இதயம் 11
அத்தியாயம் : 11
தேவராஜ் 27 வயது நிரம்பிய இளைஞன் ..அவன் படித்த படிப்பு பொறியியல் என்றாலும் செய்யும் வேலை மலை நாட்டில் விவசாயம் குடும்ப தொழில் அதுவாக அமைய தன் செல்ல தந்தைக்கு ஓய்வு கொடுத்து அவரது தொழிலை கையில் எடுத்து வெற்றிகரமாக தொழில் செய்து வருகிறான்...
தேவ ராஜ் அவனது தாய் தந்தைக்கு ஒற்றை வாரிசு செல்லம் குல கொழுந்து என எண்ண வேண்டுமானாலும் கூறலாம்..அதனாலே அவன் நினைத்தது எல்லாம் நடக்கும் அவன் மூச்சு விடும் சத்தத்தை வைத்தே அவனது தேவை அறிந்து அவனுக்கு அதை பூர்த்தி செய்து தரும் அவன் பெற்றோர்கள் என்ன தவம் செய்து விட்டோம் இவர்களுக்கு மகனாக ஜனித்து விட்டோமே என நினைத்து பல இரவுகள் மகிழ்ந்து இருக்கிறான்...
இப்போது வரை மகிழ்ச்சி அடைந்தும் வருகிறான் உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான ஆண் யார் என்று கேட்டால் தேவா அவனை தான் சொல்லுவான்..ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வினாடியும் அவன் மகிழ்ந்து கொண்டு இருக்கிறான்...
“ஹே நில்லு தாரு....இன்னிக்கு நான் நினைச்சது நடந்தே ஆகனும்”......என்று தேவா அவளின் பின்னால் ஓடி வர,
" முடியாது ராஜ்"... என்று துள்ளல் சிரிப்போடு தாரு என்கிற தாரணி அவனுக்கு போக்கு காட்டி ஓடி கொண்டு இருந்தாள்...
அவளுக்கும் அவனுக்கும் பத்து நாளில் திருமணம் ...தேவராஜின் குடும்பமும் தாரணியின் குடும்பமும் நண்பர்கள்...பணத்தாலும், வளத்தாலும் செல்வாக்கு பெற்றவர்கள்... இருவரின் குடும்பமும் பால்ய காலம் தொட்டு நண்பர்களாக இருந்து இப்போது உறவாக மாற போகிறவர்கள் ...
ஆம் இளைய தலை முறையினர் காதல் என்று தங்கள் பெற்றவர்கள் முன் நிற்க அவர்களுக்கு மறுக்க காரணம் இல்லை கூடவே அந்த எண்ணம் அவர்கள் இரு குடும்பத்துக்கும் இருந்ததால் அவர்கள் வந்து கூறவும் சரி என்று கூறி விட்டனர்...
இதோ தாரு மற்றும் தேவாவின் நிச்சயம் முடிந்து திருமணம் நடக்க இன்னும் பத்து தினங்களே இருக்க இந்த காதல் பறவைகள் பெற்றோருக்கு தெரியாமல் அவலாஞ்சியில் உள்ள தேவாவின் ஆப்பிள் தோட்டத்திற்கு வந்து இருக்கின்றனர்..
அவர்களுக்கு துணையாக அல்ல பலியாக பிரபு மாட்டி கொண்டான்..இவர்கள் இருவரும் காதலிக்க இவனோ பலியாடு போல அவர்கள் பின்னே நடக்க தொடங்கினான் ...
பிரபு தேவாவின் இதயம் என்றால் தாரு அவனது இதயத்துடிப்பு அந்த அளவுக்கு மூவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றுவர்..பிரபு படிக்கும் போது முதல் பழக்கம் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்றாலும் சதா எந்நேரமும் தேவாவின் பின்னாலே சுற்றுபவன்..உயிரை கொடு டா என்று தேவா கேட்டால் பிரபு சிரித்து கொண்டே உயிரை கொடுப்பான் அந்த அளவு இவர்களின் நெருக்கமான நண்பர்கள் அவர்கள் இருவரும்....
இதோ இப்போது அவனை இழுத்து கொண்டு தேவா அவலாஞ்சி வந்து இருக்கிறான்...பிரபு மறுக்க மறுக்க இழுத்து வந்து இருக்கிறான் பிரபுவுக்கு நன்றாகவே தெரியும் இன்னும் சற்று நேரத்தில் இங்கே என்ன காட்சிகள் நடைபெற போகின்றன என்பது அதை நினைத்து கதி கலங்கி போய் இருக்கிறான்..
