Share:
Notifications
Clear all

இதயம் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 19

   அம்மா அப்பாவோட வண்டி வந்திடுச்சு என்று ஊருக்குள் வந்து கொண்டு இருந்த அந்த பெரிய லாரியை தொலைவில் இருந்தே கண்டு தாயின் செவி கிழியும் வரை கத்தினாள் லட்சுமி மற்றும் மாரிமுத்துவின் செல்ல மகள் அன்பரசி..

பதினெட்டு வயதான பூம்பாவை..அவர்களின் ஒரே செல்ல மகள் என்பதால் மாரி முத்துவும் லட்சுமி அன்பை வாரி இறைத்து வளர்த்தி இருக்க பணம் இல்லையென்றாலும் தன் மகளை படிக்க வைக்க மகளும் நல்ல பிள்ளையாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்..

அவர்கள் இருக்கும் ஊர் குக்கிராமம் அங்கே படித்தவர்களை காட்டிலும் படிக்காத பாமரர்களே அதிகம்..அவர்கள் எல்லாம் அவர்களின் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாரி முத்து மட்டும் நான் தான் படிக்கவில்லை தன் மகளாவது படிக்கட்டும் என நினைத்தார் அதனால் அவர் வெளியூரில் லாரி ஒட்டி கொண்டு இருந்தார் மாதத்திற்கு ஒருமுறை வருவார் மகளுக்கு தேவையான அனைத்தும் தன் சக்திக்கு மீறி வாங்கி கொண்டு வருவார்..

வீட்டுக்குள் வந்த அப்பாவை பிடிபிடியென பிடித்து கொண்டாள் மாரி முத்துவின் அன்பு மகள் , "அப்பா நாம எப்போ அப்பா மச்சு வீடு கட்டுவோம்"..என்றாள் அவளின் குடிசை வீட்டை கண்டு,

"கூடிய சீக்கிரம் கட்டலாம் பாப்பா"... என்று அவர் சமாதானம் செய்ய மகளோ, " சரி அப்பா".. என்று சமதானம் ஆக,

இவர்களது பேச்சை கேட்ட லட்சுமி யோ, " ஹ்ம்ம் கட்டுவாரு உங்க அப்பா கோட்டர் பாட்டிலில் பெரிய வீடா கட்டுவாரு அப்பனும் புள்ளையும் போய் தங்கிக்கோங்க "...என்று நொடிக்க

மகளோ தன் தந்தையை  பார்த்து முறைக்க மாரி முத்துவோ, " பாப்பா அப்பா அடுத்த மாசம் நிறுத்திடுவேன் பாப்பா.. இந்த மாசம் வேலை அதிகம் டா "என்று சமாதானம் சொன்னாலும் அவர் உயிரை விட்டாலும் குடியை விட போவதில்லை என்று மகளுக்கு நன்றாக தெரியும் , "என்னமோ பண்ணுங்க எனக்கு தூக்கம் வருது"... என்று அன்பரசி உறங்க இங்கே கணவனும் மனைவியும் பல நாள் பிரிந்த இருந்த ஏக்கத்தை தீர்த்து கொண்டனர்..

இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் லட்சுமி வயகாட்டில் வேலை செய்யும் போது மயங்கி விழ அங்கே அவர்களுடன் வேலை செய்து கொண்டு இருந்த ஒரு மூதாட்டி அவரது கையை பிடித்து தூக்கவும் லட்சுமியின் நாடி துடிப்பு அவருக்கு தெரிய அதிர்ச்சி ஆனார் ..லட்சுமி மாசமாக இருப்பது தெரிய ஊர் முழுவதும் இந்த விஷயம் காட்டு தீ போல் பரவியது.

ஆம் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில் இவர்கள் செய்து இருக்கும் வேலையை பார் என்று ஊர் மக்கள் சிரிக்க பள்ளியில் அன்பரசியையும் பிள்ளைகள் கேலி செய்ய அவள் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தவள், " இனி நான் பள்ளிக்கு போக மாட்டேன்"... என்று கூறி அமர்ந்து விட்டாள்..

