Share:
Notifications
Clear all

இதயம் 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 14

          தேவராஜ் பெரும் குற்ற உணர்ச்சியில் திண்டாடி கொண்டு இருந்தான்..இரண்டு நாட்கள் கழித்து எழுந்தவனுக்கு என்ன நடந்தது என்று தெளிவாக நியாபகத்துக்கு வர அவனுக்கு அன்பரசியை பார்க்கவே மிகவும் சங்கடமாக இருந்தது...

முன்பு இருந்த பணியாளர்கள் எல்லாம் இப்படி ஏதாவது நிகழ்வு நடந்து இருந்தால் அந்நேரமே அவனை விட்டுவிட்டு ஓடி இருக்க இவள் இன்னமும் இங்கேயே தான் இருக்கிறாள் அதும் அவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் சுற்றி வர அவனுக்கு தான் குற்ற உணர்ச்சி பெருக்கெடுத்தது இதற்கு தான் யாரும் வேலைக்கு வேண்டாம் என அவன் கூறி இருக்க அவனது நண்பன் இவளை இங்கே கொண்டு வந்து தள்ளிவிட்டு அவனை இக்கட்டில் தள்ளி விட்டு விட்டான்...

தேவாவுக்கு நன்றாக அவனை பற்றி தெரியும் அவனது உடல் நிலையை பற்றியும் தெரியும் ஏதாவது  ஒரு விஷயத்தை எண்ணி குழப்பி கொண்டான் என்றால் அவன் தன்னிலை இழப்பான் அப்படி இருக்க அவன் கடந்த வாரம் அதாவது கிட்டத்தட்ட அன்பரசியை நாய் கடித்த மறுநாள் தேவா வெளியே சென்று இருக்கும் போது தாருவும் அவளது கணவனையும் காண நேர அவனுக்குள் மீண்டும் ஏதோ தாழ்வு மனப்பான்மை சூழ அறைக்குள்ளே முடங்கி விட்டான்..

அறையில் முடங்கினாலும் மூளையில் தேக்கி வைத்த அழுத்தத்தை இறக்க முடியாமல் திணற போதை, சரக்கு என்று அவன் அவனையே கெடுத்து கொண்டு இருக்க அந்த சமயம் பார்த்து தான் அன்பரசி வந்து இது போல நடந்து விட்டது..

அவள் தலையில் கட்டி இருக்கும் கட்டை பார்த்ததும் அவனுக்கு நடந்த விஷயங்கள் நினைவு வர குற்ற உணர்ச்சி மேலிட்டு அவளிடம் மன்னிப்பு கேட்க தேவராஜ் செல்ல அவளோ பிடி கொடுத்தாள் இல்லை...

அவன் அவள் அருகே வரும் சமயம் எல்லாம் அவள் போனிலே இருக்க அவனுக்கு தன்னை அவள் விலக்குகிறாளோ என்ற எண்ணம் மேலோங்கியது..

அன்றைய நாள் முழுவதும் அன்பரசி அவள் அறையிலே முடங்கி இருந்தாள்.. எப்போதும் துள்ளலாக இருப்பவள் அவளது அறையிலே முடங்கி இருப்பதை கண்டவன் அதிலும் அவள் ஏதோ வருத்தத்தில் இருப்பதாக அவனுக்கு பட தன்னால் தானே என்று மீண்டும் சுய அலசலில் ஈடுபட்டான்..

இப்படியே அந்த நாள் கழிய மறுநாள் காலை அவன் எழுந்து வெளியே வந்த போது அன்பரசியை காணவில்லை ..வீடு முழுவதும் வெளியே வந்து தேவராஜ் அவன் வீட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் பார்க்க அங்கே அவள் கையில் ஒரு பையுடன் நடந்து சென்று கொண்டு இருந்தாள் அன்பரசி..

அவனுக்கு செல்லும் அவளை காணும் போது தன்னால் தானே அவள் செல்கிறாள் என்று தோன்ற அவளும் எல்லோரை போல சொல்லாமல் கொள்ளாமல் போகிறாள் இதோ போயே விட்டாள் என்று அவள் ஒரு புள்ளியாய் மறையும் வரை பார்த்து கொண்டு இருந்தவன் அவளை திரும்ப அழைக்க கூட மனமில்லாமல் செல்லும் அவளை பார்த்து கொண்டு இருந்தான்...

