Share:
Notifications
Clear all

இதயம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 10

" நான் தான் வேணாம் வேணாம் ன்னு சொல்லிட்டே இருக்கேனே டி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?? வெளியே போ டி நாயே"... என்று ஆக்ரோஷமாக கத்தியவன் அவளது கையை தட்டி விட்டு மறு கையில் அவள் பிடித்து இருந்த உணவு தட்டை பறக்க விட்டான் அவள் என்ன என்று கவனிக்கும் நொடி பொழுதில் அவளது சிகையை பிடித்து இழுத்து சுவற்றில் அடித்து இருந்தான்..

அவளது நெற்றி சுவற்றில் முட்டி ரத்தம் பீறிட்டு ஒழுக அன்பரசிக்கு வேதனையை கொடுக்க அவன் அடித்த அடியில் அவளது தலை கழண்டு அவளது கையிலே விழுந்து விட கூடிய நிலையில் இருப்பது போன்ற உணர்வை அவளுக்கு கொடுக்க அன்பரசி நான் இப்போ என்ன செய்தேன்னு இவர் என்னை அடிச்சாரு என்று பீதியில் உறைந்தவள் அவனை பார்க்க அவனோ ஆத்திரம் கொண்ட வேங்கை போல மதம் பிடித்த யானை போல அவளை தாக்க தயாராகி இருந்தான் ..

அவனது அருகே இருந்த பாட்டிலை எடுத்து எரிய போக அவன் தன்னிலை இழந்து இருப்பதை உணர்ந்தவள் பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து இனி ஒரு நொடி இங்கே நின்றால் நம்மை இவன் கொன்றாலும் கொன்று விடுவான் என நினைத்தவள் வேகமாக அங்கிருந்து ஓடினாள்.. 

அப்போதும் தேவ ராஜின் ஆத்திரம் கட்டுப்படாமல் அவள் ஓடுவதை பார்த்து அந்த பாட்டிலை எரிய அவள் பின்னாலே பறந்து வந்து பாட்டில் சுவற்றில் பட்டு சிதறி உடைந்தது...

கூடவே ஒரு வெறி பிடித்தவன் போல கத்தினான் அவனது படுக்கை அங்கே இருந்த பொருட்கள் எல்லாம் நாசம் செய்தான்...ஆனால் அவன் என்ன செய்தாலும் அந்த அறைக்குள்ளே செய்தானே ஒழிய வெளியே எல்லாம் வந்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை..

அவளோ எங்கே செல்வது என்று தெரியாமல் அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று  கதவை அடைத்தவளுக்கு இன்னும் பயம் விட்ட பாடில்லை அவளுக்கு மயக்கமே வரும் போல இருந்தது ரத்தம் ஒழுகி அவள் அணிந்து இருந்த உடையை எல்லாம் சிவப்பாகி இருக்க  அவனோ அவனது அறையில் போட்டு கொண்டு இருக்கும் சத்தம் அவளது செவிபறையை கிழிப்பது போல இருக்க அவளோ பயத்தின் உச்சிக்கு சென்று விட்டாள்..

அவளுக்கு அவனிடம் வசமாக அவள் மாட்டி கொண்டது போல தோன்றியது... அவன் தன்னை கொலை செய்து விடுவானோ இந்த அரக்கனிடம் மாட்டி கொண்டோமோ என்று அவள் நினைக்க  அவளுக்கு அவன் தன்னை பின் தொடருவது போல இருக்க வேகமாக கதவை தாழ்ப்பாள் இட போக அங்கே தான் தாழ்ப்பாள் இல்லையே ...

அதற்கு ஒரு மூச்சு பயத்தில் அழுதவள் அங்கே இருந்த கட்டிலை நீக்கி அவளது அறையை அவன் திறக்கா வண்ணம் முட்டு கொடுத்தவள் வேகமாக அங்கே இருந்த பொருட்களை எல்லாம் கட்டிலின் மேலே வைத்து அவளுக்கான பாதுகாப்பு செய்தாள்..

 அவளுக்கு அவளது உயிர் வேண்டும் அதனால் உயிரை பாதுகாக்க அவன் தன்னை தேடி வராமல் இருக்க பாதுகாப்பு செய்த பின் தான் அவளுக்கு இலேசான ஆசுவாசம் கிட்ட வேகமாக அவளது தாவணியின் ஒரு பகுதியை கிழித்து அவளது நெற்றியில் ரத்தம் வராமல் இருக்க கட்டியவளுக்கு கண்ணீர் மட்டும் ஆறாக ஓடியது...

ஒரு புத்தி கெட்டவன் இல்லை இல்லை ஒரு சைக்கோவிடம் மாட்டி கொண்டோமோ என பயந்தவளுக்கு அவன் மீண்டும் வந்து தன்னை கொன்று விடுவானோ என்று அஞ்சினாள்..

ஒரு உயிரை காப்பாற்ற இங்கே வந்தால் என் உயிர் காவு வாங்க படுகிறதா என்று எல்லாம் பயத்தில் நினைத்தவள் வேகமாக தனது பையில் இருக்கும் அவளுடைய போனை எடுத்து பிரபுவிற்கு அழைத்தாள்..

