Share:
Notifications
Clear all

இதயம் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  


இதயம் : 15

இது தவறா என பல முறை அவன் யோசித்து பார்த்தான் அவனுக்கு அவளை பிடித்து இருந்தது..அதுவும் அவளை கண்ட நாள் முதலே அவள் செய்யும் சிறு சிறு குறும்புகளை ரசித்தான்..அவள் காணாத வேளையில் அவளை ரசிப்பதே அவனுக்கு என்று இருக்கும் ஒரே ஆறுதல்...

 அவன் துரத்தியும் அவளது உறுதியை கண்டு மெய் சிலிர்த்து இருக்கிறான் அவளை குழந்தை போல பார்த்து கொள்ள அவன் மனம் ஏங்குகிறது..ஆனால் அவளிடம் சொல்ல தயக்கம் அதுமட்டுமின்றி அவனது மன வியாதி வேறு அவனை வருத்தி விடுமோ அவள் தன்னை விட்டு அகழ்ந்து சென்று விடுவாளோ என நினைத்து பல நாட்கள் அவளை தூரே இருந்தே ரசித்து இருக்க அவன் எதிர்பார்த்தது போல அவனே அவளை வருத்தப்படுத்த அவன் நொந்து போய் விட்டான்..

அவனுக்கு எப்படி யோசித்தாலும் இந்த நொடி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே தோன்ற அவளை காக்க நினைக்கும் நீ தான் அவளை துன்புறுத்தினாயா??..என்ற கேள்வி அவன் மனதை அரிக்க தவறான முடிவை தேர்ந்தெடுத்து இதோ அவனது அறையில் தூக்கிட்டு கொண்டே, " என்னை மன்னிச்சுடு பிரபு இப்போ உன்னை கூப்பிட்டா நான் உடைஞ்சுடுவேன் என்னை மன்னிச்சுடு அன்பு "...என்று கூறி அன்புக்கு ஏங்கிய அந்த வயதுக்கு வந்த குழந்தை தூக்கிட்டு கொள்ள அந்த நொடி அந்த இறைவன் அவனுக்காக அனுப்பிய தேவதை வீட்டுக்குள் வரவும் அவனது அறையை அடையவும் சரியாகி இருக்க அவன் செய்ய துணிந்த காரியத்தை கண்டு ஒரு நொடி அவள் இதயம் நின்று துடிக்க அதுவே ஆத்திரமாக மாறி, "என்ன செய்யறீங்க நீங்க"... என்றாள் கோபமாக

அவளது குரலை மீண்டும் கேட்டதும் அதிர்ச்சியாகி கழுத்தில் மாட்டிய துணியை எடுக்க அதற்குள் பதறிய அன்பரசி வேகமாக கட்டிலின் மீது ஏறி, " என்ன செய்யறீங்க நீங்க ?? நல்லா இருக்கு இப்படி செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு??என்ன ஒரு முட்டாள்தனம் "...என்று அவள் கண்கள் குளம் கட்ட அவனை பார்த்து கேட்டாள்..

அவளுக்கு அவனை மிகவும் பிடித்து இருக்கிறது அவன் எப்படி இருந்தாலும் அவள் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறாள்..முன்பே அவனை ஒரு நோயாளியாக நினைத்து அவள் இங்கே வரவில்லை அதுவும் ஒரு வாரம் முழுவதும் அவன் அவளை பார்த்து கொண்ட விதத்தில் அவள் மனதில் அவன் மீது நல்ல அபிப்பிராயம் உருவாகி இருக்க அவனது கடந்த காலத்தை கேட்டதும் அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை எப்படி மகிழ்ச்சியாக இருந்தவன் இப்போது யாருமில்லா நிற்கதியாக இருக்கிறான் அவனை தன் மடியில் இட்டு நீ அழாதே நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறிட அவள் கைகள் பரபரத்தது...

போனவை போகட்டும் என் காலம் முழுவதும் நான் இருக்கிறேன் என்று கூறிட துடித்தது அவள் மனம் நீ எப்படி எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு நீ வேண்டும் என்று அவள் நினைக்க தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்கும் அவனை ஏறிட்டாள்..அவனது காலடியில் அவளது வாழ்க்கையை அவனுக்காக கொடுக்க அவளுக்கு ஆசை..

