இதயம் 3
அத்தியாயம் : 3
ஒரு வழியாக அன்பரசி வீட்டுக்குள் குளிரால் நடுங்கி கொண்டே வீட்டுக்குள் நுழைய உள்ளே சென்றதும் அந்த வீடே குளிருக்கு இதமாக கதகதப்பாக மாறியது..அவளை இவ்வளவு நேரம் ஆட்கொண்டு இருந்த குளிருக்கு இதமாக அந்த வீடே மின் கணைப்பானால் சூடாகஇருந்தது..மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்தாள் அன்பரசி..
அந்த மின் கணைப்பான் அருகில் சென்றவள் மெல்ல கைகளை ஆவி பறக்க தேய்த்து தன் உடலில் கொஞ்சம் சூடேற்றி கொள்ள அப்போது தான் மெல்ல மெல்ல அவளது உடலில் இருந்து குளிர் வெளியே சென்றது அங்கேயே அமர்ந்து விட்டாள் அந்த மின் கணைப்பான் தந்த சுகத்தில் அப்படியே அவள் அந்த வீட்டை அளவிட
பெரிய ஹால் வலப்புறம் சமையலறை போலும் அதற்கு மறுபுறம் மூன்று அறைகள் கொண்ட ஒரு கான்கீர்ட் வீடு அவ்வளவே..அந்த வீட்டுக்குள் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நிரம்பி வழிய அந்த வீட்டை அவள் ஏதோ மாளிகையை கண்டது போல பிரம்மித்து பார்த்து கொண்டு இருந்தாள்...அவளை பொறுத்தவரை அந்த வீடு ஒரு மாட மாளிகை ஆம் அவள் இருந்த ஓலை குடிசையை கண்டு வளர்ந்தவளுக்கு இது மாளிகையே தான்..அவளுக்கு அந்த வீடு ரொம்ப பிடித்து இருந்தது..மனமோ வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும் என்று கூறியும் கொண்டது...
அப்படியே கண்களாலேயே சுற்றி அவன் தென்படுகிறானா என பார்க்க அவனை காணவில்லை இவள் உள்ளே நுழைந்து அரை மணி நேரமாகியும் அவனை காணவில்லை எங்கே சென்று இருப்பான் என பார்க்க அவளுக்கு எதிரே ஒரு அறையில் இருந்து மூச்சை அமுக்கும் அளவுக்கு புகை வர அவளோ அந்த அறையை நோக்கி நடந்தாள் அவள் கையில் வைத்திருந்த பையோடு எங்கே சென்றாலும் அந்த பையை விட மாட்டாள் போலும் அது தான் அவளுடைய சொத்து ..
அந்த வாடை வந்த அறைக்குள் எட்டி பார்க்க ஒரு கையில் மதுவும் மறு கையில் சிகரெட்டும் பிடித்து கொண்டு அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்த தேவராஜ் அவனுக்கு எதிரே தெரிந்த ஜன்னலில் அந்த கொட்டும் மழையை வெறித்து கொண்டு இருந்தான்..
இவளோ மெல்ல அவனது அறைக்குள் நுழைந்து அவனை அமைதியாக பார்க்க அதற்கு விடாமல் அவனது சிகரெட் நெடி அவளுக்கு இருமலை கொடுத்தது..
அவளது அரவம் கேட்டு திரும்பியவன் விழிகள் கொவ்வைப்பழம் போல சிவந்து அவளை முறைத்து , "யாரை கேட்டு நீ உள்ளே வந்த வெளியே போ "...என்று விரட்டினான்..
அவனது முகத்தில் தெரிந்த கடுமையிலும் அவனது குரலில் தெரிந்த மாறுதல் வெளிப்பாடுமே அவளுக்கு புரிந்தது அவன் குடித்து இருக்கிறான் என்று அவள் வாயாடி தான் அப்பாவி தான் கொஞ்சமே கொஞ்சம் சாமர்த்தியசாலியும் கூட அது தான் வேகமாக அவனை இனம் கொண்டு கொண்டாள்..
அதுமட்டுமின்றி அவளது தந்தையும் இப்படி தான் குடித்து தன்னை கெடுத்து கொண்டவர் என்பதால் , "எதுக்கு சார் குடிக்கிறீங்க உடம்புக்கு ஆவாது சார்"... என்று மென் குரலில் கூற
அவள் கூறியதை கேட்டு அவனுக்கு எங்கிருந்து தான் கோபம் வந்ததோ அவளை பார்த்து , "இதோ பார் இப்போ சொல்றேன் உன்னை நான் பார்க்கவே கூடாது ..என் கண்ணில பட்டிடாத ...பட்ட நீ முடிஞ்ச...நான் இதை செய்யணும் அதை செய்ய கூடாது ன்னு சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை.. உன் வேலையை பாத்துட்டு போடி...பிரபு வர வரைக்கும் தான் உனக்கு சமயம் அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட நீ இருக்க கூடாது.. இந்த வீட்டுக்குள்ள நீ இருக்கிற மாதிரியே எனக்கு தெரிய கூடாது தெரிஞ்சா "... என்று கூறியவன் கையில் இருந்த மது பாட்டிலை எடுத்து அவள் இருக்கும் திசை நோக்கி விசிறி அடிக்க அது உடைந்து அந்த அறை முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தன..
