இதயம் 2
அத்தியாயம் : 2
அன்பரசிக்கு அந்த பெரியவர் கூறியது எல்லாம் கேட்காமல் இல்லை எல்லாம் தெளிவாகவே அவளின் இரு செவி வழியாக அவள் மூளையை வந்தடைந்து விட்டது..
எனினும் அன்பரசிக்கு அந்த வேலை முக்கியம் எத்தனை கடுமை என்றாலும் அவள் செய்தே தீர வேண்டும் என்ற நோக்கில் தான் அவள் வந்து இருக்கிறாள்..
பறந்து விரிந்த பச்சை கம்பளம் போல இருந்த அந்த எஸ்டேட்டில் இருந்து ஒரு சிறு புள்ளி போல தெரிந்த மலை முகட்டின் உச்சியில் இருந்த ஆள் அரவம் அற்ற இந்த வீட்டு வாசல் படியிலே நின்று கொண்டு இருக்கிறாள்..
அவள் வந்து சேர்ந்து அரை மணி நேரமாகியது குளிருக்கு அவள் உடல் மரத்து போயிருந்தது 100 ஏக்கர் பரப்பளவு உள்ள எஸ்டேட் முழுவதும் கடந்து வந்த கால்கள் இரண்டும் அவளிடம் ஓய்வுக்கு கெஞ்சியது ..ஆனால் யாரும் வீட்டுக்குள் இருந்து வெளியே வரும் விடயமே இல்லாமல் இருக்கின்றனர்..
இருந்தும் அவள் பிடிவாதமாக நின்று கொண்டு இருக்கிறாள்..
எக்காரணத்தை கொண்டும் இந்த இடத்தை விட்டு அவள் நகர கூட மாட்டேன் என்று சிலை போல நின்று கொண்டு இருந்தாள்..குளிரில் இறந்து போனாலும் போவேனே ஒழிய இவ்விடம் விட்டு நகரும் அறிகுறி
இரண்டு முறை அழைப்பு மணியை அடித்தும் யாரும் இன்னும் கதவை திறக்கவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் மனிதன் இருக்கிறான் என்பதற்கான அடையாளம் துளியும் இல்லை ஆனால் யாரோ இருக்கிறார் என்பதற்கான அடையாளம் இருந்தது அங்கே மனிதனை விட பெரிய சைஸில் உயர்ரக நான்கு நாய்கள் உணவு உண்டு கொண்டு இருந்தாலும் இவளை கண்டது முதல் இவளை விழுங்கும் அளவுக்கு கத்தி கொண்டு இருந்தது...கூண்டு மட்டுமில்லை என்றால் அவள் கதி அதோ கதி தான்..இந்நேரம் அவளை உணவாக உட்கொண்டிருக்கும்....
அவள் உள்ளுக்குள் அந்த இயற்கை அன்னையின் குளிரும் உள்ளுரே இந்த நாய்களின் மீது ஏற்பட்டு இருக்கும் குளிரும் சேர்ந்து அவளுக்கு பயத்தை கொடுக்க அதிலும் ஒரு நாய் அது அடைக்கப்பட்டு இருக்கும் கூண்டையே உடைக்கும் அளவுக்கு வெறி கொண்டு கத்தியது..அவளுக்கு அந்த நாய்களை கண்டு பயத்தில் இருந்தாலும் அவைகள் கூண்டில் தானே இருக்கின்றன என்ற தைரியத்தில் அங்கே நின்று கொண்டு இருக்கிறாள்...
அவள் இரண்டு முறை கத்தியும், அழைப்பு மணி அழுத்தியும் திறக்காத கதவு அந்த நாயின் ஆக்ரோஷமான சத்தத்தில் அந்த வீட்டின் கதவு உடனே திறந்தது...
ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் வாட்ட சாட்டமான ஒரு காட்டான் வெளியே வந்தான்.. காட்டானே தான் ஆதிவாசிகள் கூட தேவலாம் போல அந்த அளவுக்கு மோசமாக இருந்தான்..அவனது முகத்தை சரியாக பார்க்க முடியாத படி முகத்தில் ரோமத்தை வளர்த்தி வைத்து இருந்தான்..