மலை பிரேதசம் என்பதால் லைன் வேறு கிடைக்காமல் இருக்க அவளோ விடாமல் அடித்து கொண்டே இருந்தாள் ..அவளது நல்ல நேரம் லைன் ஒரு வழியாக கிடைத்து விட பிரபு போனை எடுத்து , "ஹலோ"... என்றதும் ,

"சார் என்னை எதுக்கு சார் இங்கே அனுப்பி வெச்சிங்க..என்னை கூட்டிட்டு போங்க சார்... என்னால இங்க இருக்க முடியாது இங்கே இருந்தா என்னை கொன்னே போட்டிடும் அந்த பைத்தியம் ..அவருக்கு உடம்பு சரியில்லைன்னு தானே சொன்னீங்க அவரு பைத்தியம்ன்னு நீங்க சொல்லவே இல்லையே..என் குடும்பத்துக்கு நான் மட்டும் தான் இருக்கேன் என்னால ஒரு நிமிஷம் இங்கே இருக்க முடியாது "... என்று அவன் அடித்த அடியின் வீரியத்தில் அவள்  தேவராஜை பைத்தியம் என்று கூற தன் உயிர் நண்பனை பைத்தியம் என்று கூறுவதை தாங்கி கொள்ள முடியாத பிரபு , "யாரை பார்த்து பைத்தியம்ன்னு சொன்ன அவன் யாருன்னு  தெரியுமா ?? இனி ஒரு தடவை அவனை பைத்தியம்ன்னு சொன்ன உன் உடம்புல உயிர் இருக்காது "...என்று கர்ஜித்தான் பிரபு..

இதுவரை அவளிடம் மென்மையாகவே பேசி கொண்டு இருந்த பிரபு முதன் முறையாக கோபப்பட அதற்கும் அழுத அன்பு, " சார் அவர் என்ன செஞ்சாருன்னு தெரியுமா "...என்று நடந்ததை எல்லாம் ஒரு வரி விடாமல் அவனிடம் கூற

அதை கேட்டவன் அதிர்ச்சியாகி , "நான் இப்போவே டாக்டரை வர சொல்றேன் "...என்று கூறியவன் போனை கட் செய்து மருத்துவரை அழைத்தான்..

அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியர்களும் வர கார் சத்தத்தை கேட்டதும் பிரபு கூறியது போல மெல்ல வெளியே வந்தாள் அன்பரசி...

அவர்கள் இவளை கண்டும் நடந்ததை பற்றி துளியும் அவளிடம் கேட்காமல் நேராக அவனது அறைக்கு செல்ல வெறி பிடித்து கத்திய அந்த மதம் பிடித்த யானை தேவராஜ் படுக்கையில் படுத்து இருக்க அவர்களுக்கு வசதியாக போனது..

மருத்துவரை அவன் கண்டாலும் ஒன்றும் பேசாமல் இருக்க மருத்துவரோ அவன் அருகில் அமர்ந்து சிரித்த முகத்துடன் அவனை ஒரு குழந்தை போல தடவி கொடுத்து ஆறுதல் அளித்து அவனை பரிசோதனை செய்தார்..

அவளுக்கு அந்த அறைக்கு செல்லவே பயமாக இருக்க அறையின் வெளியே நின்று எட்டி பார்த்து கொண்டு இருந்தவளுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது இவ்வளவு நேரம் அவன் செய்த செயல் என்ன இப்போது மருத்துவரிடம் அவன் நடக்கும் முறை என்ன என்பதை எல்லாம் நினைத்து அன்பரசிக்கு குழப்பமே உருவானது..

மருத்துவரோ தன் கையோடு கொண்டு வந்திருந்த மருந்தை ஊசி மூலம் அவனுக்கு செலுத்த அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்..

அதன் பின் அவள் அருகே வந்தவர் அவளிடம் ஒன்றும் கேக்காமல் அவளை பரிசோதனை செய்து அவளின் முறிவுக்கும் மருந்து வைத்து கட்டியவர் அவளிடம் தேவராஜ் இரண்டு நாட்கள் நன்றாக உறங்குவான் என்றும் அவனை தொல்லை செய்ய வேண்டாம் என்றும் அவனுக்கான மருந்தை கொடுத்து விட்டு தினமும் அவன் இந்த உட்கொள்கிறானா என பரிசோதிக்க சொல்ல அவளும் தலையாட்டினாள்...

மருத்துவர் சென்றதும் பிரபு மீண்டும் அழைக்க அன்பரசி வேகமாக போனை எடுத்தவள் அவளது குழப்பத்தை தீர்க்க பிரபுவிடம், " சார் அவருக்கு என்ன சார் என்கிட்ட மறைக்காமல் சொல்லுங்க"... என்க ..பிரபுவும் அந்த நேரம் நொந்து இருக்க அவனும் தன் நண்பனை பற்றிய உண்மைகளை கூற ஆரம்பித்து இருந்தான்..



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top