இதயம் 5
அத்தியாயம் : 5
அவனது அறைக்கு சென்றவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து தூக்கியபடியே சென்றான்... அவளும் மரக்கட்டை போல அவனது மார்பில் தலை வைத்து படுத்து கொண்டாள்..உள்ளே சென்றவன் அவனது அறைக்கு என்று இருக்கும் பிரித்தேயக ஹீட்டரை இட்டவன் அவளை தன்னுடைய படுக்கையில் கிடத்தினான்..அவளது கை,கால்கள் எல்லாம் ஆவி பறக்க சூடாக தேய்த்து விட்டான்..
பின் இரண்டு கம்பளிகளை எடுத்து போர்த்தி விட்டு மருத்துவரை அழைக்க அவரோ போனை எடுத்தவரிடம் விஷயத்தை தேவராஜ் சுருக்கமாக கூற அவரோ தன்னால் இப்பொழுது வர இயலாது ஊர் முழுவதும் மழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் பழுதடைந்து இருக்கிறது என்று கூறியவர் நான் சொல்வது போல செய் என்று கூறி ஒரு சில கை வைத்தியங்களும் சில மருந்துகளையும் கூறினார்..அந்த மருந்துகள் அவன் வசம் இருந்ததால் அவனால் இவளை இந்த நிலையில் அவனை தனியே விட்டு வாங்க தேவை இல்லாமல் போனது...அவனுக்கும் கொஞ்சம் சமாதானம் ஆனது...
அதன் படி வேகமாக சூடு நீர் வைத்தவன் அவள் மேல் போர்த்தி இருக்கும் கம்பளிகளை அகற்றி வெந்நீரில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் சிறு துளி விட்டு கலந்து ஒரு துணியை நனைத்து அவளது நெற்றி கை கால்கள் என ஆவி பறக்க தேய்த்தான்... பின் சூடான பால் கொண்டு வந்து அவளுக்கு குழந்தை போல புகட்ட அவளோ என்ன உள்ளே செல்கிறது என்ற போதம் கூட இல்லாமல் ஒரு மிடறு விழுங்கியவள் அப்படியே வாந்தி எடுத்தாள்...
அவளால் காய்ச்சலின் வீரியத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை...அவளுக்கு நினைவு இல்லை..அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்கே தெரியாத நிலையில் இருந்தாள் அன்பரசி...
தேவ ராஜ் மிக பொறுமையாக அவளை கையாண்டான் நேற்று அவளிடம் காய்ந்து விழுந்தவன் தானா என்பது போல இருந்தது அவனது செய்கை...
அவள் வாந்தி எடுத்ததை எல்லாம் துணி கொண்டு துடைத்தான்... கூடவே அவள் அணிந்து இருந்த ஆடை நனைந்து அவள் நடுங்க ஆரம்பித்து இருந்தாள்..அப்போது தான் அவன் சரியாக கவனிக்க அவனது ஆடைகளை அவள் அணிந்து இருப்பது புரிய ஏதோ நினைத்தவன் அவளை பார்த்து கொண்டே அவள் படுத்து இருந்த அறைக்கு சென்றான்..
வேகமாக அவள் அறைக்கு சென்று அவள் பை, அவள் காய போட்டு இருக்கும் துணிகளை பார்க்க அதில் ஒன்று கூட சரியாக காயவில்லை மேலும் அவள் இந்த இலேசான ஆடைகளை இப்போது அவள் அணிவது உகந்தது அல்ல என்பதை உணர்ந்தவன் அவனது அறைக்கு செல்ல அவளோ குளிரால் சுருண்டு கொண்டு இருந்தாள்..
பின் அவனது கப்போர்டை திறந்தவன் அவனது கனமான உடைகளை எடுத்தவன் அவள் அருகே வந்தான் ..ஒரு நொடி போதம் இல்லாத பெண்ணின் ஆடையில் கையை வைக்க தயங்கியவன் பின் அவளது நிலையை கருதி அவளது உடைகளை அகற்றினான்..
அவளது உள்ளாடைகள் முதல் அகற்ற வேண்டிய நிலைக்கு தேவராஜ் தள்ளப்பட்டு இருந்தான்..அந்த நேரங்களை அவன் மிக கொடுமையாக உணர்ந்தான்..
