Share:
Notifications
Clear all

இதயம் 13

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

கண்ணாடி இதயமடி

அத்தியாயம் : 13

தந்தையும் மகளும் தினமும் வந்து கொண்டு இருந்தவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை வர ஆரம்பித்து இருந்தனர் அதன் பிறகு இரு வாரங்களுக்கு ஒரு முறை என இரு மாதங்கள் வந்தனர்..அதன் பிறகு இரு மாதங்கள் அவர்கள் இங்கு வரவே இல்லை பிரபு தாருவை அழைத்து தேவாவின் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை கூற அழைக்க அவளோ ஓரிரு முறை எடுத்தவள் அதன் பின் பிரபுவை தவிர்க்க ஆரம்பித்து இருந்தாள்...

இதோ தேவா கண் முழிக்க இரு நாட்கள் முன் இருக்கும் போது தந்தையும் மகளும் மருத்துவமனைக்கு வந்து இருந்தனர் அவர்களுடன் ஒரு ஆடவனும் இருந்தான்..

பிரபு எதார்த்தமாக நினைக்க ஆனால் அவர்கள் அவர்களுடைய எதார்த்தத்தை தொலைத்து இருந்தனர்...

தாருவின் கண்களில் உயிருக்கு உயிராய் நேசித்த தேவாவை பார்க்கும் பார்வையில் ஏதோ வித்தியாசம் இருந்தது...ஒரு ஓட்டுதல் இல்லா பார்வை அவனை முழுமையாக தவிர்க்கிறாள் என அப்பட்டமாக பிரபுவுக்கு புரிந்தது நல்ல வேலையாக தேவா கண் முழிக்கவில்லை..விழித்து இருந்தால் அவன் தாங்க மாட்டான்...

 கண் முழித்து இருந்தால் இந்த கொடுமையை அவனால் கண்டு தாங்கி கொள்ள முடியாது என அந்நேரம் பிரபு நினைத்தான்..

ஏதோ வேண்டா வெறுப்பாக இருப்பது போல அவர்கள் நிற்க பிரபு பொறுமை இழந்து இருந்தான் ...இருந்தும் தேவாவை எண்ணி அடக்கி வாசித்தான்..

அதற்குள் தாருவின் அப்பா ஒரு கவரில் இருந்து ஒரு பத்திரிகையை எடுத்து பிரபுவிடம் நீட்டி, " இது தான் நான் தாருவுக்கு பார்த்து இருக்கும் மாப்பிளை"... என அந்த ஆடவனை காட்ட பிரபு யாரையும் பார்க்கவில்லை தாருவை மட்டும் பார்த்தான் இது உண்மையா என்பது போல பார்க்க ..

அங்கே தாரு அவனை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை  விட்டால் நிலத்துக்குள் புதைந்து விடுவாள் போல அப்படி நின்று கொண்டு இருந்தாள்..

தாருவின் அப்பாவோ அவர்கள் மேல் எந்த குற்றமும் இல்லை என்பதை காட்ட, " எவ்வளவு நாள் தான் காத்து இருக்கிறது ..அவன் இன்னும் கோமா ல தான் இருக்கான் ..டாக்டரோ நம்பிக்கையா பேசல அதுனால என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க எனக்கு மனசு இல்லை அதுனால ".. என்று கூற

அவர் கூறியதை கேட்ட பிரபுவுக்கு இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள் என நினைக்க தோன்ற அவர்கள் முன்னால் தன் நண்பனின் கவுரவத்தை காக்க, " அப்படியா நல்ல விஷயம் அப்படியே செய்ங்க வாழ்த்துக்கள்..என் நண்பன் எழும் போது இந்த விஷயத்தை சொல்றேன்"... என்று கூற அவனது பதிலில் ஒரு நொடி தாருவின் அப்பாவே அதிர்ந்தார் ...தாரு அதிர மாட்டாளா அதிர்ந்து அவனை பார்க்க அவனோ இறுகி, " வந்த வேலை முடிஞ்சா கிளம்பறீங்களா டாக்டர் வர சமயம் "...என்று கூற அவர்கள் அனைவரும் கிளம்பினர்...

தாருவோ திரும்பி திரும்பி பார்த்து கொண்டே செல்ல அப்போது பிரபுவுக்கு ஒரு சந்தேகம் ஒரு வேலை தாருவின் அப்பா கட்டாய படுத்தி இருப்பாரோ என நினைத்து அவள் பின்னால் சென்று , "தாரு ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணும்"... என்க

அவளும் தயங்கிய படியே வந்தாள், " உனக்கு நடக்கிற இந்த கல்யாணத்தில் விருப்பமா"... என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக பிரபு கேட்க எங்கே அவள் இல்லை என்று சொல்லி விட மாட்டாளா என்ற நப்பாசை அவனுக்குள் இருக்க அவளோ, " இஷ்டம் "...என்று கூறி பிரபுவை அதிர செய்தாள்..

"அப்போ அவன்"... என்று தேவாவை காட்டி கேட்க ,அவனுக்கு விருப்பம் இல்லை அவளிடம் இப்படி இறைஞ்சி கொண்டு நிற்க இருந்தாலும் தன் நண்பனுக்காக கேட்டான்.

