இதயம் 4
அத்தியாயம் : 4
அன்பரசியின் கண்கள் இலேசாக குளம் கட்ட போகும் முன்னே தன்னை நிலை படுத்தியவன் அவள் கண்களை பார்க்க அவள் கண்கள் என்ன செய்தாய் என்னை என தேவ ராஜை குற்றப்படுத்துவது புரிய அந்த போதையிலும் அவனுக்கு புரிந்தாலும் அவனுள் இருக்கும் அகங்காரம் வெளியே வந்து அவளை பார்த்து திமிராக , "உனக்கு தான் நான் வாயில வார்த்தையா சொன்னது புரியலையே அது தான் வாயால சொன்னேன் இப்போ புரியுதா வெளியே போடி"... என்று திமிராக கோபத்துடன் கூற
அவளுள் அவனின் கோபம் இலேசாக பயத்தை கொடுக்க
, " நான் வெளியே போறேன் போறேன்"... என்று கலங்கிய விழிகளில் கூறி அவனை திரும்பி பார்த்து கொண்டே வெளியே செல்ல , "இனி இந்த ரூம்குள்ள கூட நீ வர கூடாது வந்த இது தான் நடக்கும்"... என்று குலறினான்...
அவளோ அவனது அறையை விட்டு வெளியே வர போதையின் வீரியத்தில் அப்படியே அவன் உறங்கி போக அவளோ அவனுக்கு எதிரே இருந்த அறையை திறந்து பார்க்க அங்கே ஒரு சிறிய கட்டில் இருந்தது..அதனுடன் சில பழைய பொருட்கள் அடங்கி இருந்தது...அந்த அறையும் நல்ல காற்றோட்டமான அறை தான்..
அந்த அறைக்குள் நுழைந்தவளுக்கு அவனது கோலத்தை கண்டு மனதில் பிடித்து இருந்த பயம் இன்னும் விட்டு விலகவில்லை அவன் பாட்டிலை தூக்கி அவளை நோக்கி அடித்த அடி அவளது தலையில் பட்டு இருந்தால் இந்நேரம் அவளது உயிர் போய் இருக்கும் அது மிக சரியாக அவளுக்கு எதிர்புறமாக தான் விழுந்து உடைந்தது..
"இவர் என்ன இப்படி கோபப்படுறாரு".. என நெனைத்தாலும் தன்னுடைய வேலை அது தானே என நினைத்து தன் மனதை தேற்றியவளின் மனம் தான் சற்று முன் நடந்த இதழ் ஒற்றலை எண்ணி வெட்கியது...அவனுக்கு தான் போதையோடு தன்னுடன் அப்படி நடந்தான் என்றால் தானும் தானே அப்படி நடந்து கொண்டு இருக்கிறோம் என நினைக்கும் போதே அவள் உடல் கூசியது..
ஒரு வழியாக அவனுக்கு போதை அதனால் தான் இப்படி ஆகி விட்டது ஆனால் தனக்கு என்ன ஆனாலும் இந்த வேலையை விட்டு போக மாட்டேன் என உறுதி கொண்டவள் அலை பறக்கும் அவளது உடலை ஒரு நிலை படுத்தி ஒரு வழியாக சமாதானம் ஆனாள்..
அதன் பிறகு அவள் உடல் ஓய்வை கெஞ்ச வேகமாக அவளது பையை பிரிக்க அவள் கொண்டு வந்து இருந்த நாலு செட் துணிகளும் அவளை போல தொப்பலாகி இருந்தன..
ஆனால் அந்த அறையில் ஒரு கயிறு கட்டி அதில் அவனது ஆடைகள் காய போட்டு இருக்க ஆபத்துக்கு பாவமில்லை என நினைத்தவளுக்கு இதே நனைந்த ஆடைகளோடு படுக்க முடியாது என்றும் புரிய காலையில் காய்ந்ததும் துணியை எடுத்து போட்டுக்கலாம் என நினைத்தவள் அவனுடைய பனியனும் ஒரு ஷார்ட்ஸ்ஸை எடுத்து மாட்டியவள் அந்த படுக்கையில் மட்டை ஆனாள்...
விடியல் யாருக்கும் காத்து இருக்காமல் விடிந்தது அன்பரசி மெல்ல கண்களை திறந்து பார்த்தாள் தான் எங்கே இருக்கிறோம் என்று அவள் தலை கை கால்கள் எல்லாம் அடித்து போட்ட போல வேதனை அளிக்க அவளால் எழ கூட முடியவில்லை... தான் எங்கே படுத்து இருக்கிறோம் என்று நினைவு இல்ல மெல்ல பார்வையை சூழல விட அங்கே சுவற்றில் பிரபுவும் ,தேவராஜும் சிரித்து கொண்டு இருந்தனர்..