அவனது கருமை படர்ந்த உதடுகள் கூறியது அவன் புகை பிடிப்பான் என்று அவனது கருமை படர்ந்த கருவளையம் சொன்னது அவன் உறக்கத்தை தொலைத்தவன் என்று..அவனது சிவந்த விழிகள் கூறியது அவன் குடிப்பான் என்று அவனது உடற்கட்டு கூறியது என்ன ஆனாலும் என்னால் உடற்பயிற்சி செய்யாமல் அவனால் இருக்க முடியாது என்று அவனது கூர்மையான விழிகள் கூறியது எதிராளியின் மனதை அப்பட்டமாக படிக்கும் வல்லமை வாய்ந்தவன் என்று அவனது முகத்தின் கடுமை இப்போது அவளிடம் கூறியது, " இப்போது நீ எதற்காக இங்கே வந்து இருக்கிறாய் என்று அதுவும் இந்த கோலத்தில் "..என்று கண்காளாலே கேள்வி எழுப்ப , அதே நேரம் அவன் பார்வை அவளை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டு இருந்தது.. அவன் விழிகளில் யார் இவள் என்ற கேள்வியும் தொக்கி இருந்தது..
அதே நேரம் மனிதன் என்ற வாடை கொண்ட ஒருவனை கண்டதும் அன்பரசிக்கு துள்ளல் வந்தது...
"நல்ல வேலை சார் நீங்க வந்திங்க ..இல்லாட்டி இந்த நாய் என்னை சாப்பிட்டு இருக்கும்"... என்று ஏதோ உரிமையாக பல நாள் பழகியவள் போல அன்பரசி வெடவெடக்கும் பல்லை கடித்தபடி சிரித்து கொண்டே பேச
அவனது முகமே கூறியது நீ பேசுவதை கேட்க எனக்கு விருப்பம் இல்லை என்று இருந்தாலும் பெண் என்பதால் ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டவன், " யார் நீ".. என்க
"சார் தேவராஜை பார்க்கணும்".. என்க
"எதுக்கு"..
"சார் வேலை விஷயமா"..
"இங்கே வேலைக்கு ஆள் எல்லாம் வேணாம் கிளம்பு".. என்றான் உச்சகட்ட பொறுமையில்
"சார் அதை நீங்க சொல்லாதீங்க தேவராஜ் சார் வந்து சொல்லட்டும் "..என்றாள் கடுப்புடன்..
அவளுக்கும் கடுப்பு தான் இந்த ஊரில் அவள் கால் அடி எடுத்து வைத்தது முதல் எல்லோரும் அபசகுணமாகவே பேசி கொண்டு இருப்பதாலும் அவளுக்கு இந்த வேலை கட்டாயம் தேவை என்பதாலும் உறுதியோடு தன் பதிலை கூறினாள் ..அது எதிராளிக்கு மிக பெரிய சீற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பது அறியாமலே
அவனது கண்கள் சிவக்க கோபத்தில் அவனது கருமை படர்ந்த உதடுகள் துடிக்க ,"தேவராஜ் சொன்னா தான் நீ வெளியே போவன்னு சொன்னா இன்னும் இரண்டு நிமிஷத்தில் நீ வெளியே போய் இருக்கணும் "..என்று அதிகாரமாக கூற
அவள் முகமோ மலர்ந்து , "அப்போ நீங்க தான் தேவராஜா".. என்றாள்
தேவராஜ்க்கு பொறுமை எல்லை கடந்து இவள் என்ன லூசா இவளை நான் வெளியே போ என்று கூறுகிறேன் இவளோ சிரித்து கொண்டு இருக்கிறாள் என நினைத்து அவளை முறைக்க
"ஆமாம் தெரிஞ்சிட்டில வெளியே போ".. என்க
"போகவா அதுக்கா நான் வந்தேன்..நகருங்க சார் எனக்கு உள்ளே போகனும் "...என்று அவள் எகிறினாள்..