அன்பரசி உடலில் ஒட்டு துணி இல்லாமல் படுத்து இருக்க வேறு ஒரு ஆண் மகன் என்றால் ஏதாவது உணர்வுகள் தோன்றி இருக்குமோ தெரியாது அவன் தேவராஜ் அவனுக்கு அது போல தோன்றாது..சாகும் நிலையில் இருப்பவளிடம் காம பார்வையோ காம நோய் வர அவன் ஒரு காம வியாதி பிடித்தவன் அல்ல...எந்த உணர்வும் இல்லாமலே அவளது உடைகளை அகற்ற துவங்கினான்...ஆனால் எப்போதும் அவன் இப்படியே இருப்பான் என்றும் சொல்லவும் முடியாது...அவன் ஒரு புரியாத புதிர்...
அந்த நொடி தேவராஜ்க்கு அவன் ஒரு ஆண் என்றோ அவள் ஒரு பெண் என்றோ தோன்றவில்லை பாலினங்களுக்கு அப்பாற்பட்டு உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அவன் அவளுக்கு உடைகளை மாற்றினான்..அவனும் உணர்ச்சி உள்ள மனிதன் தான் ஆனால் இன்று அதற்கு அப்பாற்பட்டு இருந்தான்..
ஆனால் பெண்ணவளுக்கு அந்த சமயத்திலும் அவனது தொடுகை உணர்ந்ததோ என்னவோ அவளது கையால் மறுக்க அவனோ நினைவே இல்லாமல் இமை மூடியபடியே மறுக்கும் அவளை தீர்க்கமாக பார்த்து கொண்டே அவளது உடைகளை மாற்றி விட்டான்..
பின் கம்பளி கொண்டு அவளை போர்த்தி விட்டவன் ஒரு குழந்தை போல பார்த்து கொண்டான்..அவனுக்கு நேற்று அவளை முரட்டுத்தனமாக முத்தம் கொடுத்தது வேறு குற்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கவே அவளுக்கு அவன் இழைத்த தவறுக்கு தண்டனையாகவே கருதி அவளுக்கு பணி விடைகள் செய்தான்..
கடந்த ஒரு வாரமாக அவன் தான் அவளை கவனித்து வருகிறான் அவளை விட்டு துளியும் நகரவில்லை அதுவும் ஒரு வாரமாக பேய் மழை பெய்ய ஒவ்வொரு இடிக்கும் அவள் பயந்து பிதற்ற தேவராஜ் அருகே வந்து அவளது கையை பிடிக்கவும் அமைதி ஆவாள்...
இரவு ஆனதும் அவளுக்கு காய்ச்சலால் அவளது உடல் தூக்கி போட அவனும் பயந்து ஏதாவது ஆகி விடுமோ என நினைத்து அவள் அருகில் படுத்து கொள்வான்..
அப்படி ஒரு நாள் அவன் படுத்து இருக்கும் போது ஒரு மென் காலும் மென் கையும் அவன் மீது இட்டு இருக்க அவன் மார்பில் தலை வைத்து படுத்து கொண்டு அன்பரசி துயில் கொண்டு இருந்தாள்...அவள் ஒரு தலையணை என நினைத்து இருக்கலாம் சுகமாக துயில் கொண்டு இருந்தாள்..
அவளுக்கு தான் இன்னும் நினைவு வரவில்லையே ஆனால் அவனுக்கு இருக்கே தெளிவாக இருக்கிறதே அவளது சூடான மூச்சுக்காற்றை அவனது இதயத்துக்கு அவள் செலுத்த அவனது உடல் உணர்ச்சிகளுக்கு தாவியது ...
அவளை ஒட்டி நெருங்கி படுத்து தன் தலைக்கு மேல் கொடுத்து இருக்கும் கையால் அவளது முதுகை வருட அவளோ நெளிந்து கொண்டே அவனை மீண்டும் ஒண்ட அவனுக்குள் இருக்கும் காமன் முழித்து கொண்டு அவனை இம்சிக்க மெல்ல அவள் புறம் திரும்பி அவள் மீது கையிட்டான்..
கிட்டத்தட்ட அவளுக்கு மூச்சு விட கூடிய இடைவெளியை மட்டும் கொடுத்தவன் அவளை நெருங்க அவனது உடல் அவளது பெண்மையின் மென்மையில் மோதி இதற்கு மேல் இடம் இல்லை என்று அவனை தடை செய்ய அவளது இளமை அவனது உணர்ச்சிகளை தூண்டி விட மெல்ல அவளது நெற்றியில் இதழ் பதிக்க அவனுக்குள் மோகராகம் மீட்டியது..