அவளோ , "சார் என்ன செய்யறீங்க".. என்று பதறி விலக நல்லவேளையாக அவள் தப்பித்தாள்.. இல்லையேல் அவள் பரலோகம் கண்டு இருப்பாள் அவ்வளவே...அவனோ அதே இடத்தில் அமர்ந்து அவளை பார்க்க அன்பரசியோ காலை முன்னோக்கி வைத்து அந்த சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை எடுக்க போக
"அங்கேயே நில்லு டி நான் சொல்லிட்டே இருக்கேன் வெளியே போ டி..இல்ல "...என்று ஆக்ரோஷமாக கூறி வேறு ஒரு பாட்டிலை உடைக்க எடுக்க
அவளோ அசையாமல் இருந்தாள் அவளின் அந்த உறுதி அவனுக்கு எரிச்சலை கொடுக்க, " என்ன டி நான் சொல்லிட்டே இருக்கேன் உனக்கு புரியலையா".. என்று கத்தியவன் எழுந்து அவள் அருகே தள்ளாடியபடி வந்தவன் அவள் அருகே நெருங்கி நிற்க அவளுக்கு அவன் குடித்த மதுவின் நெடி அவளுக்கு குமட்டி கொண்டு வந்தாலும் அவனை பார்த்து கொள்ள தானே வந்து இருக்கோம் இதெல்லாம் பழகி கொள்ள வேண்டும் என நினைத்து அவன் அருகே அவள் நிற்க வெளியே போ என்று அவளை பிடித்து தள்ள அவளோ செல்லாமல் அவனை வெளியே உறுதியாகவும் உள்ளே நடுங்கியபடி பார்த்து கொண்டு இருக்க அதே நேரம் தேவ ராஜின் போதை கொள்ளும் கண்களும் அவளை தலை முதல் கால் வரை அளவிட்டது..
தான் எவ்வளவு கூறியும் வெளியே போகாமல் தன்னுடைய அறைக்குள் நுழைந்து.. தனது தனிமையை கெடுப்பவளின் மீது கோபம் அதிகரிக்க..
எப்படியாவது அவளை பயமுறுத்தி வெளியே துரத்தினால் தான் தனது ஈகோ நிறைவடையும் என்று முடிவு கட்டினான்..அதை நிறைவேற்றாமல் போனால் அவன் தேவராஜ் அல்லவே...
தனது ஈகோவுக்கு தீனி போடுவதற்காக தனக்கு எதிரில் நனைந்த பாவாடை தாவணியில் குளிரில் உடல் வெளிறி பயத்தை வெளிக்காட்டாமல் நின்றவளின் ஆணவத்தை அழிக்க வேண்டும் என்ற உந்துதல் தேவாவுக்கு ஏற்பட.. ஒவ்வொரு அடியாய்.. அடிமேல் அடிவைத்து அவளை நெருங்கினான்..
அவளது அருகாமையில் கொஞ்சம் கொஞ்சமாக தன் உணர்வுகளை இழக்க தொடங்கியவன், "உனக்கு நான் சொல்றது புரியலையா இப்போ புரிய வைக்கிறேன் பார் "... என்று அவளது கண்களோடு கண்களை கலக்க விட்டு நோக்கி நெருங்க
அவன் நெருங்க நெருங்க பயத்தில் இதயம் வாய்வழியே அவளுக்கு வெளியேற துடிக்க.. உதடுகள் நடுங்க.. மேலே துளிர்த்த வியர்வை உதடுகளில் குல்மொஹர் பூக்களின் மீது தென்படும் பனி நீரை போல் சொட்டு சொட்டாக வீற்றிருக்க..
தன் அருகே ஒரு அடி இடைவேளையில் நின்று கொண்டு இருந்தவளின் வெண்ணிற இடையை தன் புறமாக இழுக்க ,
அவன் இழுத்த விசைக்கு அவன் மீதே அவள் மோத மோதிய அடுத்த நொடி அவளது மென் இதழில் வன்மையாக முரட்டு முத்தம் கொடுத்து இருந்தான் தேவராஜ்.. அந்த முத்தத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை காமம் கத்தரிக்காய் ஒன்றும் இல்லை ஏதோ செய்ய நினைத்து ஏதோ ஒன்று நடந்தது..
போதையில் சித்தம் இழக்காமல் இருந்தவனின் மூளையை பெண்ணவளின் போதை சித்தம் கலைத்து அவனது அதீத மூளையை மழுங்கடிக்க அவளோடு முத்த போராட்டத்துக்கு தயாரானான்..
இதற்கு அவன் கூறி கொள்ளும் நியாயம் நான் போக சொன்னேன் நீ கேக்க வில்லை ..இனி என் பேச்சை மீறினால் இது தான் நடக்கும் என்பதை அவளுக்கு உணர்த்தவே அவன் செய்ய அன்பரசிக்கோ சித்தம் கலைந்து விட்டது அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்றே அவளுக்கு புரியவில்லை என்றாலும் தன் இதழ் அவனோடு இனியும் லயித்து ருசித்து கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு இதெப்படி சாத்தியம் என தன்னையே வெட்கியவள் அவனை தன் பலம் கொள்ள மட்டும் தள்ள அவன் அவளை விட்டான்...
இப்போது நடந்த காரியத்தை அவள் சற்றும் எதிர்பாராத காரணத்தினால் அவளது இதயம் படபடக்கும் ஓசை அந்த அமைதியான அறைக்குள் இருக்கும் இருவருக்கும் தெளிவாக கேட்டது...