அவளது ஓங்கிய குரலையும் அவளது சைஸையும் கண்டவன் பொங்கிய கோபத்தில் இரண்டு சதவிகிதத்தை குறைத்தவன்,
"இந்த பாரு பொண்ணு எனக்கு பொறுமை ரொம்ப கம்மி மரியாதையா வெளியே போயிடு..என்கிட்ட உனக்கான வேலை எதுவுமில்லை"..என்று கூற
"என்ன சார் வந்ததுல இருந்து நானும் பார்த்துட்டே இருக்கேன் வெளியே போ வெளியே போன்னு சொல்றீங்க நான் இங்கே வேலை கிடைச்சு தான் வந்து இருக்கேன்..சும்மா ஒன்னும் வரல...எனக்கு வேலை கொடுத்தவர் வந்து சொல்லட்டும் நான் போறேன்..அது வரைக்கும் இங்கே தான் நான் இருப்பேன்".. என்று குளிரில் பல்லை கடித்து கொண்டு உறுதியாக கூற,
அவனது இழுத்து பிடித்து இருந்த பொறுமை காற்றில் பறக்க , "உனக்கு யார் அவன் வேலை கொடுத்தது ??"...
வேகமாக அவளது பையை திறந்து ஒரு பாலித்தீன் கவரில் இருந்து பேப்பரை எடுத்து நீட்டினாள்..
அவனோ அதை பிடுங்கி வெளியே எடுக்க போக
"சார் கவருக்குள்ளே வெச்சே படிங்க சார்.. பேப்பர் நனைஞ்சிட போகுது".. என்றாள் ..அவளுக்கு அவள் கவலை
அவனுக்கோ ஏகத்துக்கும் கடுப்பு ஏற அவளை முறைத்து கொண்டே அவள் கொண்டு வந்திருந்த அந்த பேப்பரை அவள் கூறியது போல பாலத்தீன் கவரில் வைத்தே பார்க்க அந்த பேப்பரில் எழுதி இருந்த வாக்கியமும் இறுதியில் தன் நண்பனின் கையொப்பம் மற்றும் அவனது நிறுவனத்தின் சீல் அடங்கியவை அந்த பேப்பரில் உள்ளடங்கி இருக்க தேவராஜ்க்கு எல்லாமே தெள்ள தெளிவாக விளங்கியது இது தன் நண்பனின் வேலை தான் என தெளிவாக புரிந்தது ..
உடனே அந்த தூர பேப்பரை கசக்கி தூர எறிய அன்பரசிக்கு கடுப்பு வந்து, " எதுக்கு சார் தண்ணீல போட்டிங்க..உங்களுக்கு என்ன பிரச்னை..".. என்று அவள் எகிறினாள்...
அவனோ அவளுக்கு பதில் அளிக்காமல், " ஒரு நிமிஷம் நீ இங்க நிக்க கூடாது கிளம்பு... "..என்று விரட்டியவன் அவளது பதிலுக்கு காத்து இருக்காமல் உள்ளே சென்றான்..
உள்ளே சென்றவன் போனை எடுத்து தனது உயிர் நண்பனான பிரபுவை அழைத்தான்..
ஏர்போர்ட்டில் செக்கிங் முடித்து உள்ளே சென்று கொண்டு இருந்தவனுக்கு தேவாவின் போனை பார்த்ததும் புரிந்து போனது அன்பரசி அங்கே சென்று விட்டாள் என்று இருந்தும் ஒன்றும் அறியாதவன் போல போனை எடுத்து , "சொல்லு மச்சி "..என்க,
அவன் காது புளிக்கும் அளவுக்கு கெட்ட வார்த்தை பேசியவன் , "யாரை கேட்டு எனக்கு வேலைக்கு நீ ஒருத்தியை இங்கே அனுப்பி வைப்பா??"..
"மச்சி நான் சொல்றதை கேளு டா!!"...
