இதயம் 16
இதயம் : 16
அவனோ அவளை தீர்க்கமாக பார்த்து, " யாரோட பரிவும் யாரோட பச்சாதாபமும் எனக்கு வேணாம் அன்பு "...என்று கோபத்துடன் கூற
"நான் உங்க மேல உள்ள பரிவோ இரக்கப்பட்டோ சொல்லல சார் என்னோட அளவு கடந்த காதல் எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு..உங்க கூட இருக்கணும்னு தோணுது வாழ்ந்தா உங்க கூட தான் வாழனும்னு தோணுது "...என்று கூற
தேவராஜோ மிக புத்திசாலி மற்றவர்கள் கண் பார்வையை வைத்தே எதிரில் இருப்பவர்கள் என்ன நெனைக்கிறரர்கள் என கண்டு பிடிப்பவன் அவனின் கண்ணாடி போல அவளது மனதை திறந்து அவனுக்கு காட்டி கொண்டு இருக்கும் அவளை அவனுக்கு தெரியாதா தீர்க்கமாக அவளை பார்த்து , "உனக்கு என்னை பத்தின எல்லாம் விஷயமும் தெரிஞ்சிடுச்சுன்னு நெனைக்கிறேன் ஆனால் என்னால இன்னொரு இழப்பை தாங்கி கொள்ள சக்தி கிடையாது..நான் நேசிச்ச யாரும் என்கூட தங்க மாட்டாங்க ...அதுனால தான் நான் நேசிக்கிற பிரபுவை கூட இங்க வர கூடாதுன்னு சொல்லி இருக்கேன் அதுனால நீ இங்க இருக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை"...என்று கூற
"ஏன் சார் இப்படியே பேசிட்டு இருக்கீங்க இப்போ உங்களுக்கு என்ன சார் பிரச்சனை ?? உங்களுக்கு நான் சொல்றது எதுவும் புரியலையா இல்லை என்னை ஒதுக்கனும்ன்னு நெனைச்சுட்டு இருக்கீங்களா??? நான் உங்களை தான் காதலிக்கிறேன் காதலிப்பேன் காதலிச்சுட்டே இருப்பேன்..உங்களால அதை தடுக்க முடியாது "....
"காதலா இது என்ன உளறல்???..நீ என்னை காதலிக்கவா வந்த??..." அவள் கூறிய விஷயங்கள் அவனுக்கு பிடித்து இருந்தாலும் இப்போதே அவளை தூக்கி தட்டாமாலையாக சுற்ற வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அவள் செல்ல வேண்டும் என்ற உந்துதலே அவனுக்கு இருக்க கேட்க கூடாததை கேட்டான்...
அவள் இதற்கு எல்லாம் வருத்தப்படுவாளா??? அசால்ட்டாக நக்கல் சிரிப்பு அவனை பார்த்தே உதிர்த்தவள், "ஆமாம் சார் உங்களை காதலிக்க தான் நான் வந்தேன்...நீங்களும் என்னை காதலிக்கறீங்கன்னு எனக்கு தெரியும்".. என்று அவள் உறுதியோடு கூற,
ஒரு நொடி அவன் அவளது பதிலில் அதிர்ந்தாலும் அவள் முகத்தை பார்த்து என்ன உளறல் உலறிட்டு இருக்காமல் இங்க இருந்து கிளம்பு முதல்ல.. எனக்கு யாரையும் காதலிக்க இப்போதைக்கு விருப்பம் இல்ல விருப்பம் இருந்தா சொல்லி அனுப்பறேன் "..என்று அவன் அவள் முகத்தை பார்க்காமல் விரட்ட
அவனை பார்த்து அவளது முத்து பல் வரிசை தெரிய சிரித்தவள் முகமே கூறியது அவன் கூறியதை அவன் நம்பவில்லை என "என்ன சொன்னீங்க உங்களுக்கு பிடிச்சவங்க யாரும் உங்க கூட நிலைக்க மாட்டாங்க ன்னு தானே சொன்னீங்க...உங்க லிஸ்ட் ல என்னையும் நீங்க எப்போவே சேர்த்துட்டீங்க சார் "... என்று கூற
தான் கூறிய பொய்யை நொடி பொழுதில் அவள் கண்டு கொண்டதை எண்ணி நொடியில் அவன் முகம் சிவந்தாலும் அவளை வெளியேற்றவே அவன் குறியாக இருக்க
அவளோ அவன் அருகே நெருங்கி அவனது சட்டையை கொத்தாக பிடித்து , "என்னால முடியல சார் என்னை விரட்டாதீங்க சார் எனக்கு உங்க கூட இருக்கணும் ப்ளீஸ் சார்"... என்று அவள் உடைந்து கூற
அவள் கூறியதை பார்த்து அவன் மனது இளக தான் செய்தது இருந்தும் அவன் மனம் அவள் வசம் செல்வதை அவனாலே தடுக்க இயலவில்லை என்றாலும் அவளை விட்டு நீங்கினான்..
அப்போது அவளோ , "சார் நீங்க என்னை ஏத்துக்க மாட்டீங்கல?? "...
"மாட்டேன் போய் வேற வேலை தேடிக்கோ இங்கிருந்து போற வழியை பாரு இது எல்லாம் சரிப்பட்டு வராது "...என்று கூற
வெளியே மழை பெய்து கொண்டு இருந்தது..அவளோ சரி நான் போறேன் சார் போறேன் நீங்களா கூப்பிடாமல் நான் வர மாட்டேன்..எனக்கு தேவை வேலையில்லை சார் நீங்க நீங்க மட்டும் தான் அது புரிஞ்சுக்காத உங்க கிட்ட பேசி பிராயோசனம் இல்லை சார் ".. என்றவள் கொட்டும் மழையில் வெளியே போய் நின்று கொண்டாள்..
