Share:
Notifications
Clear all

இதயம் 22(முற்றும்)

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

கண்ணாடி இதயமடி

அத்தியாயம் : 22

இத்தனை நெருக்கத்தில் அவனை காண அவளுக்கு கனவா என்பது போல நினைத்து கண்களை கசக்க கண் முன்னே அவளவன் இது அவன் தானா இல்லை தான் எப்போதும் காணும் கனவா என என அவள் பார்க்க அவளது ஒவ்வொரு அங்கு அசைவையும் மிக அழகாக ரசித்து கொண்டு இருந்தவன், " என்ன டி முட்டை கண்ணி இப்படி முழிக்கிற"... என்று கூற அதிர்ச்சியில் சட்டென்று எழ அவள் முயற்சி செய்ய ,

அதற்கு விடாமல் அவளது உடல்நிலை பாடு படுத்த அவளது அதிர்ச்சியை கண்டவன், " ஹே பார்த்து டி ஏதாவது மெதுவா ஏதாவது ஆகிட போகுது"..என்று பதறி அவளது தோள் தொட்டு அவளை எழுப்ப எழுந்த அவளோ, " நீங்க எப்படி இங்கே??"..என்றாள் இன்பம் கலந்த அதிர்ச்சியோடு

"ஏன் நீ என்ன மாயா லோகத்திலா ஒளிஞ்சு இருக்க கண்டு பிடிக்க முடியாதா??"...என்று கேலி பேச

அவளோ பே என்று விழிக்க

"என்ன டி படபட ன்னு வாய் அடிப்ப இப்போ ஒன்னும் பேச மாட்டேன்கிற"... என்று கூற

அவளுக்கு தான் அவனை கண்ட அதிர்ச்சியில் நா வறண்டு போய் பேச வார்த்தைகள் மட்டுப்பட

அவனோ மேற்கொண்டு அவளை சோதிக்காமல் அவளது காலின் கீழே மண்டியிட்டு அமர்ந்தான்..

அவளோ அவனது ஆக்ரோஷத்தை கோபத்தை எல்லாம் நேரில் கண்டவளுக்கு அவனது செய்கை எல்லாம் பார்த்தவளுக்கு இது தேவராஜ் தான் ஆறு மாதத்தில் இப்படி மாறி விட்டானா என்று நம்ப முடியாமல் பார்க்க அவளது மடியில் தலை சாய்ந்து அமர்ந்தவன் கண்களில் கண்ணீர் துளி அவளது உடுத்தி இருந்த பருத்தி புடவையை நனைத்து , "மன்னிச்சிடு டி எனக்கு தெரியல இன்பரசு உன் தம்பின்னு  நான் நீயும் என்னை ஏமாத்திட்டன்னு நினைச்சு தான் அன்னிக்கு உன்னை வீட்டை விட்டு துரத்தினேன்.."...என்க,

அவன் கூறுவதை கேட்டவளோ , "நீங்க நான் சொல்றதை கேக்கிற மனநிலையில் இல்லை சார் அதுனால தான் நான் அங்கே இருந்து மேலும் உங்க கோபத்தை அதிக படுத்த வேணாம்ன்னு தான் நான் கிளம்பிட்டேன் கோபம் போனதும் நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும் சார் அதுக்கு தான் நான் காத்துகிட்டு இருந்தேன் "..என்றவள்,

 அன்று நான் அவளுக்கு அணிவித்த அவனது சங்கிலியை கழுத்தில் இனியும் அவளை காக்கும் வேலி போல அணிந்து இருக்க அதை கண்டவன் உள்ளம் குளிர, " என்னை மன்னிச்சிடு அன்பு"..என்று மனதார கூற

"இதுல மன்னிக்க என்ன இருக்கு சார் நீங்க எந்த தப்பும் செய்யலே"...என்றாள்

"நீயும் செய்யலேயே டி ஆனால் ரொம்ப அனுபவிச்சிட்ட"...என்று தேவராஜ் வருத்தத்தோடு கூற

"இல்ல சார் இப்படி எல்லாம் நடக்கன்னும்னு இருக்கு அது தான் நடந்து இருக்கு"...என்று கூற