அதற்கு தாருவோ, " தேவாவுக்கு இனி நல்லா ஆகும்னு எனக்கு தோணலை பிரபு..டாக்டர் அன்னிக்கு சொன்னதை மறந்துட்டியா அவனுக்கு இடுப்புக்கு கீழே அடிபட்டு இருக்கிறதால அவனுக்கு சரியான பின்னாடி அவனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை ன்னு சொன்னாங்க அண்ட் அவன் எழுந்து நடந்தாலும் ஏதாவது குறை இருக்கும்னு சொன்னாங்களே"... என்று தயக்கத்தோடு அவள் மறுத்தற்கான காரணத்தை கூற அதை கேட்டவன் கோபம் எழ , "தாரு அது அப்போ இப்போ அவன் சரி ஆகிட்டு வரான்"....என்க

"எந்த நம்பிக்கையில் இருக்கிறது பிரபு ..நானே எல்லாம் இழந்து நிற்கிறேன் இப்போ என்னோட வாழ்க்கையும் இவனை நம்பி இழக்க சொல்றியா ??"...என்று அவள் அழுது கொண்டே கேட்க

இனி அவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த பிரபு, " சரி நீ கிளம்பு அதோ அவனுக்காவது உண்மையா இரு  "...என்று கூறியவன் அவளின் அப்பா நல்ல மூளை சலவை செய்து இருக்கிறார் என்பது தெளிவாக பிரபுவுக்கு புரிந்தது..

நடந்த விஷயம் எல்லாம் கூறிய பிரபு தன் தோழன் நம்ப அவனது காதலியின் திருமண பத்திரிகையை காட்ட முற்றிலுமாக உடைந்து போனான் தேவா...

உண்மையில் அவளது உயிரை காப்பாற்ற தான் அவன் உயிரை பணயம் வைத்தான் ஆனால் அவளே இப்போது அவனை விட்டுவிட்டு செல்ல ஒரே நாளில் பல அதிர்ச்சிகள் கூட்டாக அவனை தாக்க அதன் பிறகு அவன் அமைதி ஆனான்..பேரமைதி என்று கூட சொல்லலாம் ..தனக்குள்ளே ஒடுங்கி போனான்...

காதல் என்ற ஒன்று எல்லா சக்தியையும் மாற்ற வல்லது என்று கூறினார்களே ஆனால் அந்த காதலே பொய் என ஒருத்தி நெஞ்சில் குத்தி விட்டு சென்று விட்டாளே என எண்ணியவன் நான் திரும்பி வரவே மாட்டேன் என்று நினைத்து விட்டாளா ?? அதிலும் அவள் கூறிய காரணங்கள் தான் அவனால் ஏற்று கொள்ள இயலவில்லை 

ஆணும் பெண்ணும் உரசாமல் போனால் காதல் அழிந்து விடுமா ?? உடல் உரசும் சுகத்தை விட மனசு உரசும் சுகம் பெரிதல்லவா ?? இது அவளுக்கு தெரியாதா ?? இல்லை புரியாதா?? 

இல்லை காதலிக்கும் போது நான் தான் அவளுக்கு புரிய வைக்கவில்லையா என எண்ணியவன் தனக்குள்ளே முடங்கி போனான்..

தன்னை ஒன்றுக்கும் கையிலாகாதவன் போல எண்ணி கொண்டான்...மனதில் பல விஷயங்களை போட்டு குழப்பி கொண்டான்...ஒரு பக்கம் அவனது பெற்றோர் சென்றது பேரிடி என்றால் இந்த பக்கம் காதலி உயிரோடு அவனை கொன்று விட்டு சென்று இருந்தாள்.. எல்லா விஷயமும் சேர்ந்து அவனை வாட்ட தேவா தன்னிலை இழந்தான்..

கடும் மன அழுத்தத்திற்கு ஆளானான்..அந்த மன அழுத்தம் வரும் சமயம் அவன் என்ன செய்கிறான் என்றே அவனுக்கு தெரியாமல் போகிறது...ஒரு வழியாக அவனது உடல் நல்ல விதமாக தயாரானாலும் அவனது மனம் இன்று வரையும் தயாராகவில்லை அதற்கு தனியாக மருந்துகள் கவுன்சிலிங் சென்று வருகிறான்...ஒன்றும் பிரயோஜனம் இல்லை மருத்துவர்கள் கூறுவது அவனுக்கு தேவையானது உண்மையான அன்பு அவனை மட்டுமே நேசிக்க கூடிய அன்பு அவன் அன்புக்காக ஏங்கும் குழந்தை என்று கூற சிறிது நாட்கள் பிரபு அவனுடன் இருந்து பார்த்து கொண்டான்...அவனது நண்பன் பிரபு எவ்வளவு கூறியும் கேட்காமல் அவனது வீட்டுக்கே சென்றான்..

பிரபுவுக்கும் ஒரு சில பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்பட தொழிலை ஏற்று நடத்த வேண்டிய இக்கட்டில் அவன் இருக்க தேவா அவனை போக சொல்ல பிரபுவோ மனமே இல்லாமல் சென்றான் ஒரு பணியாளரை அவனுக்கு துணையாக நியமித்தப்படி..

ஆனால் வந்த அனைத்து பணியாளர்கள் அனைவரும் இவனுக்கு அழுத்தம் வரும் சமயம் ஏதாவது அவனிடம் கூறியோ ,செய்தோ அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவனை வெறியேற்ற அவனும் தன்னிலை இழக்கும் சமயத்தில் இது போல அசம்பாவிதம் நடந்து விடுகிறது..

 இதை எல்லாம் அவன் நார்மல் ஆகும் சமயம் அவன் செய்த தவறை உணர்ந்து வருந்தி தனக்கு தானே தண்டனை அளித்து கொள்வான் அதனாலே வேலைகாரர்களே வேணாம் என்று கூற அவனது நண்பன் பிரபு தான் கேட்காமல் அன்பை கொண்டு வந்து சேர்த்தி விட இப்படி ஆகி விட்டது என்று நடந்த அனைத்து உண்மைகளையும் அன்பரசியிடம் கூறினான்..அவனது கதையை கேட்ட அவளுக்கு அவன் அடித்ததை விட அவன் பட்ட கஷ்டங்களை நினைக்கும் போது கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top