அவனும் என்னவோ செய்யட்டும் என்று அவனது அறையில் இருந்தாலும் அவனது மனம் ஒரு நிலையில் வெளியே இடியோடு கூடிய கனமழை பெய்ய இந்த பெண் ஒரு வேளை சென்று இருப்பாளோ என்ற பீதி வர வேகமாக அவனது அறையை விட்டு வெளியேறியவன் அவளை தேட வீடு முழுவதும் அவளை காணவில்லை..அவளை நன்றாக தெரிந்தும் இந்த சமயத்தில் அவளை துரத்த
தேவா பார்க்க அவளோ அன்று எப்படி முதன் முறையாக அவளை பார்க்கும் போது அழகிய ஓவியம் போல நின்று அவனை ஈர்த்தாளோ அதே போல அவனை மீண்டும் ஈர்க்க கொட்டும் மழையில் அன்றைய தினத்தை போல நனைந்து உடம்பை கெடுத்து கொள்ள போகிறாள் என நெனைத்தவன், " அன்பு என்ன செய்யற உள்ளே வா" என்று அதட்ட
அவன் முகத்தை பார்த்து கொண்டே குளிரில் நடுங்கியபடி , "வர மாட்டேன்".. என்றாள்
"மழை பெரிசா வருது"...
"வரட்டும் சார் அது தான் என்னை போக சொல்லிட்டீங்களே அப்புறம் என்ன அக்கறை உங்களுக்கு???மழை வந்தா வந்திட்டு போகுது இந்த ஊருக்கு மழை என்ன புதுசா???"...
அவளை பார்த்து முறைத்தவன் , "அன்பு சொன்னா கேளு வா"...
"வர மாட்டேன் நீங்க என்னை காதலிக்கிறேன் சொல்லுங்க நான் வரேன்"...என்றாள் பிடிவாதமாக
"அப்படி எல்லாம் சொல்ல முடியாது நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல அன்பு வா உள்ளே"....
"வர மாட்டேன் சார் உங்க விஷயத்துல நான் சின்ன குழந்தையாவே இருக்க ஆசைப்படுறேன் அப்படி தான் அடம் பிடிப்பேன்"....
"சொன்னா கேளு "...இந்த முறை அவன் கோபத்தில் கொப்பளிக்க
"அது தான் நான் வேணாம்னு சொல்லிட்டிங்களே அப்புறம் எதுக்கு என் மேல அக்கறை படுறீங்க நான் எப்படி போனா உங்களுக்கு என்ன??"...
என்று குளிரில் நடுங்கியபடி கூற
தேவராஜ் ஆழ்ந்து அவளை பார்க்க பாவாடை தாவணியில் எல்லோரா ஓவியம் போல காட்சி அளிக்க உடலோடு உடல் ஒட்டிய ஆடைகள் அவளது இளமை அவனை தூண்டி விட கொட்டும் மழையில் நனையும் பூங்கொத்து போல அவள் காட்சி அளித்தாள்.. அவன் மனதையும் ஈர்த்து அவனது தவத்தை களைத்தாள் என்றே கூற வேண்டும்..
அதனால் ஒரு முடிவு வந்தவனாய் அந்த பூங்கொத்தை அப்படியே விட்டால் ஆகாது அந்த அன்பு என்ற மலர் இந்த தேவாவின் சொத்து என நினைத்து அவள் அருகே வந்தவன் அவளது கையை பிடித்து தன் அருகே இழுக்க அவனோ அவனிடம் முரண்டு பிடித்தாள்...
இருவரும் மழையில் தொப்பலாக நனைய தன்னிடம் முரண்டு பிடித்தவளின் இடையை தன் அருகே இழுத்து தன் மீது மோத செய்ய அவளும் இலேசான முரண்டு பிடித்து கொண்டு இருந்தாலும் அவன் அருகாமையை விட்டு ஒரு அடி நகர வில்லை..
அந்த கன மழையின் குளிருக்கு இதமாக இருவரின் உடலும் வெப்பத்தை தேட இருவருக்கும் விலகி செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழ வில்லை செத்து மடியும் வரை இப்படியே நின்று கொண்டு இருந்தால் போதுமென்ற எண்ணமே..
தன்மேல் விழுந்தவளை மெல்ல மெல்ல தேவாவின் கரங்கள் தழுவ அப்படியே சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டவன் அவளை இறுக அணைத்து கொண்டான்...
அவனது அணைப்பு இறுக இறுக அவளும் அவன் கைகளில் விரும்பியே குழைந்தாள்.. அந்த இரண்டு ஜீவன்களுக்கும் இடையே நேசம் கொழுந்து விட்டு எறிந்தது...மெல்ல அவனது உணர்ச்சிகள் தூண்டப்பட மெல்ல அவள் சங்கு கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான்...அவள் கூச்சத்தில் நெளிந்து இது என்ன இப்படி ஒரு இன்ப உணர்வு தனக்கு எழுகிறது என நெனைத்தவளின் மனதில் அவனது நெருக்கம் பயப்பந்தை விதைக்க மெல்ல அவனிடம் இருந்து விலகினாள்..
