இதயம் 6
இதயம் : 6
அவனுக்கு தாபம் உணர்வு கிளர்ந்து எழுந்தது அதும் அவளின் துடிக்கும் இதழ்களை பார்க்கும் போதே அன்று முத்தமிட்டது மீண்டும் நினைவு வர அவளின் மென் இதழ் நோக்கி குனிந்தான்..அவளின் செர்ரி இதழ்கள் அவனை மீண்டும் சுவைக்க அழைக்க அது அவனது உணர்ச்சிகளை பெருக்க அவளின் உதட்டில் மெல்லிய முத்தங்களை வைத்தான் அவளுக்கு இன்னும் போதை தெளியவில்லை மருந்தின் வீரியத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டே அவளை முத்தமிட்டான்...அவனுக்கு தான் இப்போது காமம் தலை தூக்கி இருந்ததே..
ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதே இலேசாக அவளிடம் இருந்து அதிர்வுகள் கிளம்ப மெல்ல அவள் முகம் நோக்கி பார்த்தவனின் விழிகளில் வேறு பெண்ணின் உருவம் தென்பட அவனுக்கு தீ சுட்டது போல இருக்க அடுத்த நொடி அவளை விட்டு விலகி இருந்தான்..
கண்களை கசக்கி சரியாக நோக்க அது அவள் தானா என பார்க்க அவனது மனக்கண்ணில் நோக்கிய பெண் இல்லை அவள் இது அன்பரசி தான் என புரிய தேவராஜ்க்கு சமயம் பிடித்தது அப்படியே எதிரே உள்ள சேரில் தலையில் கையை கொடுத்த படி அமர்ந்து விட்டான்..
என்ன செஞ்சிட்டு இருக்கேன் நான்..அதும் நினைவு இல்லாத பெண்ணிடம் ..அவள் தான் நினைவு இல்லாமல் என் அருகில் நெருங்கினாள் என்றால் நானும் நெருங்குவதா என நினைத்து சற்று முன் அவனுக்கு பொங்கி எழுந்த தாப உணர்வுகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது..அதும் இத்தனை நாட்கள் அல்லாமல் அவளின் நினைவு எப்படி எழுந்தது என நினைக்கும் போதே அவனது தலை வின் வின் என்று வலித்தது ..
ஏதோ ஒரு வீட்டில் எவனோ ஒருவனின் கட்டிலில் எவனோ ஒருவனுடன் அவனுடைய மனைவி என்ற பெயரில் அவனுடன் லயித்து கொண்டு இருக்கும் அவளை பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும் ?? மாற்றான் மனைவியை நினைக்கும் அளவுக்கு இந்த தேவ ராஜ் கேவலமான பிறவி அல்ல என்று அவனே அவனது மனதோடு கூறி கொண்டான்..
ஆனால் அவன் ஒன்றை மறந்து விட்டான் அவன் அவனுக்கு யார் என்றே தெரியாத ஒரு அபலை பெண்ணை சற்று முன் என்ன செய்ய இருந்தான் என்பதையும் அந்நேரம் லாவகமாக மறந்து விட்டான்..இந்த இடத்தில் அவன் கள்வன் ஆகி போனானோ அந்நிய பெண்ணை தொட மாட்டேன் என கூறுபவன் அவளை எந்த தைரியத்தில் தொட இருந்தான் அது அந்த இறைவனுக்கே வெளிச்சம்..
அவனுக்கு அந்த அறையில் இருப்பதே மூச்சு முட்டுவது போல இருக்க அவன் சிகரெட்டை எடுத்து கொண்டு வீட்டுக்கு வெளியே காரிடாரில் அமர்ந்து விட்டான்...அந்த பால் வண்ண நிலவை வெறித்து கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன் அந்த சிகரெட் கரைவது போல பல நினைவுகளை கரைக்க நினைத்தான் முயற்சி மட்டுமே அவன் செய்தான் ஆனால் முடியவில்லை..அதுவே அன்பரசிக்கு அடுத்த இக்கட்டை வழி வகுக்க போகிறது என தெரியவில்லை..
