Share:
Notifications
Clear all

இதயம் 12

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 12

மூக்கூர்த்தியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோவை சென்று பயணம் செய்ய தான் ஏற்பாடு ...சும்மா சென்றால் போர் அடிக்கும் என்று தாருவின் தங்கை சிந்து கூற உடனே தாரு போட்டி வைக்கலாம் என்று கூற அனைவரும் குஷி ஆகினர்..

அப்படி இரண்டு கார்களும் போட்டி போட்டு கொண்டு தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் பறந்து கொண்டு இருந்தது...யார் முதலில் துணிக்கடையை அடைவது என்பதே போட்டியாக இருக்க தாருவின் அப்பா பறந்தார் என்றால் இடையில் தேவா அவனுடைய வேகத்தை கூட்டி அவன் அவன் முன்னேறுவான்..இடையில் எப்போவாவது அவர் முன்னேறுவார்..

ஒரு கட்டத்தில் தாரு தேவாவின் தோளில் காதலாக சாய தேவாவின் வாகனம் வேகத்தை குறைத்து இருந்தது...அந்த நொடியில் தாருவின் அப்பா முன்னேறி இருந்தார்..

 ஆனால் அவர்களுக்கு எதிரே நிலை இல்லாமல் ஒரு மண் லாரி வந்து கொண்டு இருந்தது அதில் இருந்த மனிதன் வேறு லாரியை தாறுமாறாக ஒட்டி கொண்டு இருந்தார்...

ஒரு கட்டத்தில் தேவாவை முந்திய தாருவின் அப்பா தன் மருமகனை வென்று விட்டேன் என்ற வெற்றி களிப்பில் பின்னால் வந்து கொண்டு இருந்த தேவாவுக்கு கையை தூக்கி காட்டவும் எதிரே வந்து கொண்டு இருந்த மண் லாரி தாருவின் அப்பா ஒட்டி வந்து கொண்டு இருந்த வண்டியை தூக்கவும் மிக சரியாக இருந்தது....

அலறல் சத்தத்துடன் கார் பறக்க இருபது மீட்டர் இடைவெளியில் பயணம் செய்து கொண்டு இருந்த தேவா இதை கவனிக்க அவனது சப்த நாடியும் அடங்கியது...

அந்த தருணத்திலும் எதிரே வந்த லாரி தான் ஒட்டி கொண்டு இருக்கும் காரையும் எந்த நேரத்திலும் இடிக்கலாம் என்பதை உணர்ந்தவன் அதிர்ச்சியில் உறைந்து இருந்த தாருவை உலுக்க அவளோ பேய் அறைந்த மாதரி அந்த காரையே பார்க்க நொடி பொழுதில் தான் அணிந்து இருந்த சீட் பெல்ட்டை கழட்டியவன் அவளது சீட் பெல்ட் மற்றும் கார் கதவை திறந்து அவளை வெளியே தள்ளவும் அந்த மணல் லாரி அவனது வாகனத்தையும் பதம் பார்க்கவும் சரியாக இருக்க குனிந்த வாக்கிலே இருந்ததால் 

லாரி அவன் மீது மோத இடுப்பிலே பலமான அடி பட்டது கூடவே கண் முன்னே அவனின் அப்பா,அம்மா பயணம் செய்த காரும் பல அலறல்களுடன் தரை இறங்கியது ....

அவனது செவிப்பறையை அந்த சத்தம் கிழித்து கொண்டு செல்ல அவன் அப்படியே மயக்கம்  ஆனான்...

யாரோ எவரோ அவனை தூக்கி கொண்டு செல்வது போல இருந்தது அப்பா , அம்மா, தாரு, பிரபு என்று முனகி கொண்டே ஆழ்ந்த மயக்கத்தில் சென்றான்... அதன் பிறகு தேவாவின் வாழ்க்கையே இருள் சூழ்ந்தது...

அவன் கண் விழிக்க கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகி இருந்தது.. இடையே என்ன நடந்தது என அவன் அறியான் ..அவனுக்கு பல சிகிச்சை செய்து தான் அவனது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்..