அப்போது தான் அவளுக்கு விளங்கியது தான் அவனுடைய அறையில் உறங்கி கொண்டு இருக்கிறோம் என்று தான் எப்படி இங்கே வந்தோம் எதிர் ரூமில் தானே தூங்கினோம் என நினைத்தவள் மெல்ல எழ போக , "அங்கேயே படு".. என்று அதிகாரமான குரல் ஒன்று வெளிப்பட்டது..
அவனே தான் ஒரு பெரிய ட்ரேயில் ஆவி பறக்க சூடு நீரை கொண்டு வந்து கொண்டு அவள் அருகே இருந்த டேபிளில் வைத்தவன் ஒரு துணியால் வெந்நீரில் முக்கி அவளது கையை பிடித்து துடைக்க போக," சார் என்ன செய்யறீங்க விடுங்க "...என்று அவள் கையை அவள் புறம் இழுத்து கொண்டாள்..
அவனோ அவளது கையை வலிய பிடித்து இழுத்து அவள் அணிந்து இருந்த ஸ்வெட்டரின் பட்டன்களை அவிழ்த்தான்..
அவளோ, " பதறி சார் என்ன செய்யறீங்க "...என்று பார்க்க தான் எப்படி ஸ்வெட்டர் என்று அவள் உடையை பார்க்கும் போது அவள் அன்று அணிந்து உடையல்ல இது அவள் வேறு உடையை உடுத்தி இருக்க அன்பரசிக்கு தலையே சுற்றி தன்னை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தவனின் மீதே விழுந்தாள்..
கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்பு..
காலை ஒரு பத்து மணி வாக்கில் தலையை பிடித்து கொண்டே எழுந்த தேவராஜ்க்கு அவனது அறையை கண்டதுமே நேற்றைய நிகழ்வுகள் நியாபகத்துக்கு வந்து போனது...அவளை முத்தமிட்டது அவனுக்கு நன்றாக நினைவு வந்தது அவளது மருண்ட விழிகள் அவளை குற்றப்படுத்தியது அவனுக்கு தெளிவாக நியாபகம் வந்து அவன் மனதின் அமைதியை கெடுத்தாலும் அவள் எதுக்கு இங்கே இருக்கிறாள் அவள் இங்கே இருந்தால் இனியும் இது போன்றவைகள் நிகழும் என அவனே அவன் மனதை சமாதானம் செய்து கொண்டான்..
படுக்கையை விட்டு எழுந்தவன் அங்கே சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை சுத்தம் செய்தவன் காலைகடன்களை முடித்து அடுக்களைக்குள் சென்று அவனுக்கு தேவையான காபியை தயாரிக்க கண்காளாலே அவளை தேடினான்..அவளை காண வில்லை என அறிந்ததும் தோளை குலுக்கி விட்டு காபியை குடித்தான்... எப்போதும் போல அவனுடைய நாய்களுடன் சிறிது நேரம் விளையாடினான்..பிறகு அவனது காலை உணவான பிரெட் மற்றும் முட்டையை உண்டான்..
பிறகு சிறிது நேரம் அவனது லேப்டாப்பில் பணியில் ஈடுபட்டான்..அவனது வேலை எல்லாம் முடிய மதியம் ஒரு மணி ஆகி விட்டது..அந்நேரம் வரை அவளது மூச்சு காற்று கூட அவனுக்கு கேட்க வில்லை ஒரு வேளை சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டாளோ என நினைத்தவன் மெல்ல ஒவ்வொரு அறையாக பார்க்க எங்கேயும் அவளது பொடி கூட தென்படவில்லை மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தவன் அவனுக்கு எதிரே இருந்த அறை மட்டுமே மீதம் இருக்க அந்த அறையும் சாத்தப்பட்டு இருக்க மெல்ல அந்த அறையை திறந்தான்..
அங்கே அவன் கண்ட காட்சி அவனை உறைய வைத்திருந்தது...போர்வை கூட இல்லாமல் அந்த படுக்கைக்கு அருகே இருந்த ஜன்னலை முழுமையாக சாத்தாமல் படுக்கையில் அன்பரசி ஒரு கையும் காலும் இழுத்த நிலையில் இருந்தாள்...
வேகமாக பதறி அவள் அருகே சென்று அவள் நெற்றியில் கையை வைக்க அனல் பறந்தது ..வேகமாக , "அன்பு".. என்று அவள் கன்னம் தட்டி அவளை எழுப்ப முயற்சி செய்ய அவளிடம் எந்த அசைவும் இல்லை..
அவனுக்கு இலேசாக பயம் வர அவளது மூக்கில் கை வைத்து பார்க்க மூச்சு வந்து கொண்டு இருந்தது அது வரை சமாதானம் அடைந்தவன் ஒரு போர்வை போலும் இல்லாமல் படுத்து இருக்கிறாள் என நினைக்க வேகமாக அவளை தன் அறைக்கு தூக்கி கொண்டு சென்றான் தேவராஜ்...
