Share:
Notifications
Clear all

இதயம் 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  


இதயம் : 20

அவர் மரணமடைந்த செய்தி கேட்டதும் தாங்கி கொள்ள முடியா வேதனையை  கொண்ட குடும்பத்தை அந்த ஊர் மக்கள் மேலும் வருத்தி எடுக்க பிறந்ததும் தந்தையை முழுங்கி விட்டான் ராசி இல்லாதவன் அவனை பார்த்தால் கூட நமக்கும் ஏதாவது துர்சம்பவங்கள் நிகழும் என்று கூறி புரளியை ஊர் மக்கள் பரப்பி விட அவர்கள் அனைவரும் இவர்களை ஒதுக்க செய்வது அறியாது தவித்த லட்சுமி இறுதியில் ஒரு முடிவாக தன் பிள்ளைகளுடன் கோயம்புத்தூர் வந்தார்..

அவர் வந்ததும் அவருக்கு ஒருவர் உதவி செய்து வேலையில் ஒரு மில்லில் சேர்த்து விட அன்பரசிக்கும் லட்சுமிக்கும்  மிகவும் ஆறுதலாகி போக கூடவே அந்த ஊரில் பார்த்தவர்கள் எல்லாம் அன்பரசியின் கையில் இருக்கும் குழந்தையை அவளுடைய குழந்தையாக பாவிக்க அந்த விஷயம் லட்சுமிக்கு  புரிந்தாலும் அதை திருத்த அவர் முயற்சிக்க வில்லை..

தந்தை இறந்த துக்கத்தில் இருந்த அன்பரசியும் தனது விளையாட்டு தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு பொறுப்பு உள்ள குழந்தையாக மாற முதலில் லட்சுமி தான் வேலைக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்..

அன்பரசி வீட்டையும் குழந்தையையும் பார்த்து கொள்ள அப்படியே ஒரு வருடம் செல்ல ஒரு நாள் லட்சுமிக்கு உடல் நிலை சரி இல்லை மயங்கி விழுந்து விட்டார் என அவர் வேலை செய்யும் இடத்தில் கூற அவரை பரிசோதனை செய்ய வயதாகிய பின் பிள்ளை பெற்றதாலும் இயல்பிலே அவர் உடல் நல குறைவாக இருப்பதாலும் இப்போது செய்யும் கடின உழைப்பால் தான் அவரது உடல் மேலும் மோசமாகி போனது என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறி மருந்துகள் தர அதை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தவள் இனி நீங்க வேலைக்கு போக வேணாம் நான் போறேன் என்று கூறியவள் தாய் சென்று கொண்டு இருந்த வேலைக்கு அவள் செல்ல துவங்கினாள்..

காலையில் அவள் வீட்டு வேலை எல்லாம் முடித்து குழந்தைக்கு வேண்டியதும் தனது தாய்க்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டு ஒரு வயது ஆன தன் தம்பியை அருகில் இருக்கும் ஒரு அரசு குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு செல்வாள்..

அவரது தாய்க்கும் ஏனோ இந்த குழந்தை மீது பெரிய ஓட்டுதல் வரவில்லை அந்த குழந்தைக்கும் வரவில்லை அந்த குழந்தைக்கு எல்லாமே அவனது அம்மாவாகி போன அக்கா தான் அவனுக்கு உண்மை தெரியாததாலும் உண்மை தெரிந்தவர்கள் கூறாததாலும் அன்பரசி பெற்று கொள்ளாமலே தாயாகி போனாள்... இதை தான் காலத்தின் கோலம் என்பதோ???

அன்பரசி வேலை செய்யும் மில்லில் அவளை தெரியாதவர்கள் என்று யாருமில்லை அந்த அளவுக்கு அவள் அங்கு பிரபலம் அவளின் துறுதுறுப்பு கண்டும் ஓயாமல் அவள் பேசும் பேச்சுக்கும் அங்கே இருப்பவர்கள் அடிமை அது அந்த மில்லின் முதலாளியான பிரபுவின் காதுக்கும் சென்று இருந்தது...

பிரபு அங்கே வேலை செய்பவர்களுக்கு எல்லாம் சலுகையும் செய்து கொடுப்பவன்..வேலை செய்பவன் வயிறு நிறைந்தால் தான் முதலாளி வயிறு நிறையும் என்ற கொள்கையை கொண்டவன் என்பதால் அங்கே வேலை செய்பவர்களின் அகமும் மனமும் நிறைந்தே அவனது மில்லில் வேலை செய்து வருகின்றனர்..

