Share:
Notifications
Clear all

இதயம் 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

கண்ணாடி இதயமடி

நாயகன் : தேவ ராஜ்

நாயகி  :அன்பரசி

அத்தியாயம் : 1

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கூர்த்தி மலையில்  நவம்பர் மாத முதல் வாரம் முதல் , உறை பனிப் பொழிவு அந்த சுற்று வட்டாரத்தையே  ஆக்கரமித்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த வாரம் என்னவோ அத்தி பூத்தார் போல பெய்த தொடர் மழையால், பனியின் தாக்கம் வெகுவாக குறைந்து இருந்தது... 

இருந்தாலும் அங்கே தற்போது குறைந்த பட்ச வெப்பநிலை, 5 டிகிரியும், அதிகபட்ச வெப்பம் 18 டிகிரி செல்சியசாகவும் கொண்டு இருக்க ஆனால் ஆங்காங்கே உறை பனி உறைந்து நீர் மலைமுகடுகளில் இருந்து நீர் வழிந்து கொண்டு சாலைகளில் நிறைய அந்த மலையடிவாரத்தில் இருந்து மெதுவாக மலை ஏறியது அந்த அரசு பேருந்து...மலை ஏற்றமே வாகன ஒட்டிகளுக்கு மிக பெரிய சவாலை கொடுக்கும்..ஏனெனில் இயற்கை அன்னையின் களியாட்டத்தில் இயற்கை சீற்றங்கள் எப்போதும் நிகழும் என எவரும் அறியார்..

அப்படிபட்ட நிலையில் கிட்டத்தட்ட பத்து பேரையே உள்ளடக்கிய அந்த அரசு பேருந்தில் தான் அவளும் பயணம் செய்து கொண்டு இருந்தாள்...அவள் பெயர் அன்பரசி..இருபது வயது  பாவையவள்..கோயம்புத்தூர் ஆட்டையாம் பாளையத்தில் இருந்து மூக்கூர்த்தி செல்லும் பேருந்தில் குடும்பத்தாரை விட்டு பயணம் செய்து கொண்டு இருக்கிறாள்...

மூக்கூர்த்தி மலையில் அவளுக்கு வேலை கிடைத்து இருக்க அதும் இன்றே அவள் வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்க இதோ கிளம்பி விட்டாள்...இன்னும் சற்று நேரம் பயணம் செய்தால் மூக்கூர்த்தி வந்து விடும் ..பேருந்தை விட்டு இறங்கி கிழக்கு பக்கம் திரும்பினால் ஒரு பாதை திரும்பும் அங்கிருந்து பத்து நிமிட நடை பயணத்தில் ஒரு தேவா எஸ்டேட் வரும் ..அங்கே சென்று இந்த சீட்டை காட்டினால் போதுமென்று அவளுக்கு வேலை தந்த தெய்வம் அவளிடம் கூறி இருக்க அவளும் தலையாட்டிய படியே வந்து விட்டாள்...

அவள் குடும்பத்தை விட்டு இதுவரை அவள் எங்கேயும் பயணம் செய்தது இல்லை அதே போல இந்த மலை பயணமும் அவளுக்கு புதிது.. அதனால் இயற்கை அழகை வெகுவாக அவள் ரசித்து வந்து கொண்டு இருந்தாள்...

அவளது குடும்பத்தை விட்டு வருவது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் அவளுக்கு இந்த வேலை கட்டாயம் வேண்டும்..அதனால் மனதில் எழும் வீட்டின் எண்ணத்தை அவளே வலிய புறம் தள்ளி அந்த எழில் கொஞ்சும் மலை தாயின் அழகை ரசிக்க துவங்கினாள்..

அதிலும் அவள் மூடி இருந்த ஜன்னலை இலேசாக தனது இரு விரலை நுழைத்து திறந்து மழை சாரலோடு விளையாடிக் கொண்டு இருந்தாள்...

ஏற்கனவே மழை பெய்யும் அறிகுறியோடு வானம் இருட்ட தொடங்கி இருக்க அவள் பயணப்பட்டு வரும் பேருந்தில் இருந்த பத்து பேரும் நடுங்கி கொண்டு வர இந்த அம்மணி மட்டும் அந்த தூறல் ஊதை காற்றோடு கலந்த மழைச் சாரலில் விளையாடி கொண்டு இருப்பதைக் கண்டு அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு வயதான பெரிய மனிதர், "கண்ணு அதை சாத்து கண்ணு ..ஊருக்கு புதுசா"..என்றார் கரடு முரடாக..