இப்படி உனக்காக வரும் எல்லோரையும் உன் வாழ்வில் இருந்து துரத்தி விட்டு நீ மட்டும் எதற்கு இப்படி ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்ற கேள்வி அவனுக்கு வந்தது..

மற்றவர்கள் இது போல செல்லும் போதெல்லாம் வராத வேதனை இவள் அவனை விட்டு செல்லும் போது எதனால் வருகிறது..அப்படி ஒன்றும் பெரிதாக அவளுடன் நீ பழகி விடவில்லையே...இவ்வளவு ஏன் நீ அவளுடன் சரியாக பேச இல்லையே..இருந்தும் உனக்கு என்ன அவள் மீது இவ்வளவு அக்கறை???

ஆனால் அவள் இருக்கும் போதெல்லாம் அவனுக்கு ஒரு உறவு உணர்வு வந்ததே..அதனால் தானோ இந்த வருத்தம்??

 அதனால் தானோ அவளுக்கு உடல் சரியில்லை என்றதும் அப்படி பதறினாயோ...அவளை ஒரு குழந்தையை போல பார்த்து கொண்ட பின் தான் அவளை அவன் அவனுடைய உரிமையாக  பாவித்து இருக்க போய் தான் எப்போது பார்த்தாலும் அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவன் பதறுகிறான்... அவனே அவளுக்கு எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்து செய்ய விழைகிறான்..அதற்கு பேர் என்ன என்பது எல்லாம் யோசிக்காமல் அவளுக்கு வேண்டியதை செய்கிறான்..

இதை எல்லாம் சரி வர புரியாமல் தான் அவள் அன்று மருந்து தேய்க்க விட வில்லை என்றதும் அவனுக்கு கோபம் கிளர்த்து எழுந்தது அது அன்று ஈகோவாக அவனுக்கு பட ஆனால் அது ஈகோ அல்ல அவள் மீது அவன் கொண்டு இருக்கும் உரிமை உணர்வு என்பது அவனுக்கு தெளிவாக புரிய அவனுக்கு அவளை உடலை முழுதாக கண்டதாலோ என்னவோ அவள் மீது அவனுக்கு இச்சையை மீறி ஒரு உணர்வு வந்து இருக்கிறது அதற்கு பெயர் விருப்பமே..அவள் பால் அவன் மனம் எப்போதோ சாய்ந்து விட்டது அதை உணர்ந்தும் வெளி கொணாராமல் இருக்கிறான்..

    அவன் அந்த விருப்பத்தை ஆழ் மனதிலே புதைத்து கொண்டான்..அதனால் தான் அவள் சாதாரணமாக நெருங்கி வரும் சமயம் எல்லாம் அவன் விலகி விலகி செல்ல அவள் மீது விருப்பமில்லாதது போல அவன் நடிக்க ஆனால் அவனது ஆழ் மனம் அவளை நேசித்தது அவள் வேண்டும் என கூறியது ..அவளது அருகாமையை நாடியது..

ஆனால் இவளும் தன்னை விட்டு அகழ்ந்து சென்று விடுவாளோ என்ற பயம் அவனது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட துளிர்ந்த நேசத்தை அப்படியே கருக்கி விட்டான் அவன் மனதோடு புதைத்தும் கொண்டான்...

காதல் என்ற சொல் முதலிலே அவனை வேர் அறுத்து இருக்க மீண்டும் அது வேண்டாம் தனக்கு யாரும் வேண்டாம் நான் ஒரு ராசி இல்லாதவன் அதனாலே தான் அவள் சென்று விட்டாள் நான் தான் அவளை துரத்தி இருக்கிறேன் அவளை துன்புறுத்தி அனுப்பி இருக்கிறேன் என்று நினைக்க நினைக்க அவனுக்குள்ளே வருத்தம் அவன் மனதை அறுக்கும் அளவுக்கு வருத்தம் ஓங்க மீண்டும் அவனுள் தாழ்வு மனப்பான்மை கிளர்த்து எழுந்தது அந்த தாழ்வு மனப்பான்மை அவனுக்கு மனஅழுத்தத்தை கொடுக்க தேவராஜ் அவனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தான்..



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top