எல்லாம் நல்ல படியாக சென்று கொண்டு இருக்க ஒரு நாள் மீண்டும் லட்சுமிக்கு உடல் நலம் குறைய அவரை பரிசோதனை செய்த மருத்துவரோ இந்த முறை பெரிய இடியை அவளது தலையில் இறக்கினார்..உனது தாய்க்கு இதயத்தில் கோளாறு என்றும் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூற கையில் காசு இல்லாமல் தவித்த அவள் நேராக அவளை பொறுத்தவரை அவள் வீட்டு அடுப்பு எரிகின்றது என்றால் அதற்கு முழு காரணம் அவளை பொறுத்தவரை வாழும் கடவுளான பிரபு மட்டுமே..

அதனால் பிரபுவிடம் உதவி கேட்க அவனும் அந்த நேரத்தில் தேவாவுக்கு உதவிக்கு ஆளை தேடி கொண்டு இருக்க இவளை பற்றி அறிந்தவன் உதவி செய்வதாக கூற அதே நேரம் இந்த வேலையை நீ செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பிக்க அவள் என்ன செய்ய வேண்டுமானாலும் தயார் என்ற நிலையில் இருந்ததால் அவள் ஒத்து கொண்டாள் ஆனால் குழந்தையை அழைத்து செல்கிறேன் என்று கூற பிரபு மறுத்தான்...

அங்கே தன் நண்பன் எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று தெரியாததாலும்  குழந்தை ஏதாவது குறும்பு செய்ய போய் அது அவனுக்கு தொல்லையாகி போனால் தேவா கோபத்தில் ஏதாவது குழந்தையை செய்து விட போகிறான் என்று பயந்தே அவன் மறுத்தவன் குழந்தையை பார்த்து கொள்ளும் ஒரு இல்லத்தில் சில காலம் குழந்தை இருக்கட்டும் அங்கே நீ முதலில் செல் அங்கே எல்லாம் நிலைமை சரி ஆனதும் குழந்தையை அழைத்து செல்லலாம் என்று ஒரு மாதிரியாக சமாளிக்க அவளும் தன் தாய்க்கு நல்லது நடந்தால் போதும் என நினைத்தவள் மனமே இல்லாமல் சரி என்க அன்பரசிக்கு சுருக்கமாக தேவாவின் செயல்களை கூறியவன் எக்காரணத்தை கொண்டும் அவனை கோபப்படுத்த கூடாது என்று கூறியே அவளை அனுப்பி வைத்தான்...அதுவரை உன் குடும்பத்தை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தான்....

அதிலும் பிரபுவை பொறுத்தவரை அவளுக்கு வயது குறைவு என்றாலும் அவள் ஒரு குழந்தைக்கு தாய் என்று நினைத்தே அவன் தேவாவிடம் அனுப்பி வைத்தான்...

இறைவன் ஒவ்வொரு முடிச்சுக்கும் எதிர் முடிச்சு இட்டு வைத்திருப்பான்...அதுபோல இதில் விதியின் சதி என்னவென்றால் மாரி முத்து ஒட்டி வந்தது மணல் லாரி..

 ஆம் தேவாவின் குடும்பத்தை சிதைத்து அவனுக்கு இன்று யாரும் இல்லா நிலைக்கு அவரே தெரியாமல் அவனை இந்த நிலைக்கு தள்ளிய மனிதன் மாரி முத்து தான்...அவரது அறிவில்லாத செயலால் அவனது குடும்பத்தையும் அவரது குடும்பத்தையும் அவரது உயிரையும் மனிதன் கெடுத்து விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்...

இப்போது தான் செய்த அறியா பாவத்தை போக்கவே அந்த இறைவனே ஒரு முடிச்சை உண்டாக்கி அவரது மகளையே அவர் செய்த  பாவத்தை கழுக தேவ ராஜிடம் அனுப்பி வைத்து விட்டார்...

அவளும் சென்று அவன் காதலில் கரைந்து உருகி அவனது கருவை சுமந்து அவனது துக்கத்தில் பங்கெடுத்து அவனுக்கு அரணாக அன்பு மாற அதுக்கு கூட கொடுத்து வைக்காமல் சம்பவங்கள் தெளிவாக புரியாமல் தேவா அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டான்…



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌👌💕



   
ReplyQuote
udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

@para thanks da



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top