ஒரு வழியாக அன்பரசிக்கு உடல்நிலை சரியாகி இரண்டு நாள் ஆகிறது அவளால் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ள இப்போது முடிகிறது ...அந்த இரண்டு நாட்களும் கூட அவனே எல்லா வேலைகளையும் செய்ய அன்பரசி மனதில் ஹீரோ ஆகி இருந்தான் தேவ ராஜ்...அவன் அவளை முரட்டுத்தனமாக முத்தமிட்டது கூட அவள் மனதில் ஏதோ ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டது...ஆனால் அவளே அவனை கண்டு பயந்து வில்லன் போல நினைத்து ஓடி ஒளிய போகும் நாளும் வெகு விரைவில் வர போகிறது என்பதை அவள் அறியவில்லை...
"ச்ச என்ன மனுசன் இந்த சார்..ஆம்பிளை னா இப்படி இருக்கணும் எப்படி பார்த்துக்கறாரு இவருக்கு மனைவியா வர போற பொண்ணு கொடுத்து வெச்சவங்க..பிரபு சார் மாதிரியே இவரும் நல்லவர் தான் ஆனால் என்ன எப்போ பாரும் முறைச்சு கிட்டே இருக்காரு அது தான் ஒரு குறை அவரை பார்த்துக்க நான் இங்கே வந்தா அவரு என்னை பார்த்துக்க மாதிரி ஆகிடுச்சே "...என்று நெனைத்தவள் இத்தனை நாள் குளிக்காமல் படுத்து கிடந்ததற்க்கு அலுப்பு நீங்க குளித்தவள் மெல்ல அடுக்களைக்குள் சென்று உணவை சமைக்க ஆரம்பித்து இருந்தாள்..
அவளுக்கு அவனை போல ரொட்டியும் முட்டையும் பாலும் தின்னு தின்னு அவளது வாய் அழுத்து விட்டது..நல்ல சாம்பார்க்கும் மிளகு ரசத்துக்கும் அவளது நாவு ஏங்க உடனே களம் இறங்கி விட்டாள் அன்பரசி..
அவன் காலை எழும் போதே நல்ல வெண்பொங்கல் சாம்பார் வாசனை மூக்கை துளைக்க அவனோ காலை எழுந்து எப்போதும் போல அவனுக்கு தேவையான காபியை தயாரிக்க அடுக்களைக்குள் நுழைய, " சார்
.எழுந்துடீங்களா??.. நீங்க என்ன சார் செய்யறீங்க?? அது தான் எனக்கு சரி ஆகிடுச்சே !!..இனி என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க நான் செஞ்சு தரேன்"... என்று கூற
அவனோ அவளை பார்த்து அவளுக்கு பதிலே கூறாமல் முறைத்தான்.. கிட்டத்தட்ட அவன் அவள் முதன் முறையாக அவளை பார்க்கும் போது அவன் எப்படி இருந்தானோ அதே போல இருந்தான்..கிட்டத்தட்ட ராட்சத உருவில் மாறி இருந்தான்...
அவளை முறைத்து கொண்டே அவன் வேலை செய்ய இவளோ மீண்டும் அடங்காமல், "சார் இங்க தாங்க சார்"... என்று உரிமையாக அவன் கையில் இருந்த கிளாஸை வாங்க போக அவனோ அவளை முறைத்து அந்த கிளாஸை வீசி எறிந்தான்..
அது மிக சரியாக அவளது கொதிக்கும் சாம்பாரில் போய் விழ நல்ல வேளை அவள் மீதோ சாம்பாருக்கோ எந்த பாதகமும் வர வில்லை.. அந்த கிளாஸ் அதனுள் விழுந்த விசையில் கொஞ்சம் சாம்பார் வெளியே தெறித்தது அவ்வளவே..
அது போதுமே அவளுக்கு பழைய நினைவுகள் எழ அவனும் அதையே தான் அந்த நேரம் நினைத்து கொண்டு இருந்தான் போலும்.. அவளை உஷ்ணத்துடன் பார்த்து, "உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா??? இதோ பார் அன்னிக்கு சொன்னது தான் இனி உன்னை என் கண் முன்னாடி பார்க்க கூடாது இல்லாட்டி"..
என்று உதட்டை பார்க்க அவளோ அவளது உதட்டை வேகமாக உள்ளே இழுத்து மாருதி வாய் போல மாற்றி கொண்டாள்...அவனோ அவளை கண்டும் காணாமல் முறைத்து கொண்டே சென்றான்..
அவளோ , "இவருக்கு என்ன தான் ஆச்சு நல்லா தானே இருந்தார் நேத்து வரைக்கும் இன்னிக்கு என்ன முருங்கை மரம் ஏறி இருக்காரோ "...என நினைத்து செல்லும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்...