அவன் கண் விழிக்க அவனை காண அவனது நண்பன் பிரபு மட்டுமே இருந்தான்...பிரபுவை கண்டதும் தேவாவின் விழிகள் குளம் கட்ட தொடங்கியது பிரபுவுக்கு இவனுக்கு நடந்த கொடுமையை எண்ணி அழுது அழுது அவன் வற்றி போய் இருந்தான் அதுமட்டுமின்றி தேவாவை தேற்றும் நிலையில் தான் இருப்பதை மிக சரியாக உணர்ந்து இருப்பதால் அவன் உள்ளுக்குள் வெந்து கொண்டு இருந்தாலும் நண்பனிடம் வெளிக்காட்டாமல் உறுதியாக இருந்தான்..

"பிரபு எனக்கு என்ன ஆச்சு,அப்பா அம்மாக்கு ஒன்னுமில்லையே "...என்று நண்பனிடம் சந்தேகமாக கேட்க

நண்பன் இழுத்து வைத்திருந்த அழுகை வெளிப்பட்டது அவன் கண்ணில் தெரிந்த வலியை வைத்தே தேவராஜ் உணர்ந்து கொண்டான் தன் தாய் தந்தை இந்த பூவுலகத்தை விட்டு சென்று விட்டனர் தன்னை அனாதை ஆக்கி சென்று விட்டனர் என்று அது அவனின் முதல் அடி பேரிடி அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை..

அடுத்து பீதியிலே, " தாரு "...என்க அவளது பெயரை கூற பிரபுவுக்கு ஆத்திரம் தாளாமல் , "அதை விடு மச்சி"... என்க

"நீ சொல்லு டா எனக்கு இப்போ நடந்தது என்னன்னு தெரியனும் "...என்க

"தெரிஞ்சா நீ தாங்க மாட்ட உனக்கு நான் எனக்கு நீ அது மட்டும் தான் நிஜம் இப்போ நீயும் நானும் உயிரோடு இருக்கோம் அதை புரிஞ்சுக்கோ"... என்று பிரபு தேவாவிடம் கூற

தேவாவோ , "உன்னால சொல்ல முடியுமா முடியாதா இப்போ எனக்கு எல்லாமே தெரிஞ்சே ஆகனும் இல்லாட்டி நானே என்னை அழிச்சிப்பேன் "...என்று கையில் ஏறி கொண்டு இருந்த ட்ரிப்ஸ்ஸை கழட்ட போக பிரபு அவனது கையை தட்டி விட்டு , "ஏன் டா இப்படி செய்யற??உண்மை தெரிஞ்சா நீ செத்துடுவ டா??"... என்று குமுற

தேவாவுக்கு நன்றாக நினைவு இருக்கிறது அன்று அவன் தாருவை தள்ளி விட தாருவுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்பதை அவன் கண்கள் உறுதி செய்த பின்னரே தேவாவுக்கு அடிப்பட்டு இருக்க இப்போது ஏன் அவள் சார்ந்த விஷயங்களை பிரபு மறைக்கிறான் என்பதே அவனுக்கு கோபமாக மாற அவனை வழிக்கு கொண்டு வரவே இதை செய்தான்..

தேவா எதிர்பார்த்தது போல பிரபு அனைத்து உண்மைகளையும் கூறி விட்டான்..நடந்தது இது தான் அன்று விபத்து நடந்த போது தாருவின் அப்பா ஒட்டி இருந்த கார் விபத்துக்குள்ளாக அதில் பயணம் செய்த அனைவரும் உயிருக்கு போராடி மரித்தனர் தாருவின் அப்பாவை தவிர,

அதே நேரம் இந்த பக்கம் தேவாவுக்கும் அடி பட தாரு மட்டும் இலேசான காயங்களுடன் தப்பித்தாள்...

பின் மருத்துவமனையில் அனைவரையும் அனுமதிக்க அங்கே ஒரே நேரத்தில் நான்கு மரணங்கள் நிகழ தாருவும் , தாருவின் அப்பாவும் நிலை குலைந்து போயினர்..

இந்த பக்கம் தேவா மட்டும் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டான்.. அவனது உடலில் இடுப்பு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டு இருக்க அவனுக்கு உடலில் உயிர் மட்டும் எஞ்சி இருக்கிறது..

 அவனுக்கும் எப்போதும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்று மருத்துவர்கள் கூற தாரு, தாருவின் அப்பா மற்றும் விஷயம் அறிந்து வந்த பிரபு தாங்கொன்னா வேதனை அடைய இப்படியே ஒரு மாதம் போனது பிரபு தான் கூட இருந்து கவனித்து கொண்டான்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌❤️



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top