேர்ந்து இன்றோடு ஆறு வாரங்கள் கடந்து விட்டன..

அன்பரசி காலையில் எழுந்தால் என்றால் அவளுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தயார் செய்வாள் கூடவே வீடு எல்லாம் சுத்தமாக வைத்து கொள்வாள் ..வீட்டுக்கு வெளியேயும் சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்வாள்.. ஒரு பெண் வீட்டில் இருந்தால் எப்படி இருக்குமோ அது போல அழகாக மாறி இருந்தது...

மதியத்துக்கு மேல் அவள் வீட்டுக்கும் பிரபுவுக்கும் அழைத்து உரையாடுவாள்.. அவள் வீட்டில் ஏற்கனவே சொல்லி வைத்து இருக்கிறாள் அவள் இருப்பது மலை பிரதேசம் என்றும் சில சமயங்களில் லைன் கிடைக்காது என்றும் நானே உங்களை அழைக்கிறேன் என்றும் கூறுவாள்..ஆனால் அவளால் நெருங்கவே முடியாத ஒரு விஷயம் தேவ ராஜ் மட்டுமே..

அவளால் துளியும் அவனை நெருங்கவே முடியவில்லை இது நாள் வரை ஒரு கப் காபி அவள் கையால் அவன் வாங்கி குடித்தது இல்லை...அவள் அங்கே வந்தது முதல் மிக சரியாக சொல்ல வேண்டுமெனில் அவள் அவளுக்கு வேண்டிய உணவை சமைக்க தொடங்கியது முதல் அவளுக்கு தேவையான பொருட்கள் வீடு தேடி வரும்...அவன் அவளுக்கு குறைவு ஒன்றும் வைக்கவில்லை அதே நேரம் அவளை தன்னருகில் நெருங்கவும் விட வில்லை ..

பொதுவாக தேவராஜ் வீட்டை விட்டு வெளியே சென்று அவள் பார்த்ததே இல்லை என்று கூறலாம் மழை இல்லாத சமயத்தில் ஒரு சிலர் வந்து அவனது எஸ்டேட்டில் வேலை செய்ய மாலை ஆனதும் வந்து சம்பளம் மட்டும் வாங்கி செல்கின்றனர்...

மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வெளியே செல்வான்...அவன் உலகமே அந்த நான்கு நாய்களும் அவனது அறை மட்டுமே வேறு எதிலும் நாட்டம் இல்லாதவன் இவள் வந்தது முதல் பிரபுவை அவன் தவிர்த்து வருகிறான்...பிரபுவிற்கும் தன் நண்பனின் கோபம் புரிந்ததாலும் அன்பரசி அங்கே இருக்கும் தைரியத்தில் தன் நண்பனை அவன் போக்கில் விட்டு வைத்து இருக்கிறான்...

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தேவராஜ் மிகுந்த ஆக்ரோஷமாக இருப்பதாக அவளுக்கு பட்டது..அதுவும் அவன் எப்போது எழுகிறான் இல்லை எப்போது உணவு உண்கிறான் என்று அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை எப்போதும் அவனது அறையை அடைத்து வைத்திருக்கிறான்..எப்போதும் அவனது அறையில் இருந்து விடாமல் சிகரெட் வாடை வந்து கொண்டே இருந்தது அதை வைத்து தான் அவள் அவன் எழுந்து இருக்கிறான் என உணருவாள்..

 எதற்காக அவன் இப்படி இருக்கிறான் ஒரு வாரத்திற்கு முன் என்ன நடந்தது என கேட்டால் பெரிதாக ஒன்றும் நடந்து விட வில்லை அவனது வளர்ப்பு நாய் ஒன்று இவளை துரத்தி கொண்டு வந்தது அவ்வளவே..அதற்கு தான் இந்த அக்கப்போறா என நினைத்து ஒரு வாரம் முன்பு நடந்த விஷயத்தை அசை போட்டாள் அன்பரசி...

ஆம் ஒரு வாரம் முன்பு வீட்டில் அமர்ந்து இருப்பது அவளுக்கு என்னவோ போல இருக்க மழை ஒன்றும் இல்லாமல் கால நிலை நல்ல முறையில் இருக்க சற்று வெளியே நடக்க வேண்டும் போல இருக்க உடனே கிளம்பி விட்டாள்... அவன் அவளை தேட மாட்டான் என்று அவளுக்கு நன்றாகவே விளங்கினாலும் எதற்கும் அவனிடம் ஒரு வார்த்தை கூறி விட்டு செல்வோம் என நினைத்து, "சார்..நான் வெளியே இருக்கேன் " என்று குளிக்கும் அவனது குளியல் அறை கதவை தட்டி கத்தி விட்டு செல்ல  அவள் சத்தம் அவனது காதை அடைக்க எழுந்த கோபத்தில் எங்கேயோ போய் தொலை என்று நினைத்தவன் அவளுக்கு பதிலேதும் கூறாமல் குளிக்க தொடங்கினான்...

அவன் குளித்து முடித்த போது , "ஐயோ அம்மா ..காப்பாத்துங்க"... என்ற சத்தம் அந்த தேவா எஸ்டேட்டை பிளக்க அவனது குளியல் அறைக்கும் அவளது சத்தம் வர அவளின் குரலின் பதட்டத்தை உணர்ந்து ஏதோ ஆபத்து என எண்ணியவன் வேகமாக ஒரு துண்டை மட்டும் கட்டி கொண்டு வீட்டை விட்டு வெளியே சத்தம் வந்த திசை நோக்கி ஓடி வந்தான்...

 அவன் அந்த சமயம் தேவ ராஜ் கண்டது ஒன்று தான் அவனது வளர்ப்பு நாயில் ஒன்று  கூண்டை விட்டு வெளியே வந்து இருந்தது..அந்த நாய் மட்டும் அவனை போல அவளுக்கு அடங்காது...அந்த நாய் தேவ ராஜின் செல்லம்...ஏனோ இவள் மீது வெறுப்பாகவே இருக்கும்...

அப்படி இருக்க கூண்டில் அடைத்த நாய் எப்படி வெளியே வந்தது என யோசித்தவன் அவள் அருகில் வேகமாக செல்ல அதற்குள் அந்த நாய் அவளது உடையை கிழித்து அவளது தோளில் தனது கூர்மையான நகங்களால் கிழித்து கொண்டு இருந்தது...அன்பரசி பயத்தால் கத்தி கொண்டு இருந்தாள்..சத்தம் கேட்டு அவனது எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டு இருந்த இருவர் தூரமாக ஓடி வந்து கொண்டு இருந்தனர்..

அந்த காட்சியை கண்டதும் அவனது மனம் ஒரு நொடி பதற, " ராக்கி"... என்று கத்த அவளை குதறி கொண்டு இருந்த அந்த நாய் அப்படியே பூனையாக மாறி சிலை போல நின்றது....இருந்தும் அவனது கோபம் அடங்கவில்லை...கீழே கிடந்த கட்டையை எடுத்து அந்த நாயை அடிக்க அந்த நாயோ வேகமாக தனது கூட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டது...

அவளோ பயத்தில் அவனை நோக்கி ஓடியவள் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என நினைக்க மறந்தாள் அதே நேரம் அவன் எந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்தான் என்பதையும் அவள் மறந்தாள்..ஓடி வந்து அவனை வேகமாக கட்டி கொள்ள தேவராஜின் உடல் அந்த நொடி இறுகியது...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top