அவளோ, " ஆமாம்".. என்று கூறி சிரிக்க

அவரோ அவளது கள்ளம் கபடமற்ற சிரிப்பை கண்டு இளகாத அவர், "பல்லை காட்டாமல சன்னலை சாத்து புள்ள..பஸ்குள்ள மனுசன் நடுங்கிட்டு இருக்கிறது தெரியலயா...புதுசா குளிரை பாக்கியோ ...மனுசாளுங்க நடுங்கறது தெரியலையா...இள ரத்தம் சூடா இருக்கோ..போக போக தெரிஞ்சுப்ப இந்த ஊரை பத்தி..நீ வேணா தனியா வண்டியில் இருந்து இறங்கி ரசிச்சிட்டு நில்லு இப்போ ஜன்னலை சாத்து ..எங்களுக்கு குளிருது".. என்று கூறிய பெரியவர் அவரது காதை பெரிய துணியால் அடைத்து கட்ட..

அவளுக்கு மூக்கு நுனி சிவந்து கோபம் எட்டி பார்த்தது தன்மையாக கூறி இருந்தால் கூட அவள் செய்து இருப்பாள் இவர் காட்டுத்தனமாக கத்த அவளுக்கு சுருக்கென்று கோபம் தலைக்கு ஏறியது..

அதன் விளைவு அந்த வயதான மனுசனை பார்த்து முறைத்து, " ஏன் நீங்க மட்டும் தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கீங்களோ... இலேசா இரண்டு விரலை வெளியே நீட்டினத்துக்கு இந்த பேச்சு பேசறீங்க...பார்த்துப்பு வயசு காலத்துல பார்த்து பேசுங்கப்பு பொட்டுன்னு போய் சேர்ந்துட போறீங்க குளிரு வேற அதிகமா இருக்கு  "..என அவரது முகத்தை பார்த்து அவர் பேசியதை அவருக்கு திருப்பி கொடுத்த பின் தான் அவளுக்கு திருப்தி ஆனது...

அவள் அப்படி தான் வேடிக்கை பார்க்கும் ரகமல்ல ஒரு கை நோக்கும் ரகம்..சும்மா வம்பு என்றாலே ஒரு கை பார்க்காமல் விட மாட்டாள் அன்பரசி அதிலும் பெரியவர் வாயை விடவும் கொந்தளித்து விட்டாள்...

ஆனால் அந்த பெரியவர் காதை அடைத்து கட்டி இருந்ததாலும் மலையின்  மேலே பஸ் ஏறுவதாலும் அவரது செவி அடைத்து விட அவருக்கு சரியாக கேக்கவில்லை...

தான் பேசியதற்கு எந்த எதிர்வினையும் மறுபுறம் இருந்து வராததை கண்டு அவளுக்கு உள்ளூற இலேசான புகைச்சல் தான்...அந்த மனிதனோ ஒதுங்கி குளிரால் சுருண்டு கொள்ள இவளோ சண்டைக்கு வா என்ற மோடில் இருந்தாள்..

 அவருக்கு தான் அவள் கூறியது கேக்கவில்லையே தவிர ஆங்காங்கே அமர்ந்து இருந்தவர்கள் அவளை திரும்பி பார்த்து முகத்தை திருப்பி கொண்டனர்..

அவளின் முகத்தை கண்டாலே அனைவருக்கும் புரியும் இவள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்லுவாள் என்று அவர்களுக்கு புரிய, பட்டு திருந்தி கொள்ளட்டும் அப்போது புத்தி வரும் என அவர்களும் அமைதியாக இருந்தனர்... 

பெரியவர் கூறியது போல மலை ஏற ஏற குளிர் அவள் தேகமெங்கும் பரவ ஆரம்பித்து இருந்தது...

அதிலும் அன்பரசி பாவாடை தாவணி தான் அணிந்து இருக்க அவளின் கால்களின் ஊடே  அவளது உடலை குளிர் தாக்க அவளது கால்கள் ஆட்டம் காண  தொடங்க இருந்தது...அதிலும் அவளது வெண் இடைகள் குளிர் பட்டு சிவந்து போய் இருந்தது...

அவளது தாடைகள் இறுகி குளிரால் அவளது வாய் தந்தியடிக்க இது வரை அவள் இது போன்ற மலை பிரதேசங்களில் பயணம் செய்யாத காரணத்தினால் ஒரு ஸ்வெட்டர் கூட அவளிடம் இல்லை..அவளது தற்போதைய மொத்த சொத்தே நாலு செட் பாவாடை தாவணி மட்டுமே...