"அதெல்லாம் கேட்க முடியாது இந்த நிமிஷம் அந்த பொண்ணு வெளில போகனும் எனக்கு யாரோட உதவியும் தேவை இல்லை எனக்கு என்னை பார்த்துக்க தெரியும் அந்த அரைவேக்காடை இப்போவே போக சொல்லு வாயை துறந்த மூடவே மாட்டேன்கிறா..எங்கிருந்து அவளை பிடிச்ச "...என்று கூற
மறுமுனையில் பிரபுவுற்கு சிரிப்பு தான் வந்தது , "எஸ் அன்பரசி அப்படி தான் ..போனதும் என் மச்சானை ஆட வெச்சிட்டியா "..என்று அவளை மனதுக்குள் மெச்சியவன்
"மச்சி தேவா நான் வர வரைக்கும் அந்த பொண்ணு இருக்கட்டும் டா நான் வந்து எல்லாம் பேசிக்கறேன் அந்த பொண்ணை மட்டும் நீயா துரத்த கூடாது இது என் மேல சத்தியம்..போர்டிங் ஆச்சு நான் வந்து பேசறேன் டா ..அந்த பொண்ணை மட்டும் துரத்தி விட்டுடாத..என்னை நம்பி உன்னை தேடி வந்து இருக்கா அவளை துரத்திடாத "...என்று போனை பிரபு வேண்டுமென்றே வைக்க உயிர் நண்பன் சத்தியம் என்று எல்லாம் கூற அதை மீற இயலா ஆத்திரத்தில் தேவாவுக்கு எழுந்த கோபத்தை அடக்க வழி தெரியாமல் தன்னை இக்கட்டில் மாட்டி வைத்த தன் நண்பனை ஒன்றும் செய்ய இயலாமல் கடுப்பு ஆனவன் போனை தூக்கி எறிந்தான் அந்த போன் இரண்டு துண்டானது..
அதற்குள் வெளியே நின்று கொண்டு இருந்தவள் பையில் இருந்து போனின் அழைப்பு வர வேகமாக போனை எடுத்தாள்..
அது ஒரு பழைய நோக்கியா மாடல் பட்டன் போன் அதிலும் பாலித்தீன் கவர் போட்டு மேலேயும் கீழேயும் இரண்டு ரப்பர் பேண்ட் எல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தவள் வேகமாக போனை ஆன் செய்து , "ஹலோ..பிரபு சார் "...என்க
"அன்பு அங்கே போயிட்டியா நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு தானே நான் வர வரைக்கும் நீ அங்கே இருக்கணும் புரியுதா??"...
"புரியுது சார் "..
"அங்கே உனக்கு என்ன ஆனாலும் நீ அங்கே இருப்பன்னு சொல்லி தான் வேலைக்கு வந்து இருக்க உனக்கு நியாபகம் இருக்கு தானே"... என்று மீண்டும் ஒரு முறை அவளுக்கு அவன் நினைவுப் படுத்த
"இருக்கு சார் ..என்ன ஆனாலும் நீங்க வந்து என்னை போக சொல்லாமல் நான் இங்கே இருந்து போக மாட்டேன் சார் "...என்றாள் உறுதியோடு
"ஹ்ம்ம் சரி அன்பு கவனமா இரு நான் வெச்சிடவா "..
"சார் "..என்று அவள் இழுக்க
அதை புரிந்தவன், "உன் குடும்பம் பாதுகாப்பா தான் இருக்காங்க கவலை படாதே"... என்று சமதானம் கூறியவனுக்கு உண்மையாக போர்டிங் சமயம் ஆக இரண்டு ஒரு வார்த்தை கடகடவென ஒப்பித்தவன் வேகமாக போனை வைத்து விட்டான்..
அன்பரசிக்கு இப்போது மேலும் தைரியம் வர பெற்று நனைந்து தொப்பல் ஆகி இருந்த அவளது பாவாடையை பிழிந்தவள் தேவராஜின் அனுமதி இல்லாமலே தேவாவின் வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்..