அதிலும் இந்த தேவா தாருவிடம் செய்யும் சில்மிஷங்கள் தான் அவனால் தாங்கி கொள்ள முடியாது.. ஆம் , "தாரு அங்கே பாரு "...என்று கூறி தாரு அவன் கூறிய திசையில் அவளை பார்க்க வைப்பான் அவளும் திரும்பி அவன் கூறிய திசையில் பார்த்த மறுநொடி தேவா தாருவின் கன்னத்தில் முத்தம் வைப்பான்..
அவர்களுடன் பிரபு இருக்கிறான் என்ற அறிவு தேவாவிற்கு இருந்தாலும் , "ச்ச இவன் தானே".. என்று நினைத்தே இந்த வேலையை பார்ப்பான் அந்த அளவுக்கு குறும்புகளுக்கு பெயர் போனவன் தேவா..
"டேய் நான் உங்க பக்கத்தில் தான் மச்சி இருக்கேன்"...
"இரு டா மச்சா எங்களை ஏன் டா டிஸ்டர்ப் பண்ற..கொஞ்சம் கண்ணை திறந்து பார்த்துக்கோ மச்சா?..நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்"...என்று தேவா கிண்டல் அடித்து கொண்டே தன் வேலையில் மூழ்கி இருப்பான்...
"என்னது உன்கூட இருக்கவா..இந்த கருமத்தை பார்க்கவா"... என்று அதிர்ந்து பிரபு தேவாவின் புறம் திரும்ப அங்கே அவர்களோ அவலாஞ்சியின் இதமான குளிருக்கு கன்னத்தில் தொடங்கிய அவர்களது காதல் களியாட்டம் தாருவின் இதழுக்கு தாவி இருக்க கன்னி கழியாத பிரபுவோ அவர்களை கண்டு அதிர்ந்து தாரு அணிந்து இருந்த சால்வை தூக்கி யாரும் காணா வண்ணம் அவர்கள் இருவரின் முகத்தில் இட்டு விட்டு அவர்கள் இருவரின் தனிமைக்கு காவலாக சற்று தள்ளி நின்றான்...
தள்ளி நின்றாலும், " அவனுக்கு தான் அறிவில்லனா அவளும் அவன் மகுடிக்கு ஆடிட்டு இருக்கா "...என்று கூறி சிரித்தவன்,
" எப்போதும் இவங்க இதே மாதிரி அன்போடும் இதே அளவில்லா காதலோடும் இருக்கனும் ஆண்டவா ".. என வேண்டி கொள்ள அந்த நல்ல மனம் கொண்ட தோழனின் வேண்டுதலை அந்த இறைவன் கேட்காமல் இருந்து விட்டான் ...
கல்யாண நாள் நெருங்க நெருங்க தேவாவின் வீட்டிலும் தாருவின் வீட்டிலும் பரபரப்பு தொற்றி கொண்டது..இடையிடையே பிரபு மூக்கூர்த்தி வந்து செல்வான்...
கல்யாண வீடு களை கட்டி கொண்டு இருக்க எல்லா வேலைகளும் சிறப்பாக நடந்து கொண்டு இருந்தாலும் முக்கியமான ஒரு பணி இன்னும் செய்யவில்லை...
அது என்னவென்றால் எல்லா துணிமணிகளும் எல்லோர்க்கும் எடுக்கப்பட்டு இருக்க மணபெண்ணின் உடையும் மணமகனின் உடை மட்டும் இன்னும் எடுக்கப்படாமல் இருக்க அதை எடுக்க தான் இப்போது கோயம்புத்தூர்க்கு அனைவரும் சென்று கொண்டு இருக்கின்றனர்..
துணி எடுக்கவென இரண்டு கார்கள் சென்றது முதல் காரை தாருவின் அப்பா ஓட்ட தேவ ராஜின் அப்பா ,அம்மா தாருவின் அப்பா அம்மா அவளுடைய தங்கை என அனைவரும் ஒரு காரில் மற்றொரு காரில் காதலர்கள் மட்டுமே பயணம் செய்து கொண்டு இருந்தனர்...
அதிலும் தாருவின் அப்பா கொஞ்சம் ஜோதிடம்,நாள்,சமயம் எல்லாம் பார்க்கும் மனிதர் வேறு ..அப்படி
தான் இன்று தான் நல்ல நேரம் இன்று தான் துணி எடுக்க வேண்டும் என்று அந்த மனிதர் தடை போட்டு வைத்திருக்க அதன்படி நல்ல நேரம் பார்த்து அனைவரும் செல்கின்றனர்...
தேவாவின் அப்பா அம்மா போல சிறந்த நபர்களை காண இயலாது மகனுக்காக எந்த அளவிற்கும் செல்வார்கள் ...அதனாலேதான் தாருவின் அப்பா தடுத்தும் இளையவர்கள் இருவரும் இப்போது தனியாக பயணம் செய்து கொண்டு இருக்கின்றனர்..