அதனால் அவளது முந்தானையை போர்வையாக்கி கொள்ள அப்போதும் அவளது குளிர் விட்ட பாடில்லை வேகமாக ஜன்னலை அடைத்தாள்..அப்போதும் அன்பரசியின் குளிர் விட்ட பாடில்லை..

 அதுமட்டுமின்றி மலை ஏற ஏற மழை வலுக்க தொடங்கி இருக்க மண் சரிவு வேறு ஆங்காங்கே இருந்தது..

 பேருந்தை என்னவோ ஓட்டுநர் லாவகமாக தான் இயக்க ஒவ்வொரு முறை மலை ஹேர் பின் வளைவில் வளையும் போது இங்கே இவளுக்கு தான் தூக்கிப்போட்டது..ஆனால் அவளை தவிர வண்டியில் இருந்தவர்கள் என்னவோ அமைதியாக தான் இருந்தனர்..

அவர்களுக்கு இது எல்லாம் பழகி விட்டது போலும்...ஆனால் இவளுக்கு பீதியாகி சற்று முன் அந்த வாய் பேசியவள் இறுக்கமாக தன் இருக்கையை பிடித்து கொண்டு அவளது இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டி கொண்டு வர அந்த தெய்வங்கள் அனைத்தும் செவியை இன்னும் சிறிது காலத்திற்கு இவளது விசயத்திற்கு மட்டும் காதை அடைத்து வைக்க முடிவு செய்து இருப்பார்கள் போலும் யாரும் அவளது வேண்டுதலை ஏற்பதாக இல்லை..

அவள் விதி இனி அனுபவிக்க தான் வேண்டும் என நினைத்து அவர்கள் ஒதுங்கி கொள்ள அவள் வேண்டுதலை தடை செய்தபடி கொட்டும் மழையில் நிலை தடுமாறிய அந்த பேருந்தின் சக்கரம் சற்று முன்னே விழுந்து இருந்த மண் சரிவில் சிக்க இன்னும் ஒரே கிலோமீட்டர் எஞ்சிய தூரத்தில் இருந்த மூக்கூர்த்தி பேருந்து நிலையத்தை அடைய முடியாமல் போனது போல வண்டி நின்றது..வண்டி நின்றதும் வண்டியில் சலசலப்பு ஏற்பட்டது...

அதில் ஓட்டுனரோ கடுப்பாகி, " இதே வேலையா போச்சு...ச்ச..எப்பா எல்லோரும் இறங்குங்க பா வண்டி இதுக்கு மேலே போகாது ஏலே அந்த பக்கம் போய் நின்னு சிவப்பு கொடியை கட்டி ஒரு பெரிய கல்லை வை எவனாவது வந்து இடிச்சிட போறான் "...என்று எப்போதும் நடப்பது தானே என மனப்பாடமாக ஒப்பித்து கொண்டே அவரோ கியரை அந்த பக்கம் இந்த பக்கமாக திருப்பி வண்டியை பின்னாடி இழுக்க முற்பட வண்டியில் இருந்த ஒரு மூன்று இளைஞர்கள் வண்டியை தள்ளி உதவி செய்வதாக கூற அந்த ஓட்டுனரோ , "வேணாம் யா மழை விட்டா தான் ரோடு சரியாகும் நாங்க கன்ட்ரோல் ரூம்க்கு அழைப்பு கிடைக்குதா பார்க்கிறோம் இல்லாட்டி மழை விடட்டும் நீங்க பார்த்து ஊர் போய் சேருங்க ".. என்று கூற

அந்த பேருந்தில் பெண் என இவள் ஒருத்தியே இருக்க இவளோ அனைவரும் இறங்குவதை பார்த்து வண்டியை விட்டு இறங்காமல், " அண்ணே என்ன இப்படி ஆச்சு நான் எப்படி போக ?? "..என்றாள் கண்ணில் மிரட்சியோடு,

ஓட்டுனரோ முறைத்தபடி, "அதோ அவங்க எல்லாம் போறாங்களே அது மாதிரி போ "...என்று கூறியவர் பஸ்ஸின் ஜன்னல்களை எல்லாம் அடைக்கும் பணியில் ஈடுபட அவளுக்கு அதில் எல்லாம் தலைக்கு ஏறவில்லை... 

