இதயம் 21
அத்தியாயம் : 21
சென்னை- சிவானந்த குருகுலம்
சென்னையில் சிவானந்த குருகுலம் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.. அவ்வளவு ரம்மியமான இடம்...ஒரு இருபது ஏக்கரில் பரந்து விரிந்த பூமியது...அதில் எண்ணற்ற மரங்களும்,செடிகளும் எண்ணற்ற பறவைகளும் எங்கு பார்க்கினும் பசுமை போர்த்தியது போன்ற இடம்...அதே போல தான் அங்கு எண்ணற்ற பிள்ளைகள் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்தனர்...நம்முடைய பாஷையில் அனாதை இல்லம் என்றும் கூறலாம்...
ஆனால் இங்கே உள்ள சிவபிராகசம் அய்யாவும் அவரது துணைவியார் சுமதியும் இந்த வார்த்தையை கூறி கொண்டு யாரேனும் இந்த வாயில் படிக்குள் நுழைந்தால் போதும் அவர்கள் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி அடுத்த நொடி வெளியேற்றப்பட்டு இருப்பர்...
ஆம் அவர்களை பொறுத்தவரை அனாதை என்ற சொல்லே இந்த உலகத்தில் இல்லை என்று கூறுவர்...
அவரை பற்றி தெரிந்தவர்கள் இது போல வந்து நிற்க மாட்டார்கள்... ஆனால் அவரின் நல் குணத்தை பாராட்டி பல இடங்களில் இருந்து அவருக்கு உதவிகள் கிடைப்பதால் இன்று வரை எந்த வித சிரமும் இல்லாமல் அவரது இல்லம் செயல்பட்டு வருகிறது...
அப்படிப்பட்ட இடத்தில் தான் தனது இரு குழந்தைகள் உடன் வேலை செய்து வருகிறாள் அன்பரசி...
ஆம் பெறாத பிள்ளையும் பெற போக பிள்ளையுமாய் அவள் அவளது தேர் போன்ற வயிற்றை ஆட்டி கொண்டே வர சிவப்பிரகாசம் கடிந்து கொண்டார்..
"உன்னை தான் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கேன்ல ஏன் அந்த பக்கம் இந்த பக்கமா ஒடிட்டு இருக்க??"...
"சார் யாரோ ஒரு பெரிய மனுசன் வரதா அம்மா சொன்னாங்யா அதான் அந்த டேபிளை தொடைச்சிட்டு இருந்தேன்"..என்றாள் புன்னகையோடு
"அதெல்லாம் செய்ய ஆள் இருக்கு நீ போய் உக்கார்ந்து செய்யுற வேலை இருக்கா ன்னு பார்த்து செய்"..என்க
அவளும் சிரித்து கொண்டே , "சரிங்க அய்யா".. என்று திரும்பும் போது ஒரு வெளிநாட்டு ரக கார் ஒன்று வர, " அய்யா அவங்க வந்துட்டாங்க போல நான் என்னோட அறையில் இருக்கேன் "...என்று கூறி மெல்ல தன் வயிற்றை தூக்கி கொண்டு செல்வதை காருக்குள் இருந்து பார்த்தார்கள் தேவராஜ் மற்றும் பிரபு..
அவளே தான் தன் குழந்தையை சுமந்து கொண்டு வர அதை பார்த்தவனின் கண்கள் பனித்தது.. கடந்த ஒரு மாத காலமாக இவளை சல்லடை இட்டு தேடி பிடித்து இருக்கிறார்கள்..
எப்போது இவள் குற்றமற்றவள் என அவனுக்கு தெரிய வந்ததோ அப்போது முதல் அவன் அவளை தேட துவங்கினான்..கூடவே பிரபுவும் தன் பங்கிற்கு தேட ஒரு வழியாக இங்கே இருப்பதாக தகவல் கிடைக்க இதோ வந்து விட்டான் அவளது தேவ ராஜ்..
அவனது தேவதை பெண்ணை அவனால் விட்டுவிட்டு இருக்க முடியுமா??தன் வாழ்வில் வசந்தத்தை வீச வந்த பைங்கிளியை அவனால் மறக்க தான் இயலுமா காலம் கடந்தாலும் ஆழ் மனதில் அவள் பால் தேங்கி கிடக்கும் காதல் தான் மடிந்து போகுமா??
அவளை கண்டதும் முதல் அவளிடம் தாவ துடித்த மனதை அடக்கியவனை கண்ட பிரபுவோ காரை நிறுத்தும் ஐடியா இல்லாமல் இருக்க, " டேய் காரை நிறுத்த போறியா இல்லையா??".. என்று கூற
அவனோ மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரை நிறுத்த தேவாவுக்கு காரில் இருந்து இறங்க ஒரு நொடி தயக்கம் ..அவள் என்னை ஏற்று கொள்வாளா இல்லை விட்டு செல்வாளா?? என்று...