மாரி முத்துவும் லட்சுமியும் இரண்டாவது குழந்தை வேண்டும் என வேண்டுதல் அன்பு பிறந்த அந்த ஆண்டு வைக்க அது நடக்கவே இல்லை அவர்களும் நமக்கு அன்பு மட்டும் போதுமென்று நினைத்து வாழ்க்கையை ஓட்ட பழகி இருக்க அந்த வேண்டுதல் இப்போது நடக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை அதே நேரம் கருவை கலைக்க கூட முடியாத படி கரு வளர்ந்து இருக்க குழந்தை பெற்றே ஆக வேண்டிய நிலையில் இருந்தனர்..

என்ன செய்வது என்று கணவனும் மனைவியும் நினைக்க ஊரே அவர்களை பார்க்கும் போதும் பார்க்காத போது கேலி கிண்டலில் இறங்க குடும்பமே உருக்குலைந்து போனது..

லட்சுமி கூட ஒரு கட்டத்தில் தைரியமாக இருந்தார் என்றால் மாரி முத்துவுக்கு தான் தைரியமே இல்லை..அவருக்குள்ளேயும் ஒரு குற்ற உணர்ச்சி போல எழ  அவர் வீட்டுக்கு வருவதையே நிறுத்தி இருந்தார்..வந்தால் ஊரில் இருப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்வார்கள் என்றே அவர் வராமல் இருக்க தொலை தொடர்பு வசதிகள் கூட அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் அவர் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்று கூட தாய் மற்றும் மகளுக்கு தெரியவில்லை..

இடையிடையே அவளது தந்தையை அன்பரசி அழைக்க அவரோ எப்போதும் முழு நேர குடிகாரராக மாறி இருந்தார்..மகள் அழைக்கும் போதெல்லாம் அவர் அழ இவளுக்கும் போதிய பக்குவம் இல்லாததால் அழாத பா என்று அவளும் அழுது கொண்டே சமாதானம் செய்வாள்..லட்சுமியோ வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டார்...

மருத்துவமனைக்கு மட்டும் தலையில் துணி எல்லாம் இட்டு செல்ல அந்த ஊரே கேலி செய்யும் அதற்கு பயந்தே அவர் ஊர் புலரும் முன்னே மருத்துவமனை வாயிலில் போய் காத்து இருப்பார்..

இது ஒரு விசயமா என்று கேட்டால் விஷயமே ஒரு வயது கடந்து இப்படி ஆகும் போது விமர்சனங்களுக்கு ஆளாவார்கள்..அதிலும் வயதுக்கு வந்த பெண் பதினெட்டு வயதுதானாலும் கிராமத்தை பொறுத்தவரை அவளுக்கு திருமணம் வயது வந்து விட்டது தானே இந்த நிலையில் அவர்கள் இருப்பது வேறு கிராமத்தில் ஊரே கூடி பேச இவர்களது குடும்பம் அவர்களது வாய்க்கு அவலாகி போனது...

ஒரு கட்டத்தில் அன்பரசியின் 18 வயதின் முடிவில் அன்பரசிக்கு ஒரு குட்டி தமையன் பிறந்தான்..குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தி மாரி முத்துவுக்கு அனுப்பி வைக்க அங்கிருந்து பதில் செய்தி இந்த பக்கம் வந்தது மாரி முத்து குடி போதையில் வண்டியை ஒட்டி வர எதிரே வந்த வாகனத்தோடு மோதி சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார் ..

உண்மையில் வேதனை தாளாத மாரி முத்து குழந்தை பிறந்தால் அனைவரும் அவரை கேலி செய்வார்களோ என நினைத்து மனமுடைந்து சரக்கில் விஷத்தை கலந்து குடித்து விட இதை யாரிடமும் கூற வில்லை அதற்குள் அவரது முதலாளி அருகில் உள்ள இடத்திற்கு சரக்கை கொடுக்க சொல்ல அவரும் அந்த இடம் அருகில் தானே உள்ளது என்று ஏற்றி கொண்டு செல்ல அதற்குள் அவர் அருந்திய விஷம் அவரின் உடலுக்குள் வேலையை காட்ட தன்னிலை இழந்த அவர் எதிரே வந்த வாகனத்தில் மோதினார்.. மோதிய வேகத்தில் அவரும் மரணமடைந்தார்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌👌💕



   
ReplyQuote
udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

@para thanks da



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top