கவலையில் அவளது முகத்தில் கரை புரண்டு ஓடி கொண்டு இருக்கும் கண்ணீரை கூட துடைக்காமல் இருக்க கண்ணீர் வழிந்து அவளின் சிவந்த அதரங்களில் நிற்க அவளின் இந்த கவலை அப்பிய முகத்தை காண இயலாதவனுக்கு நன்றாக தெரியும் அவன் பேசிய வார்த்தைகளில் வடு இன்னும் நீங்க வில்லை என்று அவன் கூறிய வார்த்தைகளை அவனால் திருப்பி எடுக்க இயலாது ஆனால் இனி மேலாவது அவனால் அவளை வதைக்காமல் இருக்க இயலும் என நெனைத்தவன் மேற்கொண்டு இதை பற்றி பேசி அவளை வருத்தப்பட வைக்க வேணாம் என நெனைத்தவன் அவளை இறுக அணைத்து இருந்தான் அவளுக்கும் அந்த அணைப்பு தேவை என்பதால் சுகமாக அவனது அணைப்புக்குள் அடங்கி இருந்தாள் அவனின் அன்பரசி..

மூன்று மாதங்களுக்கு பிறகு மூக்கூர்த்தியில் தேவா எஸ்டேட் விழா கோலம் பூண்டு இருந்தது..பின்னே தேவலோக ரம்பை அவனது வீட்டில் அவதரித்து இருக்க அதை ஊரை அழைத்து கொண்டாடி இதோ பாரடா என்னுடைய மகளை என காட்டி பெருமைப்பட மாட்டானா தேவராஜ் இதோ பெருமை பட்டு கொண்டு இருக்கிறானே..

எவனுக்கு குழந்தை பிறக்காது எவன் எழுந்து நடக்கவே மாட்டான் அவன் ஒரு பைத்தியம் அவனிடம் மனுசன் இருப்பானா என்றெல்லாம் யார் யார் அவனது புகழ் அவனுக்கு என்ன நடந்தது என்று அறிந்தும் அறியாமலும் அவனை பற்றி அவதூறு பரப்பி இருந்தார்களோ அவர்களை எல்லாம் அவன் அழைத்து இருந்தான்..

அதில் தாரு,தாருவின் அப்பா ,பக்கத்து எஸ்டேட் பெரியவர் அனைவரும் அடங்க தழைய தழைய பட்டு புடவை கட்டி அவன் அவளுக்கு இறுக்கமாக கட்டி இருந்த தாலியை சுமந்து கொண்டு தாய்மையின் பூரிப்பும் கணவன் தாங்கு தாங்கு தாங்கும் கணவனின் அன்பில் தினமும் திக்கு முக்காடி இருக்கும் அன்பரசியை சிறு பொறாமையில் பார்த்து கொண்டு இருந்தாள் தாரு..

ஆம் தாருவிற்கு திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் பிள்ளை பாக்கியம் உண்டாகவில்லை..தன் குடும்பம் இனி இவனை திருமணம் செய்தால் தளராது என நினைத்த தாருவின் அப்பாவிற்கு மிக பெரிய அடி அதுவும் இரு குழந்தைகளின் தந்தையாக இன்பரசை இறக்கி விடாமல் தோளில் சுமந்து கொண்டே திரியும் தேவராஜை காணும் போதே அவருக்குள் ஒரு குற்ற உணர்ச்சி எழுந்ததை அவரால் தவிர்க்க முடியவில்லை ..

ஆம் இன்பரசு அச்சு அசல் அன்பரசி போலவே இருப்பதால் யாருக்கும் அவன் மீது சந்தேகம் வரவே இல்லை..கூடவே அவனது பெண்ணரசி அப்படியே தேவாவின் ஜாடையை உரித்து வைத்திருப்பதால் அனைவருக்கும் பார்க்கும் போது முழுமையான குடும்பம் போலவே இருக்கும் தேவாவும் இன்பாவை தன் மகனாக ஏற்று கொண்டு இருக்க அதிலும் அவன் தான் தன்னுடைய தலைச்சன் பிள்ளை என்றே அவன் கூறி விட்டான்...