அவனது தயக்கத்தை முதலில் உடைத்து எறிந்தது பிரபு தான் , "டேய் போடா இல்லாட்டி வண்டியை வீட்டுக்கு திருப்பறேன்".. என்று கூற அவனோ , "நீ மூடு டா"... என்று பதில் அளித்தவன் வேகமாக கீழே இறங்கினான்..
அதற்குள் அவள் அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்..பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கு படிக்க சென்று இருக்க காலை முதல் அலைந்து கொண்டு இருந்ததில் தேகம் வலிக்க அவளுடைய அறைக்கு சென்று கட்டிலில் சரிந்தவளுக்கு மனம் முழுவதும் தன்னவனின் நினைவே ..
மறந்தால் தானே நினைக்க சதா எந்த நேரமும் அவளின் இதய கூட்டினை ஆக்கிரமித்து கொண்டு இருப்பவனை எப்படி மறக்க அவள் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருப்பதே அந்த மூன்று மாதங்கள் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி தான் அந்த பொன் காலங்கள் தான் அவளது உயிரை இன்னும் பிடித்து வைத்திருக்கிறது அவனது உதிரம் நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறுவது போல அவளது மேடிட்ட வயிற்றில் அசைய அந்த இதத்தில் மெல்ல கண் அயர்ந்தாள்..
அதற்கும் அவனது கள்வன் விடவில்லை கண்ணை அடைத்தாள் எனில் அவன் வந்து இம்சை செய்ய கனவில் ஆவது வாழ்வோம் என வெகு நாட்களுக்கு பிறகு இதழ் இலேசாக சிரித்த படி அவள் உறங்க அதற்குள் சிவப்பிரகாசம் அவர்களிடம் உரையாடிய அவர்கள் இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ள விஷயத்தை கேட்ட அவருக்கோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்க, " சார் அன்பு புருஷனா நீங்க நீங்க பிரிஞ்சு இருந்தாலும் அவ இது நாள் வரை உங்களை விட்டு கொடுத்து பேசினது இல்ல ..தங்கமான பொண்ணு உங்களுக்கு இடையில் என்ன நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரிய வேணாம் ஆனால் அந்த பொண்ணை இனி நல்லா பார்த்துக்கோங்க சார் நல்ல அருமையான பொண்ணு"... என்று அந்த வயதான மனிதர் அவனிடம் கூற ,
அவனோ , "கண்டிப்பா சார் என்னோட குடும்பத்தை நல்லா பார்த்துக்கறேன்"....என்று கூறியவன் கண்காளாலே பிரபுவை இங்கே இருக்க கூறியவன் அன்பு எங்கே இருப்பாள் என கேட்டு அறிந்து அவளது அறையை அடைந்தான்..
கதவு இலேசாக சாத்தப்பட்டு இருக்க மெதுவாக திறந்தான்...அந்த ஒற்றை அறையின் ஓரத்தில் கட்டில் இடப்பட்டு இருக்க அதன் மேல் அன்பு படுத்து இருந்தாலும் நான் உறங்கும் நேரத்தில் கூட உனை காப்பேன் என்பது போல வயிற்றில் இருக்கும் அவனது குழந்தையை அணைத்த படி படுத்து இருக்க அவளுக்கு இன்னும் அவன் வந்தது அறியவில்லை..
அவளை இந்த கோலத்தில் பார்க்கவும் அவனது மனது குலுங்கி கடந்த கால நினைவு எழ அதில் நடந்த கசப்பான சம்பவங்களை ஒதுக்கி அவனுடைய வாழ்வில் அன்பு வந்த பிறகு வசந்தம் வீசிய நினைவுகளை மட்டும் அவன் நெஞ்சாம் கூட்டுக்குள் கொணர்ந்தவன் அவளை கண்டதும் அவனுக்கு மெல்ல குறும்பு தனம் மேலோங்க மெல்ல அவள் அருகே கட்டிலில் அமர்ந்தவன் அவளது மென் வயிற்றில் குனிந்து முத்தமிட்டான்..
அவளோ உறக்க கலக்கத்தில் அவனது வருகையை உணராமல் உறங்க ஆனால் அவனது வருகையை அவனது குழந்தை உணர்ந்து கொண்டது...அது தனது தாயை உதைத்து தள்ள அவளும் உறக்கத்திலே தன் மென் கையால் குழந்தையை வருடி கொண்டே படுத்து இருக்க அந்த அழகை ரசித்தவன் மெல்ல அவள் அருகே படுத்தான்...
அவள் புறமாக மெல்ல திரும்பி அவளது பூ முகத்தை கண்டு ரசித்தவன் மெல்ல அவளது நெற்றியில் இதழ் பதிக்க அவனது அருகாமையில் நெடு நாள் கழித்து எழுந்த அவனுடைய வாசனை அவளது நாசியை தாக்க இனம் கொள்ள முடியா சந்தோசம் அவளுள் எழ அவளது உறக்கம் தடை பட்டு மெல்ல கண் விழித்தாள் அவனுடைய அன்பு..