அன்பரசிக்கு அது எல்லாம் தலைக்கு ஏற வில்லை அவள் தலையில் ஒரே ஒரு விஷயமே ஓடிக் கொண்டிருந்தது, " எப்படி தேவா எஸ்டேட் போய் சேருவது"...என்பதிலே அவள் குறியாக இருந்து அதை வாய் விட்டே  புலம்பி பின் மீண்டும் ஓட்டுனரிடம்

"பஸ் போகாத அண்ணே"..என்றாள் மீண்டும்,

"உனக்கு எத்தனை தடவை சொல்றது பஸ் ரெடியாக லேட்டாகும்னு"...என்றார் கடுப்பான ஓட்டுநர்,

அதை கேட்டதும் அன்பரசி அழும் நிலைக்கு அவள் செல்ல அவள் முகத்தை பார்த்து பாவம் பார்த்த ஓட்டுநர்,  "உனக்கு எங்கே போகணும்??"... என்று சுருதியை இறக்கி அவர் கேட்க

"தேவா எஸ்டேட்"...

அந்த எஸ்டேட் பெயரை கேட்டதும் கொஞ்சம் ஜர்க் ஆன ஓட்டுநர், "அதோ அந்த பெரிசு போறாரே அவர் பின்னாடியே போ அவரு அந்த எஸ்டேட்க்கு பக்கத்து எஸ்டேட் தான் தேவா எஸ்டேட்"... என்று கூற அவளும் இந்த அளவுக்காவது உதவி கிடைத்ததே என்று தனது பையை தூக்கி கொண்டு இறங்கி விட்டாள்..

கொட்டும் மழையில் உடலை துளை இடும் அளவுக்கு குளிர் எடுக்க அதே நேரம் மழை வேறு வெளுத்து வாங்க அந்த பெரியவர் ஒரு நிதானத்தில் சென்று கொண்டு இருக்க அவர் பின்னாலே சென்றாள் அன்பரசி..

கிட்டத்தட்ட ஒரு மணி நேர நடை பயணத்திற்கு பிறகு மழை விட்டாலும் தூறல் விடாமல் தூரிக் கொண்டு இருக்க சரியாக அவள் சேர வேண்டிய இடத்தை அடைந்தாள்..

பின் அவளை வேலைக்கு சேர்த்தியவர் கூறியபடி கிழக்கு பக்கமாக திரும்ப அந்த பெரியவரோ அதுவரை அவளை திரும்பி பார்க்காதவர் அவள் புறம் திரும்பி அவளை பார்த்து , "என்ன என் பின்னாடியே வர எங்கே போகணும்"... என்று விசாரித்தார்.. இது தான் அந்த காலத்து மனிதர்களின் பழக்கம்..

சற்று முன் பேருந்தில் இருவரும் எலியும் பூனையுமாக இருந்தாலும் அவர் பின்னாலே நடந்து வந்ததாலே சேர வேண்டிய இடத்திற்கு வந்து அடைந்து இருப்பதை எண்ணி மென்மையாக , "தேவா எஸ்டேட்க்கு"... என்று கூற பெரியவரின் முகம் இருண்டது..

"அங்கே எதுக்கு போற"...என்று பதட்டத்துடன் கேட்டார் அவருக்கு தான் அந்த எஸ்டேட் பற்றிய விஷயத்தை அறிந்தவர் ஆகிற்றே..

"வேலைக்கு"...என்று அவள் குதூகலமாக கூற

மேலும் பீதியாகி , "பார்க்க சின்ன பொண்ணா இருக்க இந்த மாதிரி இடத்துக்கு வேலைக்கு வரும் போது விசாரிச்சிட்டு வர மாட்டியா?? "...

"ஏன் என்ன ஆச்சு?? "...என்றாள் அவர் கேட்ட கேள்வி புரியாமல்

"அங்கே வேலைக்கு சேர்ந்த எவனும் வேலையில் ஒரு வாரத்துக்கு மேல இருந்ததா சரித்திரம் இல்ல அந்த எஸ்டேட்க்காரன் எல்லாம் ஒரு மனுசனா காட்டான்..அவன் எல்லாம் மனுசன் ஜென்மமே இல்லை..பைத்தியக்காரன்"... என்று பெரியவர் திட்ட

அவளோ அவர் கூறியதை காதில் வாங்காமல் , "தேவா எஸ்டேட்க்கு இந்த பக்கம் தானே போகணும்"... என்று போட்டாலே ஒரு போடு

 பெரியவரோ, " உனக்கு வேண்டி பேசினேன் பார் என்னை சொல்லணும் உனக்கு எல்லாம் பட்டா தான் புத்தி வரும் .அதோ அந்த பக்கம் தான் போ..இனி எல்லாம் உன் விதி போல அமையும்"... என்று வாய்க்கு வந்தபடி உலறி கொண்டே அந்த மனிதர் சென்று விட்டார்..அவளும் அவர் கூறிய வழியில் நடக்க துவங்கினாள்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top