இன்பாவுக்கு இன்று வரை எந்த உண்மையும் தெரியாது அது தெரியவும் வாய்ப்பு இல்லை..அதனால் தேவா,அன்பு பட்ட கஷ்டங்கள் எல்லாம் போய் இப்போது அவனது குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது...

இப்போது அவனுக்கு தைரியமாக அவனை குறை பேசிய அனைவரையும் எதிர் கொள்ள முடிகிறது அதற்கு உண்மையான காரணம் அன்பு அவனின் அன்பு மற்றும் அவனது உயிர் நண்பன் பிரபு மட்டுமே..இப்போது அவனது குடும்பம் அவர்கள் மட்டுமே..தாருவிற்கு இதை எல்லாம் காணும் திராணி இல்லை ..அவர்கள் அவளை முறைக்க வில்லை அவள் செய்த தவறை குறை கூறவில்லை உண்மையை கூறவேண்டுமெனில் அவளிடம் நன்றாக தான் உரையாடுகிறார்கள்..ஆனால் அது தான் அவளை குற்றப்படுத்தி கொண்டே இருக்க விழா முடிந்ததும் தந்தையும் மகளும் கிளம்பி விட்டனர் 

அப்படியே ஒவ்வொருவராக கிளம்ப அன்பிடம் வந்த அவள் முதன்முதலாக அவள் மூக்கூர்த்திக்கு வரும் போது அவளிடம் வம்பு செய்த பெரியவர், " அம்மணி நீ நல்லா இருக்கணும் தாயி" என்று தேவாவின் மகிழ்ந்த முகத்தை பார்த்து விட்டு கூற அவளோ அவரது கையை பிடித்து விடை கொடுத்தாள்..

இரவானதும் தன் கணவனின் மார்பில் தலை சாய்த்தவள் அவனது மார்பு ரோமத்தை அளந்து கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் இருக்க, " என்ன டி முட்டை கண்ணி யோசிச்சிட்டு இருக்க "...என்று காதலோடு கூற

"இல்ல சார் தாரு அவங்க பாவம்ல சார்"...என்க

"ஏன் அவளுக்கு என்ன நல்லா தானே இருக்கா?? "...ஆம் அவனுக்கு அவளை காணும் போது ஒன்றும் தோன்றவில்லை ..அவள் தன் வாழ்வில் சில காலம் தன்னுடன் இருந்தவள் அவ்வளவே அந்த எல்லையை தேவ ராஜ் வகுத்து இருந்தார்..

"இல்ல சார் அவங்க உங்களை பார்க்கும் போது கண்ணில் ஏக்கம் இருந்துச்சு"..என்க

"அப்படியா நான் கவனிக்கலேயே

என் கண்ணு முழுசா உன் மேல இருக்கும் போது நான் ஏன் டி அவளை பார்க்க போறேன் "..என்று கூறியவன்

"அவளுக்கு ஏக்கம்னா அதை அவன் புருஷன் பார்த்துப்பான் முதலில் நீ உன் புருஷனை கவனி டி "...என்று கூறியவன் அவள் ஏதோ கூற வருவதற்குள் அவளது இதழை வெறித்தனமாக சிறை செய்து இருந்தான்..அவளும் அவனோடு பாந்தமாக ஒன்றி கொண்டாள்..

பல இரவுகளை வேதனையோடு கழித்த இவர்கள் இருவரும் இனி அவர்கள் வாழ்வில் இன்ப விளக்கே எரியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..அவர்கள் வாழ்வு குளிரும் நிலவாய் அவர்களை குளிர செய்யட்டும் என அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம் நன்றி வணக்கம்..

 

                    **சுபம்**

 



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

அருமயன கனத 💕💕



   
ReplyQuote
udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

@para thanks da



   
ReplyQuote
(@jeunifer)
Active Member
Joined: 2 months ago
Messages: 6
 

Amazing sis 🥰🥰🥰🥰🥰💕💕



   
ReplyQuote
udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

@jeunifer thanks dear



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top