அவனுக்கோ மீண்டும் தாழ்வு மனப்பான்மை தான் எழுந்தது..அதாவது அவள் என்னுடைய அழுத்தத்தை கண்டு கொண்டாள் அவள் இதோ நான் எடுத்த இந்த முடிவையும் கண்டு கொண்டாள் தன்னை பற்றி என்ன நினைப்பாள் என்று நெனைத்தவன் கூடவே விட்டு சென்றவள் எதற்கு இப்போ வந்தாள் என்ற கோபமும் எழ அவனது முயற்சியை தடுத்தவள் மீது ஆத்திரம் பொங்க முகம் இறுகி, " எதுக்கு டி இப்போ வந்த வெளியே போ "....என்றான்

அவளோ கண்ணீர் தழும்பி நின்றவள் மேற்கொண்டு எதுவும் பேச வில்லை அவளது மூச்சே நின்று போய் இருந்தது அவள் சற்று முன் கண்ட காட்சியை எண்ணி அவள் மட்டும் லேட்டாக வந்து இருந்தால் என்ன ஆவது என்ன பாவம் செய்தான் இவன் இந்த உலகத்தை விட்டு செல்ல என நெனைத்தவள் அவனை அப்படியே கட்டி கொண்டாள்..

அவனை எதுவும் பேசாமல் இறுகி அணைத்தவள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது.. அவன் அணிந்து இருந்த சட்டையை மீறி அவனது உடலில் அவளது கண்ணீரின் சூடு தெரிய அவனது மனமும் இளகி போய் அவனது கண்களும் இலேசாக கலங்கியது அவள் நெற்றியில் தெரிந்த வடுவை பார்த்து...தன்னை அணைத்து இருப்பவளின் இதயம் துடிக்கும் ஓசை அவனை தாக்க அவனால் அதற்கு மேல் அவனது வீம்பை பிடித்து வைக்க இயலவில்லை...

அவளை ஒரு கையாலே அணைத்தபடி அவளது நெற்றி வடுவை இலேசாக தொட்டு, " என்னை மன்னிச்சிடு அன்பு "...என்று குரல் கமற கூற

அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து அவனது கண்ணீரை துடைத்தவள், " நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்"... என்று அவனுக்கு ஆறுதலாக கூற

 அவனோ அவளிடம், " நீ போயிடு அன்பு நான் ஒரு அரக்கன் இங்கே நீ இருந்தா உன்னை ஏதாவது நான் செஞ்சிடுவேன்"..என்று அவனையே அவன் குற்றப்படுத்தி கொள்ள

அவளோ , "நான் போக மாட்டேன் நீங்க எப்படி இருந்தாலும் நான் போக மாட்டேன்".....என்றாள் உறுதியாக

"சொன்னா புரிஞ்சிக்கோ அன்பு"... என்று கூற

அவளோ ,"மாட்டேன் சார் ..உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்"..என்று அவனை அணைத்து இருந்த அணைப்பை இறுக்கினாள்..அவளோ ஒவ்வொரு முறை அவனை இறுக்கும் போது நீ எதற்காக டி கஷ்டப்படுகிறாய் நான் அணைத்து கொள்கிறேன் இதை விட மூச்சு முட்ட உனை அணைக்க என் கை துடிக்கிறது ஆனால் நான் இப்போது உன்னிடம் வீழ்ந்தால் பின் எழ மாட்டேன் அதற்காகவே நான் என் கையை விலங்கு இல்லாமல் பூட்டி வைத்து இருக்கிறேன் என மானசீகமாக கூறியவன் அவளை விருப்பமே இல்லாமல் தன்னிடம் பிரித்தவன் சற்று தள்ளி நின்று அவள் பால் சாய துடிக்கும் கரங்களை அடக்கி தன் மார்பில் கையை கட்டி கொண்டான்...

அவள் முகத்தை ஏறிட்டவன், " உனக்கு சொன்னா புரியாது என்னோட பிரச்சனை அன்பு..உனக்கு இந்த இடம் பாதுகாப்பு இல்லை "...என்று கூற

"எனக்கு புரிஞ்சுக்க வேணாம் சார் எனக்கு நீங்க மட்டும் போதும் உங்களுக்கு யாரும் இல்லைன்னு சொல்லி தானே நீங்க போறேன்ன்னு இந்த முடிவை எடுத்து இருக்கீங்க எனக்கு நீங்க வேணும் சார் வெக்கத்தை விட்டு சொல்றேன் எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு நூறு வருஷம் நான் உங்க கூட வாழனும்" ... என்று கூறி அழுதாள்..



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌💕💕



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top